Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குற்றங்கடிதல்

குற்றங்கடிதல் – 13(2)

குழந்தை வந்தது தெரிந்து மூன்று நாட்கள் மட்டுமே அவளுடன் இருந்தான் அவளின் கார்வண்ணன். மருத்துவமனையில் பரிசோதனை முடித்து வந்தவளை அப்படி தாங்கினான். “வதிம்மா! சும்மா எப்பவும் போல ஓடி ஆடிட்டு இருக்க கூடாது. உள்ள இருக்கிறது இந்தியாவோட பி.எம் ஞாபகம் இருக்கட்டும்” என்று கன்னம் தொட்டவனின் கைப்பிடித்தவள் “என் பையனை நான் அரசியலுக்கு எல்லாம் அனுப்ப மாட்டேன், அவன் இஷ்டம்போல என்ன ஆக ஆசைப்படுறான்னோ அப்படிதான். சும்மா பி.எம் சி.எம் எல்லாம் சொல்லக் கூடாது, குழந்தைக்குக் காது […]


குற்றங்கடிதல் 13(1)

குற்றம் 13 “அப்பா, நீங்க எப்படியாவது டெல்லில பேசி அன்புக்கு எம் பி சீட் வாங்கிக் கொடுத்திடுங்க” என்ற மகனைப் பார்த்த வீகே “நீ சொல்லி செய்யாம இருப்பேனா?  நம்ம அன்புக்கு நான் செய்யாம யார் செய்வா? ஆனா எனக்கு நீ டெல்லிக்குப் போகனும்னு ஆசை கார்வண்ணா” என்றார் வீகே. “ப்பா, நான் போனா என்ன? அவன் போனா என்ன? டெல்லி க்ளைமேட்டும் தூசியும் எனக்கு ஒத்துக்காது, அன்பு என்னை விட பெரிய இடத்துல இருந்தா எனக்கு […]


குற்றங்கடிதல் – 12

குற்றம் 12 அடுத்தவருக்கு அன்பைக் கொடுக்கலாம், அறிவைக் கொடுக்கலாம், இப்படி எத்தனையோ உணர்வுகளைக் கடத்தலாம். ஆனால் ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு செய்யக் கூடாத ஒன்று துரோகம்! அதுவும் நம்பிக்கைத் துரோகம் தீதினும் தீது.! நஞ்சைக் காட்டிலும் கொடியது  நட்புக்குச் செய்யும் துரோகம்.! அப்படியொரு துரோகம்தான் சக்கரபாணி வெங்கட கிருஷ்ணனுக்கு செய்தது.  வெங்கட கிருஷ்ணனின் தந்தை ஒரு அடிமட்ட தொண்டனாய்க் கட்சியில் இருக்க, அப்பாவைப் பின்பற்றி வீகேவும் கட்சியில் சேர்ந்துவிட அப்போதுதான் சக்கரபாணி பழக்கமானார். சக்கரபாணிக்கு அரசியலில் […]


குற்றங்கடிதல் – 11

குற்றம் 11 சிரஞ்சீவியைக் காணவும் சக்கரபாணி அவனிடம் “என்ன போலீஸ் நீங்க? இன்னமும் என் பையனைக் கொல்ல முயற்சி செய்தது யாருனு நீங்க கண்டுபிடிக்கல” என்று கத்த “உங்க வீட்ல இருக்கும்போதே உங்க பையனுக்கு இப்படி ஆகியிருக்குன்னா காரணம் உங்க கூட இருக்கவங்களா இருக்கலாமே?” சிரஞ்சீவியின் பார்வை லேசாய் ஜெயசீலனை உரச ஜெயசீலன் சிரஞ்சீவியைப் பார்ப்பதைத் தவிர்த்தவன் சக்கரபாணியிடம் “ஏதோ உடம்பு சரியில்லாம இப்படி ஆகிடுச்சு அவனுக்கு, நீங்க அவரை ஏன் மாமா கத்துறீங்க?” என்று மாமனாரை […]


குற்றங்கடிதல் – 10

குற்றம் 10 “எனக்கு இப்போ கவியரசன் மேல கூட டவுட்டா இருக்கு ஸர், அது போல அமராவதி மேல நடந்த கொலை முயற்சிக்குக் கூட அவர்தான் காரணம்னு தோணுது, அமராவதியும் குழந்தையும் இல்லைன்னா சொத்து மொத்தமும் அவருக்குன்னு நினைச்சிருக்கலாம்” என்று பரத் சீரியஸாகப் பேச சிரஞ்சீவியோ “கூல் மேன், ராமாயணம் தெரியுமா?” என்றான். ‘என்ன பேசுறார் இவர்?’ என்று பரத் யோசிக்க “அதுல ராமனுக்கு கூட பொறந்தவங்க யாருமே இல்லை, எல்லாருமே ஸ்டெப் ப்ரதர்ஸ்தான். இந்த கதைல […]


