Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் (பரி)பாஷை பேசிடவா

காதல் (பரி)பாஷை பேசிடவா 4

அத்தியாயம் 4 கீதாஞ்சலி கிரிதரனிடம் தன் மனக்கவலைகளை கொட்டியதும், சற்று தெளிந்தது போல உணர்ந்தார். மனதில் திடமான முடிவெடுத்தவராக கணவரின் மார்பிலிருந்து நிமிர்ந்தவர், “நம்ம எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் இங்கேயிருந்து கிளம்புறது தான் எல்லாருக்கும் நல்லது.” என்றார். அவரும் தானே மண்டபத்தில் பார்த்திருந்தார், மணமகளாக அமர்ந்திருந்த ஜீவநந்தினியை துவேஷப் பார்வை பார்த்திருந்த ராகவர்ஷினியை. “ஹ்ம்ம், நீ சொல்றதும் சரிதான் கீது.” என்று கிரிதரன் கூறிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் அழைப்பு மணியோசை கேட்க, “சாப்பாடு […]


காதல் (பரி)பாஷை பேசிடவா 3

அத்தியாயம் 3 நன்கு உறங்கி எழுந்ததாலோ என்னவோ, குழப்பங்கள் சற்று குறைந்து தெளிவாகவே உணர்ந்தாள் ஜீவநந்தினி. ஜீவநந்தினி, சுதாகரின் செல்ல மகள். பிறக்கும்போதே தாயை பறிகொடுத்து, அதற்காக ஏச்சும்பேச்சும் வாங்கிக் கொண்டவள். அவள் வாழ்வில் நடந்த முதல் நல்ல காரியம் என்ன என்று கேட்டால், யோசிக்காமல் தந்தையை தான் கைகாட்டுவாள். அத்தகைய பிணைப்பு இருவருக்கும். வாழ்க்கை சொல்லி தந்த பாடமாக, ‘எதுவும் எப்போதும் நிரந்தரமில்லை’ என்பதை தாராக மந்திரமாக கொண்டவள், அதன் காரணமாக எதற்கும் பெரிதாக அலட்டிக் […]


காதல் (பரி)பாஷை பேசிடவா 2

அத்தியாயம் 2 உதயகீதன், கேசவமூர்த்தியின் ஒரே மகன், தலைமகன். கேசவமூர்த்தி, அக்காலத்து சிங்கிள் பேரன்ட்! தாயின் இடத்தை நிரப்ப முடியாவிட்டாலும், மகனின் வாழ்வில் தந்தைக்கான பாத்திரத்தை அருமையாக கையாண்டு, அவனின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் என்று கூறினால் மிகையாகாது. பாசத்தில் மகனும் தந்தைக்கு சற்றும் சளைத்தவன் அல்ல. என்ன, அதை வெளிப்டையாக காட்ட தெரியாத இரும்பு மனிதன். அவன் இறுகிப் போனதற்கான காரணிகள் பல. அதில், அவன் குடும்பத்தை பற்றி புரளி பேசிய சில விஷ ஜந்துக்களும் […]


காதல் (பரி)பாஷை பேசிடவா 1

அத்தியாயம் 1 உதயகீதன் வெட்ஸ் ராகவர்ஷினி என்று கொட்டை எழுத்துகளையும், அதை சுற்றியும் பல வண்ண சிறு பல்புகளையும் சுமந்த வரவேற்பு பலகை அந்த பெரிய மண்டப வாயிலை அலங்கரித்திருந்தது. வெளியே இருந்த பிரம்மாடத்திற்கு சற்றும் குறையாத வண்ணம், உட்புறமும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அலங்காரங்கள் எல்லாம் மனதை பறிக்கும் வகையில் இருந்து என்ன பிரயோஜனம்? அங்கிருந்து ஒருவருக்கும் அதை ரசிக்கும் மனநிலை இல்லையே! குறைந்தபட்சம் மணமகனிற்கு அந்த மனநிலை சற்றும் இல்லை என்பதை அவனின் […]


காதல் (பரி)பாஷை பேசிடவா – முன்னோட்டம் 2

முன்னோட்டம் 2 “வர்ஷும்மா, அப்பா சொல்றதை கேளு டா. நாம ஜெர்மெனி போலாம் டா.” என்று அவளின் தந்தை கிட்டத்தட்ட கெஞ்சினார். அவளின் தாயோ, அவரின் அறையிலிருந்தபடி, நடக்கும் காட்சிகள் அனைத்தையும் நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். இன்னமும் திருமண உடையை கூட மாற்றாமல், அழுது கொண்டிருந்த மகளைக் காண, அவருக்கும் வேதனையாக தான் இருந்தது. ஆனால், தான் இலகுவாக பேசி விட்டால், அவள் இன்னமும் பிடிவாதம் பிடிக்க ஆரம்பிப்பாள் என்பது அவருக்கு தான் […]


காதல் (பரி)பாஷை பேசிடவா – முன்னோட்டம்

முன்னோட்டம் 1 அந்த பெரிய திருமண மண்டபத்திற்குள், பட்டுச்சேலை சரசரக்க அதற்கேற்ற அணிகலன்கள் அலங்கரிக்க, மேகக் கூட்டத்திற்கு நடுவே வெண்மேகமாய் மிதந்து வந்தாள் என்று கூற ஆசை தான்! ஆனால் அவளோ, அதிக எடையில்லாத ஸாஃட் சில்க் புடைவையை அணிந்து, அதிலும் தடுக்கி விழாத குறையாக அல்லவா ஊர்ந்து வந்து கொண்டிருந்தாள். “ஷப்பா, ஒவ்வொரு அடிக்கும் காலுக்கிடையில போய் சிக்கிக்கிது. இதையெல்லாம் எப்படி தான் கட்டுறாங்களோ?” என்று முணுமுணுத்தபடி நிமிர்ந்து பார்க்க, எதிரே அவளின் தந்தை வந்து […]