பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்லப்பா இந்த ஊர்ல’ என்று யோசித்துக் கொண்டவள், ‘எந்த ஊரிலும் பாதுகாப்பும் இல்லை’ என்று நினைத்துக் கொண்டாள். பின்பு பத்திரமாக போக வேண்டும் என்றால்., ‘எவ்வளவு சாதாரணமாக கிளம்பி போகிறோமோ அவ்வளவுக்கு நல்லது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அப்போது அவளே அவள் மனதிற்கு தைரியம் சொல்லிக் கொண்டாள். அவள் தோழிகள் ஏற்கனவே சொல்லி இருந்தபடி ‘தனக்கு எதுவும் தெரியாது என்பதை எங்கும் காட்டிக் கொள்ளக் கூடாது., அது மட்டும் […]
3 வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் அப்பா அன்று அதிக உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார். காலை உணவின் போது தான் அவர் உற்சாகத்தின் காரணம் தெரிந்தது. மாப்பிள்ளை வீட்டினர் இன்னும் இரண்டு நாட்களில் வருவதாக சொல்லிக் கொண்டிருந்தார். அதன் பிறகு துணி எடுக்க கடைக்கு போக வேண்டும் என்றும், திருச்சியில் உள்ள பெரிய கடையில் தற்போது நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுப்பதாகவும்., காஞ்சிபுரத்தில் சென்று கல்யாணத்திற்கு துணிகள் வாங்க வேண்டும் என்று பேசிக் […]
பாட்டி உதவினாலும் தாத்தா உதவ விட வேண்டுமே, ஏதேனும் பிரச்சினை வருமோ என்று மனதிற்குள் மறுபடியும் ஒரு பயம் வந்தாலும், இல்லை எல்லாம் சரியாகும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும், நல்லதே நடக்கும் என்று மீண்டும் மீண்டும் தனக்குள் உருப் போட்டுக் கொண்டவள்., ‘இந்தியா செல்வது கூட ஏதோ ஒரு வகையில் நல்லது என்று நினைத்துக் கொள்’ என்று தோழி சொல்லி அனுப்பியது ஞாபகம் வந்தது. கிளம்புவதற்கு முன் தோழிதான் ‘இந்தியா போறதுகூட ஏதோ ஒரு […]
2 ஹீத்ரோ விமான நிலையம் வெவ்வேறு நாட்டு மக்கள் நிரம்பிய இடமாக காட்சி தந்தது., சிறு விமான பயணங்கள் சென்றிருந்தாலும்., இதுவே முதல் முறை நீண்ட பயணமாக செல்வது., திருவிழா கூட்டத்தை பார்க்கும் சிறுபிள்ளையாக வேடிக்கை பார்த்து நின்றாள். அத்தனை கூட்டத்தை பார்த்தபோது அவளுக்கு விசித்திரமாக இங்கிருந்து தப்பி ஓடிவிட்டால் என்ன என்ற எண்ணம் கூட தோன்றியது. போய் விட்டால் என்ன என்று மனதில் பலவிதமாக தோன்றினாலும் அவளால் அங்கிருந்து செல்ல முடியாது […]
“கல்யாணத்தை நிப்பாட்டுறது எல்லாம் சாதாரண கிடையாது., இங்க நம்ம நிப்பாட்டுற மாதிரி அங்க நிப்பாட்டன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணனும்., இந்தியால போலீஸ்லாம் லஞ்சம் வாங்குவாங்கலாமா., அவங்கள எல்லாம் உங்க அப்பா பணத்தை கொடுத்து எல்லாத்தையும் சரிகட்டி அனுப்பிவிடுவார்., நீ என்ன பண்ணுவ”., என்று கேட்டாள். “அதுதாண்டி இப்போ எனக்கு யாராவது மேனுவல் ஹெல்ப் வேணும்., யார் ஹெல்ப் பண்ணுவா” என்று கேட்டாள். “நீ தைரியமா இரு, யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்டு பார்க்கலாம்”., என்று சொன்னாள் தோழி. ” […]
1 தேம்ஸ் நதிக்கரை ஓரமாக அந்த நண்பர்கள் கூட்டம் கூடியது. அவர்கள் அனைவரும் பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தனர். சிலர் மட்டுமே அங்கே பிறந்து வளர்ந்தவர்கள்., மற்ற அனைவருக்கும் வேர் இந்தியா தான். தொழில் நிமித்தமும் பொருளாதார சூழ்நிலையும் அவர்களை அங்கேயே குடியிருப்பு கொண்டவர்களாக மாற்றி இருந்தது. நண்பர் பட்டாளத்தில் ஒருவர் “ஹோட்டல்., ரிசார்ட் ன்னு இல்லாமல் ஏன் திடீர்னு இந்த பக்கம்” என்று கேட்டார், ஏற்பாடு செய்திருந்த மற்றொரு தோழியோ “எல்லாம் நம்ம துளசிக்காக தான்., […]