Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

டிங் டாங் காதல்

டிங் டாங் காதல் எபிலாக் – 2

இருவரும் பேசிக்கொண்டே வேலையை முடித்து சுந்தரிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு கணவனை காண கீழே இருந்த சமயலறைக்கு வைஷ்ணவி செல்லவிருந்த நிமிடம் மஹாலக்ஷ்மி மருமகளை அழைத்து மணமேடையில் நிற்க கூறினார். கையில் கைபேசியும் இல்லை. ஷெர்லினிடம் சென்றவள் அவள் கையிலிருந்த நகை பையை வாங்கி, “கார்த்திக்கு கால் பண்ணி மேடைக்கு வர சொல்லு ஷெர்லின்” அவசரமாக கூறி மேடையேறிவிட்டாள் சகோதரன் மணமேடைக்கு வருவதை பார்த்து. தகவலும் சுந்தர் மூலம் கார்த்திக்கு சென்றாயிற்று. சித்தார்த் மேடைக்கு வந்ததும் மனைவியை […]


டிங் டாங் காதல் எபிலாக் – 1

“வைஷ்ணவி மா எந்திரிடா” மஹாலக்ஷ்மியின் குரல் கேட்டு படுக்கையின் அருகினில் கை வைத்து பார்த்த வைஷ்ணவிக்கு அப்பொழுது தான் இந்த நாளின் நிகழ்வே நினைவிற்கு வந்தது. இன்று சித்தார்த் சுபத்ராவின் திருமணம். இரண்டு வருடங்களில் பார்வையாலே சித்தார்த்தின் மனதை மொத்தமாய் அவள் பக்கம் சுபத்ரா ஈர்த்துவிட, அவர்களை கண்டுகொண்ட வைஷ்ணவி கணவனிடம் கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிடலாம் என வந்து நின்றாள். கார்த்தியோ, “வேணாம் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் டா. ஆசிலேஷன்ல இல்லாம ஸ்டெடியா நிக்கட்டும் […]


டிங் டாங் – 25.3

அவர் திட்டும் நேரத்திலே தன்னுடைய சாவியை எடுத்தவன், வாகனத்தின் சாவியை ஆணியில் மாட்டிவிட்டு சேர்மத்தாயின் அருகில் வந்தவன் அவர் கை பிடித்து, “உங்க பேத்தி இனி இப்டி உர்ருனு இருக்க மாட்டா… என் மேல நம்பிக்கை வச்சு நிம்மதியா படுங்க” அவர் கையில் அழுத்தமாய் தன் மற்றொரு கையை வைத்து மூடியவன் வேகமாக படி ஏறி தன்னுடைய அறைக்குள் சென்றான். நேரமே வந்த காரணத்தால் வைஷ்ணவி தலையணையை அணைவாய் வைத்து உறக்கம் தழுவியிருக்க பூனை போல் சத்தமே […]


டிங் டாங் – 25.2

மறுநாள் சென்னையில் ஒரு முக்கியமான திருமண நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் மதியமே கார்த்தியின் மொத்த குடும்பமும் கிளம்பியது, மஹாலக்ஷ்மி வைஷ்ணவியை அழைக்க அவன் வராமல் தான் மட்டும் வர விருப்பமில்லை என்பதை மறைத்து, “இப்ப மட்டும் நான் இங்க இல்லனா ஷெர்லின் என்னை என்ன செய்வான்னே தெரியல த்த…” என சிரிப்போடு சொல்ல, அவரும் சரி என்று வைஷ்ணவியை வற்புறுத்தாமல் சேர்மத்தாயை மட்டும் பார்த்துக்கொள்ளுமாறு கூறி சென்றார். இரவு உணவை தயாரித்து சுட சுட இருந்த ரவை […]


டிங் டாங் – 25.1

‘சாரி’ ‘சாரி’ ‘சாரி’ ‘சாரி’ ‘சாரி’ இதோடு முப்பதுக்கும் மேற்பட்ட குறுந்செய்திகளை வரிசையாக அனுப்பியாயிற்று வைஷ்ணவி பக்கமிருந்து, ஆனால் எந்த மன்னிப்பிற்கும் பதில் தான் கார்த்தியிடம் வரவில்லை. அவனுடைய கோவத்தின் நியாயத்தை உணர்ந்து, கணவனின் வார்த்தையில் மட்டும் தான் தவறுள்ளது என்று புரிந்தது, என்ன இருந்தாலும் அவனை கை நீட்டி அடித்திருக்க கூடாதென்று மனம் வருந்த தான் கணவனுக்கு கடந்த ஒரு மணி நேரமாக செய்தி அனுப்பிக்கொண்டே இருப்பது. இன்றோடு ஐந்து நாட்கள் ஆகியிருந்தது வைஷ்ணவி செங்கோட்டை […]


