Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 4.2

அவள் தோள் தொடர்ந்து உசுப்பப்பட்டது. “அபர்ணா. எழுந்திரு.” பொன்னிதான் அவளை எழுப்பிக் கொண்டிருந்தாள். கட்டிலில் எழுந்தமர்ந்த அபர்ணா சிறிது நேரத்திற்கு எங்கிருக்கிறோம் என்று புரியாமல் விழித்தாள். “என்ன கனவா?” பொன்னி சிரித்தவாறு நின்றிருந்தாள். “பொழுது விடிஞ்சுடுச்சா? புது இடமில்லையா? லேட்டாதான் தூங்கினேன்.” தயக்கத்துடன் கூறினாள். “ஏய். இதுக்கு ஏன் இப்படி தயங்கறே? நம்ம வேலையில் நேரம் கிடைக்கும்போது நல்லா தூங்கிக்கனும். மது எழுந்துட்டான். பாவம் சின்னப்பிள்ளை. காலையில் என்ன குடிப்பான்? டீயா இல்லை காபியா? என் கூட […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 4.1

அத்தியாயம் – 4.1 அந்த இரவு வேளையிலும் கிருஷ்ணா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பரபரப்பாக இருந்தது. பொன்னி கத்திய சிறிது நேரத்திற்கெல்லாம் ஜெயச்சந்திரன் அவசரமாக ஓடிவந்தார். அவரோடு அன்றைய இரவு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்களும் ஓடி வந்தனர். சித்தரஞ்சனும் பதற்றத்துடன் வாயிலில் நின்றான். உள்ளே சென்ற மருத்துவர்கள் இன்னும் வரவில்லை. தேவேந்திரன் மட்டும் அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்தது போல் அவரது அமைதி இருந்தது. அன்றைய […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 3

அத்தியாயம் – 3 சிறுவனுடன் உள்ளே நுழைந்தவளைப் பின்தொடர்ந்தான் சித்தரஞ்சன். அவள் வரவேற்பறைக்குச் செல்லாமல் அங்கே நல்ல பழக்கப்பட்டவள் போன்று உள்ளே சென்றாள். ‘அவளுக்குத் தெரிந்த யாராவது இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களோ?’ ‘இருந்தாலும் அதற்காக யாராவது பெட்டியைக் கொண்டு வருவார்களா?’ சந்தேகத்துடன் பின்தொடர்ந்தான். அவள் நேரே ஜெயச்சந்திரனின் அறை நோக்கியே சென்றாள். இடையில் தன்னுடைய அலைபேசியை எடுத்தவள் யாருக்கோ அழைத்தாள். சிறிது நேரத்திலேயே அங்கே விரைந்து வந்தான் கிருஷ்ணா. அவளைக் கண்டதும் புன்னகையுடன் கைகளை விரித்தவாறே வந்தான். […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? — ராசு – 2.2

தன் தந்தையின் நிலையைக் கண்ட சித்தரஞ்சன் “அங்கிள்!” என்று அதிர்ச்சியுடன் அவரை அழைத்தான். “ஒன்னும் பயப்படாதப்பா. தூக்கம்தான். நான் தான் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். இரண்டு நாளா சாப்பாடு தூக்கம் இல்லைன்னா அவன் உடம்பு என்ன ஆகும்?” “அத்தோட மனோவைப் பற்றிய கவலையும் சேர்ந்துடுச்சு. உன் அம்மாவாவது மகனைப் பற்றி புலம்பறாங்க. ஆனால் இவன் மனதிற்குள் என்ன நினைக்கிறான்னு யாராலயும் புரிஞ்சுக்க முடியாது. தனக்குள்ளேயே எல்லாத்தையும் போட்டு மருகிக்கிட்டு இருப்பான்.” நண்பனை கவலையுடன் பார்த்துக்கொண்டே […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? — ராசு – 2.1

அத்தியாயம் – 2.1 மனோரஞ்சன் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தான். இரண்டு நாட்களாகின்றன. இன்னும் கண் விழிக்கவில்லை. உயிர் பிழைத்துவிடுவான் என்று மருத்துவர்கள் நம்பிக்கையாக எந்த வார்த்தைகளும் இதுவரை கூறவில்லை. காப்பாற்ற போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. வெளியில் இருந்த இருக்கையில் சோர்வாக அமர்ந்திருந்தார் தேவேந்திரன். மனோரஞ்சனின் தந்தை. மகனின் விபத்துப் பற்றிக் கேள்விப்பட்ட உடன் அவரது மனைவி சகுந்தலா மயங்கி விழுந்திருந்தார். அவரையும் அங்கேயே சிகிச்சைக்கு சேர்த்திருந்தார்கள். அவர் கண் விழிக்கும் […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 1

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? — ராசு அத்தியாயம் – 1 “அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம் அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம் சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும் அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கும் ஆனை முகனை தொழுதால் நவகிரகங்களும் மகிழும் நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வர வேண்டும் . . . . . . . . . .” மனோரஞ்சன் […]