Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கார்மேக மின்னல் நீ

கார்மேக மின்னல் நீ..!! – 9(1)

அத்தியாயம் – 9 கிரானி சொன்ன மெனுப்பிரகாரம் அவள் சமைத்துமுடிக்கவும், கிரானி சமையல் கட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது. “பாட்டி நீங்க சொன்ன எல்லா ஐட்டத்தியும் ரெடி பண்ணிட்டேன். டேஸ்ட் பண்ணிப்பாருங்க” என்று சந்தோஷக்குரலில் அவள் சொல்ல, வசீகரனுக்கான உணவுகளை மட்டும் கிரானி ருசிப்பார்க்க, அவளோ அவர் முகத்தையே ஆழப்பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவரோ முகத்தில் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தாமல், “என்னமா நீ இப்படி சமச்சியிருக்க. இப்படி இருந்தா என் பேரன் எப்படி சாப்பிடுவான்” என்று கராரான […]


கார்மேக மின்னல் நீ..!! – 8(2)

அடுத்த நாள் அவளை வீட்டிலேயே விட்டுவிட்டு அவன் மட்டுமே ஆபீஸ் சென்றான். இரவு திரும்பிவரும்போது அவளருகில் சித்தார்த் அமர்ந்திருப்பதைக்கண்டவன் கோவக்கனலோடு வித்யூத்தவைப் பார்க்க, “டேய்.. ஏண்டா இந்த பொண்ண இப்படி காயப்படுத்தற.. நீயெல்லாம் மனுஷ ஜென்மமா..? இல்ல மிருகஜென்மமா..? கேட்க யாரும் இல்லன்ற திமிரா உனக்கு. என் வித்யூக்காக நான் இருக்கேன்டா.” என்று கோவத்தில் கத்தியே விட்டான் சித்தார்த். அவனின் இந்த பேச்சி அவளுக்குமே வியப்பாகத்தான் இருந்தது. இத்தனை வருடங்களில் அவன் கோவப்பட்டு யாரிடமும் ஒரு வார்த்தை […]


கார்மேக மின்னல் நீ…!! – 8(1)

அத்தியாயம் – 8 அவன் சொன்ன நேரத்திற்கு முன்பே ஆபீசை அடைந்தவள், தன்னிடம் சித்தார்த் கேட்ட கேள்விகளுக்கு பதில் தேடி அவன் முன் நின்றாள். வியர்வையில் குளித்து, மூச்சி வாங்க தன் முன் வந்து நின்றவளை பார்வையாலே என்ன என்பதுப்போல கேள்வியாய் அவளை அவன் நோக்க, “அன்னைக்கு பார்டில… ஜெகதீஷ் இப்ப எதை திருடிட்டு வரசொன்னார்னு என்னப்பார்த்து ஏன் கேட்டீங்க..? அப்போ நான் என்ன திருடியா..?” என்றவளை புருவம் உயர்த்திப்பார்த்தவன், “ம்…. ஆமாம் திருடுறவங்கள திருடன்னு சொல்லாம […]


கார்மேக மின்னல் நீ..!! – 7(2)

ஒவ்வொருமுறை கிரானியை பார்கும்போதும் தன்னுடன் அவளை அழைத்துச்சென்றவன் அவளை கிரானியுடன் தனியாக இருக்க வாய்ப்புதராமல் ஏதேதோ காரணம் சொல்லி அவளை தன்னுடனே அழைத்துச்சென்றான். இவள் ஏதாவது உளறி அவரின் உயிருக்கு மீண்டும் ஒரு பாதிப்பு ஏற்பட அவன் விரும்பவில்லை. சாரா மூலமாக கிரானியுடன் எப்படி பேச வேண்டும். அவர் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்றெல்லாம் டிரைனிங் கொடுத்தப்பின்னரே கிரானியை தனியாக சந்திக்க அவன் அவளை அனுமதித்தான். எல்லாம் அவன் நினைத்ததுபோல நடந்துக்கொண்டிருந்தது. ஆனால் அவனை […]


கார்மேக மின்னல் நீ..!! – 7(1)

அத்தியாயம் – 7 குளிரூட்டப்பட்ட ஏ.சி அறையில் அவளுக்கென ஒதுக்கப்பட்ட வெற்றுத்தரையில் குளிரில் நடுங்கியப்படி தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தாள் வித்யூத்தா. சில்லென்ற நீர் முகத்தில் பட பதறியப்படி எழுந்தவளின் பதற்றத்தை இரசித்தவாறு அவன் பாத்ரூமிற்குள் நுழைய, அவன் செல்வதையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். நேற்றைய நிகழ்வுகள் மனக்கண்ணில் தோன்றிமறைய அவள் இதயம் லேசாக நடுங்கியது. அறைக்குள் நுழைந்த சாரா வாட்ரோப்பை திறந்துக்காட்டி, “மேம் உங்களுக்கான டிரஸ் எல்லாமே இங்க இருக்கு, உங்களுக்கு என்ன வேணும்னாலும் தயங்காம என்ன கேளுங்க.” […]


கார்மேக மின்னல் நீ..!! – 6(2)

