Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீற்றா(த)யோ வர்ணங்கள்

தீற்றா(த)யோ வர்ணங்கள் 27 2

ஷக்தி பதில் சொல்லும் போது கதவு தட்டப்பட இனிமையான சூழல் தடைபடும் உணர்வு. அவர்களை உள்ளே அனுமதித்தவன் ஷக்தியை பார்த்தான்.  சீட்டில் அமர்ந்தவள் கணினியில் பார்வையை பதித்ததோடு சரி. அவர்களை கவனிக்கவும், கண்டுகொள்ளவும் இல்லை.  “வாங்க எழில்…” என்றான் ஷேஷா. உடன் வந்த இளாவையும் பார்த்து தலையசைத்து வரவேற்க இருவரும் உள்ளே வந்தனர்.  அதுவரை அதிகாரத்துடன், இறுமாப்புடன், கோபத்துடன் அங்கே பல விதங்களில் வந்திருந்த எழில் அன்று குறுகி போய் வந்தான்.  “பவன் சொன்னார், என்ன விஷயமா  […]


தீற்றா(த)யோ வர்ணங்கள் 27 1

தீற்றா(த)யோ வர்ணங்கள் பகுதி – 27           அகத்தியனின் வழக்கு மிகவும் பரபரப்பாகி பேசப்பட அகத்தியனின் ஆதரவென ஒருவரும் வாய் திறக்கமுடியவில்லை.  நாட்டின் பொக்கிஷங்களை கடத்தி துரோகமிழைத்தற்காகவும், கோவில் நிலங்களை அபகரித்ததற்காகவும், மணிவாசகம் கொலைவழக்கு என மேலும் இன்னும் சில சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டதற்காக  அகத்தியனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவன் சார்பாக வாதாடவும் எவரும் முன்வரவில்லை. அகத்தியனுக்கு எதிராக களமிறங்கி இருந்ததோ தி கிரேட் லாயர் பாலமுரளிகிருஷ்ணா.  இளம் வயதிலேயே சிக்கலான வழக்குகளையும் அசாத்திய திறமை கொண்டு வெற்றி […]


தீற்றா(த)யோ வர்ணங்கள் 26 3

“அகத்தியன், சொல்லுங்க…” ஷேஷா. “ஷேஷா, பேத்திங்க, மக, மருமக எல்லாம் இருக்காங்க. வேணும்னா ஷக்தி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கறேன்…” என ஷக்தியின் காலை பிடிக்க போக, “என்ன இளா, உங்கப்பா சொல்லாம மறைக்கிறார். உங்களுக்கு தெரியுமே? நீங்க சொல்லுங்க…” என்றான் அவன். அதை கேட்டு இளவேந்தன் மட்டுமல்ல, மொத்த குடும்பமும் அதிர்ந்து அவனை கேள்வியாய் பார்க்க தலைகுனிந்து நின்றான் இளவேந்தன். “இளா என்னடா இது? என்ன சொல்றாங்க?…” என எழில் அவனை கேட்டான் தாயை விட்டு […]


தீற்றா(த)யோ வர்ணங்கள் 26 2

“எனக்கு அக்காவுக்கும், மணிவாசகத்துக்கும் கல்யாணம் ஆனது பிடிக்கலை. அடுத்த வாரிசுன்னு என்னை சொல்லாம அவரை வளர்த்துவிட்டது பிடிக்கலை. என்னோட உரிமை எல்லாம் போய்டுச்சுன்னு தோணுச்சு…” என்றவன், “நானும் என்னை காட்டிக்க வேண்டாம்னு அமைதியா இருந்தேன். இங்க ஜெகதா வேலைக்கு வரவுமே நான் அவ மேல ஆசைப்பட்டேன்…” என்றதும் இது வடிவழகிக்கு மட்டுமல்ல அத்தனைபேருக்கும் அதிர்ச்சி. ஜெகதாவையா? ஷக்தியின் தாயின் மேலா? அதுவரை அகத்தியன் மேல் வைத்திருந்த பிம்பத்தில் அவனின் இந்த வார்த்தையால் கீறல் கோடியது. “நான் எனக்கு […]


