“ஆழீழீழீழீழீ…………..” “அய்யோ…பட்டு உன் அம்மா டென்ஷன் ஆகிட்டா வா ஓடிடலாம்…” இன்று அகலிகையின் முதல் பிறந்த நாள். மாலை விழாவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிக்க…மகளை தயார் படுத்தும் பொறுப்பு கண்ணனுடையது. அவனோ வழக்கம் போல் தந்தை உலகில் மெய் மறந்து விளையாடி கொண்டிருக்க….. ஆரதிக்கு தான் உச்சி சுடாகியது. கஷ்டப்பட்டு இருவரையும் தயார் படுத்தி வெளியில் அழைத்து வர…. அங்கு குட்டி போட்ட பூனை போல் நடந்து கொண்டு இருந்தான் சித்தேஷ் கண்ணன். சித்தப்பாவை கண்டதும் அகலிகை […]
திருமணம் நல்லபடியாக முடிந்திருக்க பொண்ணும் மாப்பிள்ளையும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சரஸ்வதி மஹாலட்சுமி இருவரும் ஆரத்தி எடுத்து முடித்து உள்ளே வர சொல்லும் வரை அமைதியாக நின்றிருந்தான் சித்து. வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்ல போன வானதியை தடுத்து நிறுத்தியவன் நேராக ராசாத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். “அத்தை! படிச்சி முடிக்கிற வரைக்கும் உங்க பொண்ணு இங்கேயே இருக்கட்டும். என் மேல நம்பிக்கை இருந்தா எந்த கேள்வியும் கேட்காம சம்மதம் சொல்லுங்க. ” மகளின் […]
தேனிலவுக்கு வந்திருந்த ஜோடிகள் … வந்த வேலையை முடித்துவிட்டு இனிமையான நினைவுகளுடன் தங்களின் இல்லத்திற்கு திரும்பி இருந்தனர். ஆரதி கண்ணன் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருக்க , எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அழகாக சென்று கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததிலிருந்து கண்ணன் சித்துவிடம் எதுவும் பேசவில்லை அன்று நடந்ததைப் பற்றி. சித்தும் இதை எதிர்பார்த்து இருந்ததால் எதுவும் நடவாததுபோல் தன் நடவடிக்கையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தான். அண்ணன் தம்பி இருவரும் அன்று நடந்ததைப் பற்றி பேசாமல் […]
ஆழி!! இந்த ஏற்பாட்டை எப்ப பண்ண. இதை பண்ண தான் வேலை இருக்குன்னு கிளம்பி போனியா. சத்தியமா எதிர்பார்க்கல….ஆழி. கார்ல வரும்போது சொன்னல அந்த நாளை விட சிறப்பான ஒரு நாள தர முடியும்’னு அது வெறும் வார்த்தை இல்லன்னு இப்ப புரிஞ்சிக்கிட்டேன். எப்படிடா உனக்கு மட்டும் இதெல்லாம் தோணுது.”மனையாளின் ஆச்சரியத்தில்.. மகிழ்ந்த கண்ணனும், “நிஜமாவே நேத்து ராத்திரி வேலை இருந்துச்சு ரதி. மறுநாள் இங்க கூட்டிட்டு வர தான் பிளான்… அது அப்படி இப்படின்னு சொதப்பி […]
சடங்குகள் அனைத்தும் முடிந்து… இரவு வேளை நெருங்கியிருக்க மணமக்களுக்கான முதலிரவு அறை தயாராக ஆரம்பித்தது. ” வயசு பசங்கள பண்ண விடுற வேலையா இது.. சீச்சீ..! இந்த வீட்டுல இருக்குறவங்களுக்கு கொஞ்சம் கூட நம்ம மேல அக்கறையே இல்லை. என் மனசு கெட்டுப் போய்டாது. என்ன பண்றது கூட பொறந்தவனுக்காக இன்னும் என்னென்னலாம் பண்ண வேண்டியது இருக்கோ…..” தன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருக்கும் சித்துவை தலையில் அடித்த தினேஷ்.., “அவங்களா உன்ன பண்ண சொன்னாங்க. நீயே அடம்பிடிச்சு […]
