Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு

கதிர் நிலவு 24 (final)

மூன்று வருடங்கள் ஓடியிருந்தது. அன்று காலையில் தான் கதிர் நிலவு தங்களது வாழ்க்கை பந்தத்தில் திருமணத்தால் இணைந்திருந்தனர். ஒருவருடம் என்று சொல்லிய குமரன், வெண்ணிலாவின் விருப்பமாக மருத்துவத்தில் மேல்படிப்பாக மகப்பேறு மருத்துவம் இரண்டு ஆண்டுகள் படிக்க வைத்த பின்னரே திருமணம் செய்துகொள்ள சம்மதித்தான். அந்த கோபம் வெண்ணிலாவுக்கு இன்றளவும் உள்ளது. இரண்டாம் வருடம் படிக்கும்போது அவளாகவே திருமணம் செய்துகொள்ளலாம் என்று கேட்டிருக்க… “படிக்கும்போது படிப்பு மட்டும் தான் சிந்தனையில் இருக்க வேண்டும். கல்யாணம் ஆகிட்டால் உன்னிடம் என் […]


கதிர் நிலவு 24 (Pre final)

அத்தியாயம் 24 : முன் தின இரவு. விழாவிற்கு முதல் நாள் அஜய் வந்த பின்னர். அனைவரின் முன்பும் அன்னையிடம் மனம் திறந்து உரையாட முடியாமல் போனதால், எல்லோரின் உறக்கத்திற்கு பின் காந்தளை அவர் தங்கியிருந்த அறையில் சந்தித்தான் அஜய். தங்கை தன்னிடம் முதன்முதலில் ஒன்றை கேட்டிருக்க… அதனை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டுமென்று அண்ணனாக தவித்தான். அதனால் அன்னையிடம் முதலில் பேசிவிட வேண்டும் என நினைத்தான். காந்தள் கூறினால் குமரனிடம் மறுப்பு இருக்காது என்று அவனுக்கு நன்கு […]


கதிர் நிலவு 23

அத்தியாயம் 23 : மொத்த குடும்பமும் கூடத்தில் அமர்ந்து பேசியபடி இருந்தனர். இனி எப்போது இந்த மாதிரி ஒன்றாக கூடப்போகிறோம் என்ற ஏக்கம் ஒவ்வொவொருவரின் மனதிலும் எழுந்தது. ராஜேந்திரன் மற்றும் பழனிக்கு இத்தகைய சூழல் அத்தனை பிடித்தது. உறவுகளின் அருகாமையின் உன்னதம் புரியாது இருந்துவிட்டோமே என்று வருந்தியவர்கள், இனி எல்லோருக்கும் பிடித்தவர்களாக இருக்க வேண்டுமென எண்ணிக்கொண்டனர். “அன்பு பாசத்துக்கு முன்னால் எதுவுமே பெருசில்லைன்னு தோணுது மச்சான். போட்டி பொறாமையால் இத்தனை நாள் இதோட அருமை தெரியாமல் இருந்துவிட்டேன்.” […]


கதிர் நிலவு 22

அத்தியாயம் 22 : அடர்ந்த காரிருள் சூழ்ந்த நேரத்தில் தன்னுடைய ஆஸ்தான இடமான பாறையின் மீது கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான் குமரன். வானில் உலா வரும் நிலவில், கமலத்தின் வார்த்தையில் எவ்வித அதிர்வுமின்றி இயல்பாக நின்றிருந்த அவனது நிலவின் முகம். அந்நேரம் அவளது முகத்தில் என்ன இருந்தது என்று துளியும் குமரனுக்கு விளங்கவில்லை. குமரனையும் மதியையும் ஒன்றாக விழுந்து வணங்குமாறு நேரடியாக அவர்கள் இருவருக்கும் திருமணம் என்று கமலம் பாட்டி சொல்லிட, மதியும், குமரனும் தங்களது இணையைத்தான் […]


கதிர் நிலவு 21

அத்தியாயம் 21 : வீடே அந்த அதிகாலைப் பொழுதில் பரபரப்போடும்… அதேயளவு உற்சாகத்தோடும் காணப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவ்வீட்டின் மூத்த தலைமுறை தம்பதிக்கு எண்பதாவது திருமணம். குமரனுக்கு தொழில் தொடர்பு கொண்டவர்கள் முதல், பழனி, எம்பிரான் அவர்களுக்கு பழக்கமானவர்கள், மற்றும் அவ்வூரின் மக்கள், அவர்களது தோட்டங்கள், பண்ணைகள் மற்றும் ஆலைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் வரை அனைவரும் மூத்தவர்களிடம் ஆசிபெற வந்திருந்தனர். ஒரு சதாபிஷேகம் நேரில் கண்டு ஆசி பெறுவதெல்லாம் அத்தனை எளிதல்லவே. ஆயிரத்தெட்டு பிறை […]


