Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 25 2

பல நிமிடங்களுக்கு பிறகு மூச்சு வாங்க நிமிர்ந்தவன், “இது பிரெஞ்சு கிஸ்!” என்று சொல்லி மீண்டும் அவளிடம் வரப்பார்க்க, “போதும் போடா!” என அவன் நெஞ்சோடு முகத்தை அழுத்திக்கொண்டாள் அவள். “அதுக்குள்ளயா?” அவன் குரலே மாறிப்போயிருந்தது. அவனை நிமிர்ந்துக்கூட பார்க்க முடியவில்லை அவளால். கீழிருந்து ரோஷிணி ‘கார் வந்துடுச்சு வா!’ என அழைத்தார் சத்தியநாதன். அதில் நிதானத்திற்கு வந்த இருவரும், ஒருவரை ஒருவர் பார்க்க, முத்தத்தின் மிச்சம் இன்னும் அவர்கள் முகத்தில் இருந்தது. அவளை கிறக்கத்துடன் பார்த்து, […]


திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 25 1

25 ரோஷிணி தனது அறையில் இரவு பண்ணிரண்டு மணிக்கு கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு மறுநாள் நடக்கப்போகும் கடைசி பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தாள். ஒரு மனம் படிக்கும் புத்தகத்தில் இருக்க, மற்றொரு மனம் கழுத்தில் கிடக்கும் புது தாலிக்கு சொந்தக்காரனிடம் இருந்தது. தாலிகட்டிய கையோடு, அனைத்து சடங்குகளிடம், ‘இது என்ன? அது ஏன்? அருந்ததியா? அது என்ன அனுஷ்கா படமா? யோவ், பட்டபகல்ல எப்படி நட்சத்திரம் தெரியும்? மேரேஜ் அன்னைக்கே பொய் சொல்ல சொல்றீங்க? முடியாது… எனக்கு அனுஷ்கா தெரியல!’ […]


திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 24

24 ஜேகோப் பட்டு வேஷ்டி சட்டையில் சம்மங்கி மாலையோடு மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்வதை எல்லாம் திருப்பி சொல்ல சிரமப்பட்டுக்கொண்டிருந்தான்.  அந்த மேளமும் நாதஸ்வரமும் வேறு காதை கிழிக்க, “அவங்களை மேரேஜ் முடிஞ்சதும் ப்ளே பண்ண சொல்லுங்களேன்” என்றான் சத்தியனிடம். “அடப்பாவி… வாசிக்குறதே கல்யாணத்துக்கு தான்! ஒழுங்கா மந்திரத்தை சொல்லு” என்று அதட்ட, “அவர் என்னவோ கசமுசங்குறாரு, ஒண்ணுமே கேட்கவும் மாட்டேங்குது!” பள்ளி சென்ற குழந்தை போல வந்து புகார் கடிதம் வாசிக்க, “சும்மா இர்ராஆஆ” என […]


திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 23

23 பரமேஸ்வரன் வீட்டில் அத்தனை தலைகளும் ஜோசியரின் வருகைக்காக காத்திருந்தது. திரவியன் திண்டுக்கல்லில் இருக்கும் அந்த புகழ்பெற்ற ஜோசியரை வீட்டிற்கே அழைத்து வர சென்றிருந்தான். அத்தனை கூட்டத்துக்கும் மத்தியில் ஒரு கையில் நாற்காலியும் ஒரு கையில் மடிகணினியும் என்று வந்த ஜேகோப், நடுநாயகமாய் சேரை போட்டுவிட்டு அமர, எல்லாரும் ‘என்ன இது?’ என்று தான் பார்த்தனர். “சத்தியன் அங்கிள்… இங்க வாங்க!” என்று அழைக்க, எதற்க்கென்ற யோசனையோடு எழுந்து சென்றார் அவர். “ஃபுல் நேம் சொல்லுங்க… டேட் […]


திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 22 2

“ஏன் இப்படி பண்ற ஜாக்? யார் கண்ணுலையாவது பட்டுட்டா என்னாகும்?” அவள் சீற, “ம்ம்… கல்யாணம் ஆகும்!” என்று நொடித்த ஜேகோப், “உன்னோட சில டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வேணும், உடனே!” என்றான். அவன் என்ன என்ன வேண்டும் என லிஸ்ட் போட, இவளுக்கு தலையில் பல்ப் எரிந்தது. “ஏய் எதுக்கு கேட்குற?” “அதான் புரிஞ்சுடுச்சு போலயே! சீக்கிரம் குடு” என்றான் அவன். “இதெல்லாம் என்கிட்ட வாங்கி ஒரு பிரயோஜனமும் இல்லை. சங்கவி கிட்ட கேளு!” கசப்பை மறைத்துக்கொண்டு […]


திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 22 1

22 இரவு தங்களுக்கான அறையில் ஜன்னல் வழி தெரிந்த நிலவை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தார் தேவகி. இரவு நேர குளியலை முடித்துக்கொண்டு வந்த ரிச்சர்ட், மனைவியின் கோலம் கண்டு, பின்னோடு சென்று அவரை தோளோடு அணைத்துக்கொண்டார். கணவனின் ஸ்பரிசத்தில் களைந்தவர், “எதாவது வேணுமா ரிக்கி?” என்று வினவ, ‘எஸ்’ என தலையசைத்தவர், கன்னத்தை காட்டினார். கணவனின் குறும்பை கண்டு எழுந்த வெட்கசிரிப்பை மறைத்த தேவகி, அவர் காட்டிய கன்னத்தில் வலிக்காமல் ஒருமுறை அடிக்க, “ஹே…” என அவர் கரத்தை […]


திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 21

21 மகனுடன் போராடிவிட்டு கீழே சென்ற தேவகி சிறிது நேரம் தேவியிடம் பேசிவிட்டு நேரே அன்னையின் அறைக்கு தான் சென்றார். அங்கே எப்போதும் போல வீரைய்யன் அமர்ந்து மனைவியின் பாதங்களை மென்மையாக பிடித்துவிட்டுக்கொண்டிருக்க, அந்த காட்சியில் அப்படியே பிரம்மித்து நின்றுவிட்டார் அவர். வீரைய்யன் என்றாலே ஊருக்குள் பயம் என்றால், வீட்டிற்குள் கேட்கவும் தேவையில்லை. அப்பா என என்னதான் பாசம் அதிகம் இருந்தாலும் அதைவிட துளி அதிகமாய் பயம் தான் இருந்தது. வீட்டிற்குள் அடுக்களை மட்டும் தான் பெண்களுக்கான […]


திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 20 1

20 சத்தியநாதன்-தேவியின் வீட்டு மாடியில், முன்பு ஜேகோப் தங்கியிருந்த அறையில் இப்போது தன் பெற்றோருடன் தங்கியிருந்தான் ஜேகோப். காலை களேபரம் எல்லாம் முடிந்து சில மணிநேரங்கள் ஆகியிருந்தது. நிச்சய தட்டை மாற்றிய கையோடு வீட்டை விட்டு வெளியேறியவனை ஊராட்கள் போக விடவில்லை. வெளியே தங்கிக்கொள்கிறோம் என்ற ரிச்சர்டையும் விடவில்லை. கட்டாயமாக இங்கே தான் இருக்க வேண்டும் என்று வற்ப்புறுத்தினர். ஏதோ விட்டால் ஓடிவிடுவார்கள் என்பதை போல அவர்கள் நடந்துக்கொள்வது இன்னமும் அவனுக்கு எரிச்சலை கிளப்ப, அதை தனிய […]


திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 20 2

“பேச மாட்டியே!” சலித்தவன், “இங்க பார் ரோஸ்! என்ன ப்ரோப்ளம் வந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்! நீ ஸ்ட்ராங்’கா ஓகே மட்டும் சொல்லு எனக்கு” என்று கேட்க,  அவள் தலைகுனிந்தாள். “ஐ க்நொவ் யூ லவ் மீ! அதை உன் வாயால கேட்டுட்டா நான் இன்னும் ஸ்ட்ராங்’கா எல்லார்ட்டயும் பேசுவேன்!” அவள் மௌனம் காக்க, “இங்கப்பாரு” என அவள் தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்திப்பார்த்தவன் அதிர்ந்துப்போனான்.  அவன் வந்ததில் இருந்து தன் தலைமுடியை இருபக்கமும் விரித்துப்போட்டு பாதி முகத்தை […]


திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 19

19 கார் வாசலில் வந்து நின்றதுமே ஒரு தலை வேகமாய் எழுந்தது. “ஏய் அவங்க வந்துட்டாங்கப்பா!” உடனே குரல் கொடுத்துக்கொண்டு உள்ளே ஓடியது அவ்வுருவம். காரை விட்டு இறங்கிய தேவகி, வீட்டை நிமிர்ந்துப்பார்த்தார். தான் இருந்தபோது இருந்த அமைப்பில் அல்லாது, சற்று வேறு விதமாக பொலிவூட்டப்பட்டிருந்தது. சுற்றி இருந்த வெளியிடமும் கார்ஷெட், தோட்டம், ஊஞ்சல் என மாறியிருக்க, தன் நியாபக சுவடுகளை அவ்விடத்தில் பொருத்தி பார்த்து  அது முடியாமல் மனதில் சோர்ந்துப்போனார். ரிச்சர்டுக்கு அந்த பெரிய கேட்டை […]