Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒளி சிந்தும் இரவு

ஒளி சிந்தும் இரவு இறுதிப்பதிவு 2

பத்து நாள்கள் கழித்து அன்பரசு வருவதாய் சொன்னதால், ஆவலாக கணவன் வரவை எதிர்பார்த்திருந்தாள் முல்லை. வழக்கம்போல் இரவு வரவான் என எதிர்பார்த்திருக்க, மதியமே வந்திருந்தான் அன்பரசு.    லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த முல்லை வியந்து விழித்தாள் மகிழ்வோடு. மனைவியை அணைத்துக்கொள்ள “நைட் வருவிங்கனு நினைச்சேன்” என்றாள்.    நெற்றியில் முத்தமிட்டு “டாக்டர் என்ன சொன்னாங்க?” என்றான்.    “எல்லாம் நார்மலா இருக்குனு சொன்னாங்க” என்றவள், “சின்ன மாமாவை பார்த்திங்களா?” என்றாள்.    “அவன் கம்பெனிக்கு போகல? வீட்டுலயா […]


ஒளி சிந்தும் இரவு இறுதிப் பதிவு

அத்தியாயம் 25     ரங்கசாமி ஜானகி வீட்டில் சைவ விருந்தை உண்டு மாமனார் மாமியாரை மகிழ்வித்து, அடுத்தநாள் சேகர் வீட்டில் அசைவ விருந்தை முடித்து வீடு வந்திருந்தனர் தம்பதியர்.    திருமணம் முடிந்து ஒருமாதம் வெளியே இருந்தவன், தற்போது நான்கு நாள்களாய் கணவனோடு இருந்ததில் முல்லை முகம் ஜொலிப்போடு இருந்தது.    சத்யன் வம்பிழுக்கும் போதெல்லாம் சரிக்கு சரி பேசும் சுகந்தி தற்போது மிகத் தேவையென்றால் மட்டுமே சிறு முறைப்பை பதிலாய் கொடுத்து, மற்ற நேரங்களில் புன்னகையோடும் […]


ஒளி சிந்தும் இரவு 24.2

   “நானும் உன்னோட இருக்கேன்டா” என சத்யன் சொல்ல, “ட்ராவல் டையர்ட்ல இருப்ப. நீ போ சத்யா, நான் பார்த்துக்கிறேன்” என்று அனைவரையும் அனுப்பி வைத்து, கறி வெட்டுபவர்களை அழைத்து அனைத்து வேலைகளையும் முடித்து தந்தையோடு கிளம்பினான் அன்பரசு.     இவர்கள் வர ஒரு மணிநேரம் ஆகியிருக்க, அதற்குள் சமையலுக்கு தயார் செய்து கொண்டிருந்தனர் பெண்கள் கூட்டம். தக்காளி நறுக்கிக்கொண்டிருந்த முல்லை, பெரிய பாத்திரங்களில் கணவன் கொண்டுவந்த கறியைப் பார்த்ததும் உள்ளே சென்றுவிட்டாள்.    “அன்பு முல்லைக்கு […]


ஒளி சிந்தும் இரவு 24.1

அத்தியாயம் 24     காலை ஆறுமணியிலிருந்து பத்து முறைக்கு மேல் சத்யனுக்கு அழைத்துவிட்டான் அன்பரசு. சத்யன் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்றே வர கடுப்பாகிப்போனான்.     “என்ன அன்பு டென்ஷனா இருக்க? ஏதும் பிரச்சனையா” என விருந்திற்காக குடும்பத்தோடு வந்திருக்கும் சேகர் கேட்க, “அதெல்லாம் ஒன்னுமில்லை சேகர்” என்றுவிட்டான்.      சத்யனை கண்டதும் சுகந்தியின் சந்தோசத்தை பார்க்கும் ஆவல் அன்பரசினுள் இருக்க, சத்யனும் அதையே எதிர்பார்த்திருப்பதால் சத்யன் வருவதை மாதவனைத் தவிர வேறு யாருக்கும் […]


ஒளி சிந்தும் இரவு 23.2

   “அன்பு எப்போம்மா வந்தான்?” என கல்பனா டீ யை நீட்ட, “பதினொரு மணிக்கும்மா” என்றபடி டீயை வாங்கியவள் முகம் தூக்கமின்மையைக் காண்பித்தது.    நிறைவாய் பார்த்து, சமையல் வேலையை கவனிக்க சென்றார். வழக்கமாய் கல்பனா பின்னே சென்று சின்ன சின்ன உதவிகளை செய்பவளுக்கு இன்று கணவன் அருகே செல்லத்தான் மனம் நாடியது. ஆனாலும் தவறாக நினைப்பார்களோ என கிச்சன் சென்றாள்.    “முல்லை” என்ற அன்பரசின் குரல் கிச்சனை அடைய, முல்லை சங்கடமாய் கல்பனாவை பார்க்க, […]


