நான்கு மாதங்கள், நான்கு நாட்களைப் போல கடந்திருந்தது. அதற்குள், அவர்கள் நாற்பது முறை சண்டையிட்டு இருப்பார்கள். எல்லா சண்டைக்குப் பின்பும் வித்தியாச வித்தியாசமாக மன்னிப்பு கேட்டார்கள். பகலும், இரவுமாக நிறைந்திருந்தது அவர்களது வாழ்க்கை. அன்றைக்கு ராகவனுக்கு மிக முக்கியமான அறுவை சிகிச்சை இருந்தது. “பைபாஸ் சர்ஜரி” எனப்படும் இதய அறுவை சிகிச்சை இருந்தது. குறைந்தது மூன்றில் இருந்து ஆறு மணி நேரம் எடுக்கும் அறுவை சிகிச்சை அது. மாலை வீட்டில் இருந்து கிளம்பும் போதே மதுமிதாவிடம் விளக்கி […]
அவர்கள் இருவரின் வாழ்க்கை முறையிலும் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை. அவளுக்காக அவன் மாறுவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை, அவனும் எதிர்பார்க்கவில்லை. ஒரே நாளில் அனைத்தும் மாற, இது ஒன்றும் கதையோ, கனவோ இல்லையே. அவன் மருத்துவன், அவள் ஃபேஷன் டிசைனர். அது மாறாத வரை, எதுவும் மாறப் போவதில்லை என்பது அவர்களுக்கு நன்றாக புரிந்திருந்தது. எதுவும் மாறவில்லை என்றாலும், அவர்கள் மொத்தமாக மாறி இருந்தார்கள். ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் இடையில் காலம் காதலை மட்டுமல்ல, புரிதலையும் […]
அவனுக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இதய துடிப்பு கூடியிருந்ததை, ரத்த அழுத்தம் ஏறத் தொடங்கியதை அவனால் துல்லியமாக உணர முடிந்தது. மனது எப்போதும் போல இசையிடம் தஞ்சமடைந்தது. அலைபேசியில் இசைத் தொகுப்பை தேடி ஒலிக்க விட்டு, மதுமிதாவை அழைக்கப் போனான். அவளே எதிரில் வந்தாள். “சாப்பிடலாம் மது. வா” தட்டில் கிச்சடியை பரிமாறி, தொட்டுக் கொள்ள தேங்காய் சட்டினி வைத்து நீட்டினான். கூடவே, சூடான டீ நிறைந்த ஃபளாஸ்க்கும் பக்கத்தில் அமர்ந்திருந்தது. அவன் கொடுத்த தட்டை, […]
“உங்களுக்கு, உங்க தங்கையும் ரொம்ப முக்கியம்னு நானும் புரிஞ்சுட்டு இருக்கணும் தானே? நீங்க, என்னோட கணவன் மட்டுமில்ல. மகன், தம்பி, பேரன், ஒரு பொறுப்பான மருத்துவன், இத்தனை ரோலும் ஒரே நேரத்துல நீங்க செய்யனும். ஆனா, இதையெல்லாம் நான் புரிஞ்சுக்கவே இல்ல. புரிஞ்சுக்கிட்டாலும், அதுக்கேத்த பொறுப்போட நடந்துக்கலை.” மதுமிதா வருத்தத்துடன் சொல்ல, மனம் நெகிழ ராகவனின் கைகள் அவளை நோக்கி நீண்டது. சட்டென கையை பின்னுக்கு இழுத்தான் அவன். “மத்த ரோலை பெர்பெக்ட்டா செய்த நான், கணவன் […]
மருத்துவமனை இருக்கையில் அமர்ந்து, அலைபேசியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் ராகவன். “கூகுள், நீ என்னை விட மோசமா இருக்கப்பா. உனக்கு நானே தேவலாம் போல.. நீ சொன்ன ஒரு ஐடியா கூட தேறாது” புலம்பிக் கொண்டே எழுந்தான். மருத்துவமனையை விட்டு வெளியில் வந்து, ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றான் அவன். அவனது கார் அதனிடத்தில் நிற்க, மதுமிதா தான் அங்கில்லை. ஒரு பெருமூச்சுடன் வீட்டிற்குள் சென்றான் அவன். நொடிகள், நிமிடங்களாகி, நாட்கள், வாரமாகி இருந்தது. “இவன் வானத்தில் […]
