Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தள்ளாடும் பூவனம்

தள்ளாடும் பூவனம் 25 3

சில வருடங்களுக்கு பின்….            கல்லூரி வாசலில் நேரத்தை பார்த்தபடி மனைவிக்காக ஜீப்பில் அமர்ந்தபடி இருந்தான் திரவியம். அவனின் மொபைல் இசைக்க வீடியோ கால் வீட்டிலிருந்து. பார்த்ததும் அட்டன் செய்ய திரையில் அவனின் இரண்டரை வயது பெண் குழந்தை மகிழாக்ஷினி. “மகிழ்ம்மா…” என்றதும், “ப்பா ப்பா வா வா….” என விரல் நீட்டி காண்பித்து அழைக்க, “என்னவாம் குட்டி பொண்ணுக்கு அப்பா தேடுது?…” என்று கொஞ்சினான். “அம்மா காணும்?…” என கேட்க, “அம்மா எக்ஸாம். பாப்பா ஸ்கூலுக்கு போனும்ல. […]


தள்ளாடும் பூவனம் 25 2

“அத்தை கொஞ்சம் பேசாம இருங்க. நீங்களும் டென்ஷனாகி அவளையும் டென்ஷன் பன்றீங்க…” என்றான் திரவியம் சற்றே குரலை உயர்த்தி. ஏற்கனவே அவனுக்கு அத்தனை மன உளைச்சல். இதில் சீதா பேச பேச ஆராத்தியாவின் முகமும் அப்படியும் இருக்குமோ என்பதை போல பாவனையை வெளிப்படுத்த கடுப்பாகி போனான். “டைமாச்சு எல்லாரும் தூங்க போங்க…” என்றவன் சத்தத்தில் எல்லோருமே கலைந்து செல்ல சீதா கையில் பாலுடன் வந்து நின்றார். “இதை தியாவுக்கு குடுத்திருப்பா…” என்றவர், “அப்பறம் மாத்திரை…” என்றவரை கைகாட்டி […]


தள்ளாடும் பூவனம் 25 1

பூவனம் – 25             வளைகாப்பு முடிந்தும் ஆராத்தியா கோவையில் தான். அங்கேயே மருத்துவரிடம் மாதா மாதம் செக்கப் என போய்க்கொண்டிருக்க பிரசவமும் அங்கே என்றுவிட்டான் திரவியம். “ஒரே டாக்டரா இருந்தா பெட்டர் ம்மா. இங்க அங்கன்னு மாத்த வேண்டாம் பாருங்க. இங்க இருந்தா என்ன? எல்லாரும் வந்து இருங்க. டெலிவரி முடியட்டும். ஊட்டி போவோம்…” என்றுவிட்டான். மனைவியின் முடிவுகள் எல்லாம் அவன் வசமே. ஆராத்தியாவும் மறுப்பதற்கில்லை. தயாளன், அபிராமிக்கு மகன் வயிற்று பிள்ளை. தென்னரசு, சீதாவிற்கு ஒரே […]


தள்ளாடும் பூவனம் 24 2

“விடலாம், போலாம், தூங்கலாம். வேற?…” கண்களில் மின்னல் தெறிக்க அவளின் முகவடிவை விரலால் கோலமிட்டபடி அவன் கேட்க கேட்க தவித்தவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள். “சொல்லமாட்டேன் த்தான்….” என சொல்ல திரவியம் கேட்க என பொழுதுகள் நகர அத்தனையும் உயிர் சுவைத்த நொடிகள்.  பதிலளிக்க முடியாத அழகியலை அதரங்கள் இனிக்க திருடிக்கொண்டவனுக்கு இணங்கி நின்றாள் பெண்.  வார்த்தைகளால் பகிராத பிரியங்கள் வாயாடாமலே வாதமின்றி பசி தீர்த்துக்கொண்டது.  எதையும் மனம்விட்டு சொல்லிக்கொள்ளவில்லை. செயல்களால் உணர்த்திக்கொண்டனர்.  நீ எனக்கு […]


தள்ளாடும் பூவனம் 24 1

பூவனம் – 24            வரும் வழியில் மௌனம் மட்டுமே இருவரிடத்திலும். கோவை வந்ததும் படுக்க சென்றவளை பிடித்து சாப்பிட அமர வைத்தான்.  தானும் உண்டுவிட்டு வர அறைக்குள் இருந்து வேகமாய் வெளியே வந்தவள் அவனை மோதி நிற்க,  “ஹேய் என்ன இது? என்ன அவசரம் தியா?…” என அவளை நிறுத்தியவன்,  “எங்க போற?…” என்றான்.  “இப்ப வந்திடறேன் த்தான்…” என்றவள் கையில் ஜீப் சாவி இருந்தது.  “தியா…” என்றதற்கு பதிலளிக்காமல் அவனை தாண்டிக்கொண்டு சென்றவள் முகத்தில் ஏகத்திற்கும் […]


