எதிரே அமர்ந்து சுழல் நாற்காலியில் ஆடிக்கொண்டே அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவனை ராஜசேகரும் சுதர்சனும் வித்தியாசமாய் பார்த்தனர். ராஜசேகர் பக்கவாட்டாய் ஷைலஜாவை பார்க்க, அவர் கண்களில் தவிப்பை கண்டவள், ஒருமுறை பூபதியை பார்த்துவிட்டு பின், அவரிடம் தனியே வருமாறு தலையசைத்து நகர்ந்தாள். அந்த அறையிலேயே சற்று தள்ளி நின்ற ஷைலஜா, “என்ன ப்ரோப்ளம் சார்?” என்றாள். “என் பொண்ணு சம்யுக்தாவை காணலை மேடம்! கம்ப்ளைன்ட் பண்ண வந்தா இவர் என்ன இப்படி லெதாஜிக்கா பேசுறாரு!?” என்ற ராஜசேகர் திரும்பி பூபதியை […]
கீழே விழுந்து சுருண்டுப்படுத்து மூச்சுக்கு தவித்து இருமிக்கொண்டிருந்தவனை கண்டதும் ஓடிசென்று அவனோடு சேர்த்து இறுக்கமாய் கட்டிக்கொண்டாள் சம்யுக்தா. “ரொம்ப பயந்துட்டேன் ப்ரஷூ… எங்க போன நீ?” என்றவள், “வீட்டை சுத்திப்பார்க்க கூடாதுன்னு ரூல்ஸ் போட்டுட்டு இப்போ நீ மட்டும் என்னை விட்டுட்டு மாடி வரை வந்து சுத்தி பார்த்துட்டு இருந்துருக்க!?” என்றாள் தாங்கலாய். இன்னமும் அவன் இருமல் அடங்கியபாடில்லை. அதைக்கூட உணராது இவள் தன்போக்கில் பேசிக்கொண்டிருக்க, வித்தகன் தான் இடையில் புகுந்து அவளை பற்றி […]
வீட்டின் விளக்குகள் நின்றதுமே இரு பெண்களும் வித்தகனை நெருங்கிவிட்டனர். அவனை ஆளுக்கு ஒரு புறமாய் நெருக்கிக்கொண்டு, இன்னும் சொல்லப்போனால், அவனை கட்டிக்கொண்டு கண்களை இறுக மூடி பயத்தில் உறைந்து நிற்க, ‘பயப்படக்கூடாது’ என்ற வித்தகனின் வார்த்தை நினைவு வந்ததும், முயன்று தங்கள் பயத்தை விரட்டி இயல்பாக முயன்றனர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டு மெல்ல தங்கள் இமைகளை பிரித்துப்பார்க்க, கரும்இருட்டு! ‘பயப்படல… நாங்க பயப்படல!’ மெலிதாய் பவி சொல்ல, அதையே பின்பற்றி, ‘பயம் இல்ல’ என்று […]
இப்போது பிரஷாந்தும் அவனை பாட சொல்லி கேட்க, கடைசியில் பவித்ரா கூட பாட சொல்ல, லேசாக சம்யுக்தாவை பொய்யாய் முறைத்தவன், மேசை மீது இரு கைகளாலும் மெலிதாய் தாளமிட்டுக்கொண்டே மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான். “குளிச்சா குத்தாலம்… கும்பிட்டா பரமசிவம்! குடிச்சா நீர்மோரு… புடிச்சா நீ…தாண்டி…! சொக்குப்பொடி மீனாட்சி… சொக்கநாதன் நான் தாண்டி!” அவன் போடும் தாளம் போலவே பிரஷாந்தும் செய்ய, நால்வருக்குமே இறுக்கங்கள் தளர்ந்து புத்துணர்ச்சியாய் இருந்தது. “அடுத்து யாரு?” “எனக்கு பாட வராதுப்பா!” சம்யு […]
7 அந்த வீட்டை பொறுத்தவரை மட்டும் தான் மணி இன்னும் விடியற்காலை மூன்று! ஆனால், உண்மையில் அவர்கள் அந்த கானகத்திற்குள் நுழைந்து, முழுதாய் பத்து மணி நேரங்கள் முடிந்திருந்தது. மதியம் ஒரு மணி! தனது அலுவலக அறையில் இயக்குனர் ஒருவரிடம் கதைக்கேட்டுக்கொண்டிருந்த ராஜசேகர், அந்த கதையோடு மனம் லயிக்க முடியாமல், அடிக்கடி தன் அலைபேசியை எடுத்து பார்த்தவண்ணமே இருந்தார். சொல்லிக்கொண்டிருந்த கதை இடைவேளையை நெருங்கப்போகும் நேரம் ஆகிக்கூட ராஜசேகருக்கு மனதில் ஒன்றுமே பதியவில்லை. அவருக்கே தான் செய்வது […]
