Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்று சொன்னது காதலானது

காற்று சொன்னது… காதலானது… – 10

அத்தியாயம் – 10 :  ரதிக்குக் கல்லூரியில் தெரிந்த முதல் ஆண் மகன் ப்ரித்வி தான். இருபாலரும் படிக்கும் பள்ளியில் தான் படித்திருந்தாள். ஆனாலும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வகுப்புகள் இருந்த பள்ளி என்பதாலும், ரதி அதிகம் யாரிடமும் பேசுபவள் இல்லை என்பதாலும், பள்ளியில் ஆண் நண்பர்கள் என யாரும் இல்லை. தானாக ஃபோன் செய்து பேசி, நான்கு மணி நேரம் அவசிய வேலையாய் தான் என்றாலும், ஒன்றாகச் சுற்றி, ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டு, […]


காற்று சொன்னது… காதலானது… – 9

அத்தியாயம் – 9 :  ப்ரித்வி பேச வரவும், ரேகிங் செய்தவர்களின் நண்பனாக இருக்கும் என்று தான் நினைத்தாள் ரதி. அதனாலேயே அவனிடம் பேசாமல் தவிர்த்தவள், அடுத்த நாள் கல்லூரியில் ரித்விக்கைக் காணும் வரை அந்நிகழ்வை மறந்தும் போனாள். அன்று, அட்டவணைப்படி உணவு வேளைக்கு முன் நடக்கவேண்டிய வகுப்பு, அந்தப் பேராசிரியர் ஏதோ முக்கிய வேலையாக இருக்கவும், ரத்துசெய்யப்பட்டது. அதனால், அந்த ஒரு மணி நேரம், வகுப்புத் தோழிகளுடன் அவளது துறையைச் சுற்றி வந்தாள் ரதி. இரண்டாமாண்டு […]


காற்று சொன்னது… காதலானது… – 8

அத்தியாயம் – 8 : 6 ஆண்டுகளுக்கு முன்பு :  சென்னையில் இருந்த ஒரு புகழ்ப்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரி அது.  மதிய உணவு வேளைத் தொடங்கவும், மாணவர்கள் கல்லூரி விடுதியை நோக்கிக் கிளம்பிக்கொண்டிருக்க, வீட்டிலிருந்து வருபவர்களோ கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இருந்த பூங்காவிலோ, அல்லது உணவகத்திலோ அமர்ந்து உணவு உண்ணத்தொடங்கியிருந்தனர்.  ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கட்டிடங்கள் இருக்க, கணினி அறிவியல் துறையிலிருந்து வெளிவந்திருந்தாள் ரதி.  நேற்றிரவே விடுதியில் வந்து தங்கியிருந்தாள் ரதி. ஓர் இரவுக்குள்ளேயே விடுதியில் கீர்த்தி […]


காற்று சொன்னது… காதலானது… – 7

அத்தியாயம் – 7 : மித்ரா, அரவிந்த், ரதி, ப்ரித்வி என நால்வருமாக மதிய உணவை முடித்துக்கொண்டு, அந்த அழகு நிலையத்திற்குச் சென்றனர்.  தரைத்தளத்தில் பெண்களுக்கும், முதல் தளத்தில் ஆண்களுக்கும் என இருபாலருக்குமான அழகு நிலையம் அது.  “நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க. நானும் ப்ரித்வியும் மேல போய் எங்க வேலையைப் பாக்கறோம்” என்றான் அரவிந்த்.  “உங்களுக்கு என்ன வேலை?” என்று மித்ரா கேட்க, “நீங்க மட்டும் தான் பண்ணுவீங்களா? எங்க மாமாவும் டீ-டேன், பேஷியல், […]


காற்று சொன்னது… காதலானது… – 6

அத்தியாயம் – 6 :  அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல், நல்ல பிள்ளையாக தாயிடம் சென்று, “நான் அந்தப் பையனுக்கு ஃபோன் பண்ணிப் பேசிட்டேன். எனக்கு ஓகே தான் மா” என்றாள் மித்ரா.  எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல், மகள் வந்து சரியெனவும், மாப்பிள்ளையின் பெற்றோருக்கு அழைத்து இவர்களின் சம்மதத்தைத் தெரிவித்தார் லக்ஷ்மி.  தெய்வானை அரவிந்திடம் கேட்க, அவனும் மித்ராவைச் சந்தித்துப் பேசியதை எல்லாம் சொல்லாமல், “அந்தப் பொண்ணு வீட்ல இருந்து பேசுனாங்க. எனக்கு ஓகே தான்” […]


