Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் ராகம் நீதானே!

காதல் ராகம் நீதானே – 18(3)

ராகம் – 18(3) அவனின் காரை அடைந்ததும், “ஷக்தி” என அவன் அழைக்க, அதே பாவனையுடன் அவனை ஏறிட்டாள் அவள். அதில் பக்கென சிரித்து விட்டவன், “டேய் தக்குடூ!” எனவும்,தெளிந்தவள் அவனைப் பார்த்து விட்டு தன் வலது கரத்தின் சுண்டு விரலைத் தூக்கி முகத்தின் முன் வைத்து பார்க்க, இன்னும் விரிந்த புன்னகையுடன், “ஏடா மோளே!”என்றான் தலையைக் கோதி பிடரியைத் தேய்த்தபடி. “நீங்க..விஷால் முன்னாடி..விஷால் நீங்க சொன்னதை நம்பல!”என்றாள் திணறியபடி. ஆமென தலையசைத்தவன் சாதாரணமாய் தோள் குலுக்கிக் […]


காதல் ராகம் நீதானே – 18(2)

ராகம் – 18(2) ஷக்தி,கோவை நிகழ்ச்சியை முடித்து சென்னை வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டிருந்தது. வந்தது தான் கடன் என்பது போல் ஓய்வில்லாத தொடர் ஓட்டம் ஷக்திக்கு. மலேசியாவில் நடக்கப் போகும் கான்செர்ட்டுக்காக தொடர் பயிற்சி (ரிகர்சல்) நடைபெற்றுக் கொண்டிருக்க, அதோடு இவள் இந்தியாவைத் தாண்டி வேறு நாடுகள் பயணம் செய்திருக்காமையால் விசா அப்ளை செய்வதற்கான ஓட்டமும் சேர்ந்து கொண்டது. மகளைப் பார்த்த பார்வதிக்குமே பாவமாக இருக்க, “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடேண்டி”என சொன்னாலும் எரிந்து விழுந்தாள் […]


காதல் ராகம் நீதானே – 18(1)

ராகம் – 18(1) கோவையை வந்தடைந்த சூப்பர் சிங்கர் குழு,விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஹோட்டல் சென்றனர். அங்கிருந்து பதினைந்து நிமிட தூரத்தில் இருந்தது நிகழ்ச்சி நடைபெறப் போகும் இடம். ஹோட்டலில் ரெஃப்ரஷ் செய்தவர்கள் தங்கள் உணவை முடித்து விட்டு அங்கு செல்லவிருக்க,இவர்களுக்கு முன்பே ஆகஸ்ட்ரா குழுவில் இருந்தவர்கள் அங்கு சென்றிருந்தனர். பாடுபவர்களை விட, இசை அமைப்பவர்களுக்கு வேலை அதிகமல்லவா!அவர்கள் ரெஃபிரேஷ் செய்ததோடு சரி சாப்பாட்டை தவிர்த்து விட்டனர். குழுவின் தலைவர் மணி அண்ணன் அதற்கெல்லாம் நேரம் கொடுக்கவில்லை. […]


காதல் ராகம் நீதானே – 17(2)

ராகம் – 17(2) மணி பதினோன்றை கடந்திருக்க தூக்கம் வராது பால்கனியில் நின்று கொண்டிருந்தான் கார்த்திக்கேயன். மனது,மூளை என அத்தனையும் அவள் ஒருத்தி கொட்டி விட்டுச் சென்ற காதலையே மீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து கொண்டிருக்க எங்கிருந்து தூக்கம் வருவது? பௌர்ணமி அலை கடலாய் அவன் மனம் தழும்பிக் கொண்டிருக்க அதை அமைதிப்படுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தான் அதிகமாய் விரும்பும், அமைதியைக் கொடுக்கும் கீ போர்டுடன் கூட போராடி விட்டான். ராகம் எல்லாம் எங்கோ […]


காதல் ராகம் நீதானே – 17(1)

கார்த்திக் மேல் கோபமோ கோபம் அவளுக்கு. தன்னை வேண்டாம் என்றவனிடம் எதற்கு இவர்கள் போக வேண்டும் என நினைத்துக் கொண்டவள், விட்டால் கதவைத் திறந்து கொண்டு கூடத்தில் குதித்து, ‘கார்த்திக் எனக்கு வேண்டாம்!!’ என கத்தும் நிலையில் இருந்தாள். இதே காரணத்தை தான் இன்று அரவிந்திடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.தந்தையிடம் இதைச் சொல்லியே தன்னை மறுத்திருக்கிறான். பல்லைக் கடித்தாள் ஷக்தி. அரவிந்திடம் ‘ஷக்திக்காக’ என்று அவன் சொல்லியது அவள் மனக் கண்ணில் தோன்றியது. அவன் இதழில் தோன்றிய சிறு […]


காதல் ராகம் நீதானே – 16(3)

