Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காளிதாசன் காதல் காண

காளிதாஸன் காதல் காண – 7(3)

கார்த்திக்கு கடந்த  மூன்று மாதங்களில் வாழ்க்கை காரிருளாய் மாறிவிட்டது, அதெல்லாம் ஒன்றுமில்லை எனுமளவு இந்த ஒருவாரம் இருக்கிறது. சித்ரவதை என்ற வார்த்தையின் அர்த்தம் கண்டாள்.! அவளது நியாய மனம் அப்பா, அண்ணனின் செய்கையில் ஏற்கனவே குமுறிக்கொண்டு அவளைக் குத்தி குதற, அதனை வெளியே சொல்லாத மன உளைச்சலும் சேர, இதில் செல்வா அவளுக்கு நரகத்தைக் காட்டினான். செல்வா காளிதாஸன் குறித்து அவளிடம் பேச, இவளும் பொறுக்க முடியாமல் அவனிடம் சண்டையிட, அதில் தங்களின் மறு பக்கம் தங்கைக்குத் […]


காளிதாஸன் காதல் காண- 7(2)

ஒரு மாதம் ஓடிப்போக, இன்னும் கார்த்தியின் திருமணம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. நவீனுடனான திருமணப்பேச்சு முற்றிலும் நின்றுபோயிருக்க, வேறு வரன் பார்த்தனர். ஆனால் எதற்குமே கார்த்தி ஒத்துழைக்கவில்லை. திருமணம் வேண்டாம் என்ற முடிவில் உறுதிபட நின்றாள்! ஒற்றையாய் நின்று அவள் அப்பாவின் நிம்மதியைக் கெடுக்க நினைத்தாள். அவள்  நினைத்தது போல் கார்த்தியின் முடிவு ராஜரத்னத்தைக் கலங்கடித்தது. ஆனால் செல்வாவிற்கு தங்கையின் நடவடிக்கைகளின் மீது சந்தேகம் இருந்தது. “அப்பா, கனியை அந்த காளிதாஸ் கடத்திட்டுப் போன பின்னாடிதான் அவ […]


காளிதாஸன் காதல் காண – 7(1)

காதல் 7 ‘தொலைவிலே வெளிச்சம், தனிமையில் உருகும் அனிச்சம்!’ “கனி! நீ என்ன பேசுறேன்னு தெரியுதா? இட்ஸ் நாட் ஃபேர்” என்றான் நவீன். “இப்பவும் நான் சொல்லாம இருந்தா அதுதான் தப்பு நவீன், ஆனா இதை கண்டினியூ பண்ணினா ரொம்ப தப்பாயிடும், என்னைப் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்” என்றாள் கார்த்தி. கார்த்தியாயினிக்குத் தெரியும் இந்த முடிவு பல பிரச்சனைகளை, ப்ரளயங்களை ஏற்படுத்துமென. ஆனால் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும், அப்பா பார்த்த மாப்பிள்ளை என்பதற்காகவே பிடித்தவன், இப்போது பிடிக்காமல் […]


காளிதாஸன் காதல் காண – 6

காதல் 6 “சொல்லு நித்தி? எப்படி இருக்க?” “நான் நல்லா இருக்கேன் தாஸ், உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று நித்தி தயங்கினாள். “கம் ஆன் நித்தி! சொல்லு” என்று அவன் சொல்ல “அது அன்னிக்கு நீ கடத்தி வைச்சிருந்த பொண்ணை  என் ஹாஸ்பிட்டல்ல பார்த்தேன்” என்றதும் “அவங்க கூட என்னைக் கடத்தல் பண்ணினனு சொல்ல மாட்டாங்க, ஆனா நீ இருக்கியே” என்று தோழியைத் திட்டினான். “டேய்! சொல்றது கேளு. அந்த பொண்ணு செம டிப்ரஷன்ல […]


காளிதாஸன் காதல் காண – 5(2)

“கார்த்தியாயினி!” என்று அவன் இன்னும் சத்தமாய் அழைக்க  அவனைப் பார்த்தவளின் விழியில் கண்ணீர்த் தேங்கி நிற்க, சத்தமின்றி கன்னம் நனைத்தது கண்ணீர். “ஏன் அழறீங்க?” என்றதற்குப் பாவையிடம் பதில் இல்லை. “நான் உங்களைப் பத்திரமா உங்கப்பாவோட அனுப்பிடுவேன், ட்ரஸ்ட் மீ!” என்றான். “இல்லை, வேண்டாம்!” என்று கத்தினாள். என்னவோ காலையில் தான் கண்ட பெண் இல்லை இவள் என்று மனம் சொன்னது காளிதாசனுக்கு. அப்படித்தான் இருந்தாள் கார்த்தியும். “ஓகே! ரிலாக்ஸ். என்ன செய்யனும் சொல்லுங்க” என்றான் தணிவாகவே. […]