காற்று சொன்னது… காதலானது… – 5

அத்தியாயம் – 5 : மித்ரா அரவிந்த் இருவரும் ஜோடியாகச் சென்றதற்கு, அந்த மருந்துக்கடைக்காரர் அவர்கள் தம்பதிகள் என்றே நினைத்திருப்பார். ஆனால், இருவரும் பயந்து, தயங்கிக் கேட்கவும் தான் இருவரையும் ஏற இறங்கப் பார்த்தார் அவர்.  ப்ரெக்னன்சி டெஸ்ட் கிட்டுடன், ரதியிடம் சொல்லிவிட்டு வந்ததற்காக ஒரு ஃபேஸ் வாஷையும் சேர்த்து வாங்கிக்கொண்டு மருந்தகத்தை விட்டு வெளியேறினர்.  இரண்டையும் தோளில் மாட்டியிருந்த தனது கைப்பையில் திணித்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டாள் மித்ரா.  “நம்ப இப்டி பண்ணியிருக்கக் கூடாதுல்ல” என்று […]


காற்று சொன்னது… காதலானது… – 4

 அத்தியாயம் – 4 : அடுத்த நாள் காலை ஜன்னல் சாளரங்கள் வழியாக அவள் அறையை எட்டிப்பார்த்த சூரியக் கதிர்கள் கண்ணைக் கூசவும் தான் கண்ணைத் திறந்துப் பார்த்தாள் ரதி.  ஒரு வாரம் விடுமுறை எடுப்பதால், கிளம்புவதற்கு முன்பு சில வேலைகளைச் செய்துமுடிக்க வேண்டியிருந்தது. இரவு பகலாக அதைச் செய்து முடித்ததில் சென்ற வார தூக்கம் முழுதும் ஸ்வாஹா தான். தினம் மூன்று நான்கு மணி நேரத் தூக்கத்தோடு சென்ற வாரத்தை எப்படியோ கடத்தியிருந்தாள். அதுமட்டுமின்றி நேற்றைய […]


காற்று சொன்னது… காதலானது… – 3

அத்தியாயம் – 3 :  கீர்த்தியின் எண் இன்னமும் ‘பிசி’யெனவே வந்தது. அது என்னவோ, உடனேயே கீர்த்திக்கும் பிரித்விக்கும் நடுவே என்னவென தெரிந்துக்கொள்ள வேண்டுமென ஒரு உந்துதல் அவளுக்குள்.  ‘அவனுக்கு நீ யார்? நீ ஏன் அதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்’ என்று அவளது மனசாட்சி ஒரு கேள்வியை முன்வைக்க, அதற்குப் பதில் சொல்ல முடியாமல் விழித்தாள் ரதி.  ‘அது… அவன் காலேஜ்ல என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்ன பையன்…’ என்று அவள் சொல்ல, ‘அதான் வேணாம்ன்னு அப்போவே சொல்லிட்டல்ல. […]


காற்று சொன்னது… காதலானது… – 2

  அத்தியாயம் 2 :  தன்னிடம் ஏதோதோ பேசிக்கொண்டிருந்த மித்ராவிடம் இல்லவே இல்லை ரதியின் கவனம்.  ‘கீர்த்தி பேபி’யையே சுற்றி வந்தது அவளின் யோசனை.  அவள் கவனம் இங்கில்லை என மித்ராவுக்கும் புரிந்தது. பயணக் களைப்பு என எண்ணி அவள் எதுவும் கேட்காமல் விட்டுவிட்டாள். திருவரசன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசிவிட்டுத் திரும்பும் வரை, அமைதியாக அமர்ந்திருந்தாள் ரதி. அலைபேசியோடு ஏதோ ஒரு அறைக்குள் நுழைந்தவன் தான் ப்ரித்வி. அதன்பின் அவனை இவள் காணவேயில்லை.  “கிளம்பலாமா மா?” என்று திருவரசன் […]


காற்று சொன்னது… காதலானது… – அத்தியாயம் 1

அத்தியாயம் ஒன்று :   “அப்பா இன்னும் ஒரு மணி நேரத்துல கடலூர் பஸ் ஸ்டாண்ட் வந்துடுவேன்” என்றாள் அலைபேசியின் மறுமுனையில் இருந்த தந்தையிடம். “சரிம்மா. நான் அண்ணன்  இல்ல பெரியப்பா யாரையாவது வந்து உன்னைக் கூப்ட்டுக்க சொல்றேன்” என்று தந்தை சொல்லவும், “சரிப்பா” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அந்த இளம்பெண். சென்னையில் தொடங்கி, கடலூரில் முடியப்போகும் இந்தப் பேருந்துப் பயணத்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்ததில் அவளுக்கு நிரம்ப சந்தோஷம். அருகில் அமர்ந்திருக்கும் யாரையும் கவனிக்கவோ, […]