Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சொக்கன் சங்கதி 

சொக்கன் சங்கதி – 27

சொக்கன் சங்கதி – 27 இயற்கையின் பொக்கிஷங்கள் போலும் கிராமம்.காலை வேளை குளிர் காற்று மெல்ல தீண்டி மேனியை முத்தமிட, அந்த புத்துணர்ச்சி கொடுத்த மயக்கத்தில் கல்யாண களிப்பும் கலக்க ஒருவித ரம்யமான மனநிலையில் இருந்தனர் மாசி கருப்பன் குடில் மக்கள். கல்யாணமா?…. ஆம் சொக்கன் திருமணம். தேவர்கள் கூடி நிற்க விண்ணுலகம் மண்ணுலகம் கொண்டாடி நின்றதாம் மதுரை சொக்கன் சொக்கி திருமணத்தை. அதே போல நல் குணம் கொண்ட ஆன்றோர் சான்றோர் கூடி நிற்க இதோ […]


சொக்கன் சங்கதி – 26

சொக்கன் சங்கதி – 26 “அண்ணே வெசன படாதீக பசங்க பார்த்துக்கிடுவாக” என்ற சாமிக்கண்ணை முறைத்து பார்த்த சிவசாமி. “நான் எதுக்குவே இம்புட்டு போரையும் வுட்டுப்புட்டுத் தனியா பஞ்சாயம் பண்ண போன்னேன்.இரண்டு சின்ன புள்ளைங்கள சமாளிக்க முடியலை உங்களால எங்கன போனான் முத்து” “இங்கன பாருக அதுங்க இரண்டும் எங்க பேச்சை காதுல போட்டுகல. அதுவும் அந்தச் சின்னது எம்ம எம்புட்டு கேள்வி கேட்குது தெரியுமா? அயித்த காரினு ஒரு பயமே இல்ல” சாராத பொரிந்து தள்ளினார். […]


சொக்கன் சங்கதி – 25.1

சொக்கன் சங்கதி – 25.1 “அப்புச்சி!….” சற்று உரக்க அழைத்தவன் குரலில் அனைவரும் அவனைப் பார்க்க “இங்கன பாருக அப்புச்சி எனக்கு இந்தக் கண்ணாலத்துல உடன்பாடே இல்லை.இந்தப் பேச்சு வச்சுதேன் குலசாமி கோவில்ல சொக்கப்பன்னுக்கும் எனக்கும் சண்டையாகி போச்சு. “திட்டம் போட்டுச் சண்டை கட்டிட்டு எப்படி கதை பேசுது பாரு” சங்கிலி சொல்ல. “அதுவும் முகத்தை எம்புட்டுத் தூரம் சுருக்கி வச்சிருக்கு பாரு கோவமா பேசுதாமா” முருகு. “எது எப்படியோ மதி எங்க வூட்டு புள்ள இப்ப […]


சொக்கன் சங்கதி – 25

சொக்கன் சங்கதி – 25 காலை கதிரவன் தனது கைகளை மெல்ல மெல்ல விரிக்க மிதமான விகுதியில் ஏறிக் கொண்டு இருந்தது வெட்பம். குலசாமி கோவில் எதிரில் உள்ள ஆலமரத்தடியில் ஒரு ஜமுக்காளம் விரிக்கப் பட்டு அதில் இருபதுக்கும் மேற் பட்ட பேரிளம் பெண்கள் அமர்ந்திருக்க, ஆலமரத்தின் வேர் விளிம்பில் உள்ள திண்டில் முக்கிய தலைக்கட்டுகள் அமர்ந்திருக்க. அவர்களைச் சுற்றி இளசுகள் நின்றிருந்தனர். சொக்கப்பன் தந்தையான சவுக்கும், சொக்கு தந்தையான சிவசாமியும் ஒருமித்த கருத்தாக அனைவரையும் அழைத்துக் […]


சொக்கன் சங்கதி – 24

சொக்கன் சங்கதி – 24 எங்கும் காரிருள் சூழ கருமை அதன் நிறம் கொண்டு மிரட்டினாலும். மெல்லிய குளிர் காற்று செல்லமாக மேனியை தீண்டி சிறு மயக்கத்தை உண்டாக்க தான் செய்தது.நேரம் நள்ளிரவை தாண்டி நிற்கும் என்பது கணிப்பு. இரவு வேளை உணவை முடித்துக் கொண்டு இளவட்டம் அனைத்தும் தோட்டத்தில் கூடி நின்றது.அதில் காத்த முத்துவும், கந்தனும் மட்டுமில்லை.அவர்கள் வரவை தான் தற்போது எதிர் பார்த்து அமர்ந்திருந்தனர் மற்ற மூன்று பங்காளிகளும். “என்னத்த பண்ணுதுங்க இரண்டும்? எந்தக் […]


