ஜிமிக்கியின் ஜனனம் 24 விஜியின் மனம் அங்கு அமர்ந்திருந்தவர்களை முத்தையா மற்றும் மங்கையாக அவளிற்கு காட்சியளித்தது. அதைக் கண்டவள் முகத்தில் சிறுப்புன்னகை வந்த நேரத்தில், ஜனாவின் ஃபோன் அடித்த ஒலியில் நிதர்சனத்திற்குத் திரும்பிவிட்டாள். ஃபோனை எட்டிப் பார்த்தவள் யாரோ அவளிற்கு தெரியாத நபர் என்பதால் சைலண்டில் போட்டுவிட்டு மீண்டும் ஹாலை காண, முத்தையா மற்றும் ஜமுனா தெரிந்தனர். மனதில் வெறுப்புத் தோன்றவும், தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள். ஜனா சிறு வீடு என்றாலும் இரண்டு […]
ஜிமிக்கியின் ஜனனம் 23 ஜனா, விஜியை அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைக்கவும், ஜனாவின் பெற்றோர் அனைவருக்கும் ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்டனர். சிறிது நேரம் கடந்தது, அமர் மற்றும் ரெனி இருவருமே விசயம் கேள்விப்பட்டு வந்துச் சேர்ந்தனர். மாலைப்பொழுது ஆக, மருத்துவர் அழைப்பதாக செவிலியர் வந்துக் கூறினார். ஜனா, முத்தையா மற்றும் விஜி இருவரையுமே மருத்துவர் அறைக்குள் அழைத்துச் சென்றான். “வாங்க ஜனா! சிட்” என்றார் டாக்டர். மூவரும் அமர, “டாக்டர்! அம்மாக்கு இப்ப எப்படி இருக்கு..?” […]
ஜிமிக்கியின் ஜனனம் 22 ஜனாவின் பெயர் ஃபோனின் திரையில் மிளிர்ந்ததும், வசந்தா உடனே அதை ஆன் செய்து காதில் வைத்து, அவன் பேசும் முன்னே, “எங்க இருக்க…?” எனச் சற்று பதட்டதுடன் கேட்டார். அவனிடம் பேசாமல் இருந்தாலும், மகன் இரவு முழுவதும் வீட்டிற்கே வரவில்லை என தெரிந்ததால் மனம் பதறியது. “அம்மா! நானும், விஜியும் ஹாஸ்பெட்டலில் இருக்கோம்..” “என்ன ஆச்சு..? ஏன்…?” என்றார் வேகமாக. “நாங்க ஃபைன்மா, விஜியோட அம்மா…” எனத் தொடங்கி, மங்கையின் நிலையை விவரித்தான். […]
ஜிமிக்கியின் ஜனனம் 21 மகளின் காலில் விழப் போன முத்தையாவை நொடியில் பிடித்த ஜனா “மாமா! என்ன பண்ணிட்டு இருக்கீங்க…? வாங்க முதலில்” என இழுத்து நாற்காலியில் அமர வைத்தான். அதே நேரத்தில் விலகிய விஜி, அப்படியே பின்னால் நகர்ந்து சுவரோடு சாய்ந்து நின்றாள். “இல்ல மாப்பிள! என் மேல தான் தப்பு, என் ஜிமிக்கி இப்படி எல்லாம் பேசுறவ இல்ல, நான் பண்ண பாவம் அவளை இந்தளவு என்னைய வெறுக்க வச்சிருக்கு. அப்ப அவ காலுல […]
ஜிமிக்கியின் ஜனனம் 20 ஜனா விஜியின் வருகைக்காக காத்திருந்தான், ‘அவசரமா போய் அம்மாவுக்கு சீரியஸ்னு சொன்னா பதறியடிச்சுட்டு வருவா, மாமா சொன்ன நேரப்படி, அவர்கள் வர இன்னும் நேரமிருக்கு, இப்பவே விஜி கிட்ட சொன்னா ரொம்ப அழுது ஆர்பாட்டம் பண்ணிடுவா, சென்னைக்குள்ள எண்டர் ஆகட்டும்’ என்று எண்ணிய படி தான் பைக்கில் சாய்ந்தவாறு நின்றான். அவனை தனது அறையின் ஜன்னல் வழியாகப் பார்த்த ராம்கி, “ஓ! பொண்டாட்டியை அழைச்சுட்டுப் போக புருசன் வெயிட்டிங் போல, அப்படி என்ன […]