குற்றங்கடிதல் – 9

குற்றம் 9 “Asphyxiation தட் மீன்ஸ் மூச்சுத்திணறல், ஆக்ஸிஜனை சுவாசிக்க முடியாம ஏற்படுற இறப்பு, கார்வண்ணனோட ப்ளட்ல நியுரோ டாக்சின் இருந்திருக்கு. அமராவதி சொன்னதை வைச்சுப் பார்க்கும்போது அவர் இன்ஹேலர் யூஸ் பண்ணின கொஞ்ச நேரத்துல ஹி கொலாப்ஸ்ட், ரைட் பரத்” என்று கார்வண்ணனின் கேஸ் ஃபைலின் ஒவ்வொரு வரியாகப் படித்து பரத்தைப் பார்த்தான் சிரஞ்சீவி வரப்ரசாத். “எஸ் ஸர், அந்த டாக்சினை சுவாசிச்சதால ஆக்ஸீஜன் சப்ளை கட் ஆகிடுச்சு, மஸ்குலர் கன்வலுஷன்ஸ் நடந்திருக்கு( தசை வலிப்பு)  […]


குற்றங்கடிதல் – 8

குற்றம் 8 “கரைவேட்டி, இங்க வாங்களேன்” அந்த நட்சத்திர விடுதியின் உயர் ரக மெத்தையில் உட்கார்ந்த அமராவதி செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த கணவனை அருகே அழைக்க “பேப்பர் படிக்கிறேன் வதிம்மா” என்றவன் பேப்பரை விட்டு இவள் முகம் பார்த்து சொல்ல “வாங்க ப்ளீஸ்” என்றதும் மறுக்காது அவளருகே போக, அவனைத் தன் பக்கத்தில் உட்கார வைத்தவள் அவன் தோள் மீது சாய்ந்து கையைப் பிடித்துக்கொண்டாள். “என்னாச்சு வதிக்கு?” என்றபடி அவள் கன்னம் வருட “நம்ம கூட்டணி வெற்றியடைஞ்சாச்சு” […]


குற்றங்கடிதல் 7

குற்றம் 7 அமராவது அப்போதுதான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து முடித்துவிட்டு வங்கித் தேர்வுகளுக்காக கோச்சிங் சேர்ந்திருந்தாள். அன்றும் கோச்சிங் வகுப்பு முடிந்து அவள் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள். பேருந்து வருவதற்காக காத்திருக்க , பக்கத்தில் ஒருவன் வந்து நின்று, “ஹலோ” என்றான். யாரென பார்த்தவளுக்கு நினைவு வந்துவிட்டது. அவனின் பெயர் கூடத் தெரியாது. ஆனால் அவன் அவளுக்கு ஒரு பெருமுதவி செய்திருந்தான். அவள் கல்லூரி படிக்கும்போது சந்தோஷ் என்பவனைக் காதலிக்க, அவனோ ஆள் சரியில்லை […]


குற்றங்கடிதல் – 6

குற்றம் 6 “ஸர், நீங்க சொன்ன மாதிரி சந்தோஷ் புது வில்லா, ஈசிஆர்ல வாங்கியிருக்கான், கிட்டதட்ட ஃபிஃப்டி லாக்ஸ் ஸர்” பரத்தின் பேச்சைக் கேட்டு சிரஞ்சீவியின் விழிகள் கூர்மைப் பெற்றன. “இப்போ எனக்கே இவன் மேல டவுட்டா இருக்கு ஸர்? அதுவும் கார்வண்ணன் இறந்த பின்னாடி வாங்கியிருக்கான்” என்றான் பரத்வாஜ். “ஒகே பரத், வாங்க கிளம்பலாம்” என்று சொல்லி சிரஞ்சீவி எழுந்துகொள்ள “சந்தோஷைப் பார்க்கவா ஸர்?” என்றதும் புன்னகயுடன் “கவியரசனைப் பார்க்க” என்றவன் முன்னே போக, பின்னால் […]


குற்றங்கடிதல் – 5

குற்றம் 5 தன் முன் இருந்த மணிமாறனின் மேல் பார்வை வைத்திருந்த வீகேவிற்கு மனதெல்லாம் சஞ்சலம், சந்தேகம்! அமராவதியின் கண்ணீர் அவரை அசைத்துப் பார்த்தது, அதனையும்விட வேறொருவனுடன் வாழ நினைத்து தன் மகனைக் கொன்ற பெண் எப்படி அவர்கள் வீட்டு வாரிசை வயிற்றில் சுமக்க நினைக்கிறாள் என்பது புரியாத புதிராகவே இருந்தது. இதில் சக்கரபாணி வேறு மகனுக்கு நடந்த கொலை முயற்சியில் உடைந்து போய் இருந்தவர், யாரென சீக்கிரம் கண்டுபிடிக்க அவசரப்படுத்தினார், அதையும் தாண்டி அடுத்த மாதம் […]