சொக்கன் சங்கதி – 23

சொக்கன் சங்கதி – 23 விடிந்தும் விடியாமலும் வந்து நிற்கும் சவுக்கை ஒருமாதிரியாகப் பார்த்துக் கொண்டே வரவேற்றார் பூசாரி “வாய்யா சவுக்கு ஆத்தா கண்ணுக்குள்ள நிக்காள என்ன” தற்போது தானே பூசை முடிந்தது மீண்டும் அவர் குலசாமி கோவிலுக்கு வரவும் அப்படிக் கேட்டு வைத்தார் பூசாரி. “வர வச்சு புட்டா” என்றவர் சாமியை தரிசனம் செய்யப் பூசை கற்பூரம் காட்டினார்.மனமுருக இருவரும் வேண்டி நிற்பதை பார்த்துக் கொண்டே இருந்தார் பூசாரி. பிரசாதம் பெற்றக் கொண்டவர்கள் அங்கையே அமர, […]


சொக்கன் சங்கதி – 22

சொக்கன் சங்கதி – 22 சித்திரை மாத கத்திரி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டு இருந்தது. கோடை காலம்  வெயில் என்றால் சும்மாவா சித்தமே கலங்கி போகும் அல்லவா. என்னதான் கிராமம் என்றாலும் இயற்கை குளுமையை அள்ளி தந்தாலும். அவற்றைக் கிழித்துக் கொண்டு தனது பல்லை காட்டி நின்றான் கதிரவன். அத்தகைய நன் பகல் வேளையில் மாசி பெரிய கருப்பன் குடிலில்  ஒருவர் முகத்தை ஒரு பார்க்க சங்கடம் கொண்டு அமர்ந்திருந்தனர் சொக்கன் அப்பாரும் சொக்கப்பன் அப்பாரும். […]


சொக்கன் சங்கதி – 21

சொக்கன் சங்கதி – 21 அன்று குலசாமி வழிபாட்டில் கும்மியடித்தப் பிறகு ஒரு வாரம் சென்ற நிலையில்,பங்காளிகள் குழு சற்று ஆறுதலாக அமர்ந்து காத்தமுத்துவை வாரி கொண்டு இருக்க. அவர்களை நோக்கி வேக நடையுடன் வந்தான் சொக்கப்பன். அவனது வரவை முதலில் கண்ட முருகு “ஆத்தி!…” என்று அலற அவனது பார்வை கண்ட திசையில் பார்த்த அனைவரும் சற்று பதறி தான் நின்றனர். அவர்கள் பதற்றத்திலும் நியாயம் இருக்கத் தான் செய்தது. ஏனென்றால் சொக்கப்பன் வந்த தோரணை […]


சொக்கன் சங்கதி – 20

சொக்கன் சங்கதி – 20 “டேய்! சொக்கு!… ஏலேய்! சொக்கா!…  அடேய்!….” என்று வித விதமாகச் சிவசாமி அழைத்துக் கொண்டு இருக்க. எங்கே அவர்கள் கவனித்தார்கள் இருவருமே ஒன்றாக உருண்டு பிரண்டு கொண்டு இருந்தனர்.  சிவசாமி அல்லாடி திரிவதை பார்த்த கந்தன் “ஐயோ!.. பாவம் பெரியப்பாவ பார்த்தா எனக்குத் தருமி நியாபகந்தேன் வருது சொக்கா சொக்கானு சோர்ந்து போயிடுவார் போல” என்றதும் பல்லை கடித்த காத்தமுத்து “ஆனாலும் பங்காளிகளுக்கு ஓவர் அதப்பு தாண்ட இந்த நேரத்துலையும் நக்கலு… […]


சொக்கன் சங்கதி – 19

சொக்கன் சங்கதி – 19 புலர்ந்தும் புலராத காலை வேளையில் குடும்பமே குதூகலமாகக் குலசாமியை வழிபட கிளம்பி கொண்டிருந்தனர். மெல்லிய ஊத காற்றுப் பதமாக மேனியை தீண்டி சேட்டை செய்யத் தூய காற்றைச் சுவாசித்தவாறு உற்சாகமாக நடமாடி கொண்டு இருந்தனர் மாசி கருப்பன் குடில் மக்கள். பட்டு சேலை சர சரக்க பெண்கள் பூஜைக்கு  வேண்டிய சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர். அன்று மதியம் கெடா வெட்டி பொங்கல் வைத்து அங்கேயே உணவு என்பதால் ஆண்கள் […]