ராகம் -16(3) “கார்த்திக் தான் கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச வருஷம் போட்டும்றான். ஆனா,ஷக்தி எங்க வீட்டுப் பொண்ணா வர்றதுல எங்க எல்லாருக்கும் சம்மதம் மனோகர். பொண்ணை பெத்தவங்க நீங்க! உங்க விருப்பம் தான் முக்கியம். பொண்ணுக்கு வேற வரன் பார்க்கறதுன்னாலும், பரவால்ல மனோ.ஹ்ம்ம்!யார் யாருக்குன்னு அந்த ஆண்டவன் எழுதி வெச்சிருப்பான்.நாம எதையும் மாத்த முடியாதுல்ல!” என்றிருந்தார் சந்திரன் இறுதியாக பேசும் போது. மனோகருக்கு தான் என்ன பதில் கொடுக்கவென தெரியவில்லை. சந்திரன் பேச்சிலிருந்து புரிந்து கொண்டார்,தங்கள் மகளை […]


காதல் ராகம் நீதானே – 16(2)

ராகம் – 16(2) வெளியில் பேச்சு வார்த்தை நடக்க தன் அறையில் அண்ணி சாதனாவுடன் அமர்ந்திருந்தாள் ஷக்தி. படபடவென வந்தது அவளுக்கு.பெற்றோரும், அண்ணனும் என்ன முடிவெடுக்க போகிறார்களோ என்ற பதட்டம்.  இன்னேரம் ஷக்தியின் முகத்தில் இருக்கும் கலவரத்தை மதி பார்த்திருந்தால் அவளைக் கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கிருப்பாள். நல்ல வேளை மதி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, ஷக்தியின் திருமணம் பற்றிய பேச்சு தான் வீட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பது தெரிந்திருக்கவில்லை. முகத்தை சாதாரணமாக வைத்துக் கொள்ள […]


காதல் ராகம் நீதானே – 16(1)

ராகம் – 16(1) தலையிலிருந்து தண்ணீர் வழிய அதிர்ச்சியில் கண் சிமிட்டல் வேலை நிறுத்தம் செய்திருக்க தன்னைப் பார்த்தவனை,பார்த்திருந்த ஷக்தியின் கண்களில் கோபக் கணல். பல்லைக் கடித்துக் கொண்டு நிலத்தில் ஒற்றை காலை உதைத்தவள்,இரு கைகளையும் அவன் கழுத்துக்கு கொண்டு சென்று கார்த்திக்கை நெறிப்பது போல் பாவனை செய்தாள். அவன் எதுவோ இயம்ப முற்பட, இவள் முறைப்பு கார்த்திக் பேச்சை முடக்கிப் போட்டது. பற்கள் அரைபட,“பிடிக்கும்னு சொல்வாராம்,எனக்காக யோசிப்பாராம் கேட்டா லைக் பண்றாங்களாம்.ஆனா காதல் மட்டும் இல்லையாம்!” […]


காதல் ராகம் நீதானே – 15

காரை சத்யா வீட்டின் முன் நிறுத்தினான் கார்த்திக். “எந்தினா ஞங்களோடு போலும் பறயாதே போயி?” எதிர்ப்பட்ட அக்காவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மாடி ஏறி மியூசிக் சிஸ்டம்ஸ் உள்ள அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான். தம்பியின் செயலில் சத்யா முகம் வருத்தத்தை காட்டியது.காரில் இருந்து இறங்கிய தந்தையை,“ஏன் பா?”எனும் ரீதியில் பார்த்தாள் அவள். “இப்போ என்னாச்சுன்னு இவன் இப்படி போறான்” மகளிடமும், மனைவியிடமும் பொருமினார் ராமச்சந்திரன். “உங்க அப்பாட்டெல்லாம் என்னால பேச முடியாது சத்யா.அவன்ட்ட ஒரு வார்த்தை […]


காதல் ராகம் நீதானே – 14

“இந்த டீஆர்பி ரேட்டிங்னா என்னடி ஷக்தி?” “உனக்கெதுக்கு அது?பேசாம படிடி மந்தி” “கேட்டதுக்கு என்னன்னு சொல்வியா.. அதை விட்டுட்டு அட்டுவைஸ்ஸு!” என சலித்துக் கொண்டாள் தமயந்தி. “மேடம் எக்ஸாம்லாம் முடிச்சிட்டு குஜாலா இருக்கீங்க போல?அதான் இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி வருதோ?” “ஆமான்னா அம்மணி என்ன செய்றதா உத்தேசம்?!அங்க மட்டும் என்னாவாம்…?சூப்பர் சிங்கர் ஃபைனல்ல ஃபோர்த் பிளேஸ் வந்த கொழுப்புல தானே..நான் கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம இருக்க?”என அவளும் எகிறினாள். ஆம்!சூப்பர் சிங்கரின் இந்த சீசன் […]