Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர நேசங்கள்

நனிமதுர நங்கை 16

சத்யனிடம் பேசி விட்டு வந்து இன்பாவின் எண்ணிற்குத் தான் அழைத்திருந்தாள் நங்கை. அதே அணைத்து வைத்திருப்பதான செய்தி தான் வந்தது அவளுக்கு. “ம்ப்ச் ஏன் இவன் இப்படி என்னைப் பாடாய்ப் படுத்துறான். கண்டவனும் அட்வைஸ் செய்ற நிலைல கொண்டு வந்து நிறுத்திருக்கானே! இவன்‌ மட்டும் என் கைல கிடைச்சான்” ஏறிய கோபத்தை அடக்கி தனக்கு ஏதேனும் மின்னஞ்சல் செய்திருக்கிறானா என ஆராய்ந்தாள். அன்றைய நாள் முழுவதும் அவனிடம் இருந்து தனக்கு ஏதேனும் வகையில் தகவல் வருமா எனக் […]


சொக்கனின் மீனாள் 20

இந்த வெங்காயம் நறுக்கும் இயந்திரம் அவன் எதிர்பார்த்த அளவு லாபத்தை வழங்காதிருக்க, மீனாட்சியிடம் அதைப் பற்றி உரைத்திருந்தான். லாபம் இல்லாவிடினும் நஷ்டமாகாமல் இருந்ததே போதும் என்று நிம்மதி அடைந்து கொண்டான். அடுத்தப் புதிய பொருளுக்கான தயாரிப்புப் பற்றி மீனாட்சி, அகல்யா மற்றும் கல்யாணியிடம் ஆலோசித்தான்‌. அதுவும் இதுப்போல் பெரிய இயந்திரமாய் இருக்க, “ஏங்க நீங்க தான் ஒரு தடவை பெரிய வியாபாரத்தை விட, சின்னச் சின்னதா சில்லறை வியாபாரம் நிறையச் செய்யும் போது கிடைக்கிற லாபம் அதிகம்னு […]


சொக்கனின் மீனாள் 17

“இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டு உறவும் இல்ல. கோர்ட்ல சந்திப்போம்” என்று கூறி அவர்கள் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தான் ஈஸ்வரன்‌. வேங்கடமும் செல்வாம்பிகையும் அவனைத் தடுக்கவில்லை. அந்த நாளிற்குப் பிறகு வேங்கடம் ஈஸ்வரனிடம் பேசவே இல்லை. அவரின் குற்றவுணர்வு அவரைப் பேச விடவில்லை. திருமணத்திற்கு முன் தங்கையின்/அக்காளின்/அண்ணனின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாய் பாவித்து அன்பு செலுத்தி வளர்க்கும் மாமனுக்கோ/சித்தப்பனுக்கோ சுயநலமான மனைவி அமையும் போது, அவர்களும் அப்படியே மனைவியின் பேச்சைக் கேட்டு, முன்பு […]


சொக்கனின் மீனாள் 13

“உங்களை ஒரு வருஷமா தெரியும் சுந்தர்! உங்க குணநலன்கள் பழகுற விதம் வச்சி நல்லவர்னு தான் நம்புறேன். ஆனா உங்கப்பாவைத் தான் நம்ப முடியலை” தயக்கமாகவே கூறினாள். ஆழ்ந்த மூச்செடுத்தவனாய், “அப்படியே நான் சொல்றதையும் நம்புங்க அண்ணி. அண்ணாவை பழி வாங்குறேன்னு எந்த இடையூறும் இடைஞ்சலும் செய்யக் கூடாதுனு அப்பாகிட்ட நான் சத்தியம் வாங்கிருக்கேன். அப்பா அதை மீறி கண்டிப்பா நடந்துக்க மாட்டாங்க. அப்பாவைத் தாண்டி இதை யாரு செஞ்சிருப்பானு அண்ணா கொஞ்சம் யோசிச்சாலும் போதும். அவங்க […]


சொக்கனின் மீனாள் 11

மருத்துவமனையில் அந்த அறையில் அவளின் தோளில் கைகளைப் போட்டிருந்தவன் அவளது தலை முடியில் இருந்த ஈரத்தை உணர, “தலைக்குக் குளிச்சிட்டு துவட்டாம அப்படியே வந்துட்டியா?” எனக் கடிந்தவாறு கேட்டான். “குளிச்சிட்டு வந்ததும், கல்யாணி நீங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கிறதா சொன்னாங்களா, அதான் அப்படியே தலைக்குக் கிளிப் போட்டுட்டு வந்துட்டேன்” என்றவள் கூறிக் கொண்டிருந்த நேரம், அறைக்குள் நுழைந்தார் ருத்ரன். அவரைக் கண்டதும் அவனை விட்டு தள்ளி அமர்ந்தவளைப் பார்த்தவாறு அருகே வந்தவரின் கலக்கமான முகத்தைப் பார்த்த ஈஸ்வரன், “ஏன் […]


