Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 12 2

ஒரு நாள் மாலை வர வேண்டிய நேரத்துக்கு இன்பன் வீட்டுக்கு வர வில்லை. அவன் தினமும் வரும் நேரம் கடந்ததும் அவள் அவனை தேட ஆரம்பித்து விட்டாள். அவள் தேடலைக் கண்ட அம்பிகா “என்ன மா?”, என்று கேட்க “இன்னும் அவங்களைக் காணுமே அத்தை?”, என்று பரிதவிப்பாக சொன்னாள். “வேலை இருந்துருக்கும் டா. அதான் இன்னும் வரலை. உனக்கு பயமா இருந்தா அவனுக்கு கால் பண்ணிக் கேளேன்”, என்று அம்பிகா சொல்லிச் செல்ல தன்னுடைய போனை எடுத்து […]


ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 12 1

அத்தியாயம் 12  விரும்பியே உயிருக்குள் சுமக்கிறேன் உன்னை அழகான சுமை என்று எண்ணி!!! அஞ்சலியும் கிரியும் ஒட்டிக் கொண்டிருக்கும் போது இன்பன் இவளை ஏக்கமாக பார்ப்பதை அவள் அறிந்தே இருந்தாள். அதனால் அவனை எண்ணி அவளுக்கு பாவமாக இருந்தது. கூடவே அவளுக்கும் அவனுடைய கைக்குள் அடங்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவன் கைக்குள் இருந்தால் அவன் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று அவள் மனம் நம்பியது. அவன் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று சொன்ன […]


ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 11 3

“நானும் உன்னை லவ் பண்ணுறேன் தான்.  ஆனா நீ தான் நம்பலை. சரி அதை விடு. நான் ஒண்ணும் நாம ஹனிமூன் கொண்டாட உன்னைக் கூப்பிடலை. ஹனிமூன் போகணும்னு பேசுனதுக்கு தான் நீ என்ன காரியம் பண்ணினேன்னு பாத்தேனே? நான் இப்ப பேச வந்தது அஞ்சலி கிரிக்காக தான்.  நம்ம வரலைன்னா அவங்களும் போகாம இருக்காங்க. அதனால தான் போகலாம்னு சொன்னேன். அவங்க அதை ஹனிமூனா நினைச்சிக்கட்டும். நாம சும்மா ஒரு டூர் போன மாதிரி நினைச்சு […]


ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 11 2

“நீ காயம் பட்டு துடிக்கிறதைப் பாத்தப்ப ஏண்டா உயிரோட இருக்கோம்னு தோணுச்சு மா. அதான் அப்படிச் சொன்னேன். மனசுக்கு கஷ்டமா இருக்கு. நீ ரெஸ்ட் எடு”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான். அவன் சென்றதும் இந்து ஏங்கி ஏங்கி அழுதாள். இப்போது அவன் பேசியது அனைத்துமே உண்மை என்று தான் அவளுக்கு தோன்றியது. “நான் வேணும்னு எதையும் செய்யலை”, என்று அவனிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் அவளால் சொல்ல முடியவில்லை. “நான் […]


ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 11 1

அத்தியாயம் 11  எந்தன் காதலின் மூன்றாவது கண் தான் என்னவள்!!! அதன் பின் சிறிது நேரம் தூங்கி விட்டு குளிக்க சென்றாள் அஞ்சலி. குளித்து விட்டு உடனே வெளியே வந்து விட்டாள். அவளுக்கு அவனைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது. அதன் பின் அவனுக்கு டீ எடுத்துக் கொண்டு உள்ளே வர அவளை இறுக அனைத்துக் கொண்டான் கிரி. அவன் கைகள் சேலை மறைக்காத அவளுடைய வெற்றிடையில் பயணம் போக அங்கிருந்த டேபிளில் டீயை வைத்து விட்டு அவனைக் […]


ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 10 2

அவன் மனதும் அனைவருக்கும் புரிந்தது. அம்பிகாவுக்கும் சீனிவாசனுக்கும் அவர்கள் மாற்றி மாற்றி கண்டிஷன் போடுகிறார்கள் என்றெல்லாம் தவறாக நினைக்க முடியவில்லை. அவர்களுக்கு இந்து வீட்டினர் ஒருவர் மேல் ஒருவர் வைத்த அதிகப் படியான பாசம் தான் பெரிதாக தெரிந்தது. கூடவே நின்று போன தங்கள் பிள்ளைகளின் திருமணம் ஒரே மேடையில் நடக்கப் போவது அவர்களுக்கு சந்தோஸமாகவும் இருந்தது. அதனால் சந்தோஸமாக சரி என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். விஷயம் அறிந்த அஞ்சலி மற்றும் இன்பனுக்கு ரெட்டை சந்தோஷம் […]


ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 10 3

அஞ்சலி வீட்டுக்கு வந்ததும் “இப்ப மணி என்ன டி?”, என்று கேட்டான் கிரி. அவனுடைய குரலின் மாறுபாட்டை உணர்ந்தவள் “மணி ஒண்ணறை ஏன் கேக்குற? ஆமா நீ என்ன சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட? உனக்கு உடம்பு சரி இல்லையா?”, என்று கேட்டாள் அஞ்சலி. “எனக்கு உடம்புக்கு என்னவாவும் இருக்கட்டும். நீ எங்க சுத்திட்டு வர?” “ஏண்டா இப்படி கேக்குற?” “ஓ நான் கேக்க கூடாதா?” “நான் அப்படிச் சொல்லலை” “சரி அதை விடு. இன்னைக்கு எதுக்கு நீ […]


ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 10 1

அத்தியாயம் 10  மின்மினியாக நான், எனக்கு ஒளி தரும் நட்சத்திரமாக நீ!!! “உன் ஜாதகத்தைக் காட்டுற இடத்துல எல்லாம் உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க மா. ஆனா அடுத்த நாளே தப்பு தப்பா சொல்லி வேண்டாம்னு சொல்லிறாங்க. எனக்குமே உன் கல்யாணம் நடக்கும்னு இருந்த நம்பிக்கை போச்சு மா. எனக்கு அப்புறம் கிரி தான் உனக்கு துணையா இருக்கணும். அதனால அவன் வேற எந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணினாலும் அந்த அஞ்சலியை மட்டும் பண்ணிக்க கூடாது. நானும் அதுக்கு […]


ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 9 2

அவன் சொன்னதைக் கேட்டு திகைத்தவள் “இவனை நான் செருப்பால் அடிப்பதா? அது எப்படி என்னால செய்ய முடியும்?”, என்று எண்ணிக் கொண்டு “அது இல்லை. அஞ்சலி கிரி கல்யாணம் பத்தி…..”, என்று இழுத்தாள். “அது சத்தியமா நடக்காது. கிரி கண்டிப்பா சம்மதிக்க மாட்டான். அஞ்சலி வீட்ல அழுதுட்டே இருக்கா. அது தான் அவ தலையெழுத்து போல? எங்க ரெண்டு பேருக்கும் கல்யாண யோகம் இல்லைன்னு எங்க அம்மா அழுதே செத்து போயிரும் போல? உனக்கு நான் செஞ்ச […]


ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 9 1

அத்தியாயம் 9  உன் மீது இருக்கும் ஆசை என்னும் பேரலையில் அடித்துச் செல்லப் படுகிறேன் நான்!!! அவர் அப்படிக் கேட்டதும் இந்த கொஞ்ச நாட்களில் நடந்த அத்தனையும் சொன்னான் இன்பன். அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் மேலும் அதிர்ந்து போனார்கள். “ஐயோ, என் பேத்தியை இந்த அளவுக்கு டார்ச்சல் பண்ணிருக்கானே? இவனுக்கு மன்னிப்பே கிடையாதா? மனசு ஓடிஞ்சு என் பேத்தி எங்க போனானு தெரியலையே”, என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் குணசேகரன். இப்போது வயது வித்தியாசம் […]