Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடம்பன் குன்று

கடம்பன் குன்று 8

கடம்பன் குன்று – 8   மன்னர் நெடுவேள் ஆவி அர்த்தமான புன்னகையுடன் அங்கயற்கண்ணியின் நாட்டியத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தார். அவரது இடது பக்கவாட்டில் அமர்ந்திருந்த ராணி பவித்ரமங்களாம்பிகை தனது எண்ண ஓட்டத்தை முற்றிலுமாக முகத்திரை இட்டு மறைத்துக் கொண்டவள், எந்த விதமான உணர்ச்சிகளையும் காட்டாது அமைதியாக உடன் அமர்ந்திருந்தாள். மங்களாம்பிகை முகம் உணர்ச்சிகள் தொலைத்திருந்த பொதிலும், மனமொ எரிமலை குமிழ் போல கொதித்துக் கொண்டிருந்தது. “இவள் என்ன ஊரில் இல்லாத அழகியா? நாட்டில் எத்தனை தேவதாசிகள் நடனம் […]


கடம்பன் குன்று 7

கடம்பன் குன்று – 7   விகர்ணனின் உயிர் அவன் உடலை விட்டு நீங்கிய நொடி, தன் எஜமானர் புலிப்பாணி சித்தரின் காலடியில் அமர்ந்திருந்த புலியார் ஒரு சின்ன திடுக்கிடலுடன் எழுந்து கொண்டார். “விகர்ணா!இப்படி என்னைச் செய்ய வைத்துவிட்டாயே. உன் உயிரினை எடுத்த பாவத்தினை நான் ஏற்பது போல் ஆகிவிட்டதே” என்று எண்ணிய புலியார் சஞ்சலத்துடன் தன் குருநாதரை ஏறிட்டார். தன் ஆத்ம சீடனின் மனக் கவலையை உணர்ந்த புலிப்பாணி சித்தர், புலியாரின் கவலைப் போக்க எண்ணினார். […]


கடம்பன் குன்று 6

கடம்பன் குன்று – 6   அந்த பின் இரவு நேரத்தில் அரண்மனையைச் சூழ்ந்திருந்த வீடுகள் இருளில் மூழ்கியிருந்தன. இன்னமும் சூரியன் உதமாக இரண்டு நாழிகைகள் மீதமிருக்க, ஆயர் மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். அந்த இருளை ஒரு பொருட்டாக மதிக்காத மன்னர், பெருமாள் ஆவியின் அரண்மனையில் மட்டும், இரவு ஏற்றப்பட்ட எண்ணெய் தீபங்கள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. அதிலும், மன்னர் உறங்கும் உப்பரிக்கையில் நிறைய விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில், அந்த அகால பொழுதிலும் வெளிச்சம் பரவியிருந்தது. […]


கடம்பன் குன்று 5

  கடம்பன் குன்று   பகுதி – 5 ஆக்ரோஷமாக தன் முன் நின்ற புலியாரிடம் பேசிப் புரியவைக்க இயலாது என்பது விகர்ணனுக்குப் புரிந்தது. இத்தனை வருட பழக்கத்தின் காரணமாக, இருவருக்கும் இடையில் உண்டாகியிருந்த புரிதல் வற்றிப் போய்விட்டதாகவே உணர்ந்தான் விகர்ணன். புலியார் நின்றிருந்த தோரணையில் சிறிதும் மாற்றம் இருக்கவில்லை. பலம் வாய்ந்த முன்னங்கால்களிலோ, ஒரு குதறரில் குரல்வளையில் இருந்து உயிரை உரிஞ்சிவிடும் தன்மை வாய்ந்த கோரைப் பற்களிலோ சிக்கிக் கொண்டால் உயிர் மிஞ்சாது என்பதும் விகர்ணனுக்குப் […]


Kadamban Kundru 4

  கடம்பன் குன்று   பகுதி – 4 நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாயும் வேகமாக உருண்டோடின. விகர்ணன் புலியாருடன் சேர்ந்து அந்த மூலிகை வனத்தினை கட்டியாளும் பொறுப்பை செம்மையாகச் செய்து வந்தான். குன்றைச் சுற்றியிருந்த “மதிமயக்கி” மரத்தின் வாசனையை நுகராமல் இருக்க புலியார் சொல்லிக் கொடுத்தபடிக்கு, ஆழ்வல்லிவேரினை வாயினுள் அதக்கிக் கொண்டு வலம் வருவான். தம்பிக்கு உதவியாக தமையன் கர்ணனும் அவ்வப்போது உடன் வருவான். ஆனால் சிறிது நாட்களிலேயே கர்ணனுக்கு வெறுமனே காட்டைச் சுற்றித் திரிவது […]


கடம்பன் குன்று 3

கடம்பன் குன்று   பகுதி – 3 தன் அண்ணனின் குரல் வந்த திக்கைக் நோக்கி நடந்த விகர்ணன், சில வினாடிகளிலேயே அவனை எதிர்கொண்டு அழைத்து வந்த கர்ணனை கண்டு கொண்டான். “எங்கேயடா சென்றாய்? காட்டில் தொலைந்து விட்டாயோ என நான் அஞ்சினேன்” என்று தம்பியை ஏசிய கர்ணன், அவன் பதில் சொல்லும் முன்னரே தன் தம்பியை துரிதப்படுத்தினான். “எங்கையாவது வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்துவிட்டாயாக்கும்? சரி, சரி, துரிதமாக நட.. தாயார் நம் வரவை ஆவலுடன் […]


கடம்பன் குன்று 2

கடம்பன் குன்று   பகுதி – 2 போகர் தன் குருவான காலங்கி முனிவரின் கட்டளையை ஏற்று சீன தேசம் சென்று அங்கிருக்கும் மக்களுக்கு மருத்துவம், யோகம், ஜோதிடம் போன்ற கலைகளை பயிற்றுவித்து வந்தார். ஒரு முறை சீன தேசத்து மக்களுக்கு தான் கடுந்தவம் மூலம் கற்றுணர்ந்த காயகற்பம் என்ற வித்தையை கற்பித்துக் கொடுக்க நினைத்தார் போகர். காயம் என்ற உடலை, கல்பம் என்ற நீண்ட கால அளவில் நோய்களின்றி பராமறிக்கும் வித்தையே இந்த காயகற்பம் ஆகும். […]


கடம்பன் குன்று – 1

இது கற்பனைக்கதையே என்ற போதும், இங்கே சொல்லப்பட்டிருக்கும் முருகர் பற்றிய குறிப்புகளும், நவபாஷாணங்கள் பற்றிய அறிவியல் செய்திகளும் உண்மையே.   கடம்பன் குன்று   பகுதி – 1   “பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு” – போகர் 7000     கி.மு 8 ஆம் […]