கதிர் நிலவு 20

அத்தியாயம் 20 : சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. அன்று தான் அந்த வருடத்திற்கான இறுதி தேர்வை முடித்தாள். தேர்வு அறையை விட்டு வெளியில் வந்தவள், சேலம் பேருந்து நிலையம் வரை ஹேமாவுடன் வண்டியில் வந்துவிட்டாள். “உன் மாமாகிட்ட சொல்லியிருந்தால் அவரே வந்து கூட்டிபோயிருப்பார். இப்போ எதுக்கு நீ பஸ்ஸில் தனியா கிளம்புற?” “அவர்கிட்ட நார்மலா பேசியே ரொம்ப நாளாகுது ஹேமா. அதுவுமில்லாமல் ஏற்கனவே மாமா இந்த விழாவால் ரொம்ப அலையுறார். தூங்கவே நேரமில்லாம […]


கதிர் நிலவு 19

அத்தியாயம் 19 : வெண்ணிலாவிடம் தடுமாற்றம். அஜய் இப்படி கேட்பானென்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனால் தன் காதலுக்கு இருக்கும் தடையை அகற்றிட நினைத்தே பேசினாள். தவறியும் பழையதைப்பற்றி பேசிடக்கூடாதென இருந்தவளுக்கு அவனது கேள்வியால் அதிர்வு. “நீ என்னிடத்தில் இருந்தால் மன்னிச்சிருப்பியா?” “மன்னிக்க முடியாது தான். ஆனால் அதைத்தவிர வேறெதுவும் கேட்டிட முடியாதே. என்னை மன்னிச்சிடுடா. உன் அண்ணனை மன்னிச்சிடு. என்னால் முடியல. இந்த குற்றவுணர்வு என்னை படுத்துது. வாழ்க்கை முழுக்க துரத்தி வருமோன்னு பயமா இருக்கு.” குமுறி […]


கதிர் நிலவு 18

அத்தியாயம் 18 : குமரன் என்னவென்று உணரும் முன்பே நடந்துவிட்ட நிகழ்வில், தலை சுற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு. வேகமாக கிணற்றுக்கு அருகில் ஓடிவந்த குமரன்… “என்ன அஜய் இப்படிபண்ணிட்ட?” என்று கேட்டுக்கொண்டே, “அப்பா, அத்தை, தாத்தா, பாட்டி ஓடிவாங்க” என்று உரக்க கத்தியபடி கிணற்றின் உள்ளே பாய்ந்திருந்தான். வெண்ணிலா கைகளை உயர்த்தியபடி நீருக்குள் அமிழ்ந்து, மேலே வந்து மூச்சுக்குத் தவித்தபடி போராடிக் கொண்டிருந்தாள். கைகள் காற்றிலும், நீரிலும் அலைமோதின. வெளியே வரும் அவள் முகத்தில் கண்கள் சொருகிய […]


கதிர் நிலவு 17

அத்தியாயம் 17 : கண்களில் நீர் கோர்த்து உதடு துடிக்க…சடுதியில் மாறிவிட்ட வெண்ணிலாவின் முகம் குமரனை உறங்கவிடாது பாடாய் படுத்தியது. விளையாட்டு பேச்சென்றாலும் வெண்ணிலாவால் அதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. காந்தளின் பேச்சு குமரனுக்கும் பிடிக்கவில்லை. மனம் முழுக்க ஒருத்தி வேரோடி போயிருக்க, வேறொரு பெண்ணை இணைத்து பேசிட எப்படி இருக்கிறதாம்? காந்தளிற்காக வேண்டா வெறுப்பாக உணவை விழுங்கி வைத்தான். ஆனால் வெண்ணிலா, பார்வையாலேயே அவனை குத்தி கிழித்து உண்ணாமலே சென்றுவிட்டாள். கடந்த சில நாட்களாகவே வெண்ணிலா இப்படித்தான் […]


கதிர் நிலவு 16

அத்தியாயம் 16 : கணினியின் முன்பு அமர்ந்திருந்தவனின் அருகிலிருந்த அலைப்பேசி நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. யாரென்று திரையை பார்ப்பதற்கு சிறிதும் எண்ணமின்றி கணினியில் தட்டிக் கொண்டிருந்தான். “அஜய்… இட்ஸ் யுவர்ஸ்.” அவனின் தோள் தட்டி சொல்லிய நண்பன் ஆடம்ஸின் குரலுக்கு கூட அஜய்’யிடம் எதிர்வினை இல்லை. கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் சென்ற பின்னரே திரையிலிருந்து பார்வையை அகற்றி… இரு கைகளையும் மேலே உயர்த்தி சோம்பல் முறித்து, கண்களை தேய்த்தவனாக தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஆடம்ஸை பார்த்தான். […]