ஜிமிக்கியின் ஜனனம் 19 அந்த இரவுப் பொழுதில், வீட்டில் இருந்த அனைவருமே இயந்திரம் போல் நடமாடினர். ஓரளவிற்கு வீட்டின் பொருட்கள் இளையர்வர்களின் முயற்சியினால் தேவையான இடங்களில் சென்றமர்ந்தது. அமரும், ஜனாவும் இரவு உணவினை வெளியில் சென்று உணவகத்தில் வாங்கி வந்தனர். முத்து சாப்பிட்டு முடித்து மாத்திரைகளை போட்டுக் கொண்டார். அப்புவின் முயற்சியால் வசந்தாவும் சாப்பிட்டு விட்டு கணவர் இருந்த அறைக்குள் சென்றவர், பாய் எடுத்துப் போட்டுத் தரையில் படுத்துக் கொண்டார். முத்துவின் மனதில் இழப்பு, உடலின் சோர்வு […]
ஜிமிக்கியின் ஜனனம் 18 இரவில் சரியான தூக்கமின்மை காரணமாக இப்பொழுது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த, கணவரை நோக்கியவாறே அமர்ந்திருந்தார் வசந்தா. அவரின் மனம் அவரை கேவலமாக பார்த்து, ‘வசந்தா! நெல்லைக் கொட்டினா அள்ளிடலாம் சொல்லைக் கொட்டினா அள்ள முடியாதுனு தெரியாத அனுபவசாலியா நீ…?’ எனக் கேட்டது. அவரோ மனம் கேட்ட கேள்விக்குப் பதில் கூற இயலாமல் அமர்ந்திருந்தார். ‘ஒரு காலத்தில் நீ இந்த வாழ்க்கைக்கு ஏங்கிட்டு இருந்தீயே நினைவு இருக்கா..?’ என மனம் கேட்க, கண்களில் கண்ணீர் […]
ஜிமிக்கியின் ஜனனம் 17 “ஜிமிக்கி!” என்றழைத்தான் தன் தோளில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவளை. “ம்ம்ம்!” “இன்னும் எவ்ளோ நேரம் தான் இப்படியே உட்கார்ந்திருப்பது, நடுநிசியை தாண்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது விடியவே போகுது” “ம்ம்ம்! என்னைய டிஸ்டர்ப் பண்ணாதீங்க கோல்ட், நான் இன்னைக்கு தான் மனசுக்கு புடிச்சவரோடு தோளில் சாய்ந்து நிம்மதியா ஃபீல் பண்றேன்” “புரியுதுடா! ஆனா நாளைக்கு வொர்க் இருக்கே” “ம்ம்ம்!” “போய் தூங்கலாமா..?” “ம்ம்ம்! அதான் விடியப் போகுதே இனிமே எதுக்கு தூக்கம்” என […]
ஜிமிக்கியின் ஜனனம் 16 அந்த அமைதியின் சூழலில் ஜனா என்ன பேசுவதென்று தெரியாமல் பைக்கை ஒரே வேகத்தில் ஓட்டியவாறு, அதன் கண்ணாடி வழியாக அவனின் ஜிமிக்கியை நோக்கினான். விஜி பேசுவதற்கு வாய்ப்பே இல்லை என தெரிந்தமையால் ஜனாவே பேச்சினைத் தொடங்கினான். “எதும் சாப்பிட்டீயா விஜி…?” அவளோ அவன் யாரிடமோ பேசுவது போல் அமர்ந்திருந்தாள். ஜனா பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, தலையை பின்பக்கமாக திருப்பி, “ஜிமிக்கி! அட்லீஸ்ட் பதிலாவது ஆமா! இல்லைனு சொல்லுடி ப்ளீஸ்” என்றான். அவள் அமைதியாகவே […]
ஜிமிக்கியின் ஜனனம் 15 “சொல்லுடி! இதோ கிளம்ப போறேன், நீ குடுத்துவிட்ட ட்ரஸ் எல்லாம் வந்துட்டு” என ரெனியுடன் பேசியப்படி டிரஸ் பையில் இருந்த சுடிதாரை வெளியே எடுத்தாள் விஜி. “விஜி! குரூப் மெசேஜ் பாக்கலையா..? மீட்டிங் போட்டு இருக்கான்டி அந்த மண்டகசாயம்” “இல்லையே! அது மியூட்டுல இருக்கு கவனிக்கலடி” என மெசேஜை ஆராய்ந்தாள். இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது, அதுவும் வேகமாக கிளம்பினால் கூட நேரம் போதாது விஜி புறப்படுவதற்கு. “ஹேய்! என்ன ரெனி […]