தள்ளாடும் பூவனம் 23 3

அதிலும் இந்த கொஞ்ச நேரத்தில் உயிர் எத்தனை அடங்கி துடித்து. அவன் வரும் முன் எத்தனை தவிப்பு? “தியாடா…” என அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் அவளின் அணைப்பில் தளர்ந்து இலகுவாகிவிட, “ஊருக்கு போகனும் த்தான். போவோமா?..” என்றாள் ஆராத்தியா. “என்ன?…” என திகைப்புடன் அவளை பார்க்க, “ஊருக்கு கூட்டிட்டு போங்க த்தான். ப்ளீஸ்…” என்றாள். இன்னுமே தான் கேட்டது சரியா என்னும் அதிர்ச்சி தான் அப்பட்டமாய் திரவியம் முகத்தில். “ஹேய் தியா என்ன பயந்துட்டியா? அதெல்லாம் […]


தள்ளாடும் பூவனம் 23 2

“இழுத்து புடிச்சு எல்லாரும் கட்டி வச்சுட்டாங்கன்னு தான் கொஞ்சம் கொஞ்சமா நீ சைலன்ட் ஆகிட்ட. இல்லைன்னா இப்படியா இருப்ப தியா?…” என கேட்க பதில் சொல்லவேண்டியவள் இறுக்கமானாள். “பூமி என்ன பேசற நீ? வாயை மூடு. இப்ப இதை பேசறதுக்கான நேரமா?…” இந்து அதட்ட, “நிஜம் தானே இந்துக்கா. அந்த பேச்சில இருந்து தானே எல்லாருமே இவகிட்ட இந்த மாற்றம். பேச்சை குறைச்சா சிரிப்பை குறைச்சா. இப்ப இப்படி?…” என்று பூமி இன்னும் சத்தமாய் சொல்ல திகைத்து […]


தள்ளாடும் பூவனம் 23 1

பூவனம் – 23             அன்று காலை ஆராத்தியா எழுந்து வரும் பொழுதே வீட்டில் கணவன் இல்லை. முதல்நாள் தான் அனுவின் பிறந்தநாள் முடிந்திருக்க கொண்டாட்டம் எல்லாம் ஓய்ந்து வீடு வர நள்ளிரவானது. கடந்த இரு நாட்களாக அவள் உணரும் அசௌகரியம் அன்றும் அவளை புரட்டியது. தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் மனது திரவியத்தை தேட அதற்கு மேல் இருக்க முடியாமல் குளித்து கீழே வந்தாள். அபிராமி இன்னும் பேக்டரிக்கு கிளம்பியிருக்கவில்லை. தயாளன் மட்டும் சென்றிருக்க மருமகளுக்காக காத்திருந்தார். “வாடா […]


தள்ளாடும் பூவனம் – 22 (3)

“என்ன சேரி தியா? புதுசா இருக்கே?…” என்றதும், “ஆமா த்தை. நாளைக்கு கோவிலுக்கு போறப்போ என்ன ட்ரெஸ்ன்னு அண்ணி கேட்டாங்க. அதான் காமிக்க எடுத்துட்டு வந்தேன்….” “சேரி நல்லா இருக்குடா…” என்றவரிடம் திரவியம் எடுத்து தந்தது என்று சொல்லும் முன், “ஆனா கோவிலுக்கு இது வேண்டாம். ரொம்ப மைல்டா இருக்கும். நைட் மோட்க்கு தான் இந்த மாதிரி ட்ரெஸ் சூட்டாகும். மார்னிங் வேற சேரி கட்டிக்கோ….” என்றவர், “ஹ்ம்ம், கல்யாணத்தப்போ குங்கும கலர்ல ஒரு செல்ப் பாடர்ல […]


தள்ளாடும் பூவனம் – 22 (2)

பேசியபடி அவளின் கையை எடுத்து அவன் தோளில் போட்டுக்கொண்டவன் இறுக்கமாய் அணைத்து விடுக்க அவளின் கைகள் அப்போதும் கூட அவனின் கழுத்தை சுற்றித்தான் இருந்தது. இதைவிட வேறு என்ன வேண்டும் என்ற எண்ணம் பிறக்க புன்னகையுடன் அவளை எழுப்பினான். “கிளம்பு, வேற ட்ரெஸ் மாத்திக்கோ ஸ்டோருக்கு போலாம். இங்க தனியா இருந்தா எதாச்சும் நினைச்சிட்டு இருப்ப…” என்று சொல்லி கிளப்பிக்கொண்டு வந்துவிட்டான். அந்த ஒருவார பிரிவு இருவருக்குள்ளும் இன்னுமே மற்றவர்களை பற்றிய தெளிவை கொண்டு வந்திருந்தது. இருவருக்குள்ளும் […]