Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாளன் கைகள் தொட்டு

கண்ணாளன் கைகள் தொட்டு  – 30 (5)

முரளி ஆணித்தரமாய் பேச ஆத்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிலநொடி மௌனத்தின் பின், “ஓகே, சித்தி சம்மதிச்சு அவங்களே பொண்ணு கேட்டா?…” “சத்தியமா குடுத்து வச்சவன் நான். ஆனா நடக்காதே?..” என்றவன் மீண்டும் வித்யாவை பார்த்தான். “லவ்ன்னு சொல்ல முடியலைண்ணா. ரொம்ப பிடிக்கும். அவளை நல்லா பார்த்துக்கனும்னு தோணும். எப்பவும் சந்தோஷமா இருக்கனும்னு நினைப்பேன். அவ என் கூட இருந்தா தான்னு இல்லை. அவளை புரிஞ்சவன் ஒருத்தனோட நல்லாயிருந்தான்னா போதும்….” என்று சொல்லிவிட, “இது போதும். நீ […]


கண்ணாளன் கைகள் தொட்டு  – 30 (4)

“போடனும்னு எல்லாம் போடலை. கையில மாட்டுச்சேன்னு போட்டேன்…” என்றாள் போனால் போகிறதென்பதை போல. “இதுக்கு யாரும் ஒன்னும் சொல்லலையா?…” “எனக்கு வர கோவத்துக்கு. நான் வேற செட் தானே எடுத்து வச்சேன். அதை எப்ப ட்ராலில இருந்து மாத்தினீங்க?…” “அதெல்லாம் ரகசியம். சொல்லமுடியாது…” என்றான் மீசையை நீவியபடி. “நேத்து நகை போடாம சமாளிச்சுட்டேன். இன்னைக்கு சித்தி என்ன கழுத்துல ஒன்னும் போடலைன்னு கேட்கவும் வேற வழியில்லை….” என்றவள், “சுந்தரி அக்கா பார்த்தாங்க, இதையும் உடைச்சிடாதன்னு கிண்டல் பண்ணுவாங்க…” […]


கண்ணாளன் கைகள் தொட்டு  – 30 (3)

“ஹ்ம்ம், ப்ரவுட் மொமென்ட் தான். உன்னோட புருஷனா நான் ரொம்ப பெருமை படற ஒரு தருணம்….” என ஆழ்ந்து அனுபவித்து அவன் சொல்ல, “பார்ரா…” என்று கிண்டல் பேசினாள் அவன் மனைவி. “வலி இது வெறும் வார்த்தை இல்லை ரிது. கண் முன்னாடி எனக்கு என்னென்னவோ கொண்டுவந்துட்ட நீ. உனக்குள்ள இருந்து ஒரு உலகம் வெளிவரும் போது அந்த அலறல்ல நான் செத்துட்டேன்….” லேசாய் கண்ணீர் ததும்பிவிட்டது அவனின் விழிகளில். “கண்ணத்தான்…” ஆத்மாவின் கையை பற்றிக்கொண்டாள். “நிஜம் […]


கண்ணாளன் கைகள் தொட்டு  – 30 (2)

“ஏன் ஆனந்தி, ரொம்ப கத்தறாளே?…” என்று பாவம் போல கேட்டவரின் கண்ணில் நீர்படலம். “எனக்கும் அதான் தெரியலைங்க…” என்று சொல்லும் பொழுதே தன்னைப்போல அண்ணாமலை கைகள் ஆனந்தியின் கையை பிடித்துக்கொண்டது. எத்தனை வருடத்திற்கு பிறகான ஒரு ஸ்பரிசம்? ஆனந்தி சந்தோஷத்தில் கண்ணீர் சிந்தினார். மகள் மனோவின் பிறப்பின் பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டவர் உடல்நிலை ஒரு பொம்மை போன்றானது. உயிருள்ள ஒரு மனித பொம்மை. மற்றபடி அவரால் சிறிய வேலைகளை கூட செய்யமுடியாத […]


கண்ணாளன் கைகள் தொட்டு  – 30 (1)

தீண்டல் – 30            ரிதுவின் வளைகாப்பு சிறப்பாகவே நடந்து முடிந்திருந்தது. திருமணத்தை சிறப்பாக செய்யமுடியாத குறையை வளைகாப்பில் நிவர்த்தி செய்துவிட்டதை போல ஆனந்திக்கு அத்தனை சந்தோஷம். வளைகாப்பிற்கு ஆனந்தியின் அண்ணனும், அவரின் சொந்தங்களும் கூட வந்திருந்தனர். அண்ணாமலை அழைப்பு தரவே இல்லை. ஆனந்தி மட்டுமே அழைத்திருந்தார் அவர்களை. சொந்தங்கள் மத்தியில் அது ஒரு பெயராகி போகும் என்றும், என்னதான் மனகசப்பாக இருப்பினும் விசேஷம் என்று வருகையில் தாய்மாமனை அழைக்காமல் செய்ய முடியாது என்பதால் அழைத்துவிட்டார். அதையும்விட […]


கண்ணாளன் கைகள் தொட்டு  – 29 (3)