சொக்கனின் மீனாள் 10

“எனக்கொரு சந்தேகம்! அந்த மர ஏணி இரண்டு பேரு சேர்ந்து தாராளமா ஏறுற அளவுக்கு அகலமா பெரிசா தானே இருக்கு. அதுவும் அதை ஒருத்தரால அசைக்கக் கூட முடியாது. இரண்டு மூனு பேர் சேர்ந்தா தான் அசைக்கவே முடியும். அவ்ளோ பெரிய ராட்சஷ ஏணி மாதிரி இருக்கு. அதுலருந்து எப்படி விழுந்தாங்க?” எனக் கேட்டான். அவனின் கேள்வியில் அவளின் மனம் பழைய நினைவுகளை அசைப்போட, தாயுடனான தனது பந்தத்தினையும் அன்றைய நாளின் நிகழ்வுகளையும் அவனுடன் பகிர்ந்து கொள்ளலானாள். […]


சொக்கனின் மீனாள் 8

இங்கு கல்யாணி தனது அறையில் படுத்தவாறு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். “கேட்டியா ராஜாண்ணா! அண்ணே ஆதாரம் இல்லாம தான் உன் மேல பழியைப் போட்டிருக்கு” சுந்தரராஜனிடம் பேசிக் கொண்டிருந்தாள் கல்யாணி. தனது கைபேசியில் ராஜனுக்கு அழைப்பு விடுத்து அங்கு மேஜையில் வைத்தவாறு தான் ஈஸ்வரனிடம் பேசிக் கொண்டிருந்தாள் கல்யாணி. ஆகையால் ஈஸ்வரன் பேசிய அனைத்தையுமே ராஜன் கேட்டிருந்தான். மறுமுனையில் ராஜன் ஆவேசமாய், “எவன் இந்த கொரியரை மாத்தி வச்சதுனு நான் கண்டுபிடிக்காம விட மாட்டேன்!” என்றவன், “இது […]


சொக்கனின் மீனாள் 7

“இன்னிக்கு அண்ணாவோட லைவ் வீடியோ இது! காலைல எவ்ளோ பிரச்சனை நடந்துச்சு. ஆனா அதை எதுவுமே முகத்துல காண்பிக்காம எவ்ளோ அழகா பேசுறாங்க பாரு மீனு” என அன்னம் ஆச்சரியமாய்க் கூற, “ஆமா உங்க அண்ணனுக்கு நடிக்கவே தெரியாது பாரு” என்றாள் பட்டென்று. “நடிக்கிறாரா? அவர் எப்ப நடிச்சாரு?” கேள்வியாய் அன்னம் அவளை வினவ, “அதான் நம்மளை தெரியாதுனு சொன்னாரே! அதுவே நடிப்புத் தானே” பொருமித் தள்ளினாள் மீனாட்சி. “ஹே மீனு! நிஜமாவே அவருக்கு நம்மளைத் தெரியலைடி! […]


சொக்கனின் மீனாள் 6

“என்னடா தங்கம்! என்னாச்சு?” என லட்சுமி அவளிடம் குடிக்க நீரளிக்க, “ஒன்னுமில்ல அத்தை” எனத் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த மகளை யோசனையுடன் பார்த்தார் ருத்ரன். “நான் டிரஸ் மாத்திட்டுக் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் அத்தை” என்றவாறு தனது அறைக்குள் சென்றாள் மீனாட்சி. அவள் பின்னோடேயே அறைக்குள் நுழைந்தாள் அன்னம். “கொஞ்ச நாளைக்கு இந்தக் கல்யாண பேச்சை தள்ளி போடுவோமா?” என ஆரம்பித்த ருத்ரன், “இங்க நடந்த அசம்பாவிதத்துக்குப் பிறகு ரொம்ப நாள் கழிச்சி வீட்டுல ஒரு […]


சொக்கனின் மீனாள் 5

இரு வீட்டினரும் கோவிலின் நிலைப்படியை தாண்டி உள்ளே வர, “என்னடா இது அதிசயம்! எதிரும் புதிரும் ஒரே இடத்துல வந்து நிக்குது” எனத் தீரனின் காதைக் கடித்த ராஜனின் பார்வை கல்யாணியைப் பாசமாய் ஸ்பரிசித்தது‌. “வாங்க! பொண்ணு வீட்டுக்காரங்க உள்ள தான் இருக்காங்க. நீங்க போய்ச் சாமியைப் பார்த்துட்டு வாங்க பேசலாம்” என இரு குடும்பத்தினரையும் தரகர்கள் இருவரும் உள்ளே அனுப்ப முனைந்தனர். “என் பையனுக்குப் பொண்ணு பார்க்க நீங்க வருவீங்கனு நினைக்கவே இல்லை தம்பி! நமக்குள்ள […]