“இதையும் விட இன்னொரு காரணம் பயம். ஒருவேளை தீக்ஷாவுக்கு வேற லைப்ன்னு எதாச்சும். அதை பார்க்கற அளவுக்கு எனக்கு சக்தி இல்லையோன்னு தான் விலகியே இருக்க முடிவுக்கு வந்தேன்…” “ஹரிணி நிச்சயத்துக்கு வந்தப்போ தான் நீங்க கும்பகோணத்துல இல்லைன்னது தெரிஞ்சது. தீக்ஷா அப்பாவும் இல்லைன்னது தெரியவந்துச்சு. கோவில்ல தீக்ஷாவை பார்த்தேன். என்னோட காத்திருப்புக்கு கடவுள் இன்னொரு பாதையை ஏற்படுத்திருக்காருன்னு நினைச்சேன்….” “அங்க பார்த்த வேலையே விட்டுட்டு இங்க வந்தேன். நான் வந்த இடத்துலயே தீக்ஷாவும் இருந்தா. எல்லாமே […]
நதிகள் – 18 வாசலில் வந்து கார் நின்றதும் கடையில் அமர்ந்திருந்த ஹரிணியும், நிவாஷினியும் எட்டி பார்த்தனர். பார்த்ததுமே தெரிந்துவிட்டது ஹரிணிக்கு தன் அண்ணனின் கார் என்பது. சட்டென்று ஒரு பதட்டம். தன்னை பார்த்தால் நிச்சயம் கோபப்படுவான் என்பதில் அவள் வெலவெலத்து பார்த்து நிற்க ஹரித்திரன் இறங்கியதன் மறுபக்கத்தில் சுகன்யா. ‘என்னடா இது?’ என்று வாய் பிளந்து பார்த்தாள் அவர்களை. சுகன்யாவும் ஹரிணியை கவனித்துவிட்டார். “இவ என்ன பன்றா இங்க?…” என்று ஹரித்திரனிடம் கேட்க பதிலின்றி […]
“நீ தான் சொன்னியே, வயசாகிருச்சு. வேற பொண்ணு கிடைக்கலைன்னு என்னை மயக்க பார்க்கறீங்களான்னு. அதே தான். வேற எந்த பொண்ணும் வேண்டாம். உன்னையே மயக்கி உன்னையே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்…” என்றவன், “சொல்லுவாங்களே, தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசே மேல்ன்னு. அதான் இந்த பிசாசுக்காக வெய்ட் பண்ணேன்…” என்று சொல்ல, “நான் பிசாசா?…” என்றாள் ஆவேசமாய். அதற்கும் புன்னகைத்து, “முகம் கழுவிட்டு ரெடியா இரு. இப்ப வந்திடறேன்…” என்று சொல்லி வெளியேறினான் ஹரித்திரன். அவன் மீண்டும் […]
நதிகள் – 17 ஹரித்திரன் சொல்லியும் கூட சம்ருதிக்ஷா அங்கிருந்து எழுந்தபாடில்லை. அத்தனை பிடிவாதம். கூடவே அவள் செய்து வைத்த செயலின் வீரியம் அவளை நிலைகுலைய செய்திருந்தது. இந்தளவிற்கு நிதானம் தவறியதில்லை அவள். இன்று எல்லாவற்றிற்கும் மேல் ஹரித்திரனிடம் தன்னை வெளிப்படுத்தவே கூடாதென்னும் முடிவு மொத்தமாய் சிதறியிருந்தது. வினோதாவிடம் பேசியவற்றையும் அவள் ஹரித்திரனிடம் பகிர்ந்திருப்பதை அவனின் பேச்சுக்களில் புரிந்துகொள்ள முடிந்தது. “தீக்ஷா ப்ளீஸ், எழுந்திரு. போகலாம்…” என்றான் மிக மிக பொறுமையுடன். “உங்களோட வரமுடியாதுன்னு திரும்ப […]
எப்போதும் தெளிவாய் யோசிக்கும் லாவண்யாவிற்கே அவர் எங்கே வருகிறார் என்று புரியவில்லை. “என்ன சொல்றீங்க நர்மதா?…” என்றார் குழப்பத்துடன். “ருதி இன்னும் அந்த பையனை நினைக்கிறது எனக்கு தெரியும்…” என்றார் வெகு இலகுவாய். “என்ன? தெரிஞ்சுமா? தெரிஞ்சும் எப்படி நீங்க அமைதியா இருக்கீங்க? அதுவுமில்லாம மன்னிப்பு கேட்ட ஹரிகிட்டையும் அப்படி பேசிட்டு என்னங்க, என்னங்க இது?…” என்றார் ஆதங்கத்துடன். “மன்னிப்பு கேட்டுட்டா போதுமா? அடுத்து என்னன்னு யோசிக்கவே இல்லையே அந்த பையன். நான் சொன்னதை டிஃபென் பண்ணி […]
