Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரமதீ

நீலாமணியின் சாரமதீ-15

தீ-15   வெள்ளிக்கிழமை காலையிலேயே மாதவனும் சாரமதியும் காலேஜில் சேர கிளம்பி விட்டனர். பெரிய தடை என்று பயந்ததே பனி போல விலகியதில் சாரமதி உற்சாகமாக கிளம்பி இருந்தாள். அவளுக்கு கல்யாணத்தின் போது தான் புடவை வாங்க ஆரம்பித்தது என்பதால் அதிக புடவைகள் அவளிடம் இல்லை. ஒரு பன்னிரண்டு புடவைகள் இருக்கும். அதில் வீட்டுக்கு கட்ட என்று மூன்று காட்டன் புடவைகள். அதோடு ஒரு மூன்று பட்டுப்புடவைகள். மீதி நைலக்ஸ் புடவைகள். துணியில் கொண்டு போய் காசை […]


நீலாமணியின் சாரமதீ-14

தீ-14   நல்ல கல்லூரியில் சீட் கிடைத்தால் பொதுவாக பிள்ளைகளை விட பெரியவர்கள் சந்தோஷப்படுவார்கள். ஆனால் இங்கே சாரமதிக்கு நல்ல கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினீரிங்கில் இடம் கிடைத்தும் சந்தோஷப்பட தான் ஆள் இல்லை. சாரமதி சீட் கிடைத்த சந்தோஷத்தில் நேராக பெருமாள் படம் முன் லெட்டரை வைத்து கும்பிட்டு அகிலாவிடம் தான் முதலில் சொன்னாள். “அத்தை! எனக்கு நம்ம ஊருல புதுசா ஆரம்பிச்சிருக்கிற இன்ஜினீரிங் காலேஜ்ல சேர லெட்டர் அனுப்பி இருக்காங்க. கம்ப்யூட்டர் இன்ஜினீரிங் கோர்ஸ். வெள்ளிக்கிழமை […]


நீலாமணியின் சாரமதீ-13

தீ-13 இரண்டே நாட்களில் சாரமதி ஆளே பாதியாகி போனாள். என்ன முயன்றும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அடுத்த நாள் பரீட்சை நடக்கும் நேரத்தில் அவளால் இங்கே வீட்டில் உட்காரவே முடியவில்லை. படித்து படித்து அட்டை மடங்கி பக்கங்கள் கூட மடிந்து போன புத்தகத்தை வெறித்தபடி அப்படியே உட்கார்ந்து விட்டாள். அழுது ஆறுதல் அடையக் கூட வழி இல்லாமல் மனம் இறுகிப் போய் இருக்க கிடைக்காததை நினைத்து உள்ளுக்குள்ளேயே மருகியது. சாப்பிடவும் இல்லாமல் இரவு தூக்கமும் இல்லாமல் […]


நீலாமணியின் சாரமதீ-12

தீ -12   இரண்டு மாதங்கள் வேகமாக ஓடி விட்டது. சாருமதி தன் புகுந்த வீட்டில் நன்றாக பொருந்திப் போனாள். அதாவது அப்படி தான் அகிலாவும் சாந்தாவும் நினைத்தனர். காலை முதல் மாலை வரை அத்தையுடன் சேர்ந்து கொண்டு வீட்டு வேலைகளை செய்வது, அவர் பார்க்கும் சீரியல்களை கூட உட்கார்ந்து பார்ப்பது, மாதுவின் தேவைகளை கவனிப்பது என்று பொறுப்புள்ள மனைவியாக முக்கியமாக அகிலாவுக்குப் பிடித்த மருமகளாக நடந்து கொண்டாள். அகிலா அவர் அம்மா வீட்டுக்கு போகும் போது […]


நீலாமணியின் சாரமதீ-11

  தீ -11   ஞாயிறு அன்று சாரமதியும் மாதவனும் மறு வீட்டுக்கு கிளம்பிய போது கூடவே அகிலா குடும்பமே கிளம்பினர். பின்னே அகிலா போகாது அவர் அம்மா வீட்டுக்கு மற்றவர் போக முடியுமா? சாந்தா காலையிலேயே விருந்து சமைக்க பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார். சந்தானம் அதிசயமாக மனைவிக்கு வேண்டிய உதவிகளை செய்ய லக்ஷ்மியின் முகம் உர்ரென்று இருந்தது. முதலில் சந்தானம் விருந்துக்கு சமைக்க ஆள் வைத்து விடலாம் என்று சொன்ன போது “ஏன் உன் பொண்டாட்டிக்கு […]


