Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கன்னத்தில் முத்தத்தின் ஈரம்

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் – 3(2)

“நீ சாதாரணமா யோசிக்காதேனு சொல்லிட்ட, இப்போ தான் எனக்கு யோசனை அதிகமாகுது. தப்பு பண்ணிட்டேனோன்னு வேற தோனுது. ராது ஃபேமிலி பத்தி எனக்கு நல்லாவே தெரியும், ரொம்ப ஸ்ட்ரிக்ட். அது தெரிஞ்சும் அவளை உன்கிட்ட காட்டி…!” என்றவள் முழுதாக முடிக்காமல் தலையில் அடித்துக் கொள்ள.


கன்னத்தில் முத்தத்தின் ஈரம் – 3(1)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…! ராதா ரமணா அத்தியாயம் 03:- வாகா வீட்டு மொட்டை மாடியில் தலைக்கு முட்டுக்கொடுத்து படுத்திருந்தான் ரமணா, அருகிலே ஒலிநாடாவில் ‘ஒவ்வொன்றாய் திருடுகிறாய்!’ பாடல் கார்த்திக் மற்றும் பவ்யாவின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. கடும் இருட்டை வானில் பவனி வந்த தேய்பிறை நிலவும், மெல்லொளி கசிந்த விளக்கின் வெளிச்சமும் நீர்த்துக் கொண்டிருக்க, சிலு சிலுவென குளிர்ந்த காற்று புழுக்கத்தை விரட்டி அடித்த வண்ணம் சுழன்றது. அவன் கண்கள், கனவில் மெய்மறந்து இருக்க, கனவுடன் கூடிய […]


கன்னத்தில் முத்தத்தின் ஈரம் 2 (2)

பெரு மலையாக எழுந்து அச்சுறுத்தும் குடும்பத்திற்கும் மனதில் லேசாக தடம் பதித்து ‘உன்னை பிடிச்சிருக்காம்’ என்னும் வார்த்தையை நினைவுகூறும் போதெல்லாம் சின்ன சிரிப்பை மின்னல் கீற்றுப் போல் உதட்டில் தூவிச் செல்லும் சலனத்துக்கும் இடையே, அவள் மனம், எந்தப் பக்கம் சாய என தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தது. ஒரு மனம், ‘என்ன ஆச்சு ராது உனக்கு, அதான் வேண்டாம், சரி வராது, வீட்டுக்கு தெரிஞ்சா உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவாங்கன்னு தெளிவா சொல்லிட்டியே… அப்புறம் எதுக்கு சுபி […]


கன்னத்தில் முத்தத்தின் ஈரம் 2 (1)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…! ராதா ரமணா அத்தியாயம் 02:- “ரொம்ப நேரமா லேன்ட் லைன் ரிங் பண்ணுது, யாருன்னு பாரேன் ராதா” இரவுணவுக்கு அடுக்களையில் இருந்த அம்பிகா, இளைய மகளை ஏவ, பெரிய‌ உறைபோட்ட தடினமான மேத்ஸ் புத்தகத்தோடு போராடிக் கொண்டிருந்த ராதா மூடி வைத்து எழுந்தவள் முழுதாக அடித்து ஓய்வதற்குள் எடுத்து காதில் வைக்க, “ஹ…” ‘ஹலோ!’ என்பதற்குள் “யாரு டி அது இந்த நேரம்” என்றார் அம்பிகா. “கேக்கலம்மா யாருன்னு பார்க்கிறேன்” என்க, “இன்னும் […]


கன்னத்தில் முத்தத்தின் ஈரம் – 1 (2)

ஒற்றை குஷன் செய்யப்பட்ட சோஃபாவில் சட்டமாக அமர்ந்து, கொண்டு வந்திருந்த கிண்ணத்தை மேஜையில் வைத்தவன் அருகே இருந்த ரீமோட்டில் டீவியை உயிர்ப்பித்து அலைவரிசையை மாற்றிக்கொண்டே, அங்கு அவனுக்கு எதிரில் இருந்த கண்ணாடி ஜன்னல் இடைவெளி ஊடாக வெளியே சுபஷ்வினியுடன் சலசலத்துக் கொண்டிருக்கும் அவள் தோழிகளை நோட்டம் விட, ஒருவழியாக அவள் அனைவரையும் அனுப்பி வைத்து உள்ளே நுழைந்ததும் முதலில் இவனை கண்டு ஆச்சரியமாக புருவங்களை உயர்த்தினாள்‌. “மழை வர மாதிரி இருக்கேன்னு நினைச்சிட்டே வந்தேன், இப்பதான் தெரியுது […]


கன்னத்தில் முத்தத்தின் ஈரம் 1 (1)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…! ராதா ரமணா அத்தியாயம்01:- 2015~ என்னை                  தாலாட்ட வருவாளோ        நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ  தங்க தேராட்டம்           வருவாளோ        இல்லை ஏமாற்றம் தருவாளோ      தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா       கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே நிலைக்கண்ணாடி இல் முகம் பார்த்து தலை கோதி கொண்டிருந்த ரமணாவின் இதழ்கள் […]