நதிகள் – 16 நர்மதாவின் பார்வையில் லாவண்யா என்ன நினைத்தாரோ ஹரிணியின் பக்கம் திரும்பினார். “ஹரிணி, நீயும் நிவாஷினியும் கடையில இருங்க. நான் பேசிட்டு வர்றேன்…” என்றார். “அத்தை…” என அவள் தயங்கி நர்மதாவை பார்க்க, “அம்மாவை விட்டுட்டு நான் போகமாட்டேன்…” என்று நர்மதாவின் கையை பிடித்துக்கொண்டாள் நிவாஷினி. “இங்க பாரும்மா, முன்னாடி நான் இங்க வந்தது ஒரு கஸ்டமரா தான். ஆனா இப்ப வந்திருக்கறது உங்களோட சொந்தமா. நீங்க அப்படி நினைக்கறீங்களான்னு தெரியலை. ஆனா […]
“ஹரிணி கொஞ்சநேரத்துல கூப்பிடறேன்…” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு குணாலுடன் சென்றவன் மனதின் ஓரத்தில் இந்த விஷயம் முள்ளாய் துருத்தியது. அப்போதுதான் தீக்ஷாவும் அவளின் இருக்கைக்கு வந்தமர வினோதா வரிசையாய் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டாள். “இவ்வளோ நேரமா ருதி? என்ன டவுட்? ஆமா பாஸ் எதுவும் சத்தம் போட்டுட்டாரா என்ன? முகமே டல்லா கண்ணெல்லாம் சிவந்துபோய் இருக்கு?…” என்றாள் வினோதா. “டவுட் தானே? க்ளியராகாது அது. ஏனா உன் பாஸ்க்கே பதில் தெரியாதாம்…” என்று சொல்லிய தீக்ஷா […]
நதிகள் – 15 நொடிகள் நிமிடங்களாக சம்ருதிக்ஷா இன்னும் அவ்விடம் விட்டு அசைந்தாள் இல்லை. ஹரித்திரனும் நின்ற இடத்திலிருந்து அவளை பார்த்தபடி தான் நின்றிருந்தான். அது அவர்களின் அலுவலகம். வெகுநேரம் இங்கே இருக்கவும் முடியாதென்பதனால் ஆழ்ந்த பெருமூச்சுடன் வந்து தீக்ஷாவின் எதிரில் அமர்ந்தான் ஹரித்திரன். விழிகளில் நீர் கோர்த்திருக்க இமைகளை மட்டும் உயர்த்தி அவனை ஏறிட்டாள் தீக்ஷா. “ஊஃப், இப்போ என்ன பிரச்சனை?…” என்றான் ஹரித்திரன் அலைபாயும் நெஞ்சத்துடன். இந்த வயதில், இத்தனை அலைப்புறுதல்கள். மனம் […]
“அன்னைக்கும் பார்த்துட்டு தானே இருந்தோம்? மாப்பிள்ளை சொல்லி, கங்கா ஆமான்னதும் நீங்களும் பார்த்துட்டு தானே இருந்தீங்க?…” “ஒருதடவை தப்பு நடந்தா ஒவ்வொரு தடவையுமா தவறாகிடும்…” என்றார் நம்பி அலுப்புடன். “ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்றதும், தோல்வியே வெற்றிக்கு முதல் படின்றதும் நடந்த, நடக்கற சூழ்நிலையை வச்சு மட்டுமில்லை, மனுஷங்களோட குணத்தையும், முயற்சியையும் வச்சு தான்…” “என்ன தான் சொல்ற புவி?…” “இப்பவும் உங்க தம்பிக்கு அன்னைக்கு நடந்த விஷயத்துல எந்த ஒரு உறுத்துமே இல்லை. அவங்களுக்கு […]
நதிகள் – 14 திருமண பரபரப்புகள் எல்லாம் ஓய்ந்து வீடே அத்தனை அமைதியாக இருந்தது. ஹரிணி இருக்கும் வரையிலும் புவனாவிடம் சலசலத்துக்கொண்டும், இல்லை கண்ணெதிரே இங்குமங்கும் நடமாடிக்கொண்டிருப்பாள். எந்தநேரமும் வீட்டின் டிவியில் ஏதாவது ஒரு சப்தம் மெலிதாய் கேட்டுக்கொண்டிருக்கும் அவளிருக்கையில். இப்போது பேச்சுக்கு பஞ்சம் என்பதை போல தேவைக்கு தான் பேச்சு இருக்கும் மூவரிடத்திலும். ஹரித்திரனிடம் பேசவே யோசித்து தயங்கி தான் பேசவேண்டியதாக இருந்தது சந்தனநம்பிக்கு. அவனின் முகம் பார்ப்பதும், நினைத்ததை கேட்கமுடியாமல் தவிப்பதுமாக அவரிருக்க, […]