கல்யாண வேலைகள் சித்து தலைமையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, ஆரதி தன் பிறந்த இல்லத்திற்கு சென்று ஒரு வாரம் ஆகி விட்டது. அந்த ஏழு நாட்களில் கண்ணன் …இருமுறை தன் வருங்கால மாமனார் வீட்டிற்கு சென்றது எல்லாம் வேறு கதை. காதலும் கடமையும் கதாநாயகனை சரியாக கையாண்டு கொண்டிருந்தது. ஆரதி தான்… திருமணத்திற்காக தன் பணியினை நிறுத்தி வைத்திருக்கிறாள். ஒரு காதல் ஜோடி திருமண நாளை எதிர்பார்த்து இருக்க, அன்று ஜவுளிக்கடையில் தினேஷிடம் பேசியதிலிருந்து ரதி தேவிக்கு […]
“மேடம்! கொஞ்சம் பக்கத்துல இருக்க என்னையும் ரசிக்கலாம்..” தன்னை மறந்து பத்திரிக்கையை கையில் வைத்து ரசித்துக்கொண்டிருந்தவள், கண்ணனின் குரலில்… விழித்துக் கொள்ள, “அப்படி என்ன இருக்கு அதுல ரதி.” என்றான் தெரிந்தும் தெரியாது போல். “நீதான் இருக்க ஆழி. ” என்றவள் பின் நின்று கொண்டிருக்கும் கண்ணனை தலையை நிமிர்த்தி பார்தாள் வெட்கத்தோடு. அவனும் இவளை குனிந்துகொண்டு பார்த்திருக்க…. காதல் விழிகள் திருமணத்தில் குறிப்பிட்டிருக்கும் நாளை எண்ணி வெட்கி சிவந்து. “ஆழி இந்த பத்திரிகையில ஒரு சின்ன […]
வானதி கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருக்க, அவளுக்கு வேண்டியதை செய்து கொண்டிருந்தார் ராசாத்தி. சாப்பிட்டுக் கொண்டிருந்த சேகர் டிவியை ஆன் செய்து செய்தி சேனலை பார்க்க… பரபரப்பான தலைப்புச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. நீதிபதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி நேற்றிரவு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். இவன் தன்னுடைய கூட்டாளி ராபர்ட்டை கொலை செய்தவன் ஆவான். மேலும் அனிதா என்ற பெண் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவன். அந்தப் பெண் விசாரணைக்காக கொலை நடந்த இடத்துற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்ததை […]
“அப்பா இவங்க சொல்ற மாதிரி கோர்ட்ல சொல்லாதீங்க. ஏதோ ப்ளான் பண்றாங்க. எதுவா இருந்தாலும் கோர்ட்ல நிறுத்தட்டும். நம்மளால முடிஞ்ச அளவுக்கு போராடி தப்பிக்கலாம். இவங்க பேச்சைக் கேட்டு எதையும் சொல்லாதீங்க.” சந்திரன் பேச்சை உணர்ந்த மைக்கேல், “ஆமா ஏதோ ப்ளான் பண்றாங்க. இவங்க என்ன சொன்னாலும் கேட்க கூடாது.” ஆரதி சொன்னதை கேட்டு இருவரும் முடியாது என கத்த, “உங்களால முடியுமா முடியாதான்னு நான் கேட்கவே இல்லையே. கண்டிப்பா பண்ணியே ஆகணும். இல்லன்னா உங்க ரெண்டு […]
மைக்கேலிடம், “சரி அவன் தான் உனக்கு உதவி பண்ணலையே. அப்புறம் நாங்க விசாரிக்கும் போது ஏன் சொல்லல. “ “ஏற்கனவே ராபர்ட் விஷயத்துல நான் மாட்டி இருக்க. இது பொண்ணு சம்பந்தப்பட்ட விஷயம். என்ன இருந்தாலும் ஒரு தகப்பனா என் பையன் வாழ்க்கை முக்கியமா பட்டுச்சு. அதனாலதான் என்ன நடந்தாலும் சொல்லக் கூடாதுன்னு முடிவு பண்ணுனேன் சார்.” “பரவால்ல அப்பனும் மகனும் எவ்வளவு பெரிய அயோக்கியங்களா இருந்தாலும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல பாசம் தான். அந்தப் பாசம் […]