அத்தியாயம் 14 நண்பனின் திருமண விஷயத்தைக் கேள்விப்பட்டதும் பிரமோத் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். சிவசந்திரனை ஆரத் தழுவிக்கொண்டு, “யூ ஆர் சோ லக்கி மேன்” என்றான் உற்சாகத்துடன். முன்பு சொன்னதைப் போலவே கங்காவை தங்கையாகவே பாவித்து நட்பு பாராட்டினான். கங்காவுக்கும் சிவசந்திரனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நிச்சயதார்த்தம் மற்றும் திருமண வேலைகளைச் சிவசந்திரன் சார்பாக முன் நின்று நடத்தியவர் அவனுடைய தாய் மாமா மட்டுமே. தன்னுடைய திருமண விபரத்தை தந்தை வழி உறவினர்களுக்கு அவன் தெரிவிக்கவில்லை. அப்போது விஸ்வநாதனுக்கு […]
அத்தியாயம் 13 வக்கீல் பரமேஸ்வரன் உடனடியாகச் செயலில் இறங்கினார். சிவசந்திரனிடம் நேரம் கேட்டுக் கொண்டு அவனைச் சந்திக்க அவனுடைய வீட்டுக்கு சென்றார். இருவரும் பொதுவாக அவரவர் ஷேம லாபங்களைப் பகிர்ந்து கொள்ள, மேற்கொண்டு வக்கீல் வந்த விஷயத்தைத் தொடங்கினார். “என் நண்பர் ஒருவர் அவருடைய பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். சட்டென எனக்கு உங்கள் நினைவு தான் வந்தது சிவசந்திரன், நல்ல இடம் உங்களுக்குச் சம்மதம் என்றால் நானே பேசி முடித்து விடுகிறேன்” என்றார். சிரித்துக் கொண்டே, […]
அத்தியாயம் 12 சிவசந்திரனின் தாய் கஸ்தூரி கோவையைச் சேர்ந்தவர். வியாபார விஷயத்திற்காக அடிக்கடி கோவை வந்த நடராஜன் கஸ்தூரியை விரும்பி வீட்டுக்குத் தெரியாமல் மணந்து கொண்டார். மகன் பிறந்து மூன்று வயது நிறைவடைந்த பிறகு கூடத் தன்னுடைய கந்தர்வ மனம் பற்றி வீட்டிற்குத் தெரிவிக்காமல் மறைத்தே வைத்தார், அவருக்குத் தெரியும் அந்த விஷயம் வீட்டிற்குத் தெரிந்தால் அன்றோடு கஸ்தூரியை அவர் மறந்து விட வேண்டியது தான் என்பது! அவர் பயந்ததைப் போலவே அந்த விஷயம் அவருடைய வீட்டிற்குத் […]
அத்தியாயம் 10 ஸ்டாஃப் ரூமில் இருக்கும் சிசிடிவி காமிராவை ஆய்வு செய்து கொண்டிருந்தான் சிவசந்திரன். கங்கா, இது வெறும் கவனக் குறைவினால் ஏற்பட்ட விபத்து என்று கூறியிருந்த போதிலும் அவனால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மருத்துவர் கூறியதைப் போலக் கேஸ் கசிவை உணர முடியாத அளவிற்கு அப்படி என்ன கவனக்குறைவு இருந்து விட முடியும். எதற்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் ஒரு விடை கிடைக்கும் என்று எண்ணியவன், கங்காவைப் பற்றிய எந்த விஷயத்திலும் […]
9 மேஜை மேல் மயங்கி சரிந்த நிலையில் காணப்பட்டாள் கங்கா. ஏக காலத்தில் எல்லோரும், “ஆம்புலன்ஸை வரச் சொல்லுங்கள்” என்று கத்தி கூச்சலிட, அதற்குள் அவள் அருகே சென்ற வசுந்தரா, “கங்கா கங்கா” என்று அழைக்க, அவள் அசைவற்று கிடந்தாள். “மேடம் நீங்கள் தொட்டு விடாதீர்கள் முதலில் ஆம்புலன்சும் போலீசும் வரட்டும்” என்று வசுந்தராவை தடுத்தார் தலைமை ஆசிரியர். “அதுவரை இப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா” என்று அவர் கோபமாகப் பேசி முடிக்கும் முன் கங்காவை நெருங்கிய […]