நீலாமணியின் சாரமதீ-11

தீ – 1௦ மாதவனும் கடைக்கு கிளம்பியதும் அகிலா சும்மா இருக்கவில்லை. அவசரமாக காலை டிபனை செய்து மற்றவர்களுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டவர் உடனே அம்மா வீட்டுக்கு கிளம்பி விட்டார். காலை பத்து மணிக்கு மகள் வர லக்ஷ்மி அம்மாள்  சந்தோஷமாக வரவேற்றார். “என்ன அகிலா! இந்த காலையிலேயே வந்திருக்கே? மறு வீடு எல்லாம் சம்பிரதாயத்துக்கு தான். கூட சாருவையும் கூட்டிட்டு வரது தானே? மாது எங்க கடைக்கு போயிருக்கானா? சீனியும் முரளியும் என்ன செய்றாங்க?” வழக்கமான […]


நீலாமணியின் சாரமதீ-9

தீ 9   அன்று காலையில் பக்கத்தில் இருந்த இன்னொரு கோயிலில் அகிலா வைத்திருந்த வேண்டுதலை நிறைவேற்ற எல்லோரும் வேனில் கிளம்பினர். காலையில் போய் மதியத்திற்குள் வீட்டுக்கு வந்து விடக் கூடிய தூரம் தான். சந்தானம் தான் வழக்கப்படி வேன் ஏற்பாடு செய்திருந்தார். காலையில் அவர்கள் வீட்டுக்கு கிளம்பி விட அகிலா எழுந்திருக்கும் போது மணி ஏழு. சாந்தா மகளை வாசல் தெளித்து கோலம் போட வைத்து பால் காய்ச்சி காபி போட்டு வைத்து விட்டு அவர் […]


நீலாமணியின் சாரமதீ-8

தீ –8   இரவு வீடு வந்ததும் சாந்தாவும் சாரமதியும் பரிமாற ஆரம்பிக்க முதல் முறையாக பரந்தாமன் மகளுக்கு வேலை சொன்னார். “அகிலா! சாரு மாது கூட உட்கார்ந்து சாப்பிடட்டும். நீ சாந்தா கூட பரிமாறு!” எல்லாம் சாந்தா செய்வார் என்று முதல் ஆளாக தான் போய் உட்கார்ந்து கொண்ட அகிலாவுக்கு எரிச்சலாக இருந்தாலும் அப்பாவே சொன்ன பிறகு மீற முடியவில்லை. ‘இருக்கட்டும் அத்தை நீங்க உக்காருங்க என்று சாரமதியோ நா செய்யறேன் கா என்று சந்தானமோ […]


நீலாமணியின் சாரமதீ-7

தீ – 7        அன்றே நாள் நன்றாக இருந்ததால் அம்போகம் வைத்து விடலாம் என்று முடிவு செய்திருந்தனர்.      பக்கத்தில் இருந்தவளை மாதவன் அவ்வபோது ஓரக்கண்ணால் பார்த்து பார்த்து அவளிடம் ஏதாவது எதிரொலி இருக்கிறதா என்று தான் கவனித்துக் கொண்டு இருந்தான்.      அவன் மாமன் மகளோ பக்கத்தில் ஒருவன் இருந்ததை உணர்ந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.      போன வாரம் தான் போய் வந்த நண்பனின் கல்யாணத்தில் தம்பதிகள் இருவரும் தங்களுக்குள் ரகசியம் பேசுவதும் யாரும் […]


நீலாமணியின் சாரமதீ-6

தீ- 6   காலையில் எழுந்து எல்லோரும் கிளம்ப, இரவில் மனைவியிடம் சொன்ன மாதிரியே சந்தானம் பெற்றோரிடம் போகும் வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். சாந்தா மகளுக்கு மட்டும் இட்லியும் சட்னியும் செய்து வைக்க அகிலா குடும்பத்துடன் கிளம்புவதற்கு அரை மணி நேரம் முன்னால்   வந்து இறங்கினார். காபி கூட இங்கே வந்து குடித்துக் கொள்ளலாம் என்று வந்தவருக்கு சமையல் அறையில் எதுவும் செய்ததற்கான சுவடே இல்லாமல் இருக்க அவருக்கு ஒரே எரிச்சல். அதிலும் […]