இரவும், இருளும் ரகசியங்கள் பல பேசிக் கொண்டிருக்க, அதை காற்றுடன் போட்டிப் போட்டுக் கொண்டு கலைத்தபடி முன்னேறியது அவர்களின் இரு சக்கர வாகனம். வெறிச்சோடி கிடந்தது சாலை. ஆனாலும், சாலை விதிகளை பின்பற்றி வண்டியை சிகப்பு விளக்கிற்கு நிறுத்தி, பச்சை விளக்கிற்கு நகர்த்தினான் அஜய். “இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ ஏசிபி?” பின்னால் இருந்து வந்த கேள்வியில் ஒரு நொடி வேகத்தை குறைத்து, சிரித்தான் அஜய். ஆராதனா அந்த கேள்வி மட்டும் கேட்டிரா விட்டால், […]
“அப்பா, தாராக்கு ஐஸ் கிரீம் வேணுமாம். அம்மா திட்டுவாங்கன்னு பயப்படுறா. நான் எடுத்துக் கொடுக்கவா?” சத்தமாக, உதயிடம் ரகசியம் பேசினான் ஏழு வயது உதய்நந்தா. “அம்மா சொன்னா சரியா தான் இருக்கும். நீ சாப்பிடு. பாப்பாக்கு வேண்டாம். சரியா?” உதய் புன்னகையுடன் சொல்ல, “பட் ஷீ லவ்ஸ் ஐஸ் கிரீம் ப்பா. அவ ஒன்னே ஒன்னு சாப்பிடட்டும். பிளீஸ்” தனது இரட்டை சகோதரிக்கு பரிந்து பேசினான் உதய்நந்தா. “அப்பா, இப்ப என்ன சொன்னேன் நந்தா? நீ சாப்பிடு. […]
மழைத் தூறல்கள் வலுக்கத் தொடங்கியிருந்தது. ராகவனின் வீட்டை நெருங்கி இருந்தனர் இருவரும். “மது…” மென்மையாய் அவள் கரம் பற்றி நிறுத்தினான் ராகவன். “கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்றீங்க. அப்பா, பார்மசி வச்சுருக்கார். உங்க ஆயா, ஐயா ஜவுளி கடை வச்சுருக்காங்க. நீங்க ட்டுவின்ஸ், உங்க தங்கை பேர் ராகவி. அவங்க ஹஸ்பண்ட் உதயபிரகாஷ் ஐபிஎஸ். எஸ்பி, சைபர் க்ரைம் டிவிஷன். அவங்களுக்கு மூனு குழந்தைங்க.” அவனது அறிமுகப் படலத்தை முடித்து வைத்தாள் அவள். புன்னகையை அடக்கியதில் அவன் […]
மொட்டை மாடியின் நீள அகலத்தை தன் கால்களால் அளந்து கொண்டிருந்தான் ராகவன். அவன் மனம் அமைதியின்றி தவித்து கொண்டிருந்தது. என்றைக்கு அவனுக்கு ஆராதனாவுடன் திருமணம் நிச்சயமாகியதோ அன்றைக்கே கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த அவனது மன அமைதியும் காணாமல் போய் விட்டிருந்தது. அதற்கு காரணம் ஆராதனா அல்ல. அன்றைக்கு தான் முகநூலில், மதுமிதாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை அவன் காண நேர்ந்தது. மதுமிதா, அவனின் மனைவி மதுமிதா. ஆனால், அவனால் இனி என்றுமே அவளை சொந்தம் கொண்டாட முடியாது. அதற்கு […]
அன்று… கிட்டத்தட்ட இருபது நாள் பிரிவு. மதுமிதா மும்பையில் இருந்து திரும்பிய பின்னரும், உதயின் உடல்நிலை காரணமாக ராகவன் மருத்துவனையே கதி என்று கிடக்க வேண்டிய சூழ்நிலை. அன்று உதய் கண் விழித்து ஒரிரு வார்த்தைகள் பேசவும் தான் தங்கையை தனியாக விடவே அவனுக்கு மனம் வந்தது. இருபது நாட்களுக்கு முன் சண்டையிட்டு சென்ற மனைவி என்ன மனநிலையில் இருப்பாள் என்பதெல்லாம் அவனது நினைவிலேயே நின்றாலும் கூட, அவனால் அங்கிருந்து நகர முடியா நிலை. மனைவி திரும்பி […]