ஒளி சிந்தும் இரவு 23.1

அத்தியாயம் 23 அன்பரசு சென்று ஒரு வாரம் முடிந்திருக்க, அன்பரசுக்கு அழைத்து, “எப்படிடா இருக்க? எப்போ வருவ?” என்றான் சத்யன். “நான் வரது இருக்கட்டும், நீ என்ன கால் பண்ணியிருக்க? எதாவது முக்கியமான விசயமா?” என்றான். “ம் முக்கியமான விசயம்தான், அதுக்கு முன்ன நீ எப்போ வரனு சொல்லு” “இன்னும் இரண்டே வாரம். அதுக்கப்புறம் ஒரு மாசத்துக்கு அன்பு ஃப்ரீ” என்றான் சந்தோசமாக. தானும் சந்தோசித்தவன், ஒரு கம்பெனியின் பெயரை சொல்லி, “கம்பெனி ஆரம்பிச்சு மூனு வருசம்தான் […]


ஒளி சிந்தும் இரவு 22.2

மாலை ஏழு மணிபோல் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். மாதவனிடத்தில் நடந்ததை விளக்கி, “அப்பா இவ்வளோ பிரச்சனை போய்ட்டிருக்கு, மாமாக்கு மருமகனுக்கு மறுவீட்டு அழைப்பு எப்போ வச்சிக்கலாம்னு பெரிய கவலை” என சிரித்தான் சரவணன்.   “எப்படிம்மா இந்த கூட்டத்தோட இவ்வளோ நாள் மல்லுகட்டுனிங்க?” என கடுப்பாக கேட்டான் சத்யன்.   “என்ன பண்றது மாமா? அப்பா கூட பிறந்தவங்களா போய்ட்டாங்களே, என் அப்பாம்மா நிம்மதிக்காக சின்ன வயசுலயிருந்தே அவங்களை சகிச்சே பழகிட்டேன்” என்றாள் முல்லை.   “அன்பு வரவரைக்கும் […]


ஒளி சிந்தும் இரவு 22.1

அத்தியாயம் 22    ரங்கசாமியும் ஜானகியும் உண்டுகொண்டிருந்தனர். “அப்பா” என அழைத்தபடி முல்லை உள்ளே வர, “வாடா, வாங்க சம்மந்தி” என ரங்கசாமி எழவே, “உக்காருங்க உக்காருங்க, சாப்பிடறதை விட்டுட்டு எதுக்கு எழறிங்க” என்றபடி அவர்களருகே வந்தார் மாதவன்.   “அப்பா பிரசாதம்” என முல்லை நீட்ட, சர்கரை பொங்கலை கொஞ்சமாய் உண்டு, “நீயே வச்சுவிடுடா” என்று திருநீரை முல்லை கையால் இட்டுக்கொண்டனர் ஜானகியும் ரங்கசாமியும்.    “மாப்பிள்ளை பத்திரமா போய்ட்டாரா முல்லை. உனக்கு போன் செய்தாரா?” என்று […]


ஒளி சிந்தும் இரவு 21.2

“நான்… நான் அப்படி நினைக்கலடா” என்றாள் பேரதிர்ச்சியோடு.   “உண்மையை மறைக்க பொய்யை பேசாத சுகந்தி, இந்த விசயத்துல நீ பேசுற உண்மை பொய்னு இரண்டையுமே என்னால சகிக்க முடியல” என்றான் எரிச்சலாக.   சத்யனின் மனவலி அவனின் குரலில் தெரிய, சுகந்தியின் கண்கள் கலங்கியது. “நான் அவனை நினைக்கலடா” என்றாள் கண்ணீரோடே.    பட்டென எழுந்தமர்ந்தவன், “அப்படியா?” என்றான் நம்பா பார்வையோடு.    “என்னை சந்தேகிக்கிறியா?” என்றாள் வேதனையாக.    “சந்தேகம்லாம் இல்ல, நீ அவனை நினைக்கிறனு […]


ஒளி சிந்தும் இரவு 21.1

அத்தியாயம் 21    குளித்து தயாராகி அன்பரசு வெளியே வர, ஹாலில் படுத்து மொபைல் பார்த்துக்கொண்டிருந்த சரவணன் “கிளம்பனுமா அன்பு?” என வினவினான் அதிர்வாக.    “ஹம்… அப்பாகிட்ட காலைல சொல்லிடு”    “எப்படிபோவ?” என்றான் சரவணன்.    “கேப் புக் பண்ணிப்பேன்”    “வேணாம் நான் வரேன்” என்று சரவணன் பைக் சாவியை எடுத்தான். பின்னே இருவரும் வெளியேற, “உனக்கு தனியா கார் வாங்கலாமில்ல அன்பு? நான் இருக்கவும்தான் வரேன், இல்லைனா கஷ்டம்தானே?” என்றபடி பைக்கை […]