டிங் டாங் – 24.2

திடுக்கிட்டது அவன் இதயம், “ஏன் இந்த கேள்வி?” தயக்கமாய் கேட்டான் பெயவரிடம். “என்ற கேள்விக்கு பதில் கேள்வி போட்டா எனக்கு புடிக்காது பேராண்டி” “பழக்கம் இருக்கு, ஆனா அது நீங்க நினைக்கிற மாதிரி காதல் எல்லாம் இல்ல” என்றான் உண்மையாக. “அப்போ உன் பொஞ்சாதி தான் இதுக்கெல்லாம் காரணமா?” “எத கேக்குறீங்க எனக்கு புரியல பாட்டி” – கார்த்தி “தெரியாத மாதிரி நடிக்காத கார்த்தி, வீட்டுல பெரியமனுஷினு நான் இருந்து என்ன பிரயோஜனம், ஆளாளுக்கு உங்க விருப்பப்படி […]


டிங் டாங் – 24.1

வைஷ்ணவி – கார்த்தி திருமணம் முடிந்து இன்றோடு ஐந்து மாத காலம் முடிந்தது. இருவரும் குற்றாலத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறியிருந்தனர். திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் இருவரையும் இங்கு அழைத்துவந்து பால் காய்ச்சி அவர்களுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி அடுக்கிவிட்டார் வைஷ்ணவி தந்தை. கார்த்தி எவ்வளவோ மறுத்தும், தந்தையானவர் கேட்டபாடில்லை. நினைத்ததை செய்து முடித்தே நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தார். வைஷ்ணவி, கார்த்திக்கு அந்த வீடு சொர்கமானது அந்த ஐந்து மாதத்தில். கீழ் வீட்டில் […]


டிங் டாங் – 23.1

முகத்தில் சில ஈர துளிகள் பட சட்டென கண் விழித்தவன் கண்ணை கசக்கியபடி சுற்றி பார்த்த பொழுது, ஈரத் தலையுடன் கண்ணாடி முன்பு நின்று நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்ட மனைவி தான் அழகாய் காட்சியளித்தாள். கடந்த ஆறு மாத காலமாக இந்த காட்சிக்காக பல நாள் கார்த்தியின் மனம் ஏங்கியதுண்டு. “எந்திரிச்சிட்டீங்களா?” ஆமாம் என்றவன் பல் துலக்கி வந்த பொழுது, “உள்ளே சீயக்காய் வச்சிருக்கேன், சும்மா அத சாஸ்திரத்துக்கு தலைல வச்சிட்டு ஷாம்பு போட்டுக்கோங்க” என குளியலறையினுள் […]


டிங் டாங் – 23.2

ஆனால் மஹாலக்ஷ்மியின் அண்ணி தான் திருமணம் நிச்சயம் ஆன தினத்திலிருந்து சற்று கோபமாக சுற்றி வந்தார். அவர் மகளுக்கு அதை விட கோவம் கார்த்தி மேல். அதையும் பெரிதுபடுத்தாமல் மரியாதையாகவே கார்த்தியும் வைஷ்ணவியும் கவனிக்க, மகாலட்சுமிக்கு மருமகளின் நடவடிக்கை திருப்தியாக இருந்தது. தன்னுடைய விசேஷம், புடவை அணிந்து இருந்தவள், எதையும் யோசிக்காமல் பந்தி பரிமாறும் பொழுது உடன் நின்று, மஹேஸ்வரியையும், மஹாலக்ஷ்மியையும் பரிமாற விடாமல் தள்ளி நிறுத்தியது என அங்கிருந்த சொந்தங்கள் அனைவரும் கார்த்தியின் மனைவி தங்கம் […]


டிங் டாங் – 22.2

“வைஷ்ணவி வாடா” கார்த்தியின் உறவுக்கார பெண்கள், கார்த்தியின் அன்னை என கூட்டமாக அவளை வந்து அழைக்க, தலையை முடிந்தமட்டும் தூக்காமல் கார்த்தி அருகே வந்து அமர்த்தவளால் அவனை பட்டு வேஷ்டி சட்டையில் இப்பொழுதே பார்க்கும் ஆர்வம் துளைக்க திரும்பி அவனை பார்த்துவிட்டாள். மொத்த மண்டபமும் இவர்கள் இருவரையும் பார்க்க அவளோ அவனை கண் சிமிட்டாமல் சுற்றம் மறந்து பார்க்க, தன்னவளின் பார்வை தன் மேல் விடாமல் விழ கூட்டத்திலிருந்து கண்களை விலக்கி சிரிப்போடு, “இப்டி பாக்காத வைஷ்ணவிமா” […]