அத்தியாயம் 8 ராக்கிக் கயிற்றை வாங்கி அவன் கையில் கட்டுவதா வேண்டாமா? கட்டினால் சும்மா இருப்பானா? மாட்டான், நிச்சயமாக மாட்டான்! என்று அவளுக்கே ஊர்ஜிதம். இவன் கையைப் பிடித்து ராக்கி கயிறு கட்டுவதை விட மதம் கொண்ட யானையைப் பிடித்து அடக்கி கயிற்றில் கட்டி விடலாம். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு வீணே சிறுவர்கள் முன்னிலையில் மூக்கறுப்படாமல் இங்கிருந்து நகர்வதே சிறப்பு. அதற்கு என்ன செய்யலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவ்விடத்தை நோக்கி ஆபத் பாண்டவனாக […]
அத்தியாயம் 7 அன்று கங்காவின் வகுப்பில் பரிட்சையில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்த ஒரு மாணவி ரேங்க் கார்டில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்காமல் வந்திருந்ததால் அவளை வகுப்பறையை விட்டு வெளியே நிற்க வைத்தாள் கங்கா. அவளுக்குப் பார்க்க பாவமாக இருந்தாலும் இதுபோன்று சிறிய தண்டனை கூட இல்லாவிட்டால் மாணவர்களுக்குப் படிப்பின் மீது அக்கறையே இராது என்று எண்ணிக் கொண்டாள். ஒவ்வொரு தளமாக வகுப்பறைகளை மேற்பார்வையிட்டபடி வந்து கொண்டிருந்த சந்துரு அந்த மாணவி வெளியே நிற்பதை பார்த்துவிட்டு அவளருகே வந்து, […]
அத்தியாயம் 6 ‘டிப்ளமேட் டேக்ஸ் சர்வீசஸ்’ என்கிற பிரபல தனியார் வரி ஆலோசனை நிறுவனத்தில் மலை போல் குவிந்து கிடந்த வேலைகளை மளமளவென்று முடித்துக் கொண்டிருந்தான் அதன் நிறுவனரான ஆடிட்டர் சந்துரு. இந்நிறுவனம் அவன் சுயமாக ஸ்தாபித்துக் கட்டமைத்தது. பல பெரும் சரிவுகளுக்குப் பின்னரும் அது இன்னமும் அதே புகழுடன் நிலைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் சந்துருவின் திறமையன்றி வேறில்லை. அரசியல், சினிமா, தொழில்துறை எனப் பல்வேறு துறைகளின் முக்கியப் பிரமுகர்கள் அங்கே வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். நாளொன்றிற்கு அவனைச் […]
அத்தியாயம் 5 கங்காதேவி தனது அன்றாட வேலைகளை வழக்கம்போல் கவனித்தாள். எப்போதும் போல பள்ளிக்கு சென்று வந்தாள். அவ்வப்போது தோன்றும் ‘ஜெ எம் டி’ பற்றிய சிந்தனைகளை ஒதுக்கி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் பழகிக் கொண்டாள். அதனால் அவளுடைய வாழ்க்கை எவ்வித இடையூறும் இன்றி போய்க் கொண்டிருந்தது. அன்று வகுப்பறைக்கு செல்வதற்காக வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருந்த கங்காதேவி சற்று தொலைவில் யாரோ ஒருவர் நடந்து வந்து கொண்டிருப்பதையும் அவருடைய முகம் அவளுக்கு பரிச்சயமானது போல் […]
அத்தியாயம் 4 அறக்கட்டளை திறப்பு விழா முடிந்தவுடன் பள்ளிக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. வீட்டிற்கு வந்ததிலிருந்து அன்று காலை முதல் நடந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தாள். கங்காதேவி. சிவரூபன் எப்படி இறந்தான்? அவள் வாழ்க்கையை இவ்வளவு அலங்கோலமாக மாற்றியவனின் வாழ்க்கை எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் முடிந்தது? இந்த எதிர் வீட்டுக்காரன் எப்படி அந்தப் பள்ளிக்கூடத்தின் இணை நிர்வாகியாக இருக்கிறான்? அவனுக்கும் பள்ளிக்கும் என்ன சம்பந்தம்? பிற்பகல் முழுவதும் இதே குழப்பமான மனநிலையே நீடித்தது. […]