நால்வரும் நாலாப்பக்கமாய் அமர்ந்து பல நிமிடங்கள் கடந்திருந்தது. அப்போது கேட்ட அந்த குரலுக்கு பிறகு எந்தவித சத்தமும், அரவமும், அச்சுறுத்தும் அமானுஷ்ய ஐட்டங்களும் நடக்காமல் இருக்க, வித்தகனை தவிர மீதி மூவரின் இறுக்கமும் தளர்ந்திருந்தது. மனதை கவ்வியிருந்த பயம் அகண்டிருக்க, சற்று ஆசுவாசமாய் அவர்கள் இளைப்பாறும்போது தான், சிந்தனை அந்த வீட்டை தாண்டி பயணித்தது. பிரஷாந்துக்கு நெஞ்சு அடித்துக்கொண்டது. பயத்தில் ஏதேதோ பேசிவிட்டிருந்தான் பவியை. நல்லாய், சக்கரைக்கட்டி போல பேசும்போதே, ‘நீ வேண்டாம் போடா’ என்பவள், இப்போது […]
இந்நால்வர் இருக்கும் இடத்திற்கு சற்றும் தொடர்பில்லாத, வேறொரு பிரதேசத்தில்… அதாவது ‘பிற’தேசத்தில்… மனிதர்கள் கண்ணிற்க்கே புலப்படாத ஒரு விஷேட விஷயம் அரங்கேறிக்கொண்டிருந்தது. சோப்பு நுரை வட்ட வளையத்திற்குள் புகுந்து வெளிவரும்போது, ஒரு உரு கொள்ளுமே! அது போன்ற ஒரு காற்றில் மிதக்கும் கனமற்ற ஓர் வளையம்! உற்று பார்த்தாலும் அதன் இருப்பை கண்கள் அறிய முடியாத வண்ணம் காற்றில் மிதந்துக்கொண்டிருந்தது. அந்த வளையத்திற்குள் பெரிதாய் என்ன இருக்கக்கூடும்!? காற்றை […]
5 நால்வரின் கண்களும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சாண்டிலியர் மீது தான்! இமைகள் என்ற ஒன்று இருக்கிறதா? இல்ல வேலையை ராஜினாமா செய்துவிட்டதா என்று புரியாதபடி விரிந்த கண்கள் விரிந்த நிலையிலேயே இருக்க, அவர்களை நடப்புக்கு கொண்டு வந்தது, கதவின் மேல் சுவற்றில் காஞ்சிபுரம் இட்டலி தட்டு சைசில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் ‘டங்’கென்ற சத்தம்! இமைகள் தங்கள் வேலையை தொடர, அனிச்சையாய் தலைகள் சத்தம் கேட்ட திக்கில் அண்ணார்ந்து பார்த்தன. மணி ‘மூன்று’ என்று காட்டியது அது! வித்தகன் […]
பவித்ரா முகத்தில் அடித்தது போல ‘நீ ஏன் இங்க வந்த?’ என்றதும் சில நொடிகள் பேச்சற்று நின்றான் பிரஷாந்த். பின், “என்ன விளையாடுறியா? நடுராத்திரில வண்டிய எடுத்துட்டு போயிட்டு இருக்க… கூப்பிட்டா நிக்கவும் இல்ல… இந்த காட்டுக்குள்ள வந்து, என்னையும் அலைய விட்டு…!” அவன் பேச, “இங்க வந்ததே உன்னால தான்… உன்னை யார் என்னை ஃபாலோ பண்ண சொன்னது? உன்கிட்ட சிக்க கூடாதுன்னு இந்த காட்டுக்குள்ள நுழைஞ்சு இப்போ எப்டி வெளில போறதுன்னு தெரியாம நிக்குறேன்!” […]
4 பவித்ரா அவ்வீட்டின் வெளியே இருந்த பெயர் பலகையில் கைவைத்து, ‘எ லவ் வீடு’ என வாசித்தபோது, வித்தகன் அந்த வீட்டை தன் கண்களால் அளவெடுக்க ஆரம்பித்திருந்தான். “உள்ள போலாமா? இல்ல யாரும் இருப்பாங்களா?” என்ற பவித்ராவின் குரலில் திரும்பியவன், “தெரியல” என்றான் மொட்டையாய். அவளும் அதற்குமேல் அவனை துருவவில்லை. இந்த காட்டுக்குள் வீடிருப்பதே அரிது! அதிலும் இப்படியொரு அழகியலில் அமைந்த வீடென்றால்…? அந்த ஆச்சர்யம் அவளுக்குள்ளும் இருந்தது. வரவேற்ப்பாய் இருபுறமும் இருந்த தோட்டத்தை கடந்து மூன்று […]