“இங்க வந்தப்ப தான் நான் இல்லைன்னாலும் ரிதுவை பார்த்துக்க இங்க அத்தனை பெரிய குடும்பம் இருக்கறதே தெரிஞ்சது. திரும்பி போகலாம்ன்னா எங்க போக? எனக்கு யாரையும் தெரியாதே? அதான் இருந்துட்டேன். அதையும் விட ரிது அப்பா மேல ஒரு பயம். எதிர்த்து கேட்க தெரியலை…” “என்னால உங்க குடும்பமே பிரிஞ்சது. ஆனா என்னை நம்பி என் கையை பிடிச்ச பொண்ணுக்கு நான் உண்மையா இருக்கனும்னு நினைச்சேன். ரிதுவுக்கு எட்டு வயசுல வித்யா பிறந்தா. எத்தனை இருந்தாலும் அவளுக்கு […]


கண்ணாளன் கைகள் தொட்டு  – 29 (2)

அன்றொருநாள் வாசலில் இருந்த ஈசி சேரில் அமர்ந்தவன், அதன் பின்னர் அந்த எல்லையை அவன் கடக்கவில்லை. அங்கே வருவதும் இருப்பதும் மட்டுமே, அதற்கு மேல் செல்லவும் தோன்றவில்லை. முருகேஸ்வரியிடம் பேச்சுக்கள், வித்யாவுடன் இலகுவான பழக்கம் என்று இருந்தாலும் இயல்பாய் அவனால் அவ்வில்லம் உள் செல்ல முடியவில்லை. அதனை ரிதுவும் எதிர்பார்க்கவில்லை. பலமுறை ஆத்மாவே நினைத்ததுண்டு ‘இவள் தன்னை வா என்று அழைத்தால் தேவலாம்’ என எண்ணியிருக்கிறான். அப்படி அழைக்கும்பட்சத்தில் தவறாமல் செல்லவும் தயாராக இருக்க அதனை அவன் […]


கண்ணாளன் கைகள் தொட்டு  – 29 (1)

தீண்டல் – 29            வளைகாப்பு என முதல்நாள் தான் ரிதுவுடன் கரூருக்கு வந்திருந்தவன் அன்று  இளவரசுவை அழைத்துக்கொண்டு திருப்பூர் வரை வந்திருந்தான் முக்கிய வேலையாக. அண்ணாமலை வரவேண்டியது. அவரும், ஆனந்தியும் முக்கியமான ஒருவர் இல்ல திருமணத்திற்கு தம்பதி சமேதரராக சென்றிருக்க அவரின் சார்பாக ஆத்மா அவ்விடத்திற்கு வந்திருந்தான். மதியம் தான் கிளம்பிவிட்ட தகவலை சொல்ல என்று ரிதுவிற்கு அழைக்க அழைப்பு ஏற்கப்படவில்லை. இப்படி எடுக்காமல் இருப்பவளில்லை என்பதால் உடனே முருகேஸ்வரி எண்ணிற்கு அழைத்துவிட்டான் ஆத்மா. “சொல்லுங்க […]


கண்ணாளன் கைகள் தொட்டு  – 28 (2)

“என்னன்னு?…” “மத்த தோடை போடறதே இல்லை. எப்ப பாரு ஜிமிக்கி. எத்தனை தான் வாங்கி வச்சிருக்கன்னு கேட்காங்க…” என்று சிணுங்கலுடன் அவள் கூற ஆத்மாவிடம் குறும்பாய் குறுஞ்சிரிப்பு. “இதெல்லாம் நோட் பன்றாங்களா? ஓகே, கேட்டா என்ன? அப்படித்தான் சொல்லு…” என ஆத்மா சொல்ல, “ப்ச், சுந்தரி அக்கா கூட சொல்லிட்டாங்க. இதென்ன ஜிமிக்கி கடையே வச்சிருப்ப போல. இந்த டிஸைன் எல்லாம் எங்கருந்து வாங்கறன்னு கிண்டல் பன்ற மாதிரி…” “யார் என்ன சொன்னா என்ன? காதுல மட்டுமில்லை. […]


கண்ணாளன் கைகள் தொட்டு  – 28 (1)

தீண்டல் – 28                 “இங்க வெய்ட் பண்ணுங்க ஸார்…” என்று சொல்லிவிட்டு நர்ஸ் நகர்ந்து சென்றதும் ஆத்மா ரிதுவின் வருகைக்காக காத்திருந்தான். அந்த அறையின் வெளியே ஆனந்தியும், விசாலாட்சியும் இருந்தனர். ரிதுவை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்கள் பரிசோதனைக்கு. முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியோ அத்தனை பரபரப்பும் இருந்தது என்ன சொல்வார்களோ என்று. ஏற்கனவே ரிதுவிற்கு பிசிஓடி ப்ராப்ளம் இருந்திருக்க அதற்கான சிகிச்சையும் எடுத்திருந்தாள் முன்பே. இப்போது அதனை கொண்டு ஏதாவது உடல்ரீதியாய் பிரச்சனை இருக்குமோ என்று ஒரு […]