Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே

கரை தாண்டி வா காதலே – 30

அத்தியாயம் – 30 (முடிவுரை)   திருமணம் முடிந்த கையோடு, அலெக்ஸை இந்தியா அழைத்துச் செல்வதற்கான வேலைகளை மிருதுளா துவங்கி விட்டாள். வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ய, சில நாட்களிலேயே மகேந்திரன் தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பி விட்டான்.   போவதற்கு முன், வந்தனாவும், கலைவாணியும் மிருதுளா தங்கி இருந்த வீட்டைக் காலி செய்ய உதவினர். மிருதுளா ஜெனியுடன் ஏற்கனவே அலெக்ஸின் வீட்டில் தேவையானவற்றை ஒழுங்கு செய்திருக்க, எல்லாம் இலகுவாகவே முடிந்து விட்டது.   […]


கரை தாண்டி வா காதலே – 29

அத்தியாயம் – 29 (இறுதி அத்தியாயம்)   ‘ஹென் பார்ட்டி’ பற்றி ஜெனி மிருதுளாவுக்கு புளி போட்டு விளக்க, ‘இதென்னடா புதுக் கதையா இருக்கு’ என்று நினைத்தவள், உதவிக்கு அலெக்ஸை பார்க்க, அவன் ‘உன் தோழியை நீதான் சமாளிக்க வேண்டும்’ என்பது போல் தோளைக் குலுக்கினான்.   அந்த திட்டமிடுதலை ஜெனி பொறுப்பேற்றுக் கொள்ள, ராபர்ட்டும், பீட்டரும் ‘பேச்சிலர் பார்ட்டி’யை பொறுப்பேற்றுக் கொண்டனர். அடுத்த வார இறுதியிலேயே இரு குழுவினரும் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டாட்டங்களுக்கு செல்வது என்று […]


கரை தாண்டி வா காதலே – 28

அத்தியாயம் – 28   திருமணத்திற்கு தயாராகும்படி மிருதுளா கூறி விடவும், அலெக்ஸுக்கு  முகம் கொள்ளா பூரிப்பு. முதலில் சம்மதம் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும், கலைவாணியிடம் பேசிய பின்பு அது சற்று ஆட்டம் கண்டுவிட்டதென்னவோ உண்மை தான்.   ஆண்டுக்கணக்கில் காத்திருக்க நேரிடும் போலும் என மனதளவில் தன்னை தயார்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டவனுக்கு, சட்டென்று சம்மதம் கிடைத்தது இன்ப அதிர்ச்சியே.    “ஹேய் ஸாஃப்டி, எப்படி இவ்வளவு சீக்கிரம் ஓகே சொன்னாங்க?” என ஆச்சரியமாகக் […]


கரை தாண்டி வா காதலே – 27

அத்தியாயம் – 27   இவனை வைத்துக் கொண்டு இந்தப் பேச்சை ஆரம்பித்திருக்கக் கூடாதோ என மிருதுளாவுக்கும் தாமதமாக தோன்ற, அவள் அழுகையை நிறுத்தி விட்டு அலெக்ஸை கலவரமாகப் பார்த்தாள்.     கலைவாணி யார், எவர் என்றெல்லாம் பார்க்கும் ரகம் கிடையாது. யாரானாலும் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசி விடுவார். தன்னையோ, மகேந்திரனையோ காய்ச்சி எடுப்பது வேறு. அதெல்லாம் அவர்கள் இருவருக்கும் பழக்கம் தான். அலெக்ஸை ஏதாவது மனம் நோகும்படி பேசிவிட்டால் என்ற பயம் தான் […]


கரை தாண்டி வா காதலே – 26

அத்தியாயம் – 26   சில வருடங்கள் கழித்து தங்கையைக் கண்ட தமையனுக்கு கண்கள் கலங்கியது. உடல் சற்று இளைத்திருந்தாலும், முகம் தெளிவாகவே இருந்ததை மகேந்திரன் கவனிக்க தவறவில்லை. ஆதூரமாக அவளை அணைத்துக் கொள்ள, மிருதுளாவின் கண்களிலும் கண்ணீர்.   “எப்படி இருக்கண்ணா? ஃபிளைட் எல்லாம் ஓகேவா?” என்று அண்ணனின் அணைப்பில் நின்றவாறே கேட்க,   “எல்லாம் ஓகே தான் மிரும்மா. நீ எப்படிடா இருக்க?” என்றான்.   “எனக்கென்ன ஜம்முன்னு இருக்கேன். நீயே பார்த்து சொல்லேன்?” […]