காளிதாஸன் காதல் காண – 5(1)

காதல் 5 யாரும் எதிர்ப்பார்க்கவில்லை சிவகாமி அப்படி கை நீட்டுவார் என. நித்தி உடனே “அத்த, என்ன செய்றீங்க?” என்று அவரை அதட்ட “நீ பேசாத நித்தி” என்று அவளை அடக்கியவர் அழுத்தமாய் நின்ற மகனைப் பார்த்தார். “அவங்க எப்படிப்பட்டவங்களா இருக்கட்டுமே? அவங்க அளவுக்கு நீயும் இறங்கினா அப்போ நம்ம அவங்களை மாதிரி ஆகிட மாட்டோமா? இதுதானா கண்ணா எங்க வளர்ப்பு?” என்றார் கோபமாக, அதனைவிட என் மகன் இப்படி செய்திருக்கக் கூடாதே என்ற எண்ணம் மட்டும் […]


காளிதாஸன் காதல் காண – 4(2)

அங்கு கார்த்தி மயங்கியிருக்க, இன்னும் அவளின் பெற்றவனும் உடன்பிறந்தவனும் காளிதாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். “ஷ்! சத்தம் கூடாது சொன்னேன் நான்” என்று கடுப்பாய் சொன்னவன் “உங்க பொண்ணு வரனும்னா முதல்ல பூஜா வீட்டு டாக்குமெண்ட்ஸ் வேணும் எனக்கு, இனிமே அந்த பொண்ணை எந்த வகையிலும் இவன் டார்ச்சர் செய்யக் கூடாது, மீறி செஞ்சா கடத்தல்ல இறங்க தெரிஞ்ச எனக்கு கொலை செய்ய நேரமாகாது. உங்களுக்குத்தான் கூலிப்படை எல்லாம் தெரியுமா?” என்று காளிதாஸன் பேச, செல்வா துள்ளினான். “டேய்! […]


காளிதாஸன் காதல் காண – 4(1)

காதல் 4 அப்பாவும் அண்ணனும் உள்ளே நுழைவது எல்லாம் அப்படியே படமாக இவளுக்குத் திரையிடப்பட, அவர்கள் கறைப்படியாதவர்கள் என்று காளிதாஸனுக்குத் தெரியும்போது என்ன சொல்வான் என்ற யோசனை. ஹாலுக்குள் வேகமாய்  நுழைந்த செல்வா காளிதாஸனை நெருங்கி கையை ஓங்கிக்கொண்டு, “டேய்! எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சியை தூக்குவ, எங்க இருக்கா அவ சொல்லு?” என்று சட்டையைப் பிடிக்க காளிதாஸன் அசையாமல் அழுத்தமாக நின்றான். அந்த பார்வை அவனின் அப்பா அழகிரியை நினைவூட்டியது ராஜரத்னத்திற்கு. அழகிரி, மகாதேவன், […]


காளிதாஸன் காதல் காண – 3(2)

கார்த்தி முகம் குழப்பத்தில்  இருக்க, காளிதாசன் பேசினான். “வாலி  என்னோட பிசியா இருக்கறதால  அவன் ப்ரண்ட் வீட்டை  அவ்வளவா  பார்க்கல. அதை விட அவங்க  வேலை  பண்றாங்க, நல்லா இருக்காங்க நினைச்சிருக்கான். இந்த பொண்ணும் கூட  சாக  நினைச்சுட்டு  அப்போதான் இந்த மெசேஜ் பண்ணிருக்காங்க” என்று காளிதாஸ் சொல்ல கலவரம்  நிறைந்த  கண்களுடன் “இப்போ எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள் கார்த்தி. “சீரியஸ் கண்டிஷன்  இப்போ பெட்டெர்” என்றவனுக்கு தான் நினைத்த மாதிரி இந்த பெண் நல்லவள் […]


காளிதாஸன் காதல் காண – 3(1)

சில மணி நேரங்களுக்கு முன் மாலில்…. தன்னைக் கடத்துவேன் என்று காளிதாஸன் பேச “உங்களை  மதிச்சுப் பேசுறேன்றதுக்காக இப்படி பேச வேண்டாம் மிஸ்டர்.  ஹவ் சீப்?” என்று கார்த்தி முகம் சுழிக்க அந்த செய்கை காளிதாஸனை நிதானம் கொள்ள வைத்தது. “மேம்! ஐ அம் ஸாரி! இங்க பாருங்க. உங்ககிட்ட இப்படி பேசனும் நான் நினைக்கல. நீங்க அப்படி என்னைத் தள்ளிடாதீங்க. உங்ககிட்ட ஒரு உதவி கேட்டுத்தான் வந்திருக்கேன். இது ரொம்ப சீரியஸ்” என்றான் காளிதாசன் கொஞ்சம் […]