அவன் அருகில் ஏதோ புடவைக்கடையில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைப்போல அனைவரின் கண்களுக்கும் காட்சிப்பொருளாய் நின்றாள் அவள். அவளது ஆடையும், வைரநகைகளும் அங்குவந்திருந்த அனைவருக்குமே பேசு பொருளாக மாற அவளுக்கோ சங்கடமாகிப்போனது. சிலர் இவளிடமே வந்து நகைகளின் டிசைன் குறித்து கேட்டப்போது அவர்களுக்கு பதில்சொல்ல முடியாமல் தடுமாறிப்போனாள். பிஸ்னஸ் டீல் குறித்துப்பேசுவதற்காக அவன் அவளைவிட்டு விலகியபோதுதான் அப்பாடா என்றிருந்தது அவளுக்கு. ஒரே இடத்தில் நிற்க ஒருமாதிரியாக இருந்ததால் சற்று நடக்க ஆரம்பித்தப்போதுதான் பலரின் விமர்சனங்கள் அவள் காதில் எதேச்சையாக விழ […]


கார்மேக மின்னல் நீ…!! – 6(1)

அத்தியாயம் – 6 மணமேடையில் மணமகனுக்கே உரிய கம்பீரத்துடன் அமர்ந்திருந்தான் வசீகரன். அவன் அருகில் இஷ்டமே இல்லாமல் வெறுப்புடன் மணப்பெண் கோலத்தில் அமர்ந்திருந்தாள் வித்யூத்தா. கண்களில் கண்ணீர் துளிர்க்க ‘ப்ளீஸ் என்ன விட்டுடு’ என்பதுபோல அவனைப்பார்த்தாள். அவனோ திருமணத்திற்கு வந்திருந்த முக்கியஸ்தர்களை அமர்ந்த நிலையிலேயே வரவேற்றுப்பதில் படு பிஸியாக இருந்தான். ஒரு பெண் விருப்பமில்லாமல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம்தான். ஆனால் அந்த குற்றத்தையும் சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள் அனைவரின் முன்னிலையில் அல்லவா செய்கிறான். […]


கார்மேக மின்னல் நீ – 5 (2)

புரண்டு புரண்டு படுத்தப்போதும் அவளால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை. எழுந்து பால்கனிக்குச்சென்றாள். வானத்தில் முழு நிலவு குளிர்ச்சியை நாலாபுறம் வீசிக்கொண்டிருந்தது. அதையெல்லாம் இரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. பால்கனியில் நின்றப்படி தன் வலதுக்கரத்தை திருப்பித்திருப்பி பார்த்தாள். “நானா.. அடிச்சேன். அதுவும் அத்தன பேர் முன்னாடி… சீனியர் படிச்சி படிச்சி சொல்லிட்டு போனாரே… அமைதியா இரு. அவசரத்தோட எந்த முடிவையும் எடுக்காதன்னு. ஜூஸ்-அ ஊத்தனதுக்கே கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொன்னவன். இன்னைக்கு அறைஞ்சதுக்கு இந்த கைய  வெட்டிப்போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை […]


கார்மேக மின்னல் நீ..! – 5(1)

அந்த நட்சத்திர ஹோட்டலில் வேறு வேறு காரணங்களுக்காக தன் நண்பர்களுக்கு ட்ரீட் வைத்துக்கொண்டிருந்தனர் வித்யூத்தாவும், சித்தார்த்தும். மயூரா அடுத்து நடிக்க இருக்கும் படம் ஸ்போர்ட்ஸ் சம்மந்தப்பட்ட படம் என்பதால், அவளுக்கு டிரைனிங்க் கொடுக்கும் பொறுப்பு சித்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவனுடைய வி.சி-யே நேரில் வந்து கேட்கும்போது அவனால் மறுக்கமுடியவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் படகுழுவினருடன் அவனும் சுவிட்சர்லாந்து செல்ல வேண்டும். “ஒரு கொத்து பரோட்டா இல்ல, வீச்சி இல்ல, ஒரு கலக்கி கூட இல்லப்பா… என்ன பெரிய ஸ்டார் […]


கார்மேக மின்னல் நீ…!!!- 4(2)

வித்யூத்தாவை ஓரிடத்தில் அமரவைத்து, தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்த முயன்றான் சித்தார்த். “நீங்க ஏன் சீனியர் அவன்கிட்டலாம் சாரி சொல்றீங்க” என்றாள் கொஞ்சமும் குறையாத கோவத்தில். அவள் முகத்தை கைகளில் ஏந்தி அவளை ஆழப்பார்த்தவன், “புதுசா கோவம்லா வருது… அதுவும் அழகாத்தான் இருக்கு உனக்கு” என்றான் அவளின் சிந்தனையை மாற்றும் விதமாக. “கோவமா.. அவன் பேசுன பேச்சிக்கு கொஞ்சம் விட்டுஇருந்தா அவன கொலையே பண்ணியிருப்பேன்” என்றவள் அன்று தனக்கு நடந்த அவமானத்தை கூற அமைதியாக கேட்டு முடித்தவன். […]