கரை தாண்டி வா காதலே – 25

அத்தியாயம் – 25   மெய்மறந்து அணைப்பில் நின்று கனவில் மிதந்தவர்களை மிருதுளாவின் அலைபேசி சத்தம் தான் நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது. ஜெனி தான் அழைத்திருந்தாள்.    ஐந்து நிமிடம் என்றவன் அரை மணி நேரம் பேசி இருக்க, மிருதுளா வழமையாக பயணிக்கும் தொடர்வண்டியை தவற விட்டிருந்தாள். அவளைக் காணாமல் ஜெனி அழைத்து,   “ஹேய் மிரு, என்ன டிரெயின் மிஸ் பண்ணிட்டியா? ஆர் யூ ஓகே?” என்றாள்.   அதில் அலெக்ஸை முறைத்தவள்,   […]


கரை தாண்டி வா காதலே – 24

அத்தியாயம் – 24   அலெக்ஸிடம் பேசி விட்டு அலைபேசியை வைத்தவளுக்கு, ‘எப்போதடா பொழுது விடியும்?’ என்ற யோசனையில், தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.   ‘அப்படி புதிதாக என்ன சொல்லவிடப் போகிறான்?’ என்ற குறுகுறுப்பு ஒரு புறம். ஏனெனில் வாராவாரம் அவர்கள் சந்திப்பில் இதையே தான் மாற்றி மாற்றி பேசி, இருவரது நிலையில் இருந்தும் இறங்க முடியாமல் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்பது தான் வழக்கம். ஒரு சில நாட்களில் என்ன மாறி […]


கரை தாண்டி வா காதலே – 23

அத்தியாயம் – 23   அன்றைய உணர்ச்சிகரமான சந்திப்பிற்குப் பின் நாட்கள் நத்தை வேகத்தில் தான் நகர்ந்தது மிருதுளாவுக்கு. மாறியிருந்த ஒரே விஷயம் வாரந்தோறும் தமிழ் பள்ளிக்கு தன்னார்வலராக செல்ல ஆரம்பித்தது தான்.    அலெக்ஸைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பமும் அது ஒன்று தான். தொடர்பு அறவே நின்று விடாமல் ஏதோ ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு. இருவருக்கும் அதை இழந்து விட மனமில்லை.   வழமை போல் அலெக்ஸ் அவளுடன் தொடர் வண்டி பயணங்களில் சேர்ந்து […]


கரை தாண்டி வா காதலே – 22

அத்தியாயம் – 22   அவன் ஆச்சரியப்படுத்துவதாக கூறி தமிழ்ப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது, மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கேள்வி தான் இது. சட்டென்று பதிலும் கூட கூறி இருப்பாள் தான். ஆனால் அப்போதைய மன நிலைக்கும், தற்போதைய நிலைக்கும் மலையளவு வேறுபாடு இருக்கிறதே.   உடனே மறுப்பு சொல்ல மனம் வரவில்லை என்றாலும், பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்கள் பல இருக்க, முழு மனதுடன் சம்மதம் சொல்லவும் முடியவில்லை. லேசாக அவன் முகத்தில் இருந்து […]


கரை தாண்டி வா காதலே – 21

அத்தியாயம் – 21   மிருதுளாவுக்கு அன்றைய நாள் எந்த விதத்திலும் சாதகமாக இல்லை போலும். உடல்நிலை ஒரு பக்கம் பாடாய் படுத்த, மன நிலையும் மோசமாகிக் கொண்டே போனது.   எதுவும் பேசாமல் தொடர்வண்டியில் வந்தவளுக்கு, கோடை கால வெப்ப மிகுதியால் மூச்சடைப்பது போல் இருந்தது. மூளைக்கு ஓய்வு கொடுக்காமல், ஏதோ யோசித்துக் கொண்டே இருந்ததில், எடுத்துக் கொண்ட வலி நிவாரணிகளும் எந்த விதத்திலும் பயனளிக்க வில்லை. அலெக்ஸும் அவள் நிலை உணர்ந்தவன் போல் எதுவும் […]