தீற்றா(த)யோ வர்ணங்கள் 26 1

தீற்றா(த)யோ வர்ணங்கள் வர்ணம் – 26             ஷக்தி சொல்லியதை கேட்டு அதிர்வுடன் அத்தனைபேரும் அகத்தியனை பார்க்க அவன் பயத்துடன் ஒவ்வொருவரையும் பார்த்தான். “ஏய் என்ன பேசற?…” வடிவழகி கோபமாய் ஷக்தியிடம் கேட்க, “ஷ் மூச், இங்க எனக்கு என்ன தெரியனுமோ அதை தெரிஞ்சிக்க வந்திருக்கேன். உங்க யாரோடையும் எனக்கு பேச்சில்லை. என்னை கேள்வி கேட்கிற எந்த உரிமையும் உங்களுக்கு இல்லை…” ஷக்தியின் பேச்சின் பின்னால் இருக்கும் நியாயம் உணராமல் எழில் கோபமாய் பேச வர ராஜி தடுத்தாள் […]


தீற்றா(த)யோ வர்ணங்கள் 25

தீற்றா(த)யோ வர்ணங்கள்  வர்ணம் – 25           ஷேஷாவும் ஷக்தியும் வரவும் வா என அழைக்கவும் அங்கே யாருக்கும் தோன்றவில்லை.  மாறாக இவர்களிடம் இறைஞ்ச வேண்டிய நிலையில் வைத்துவிட்டார்களே என உள்ளுக்குள் கனன்ற புகைச்சலை மறைத்துக்கொண்டு அமைதியாக இருந்தார்கள். இளவேந்தன் தான் வாசலுக்கு சென்று அழைத்து வந்தான். உள்ளே வந்ததும் ஷேஷாவை இருக்கையில் அமர சொல்ல கை நீட்டி தடுத்தவன் வடிவழகியை தான் பார்த்தான்.  மொத்த குடும்பமும் அவர்களுக்காக காத்துக்கொண்டு இருப்பது நன்றாகவே புரிந்தது.  அகத்தியன் இல்லாதிருக்க பார்வையை […]


தீற்றா(த)யோ வர்ணங்கள் 24 2

“எந்த எவிடென்ஸ்ஸும் இல்லாம நான் எந்த காரியத்திலயும் இருங்கமாட்டேன்…” “ஷேஷா…” “எஸ், எவிடென்ஸ்ன்னு நான் சொன்னது எல்லாம். அகத்தியனோட கான்டெக்ட், டீலிங் எல்லாமே…”  எது நடந்திருக்க கூடாது என நினைத்தாரோ அதுவே சத்தமின்றி நடந்திருக்கிறது என தெரிந்ததும் மூச்சில்லை முதலமைச்சரிடம்.  ஷேஷாவை சாய்த்துவிட்டு இதை ஒன்றுமில்லாமல் செய்வதென்பது இயலாத காரியம். தழைந்து தான் போகவேண்டிய நேரம் என புரிந்துகொண்டார் அவர். “லீவ் இட். எனக்கு அது தேவை இல்லாத விஷயம். ஆனா நீங்க இதையே திரும்ப பேசினா…”  […]


தீற்றா(த)யோ வர்ணங்கள் 24 1

தீற்றா(த)யோ வர்ணங்கள்  வர்ணம் – 24          இரவு நெருங்கும் வரை ஷேஷாவையும், ஷக்தியையும் அலைபேசியில் பிடிக்கமுடியவில்லை.  இளவேந்தன் ட்ரஸ்ட்க்கு தேடி வந்துவிட்டான் ‘ஷக்தி இருக்கிறாளா?’ என பார்க்கவென்று. ஷேஷாவே அனுமதித்தால் அன்றி அதற்கு வாய்ப்பில்லை என்பதை தெரிந்தும் மனதிற்குள் ஒரு அவா. நேரில் பார்த்தேனும் பேச முடியுமா என கிளம்பி வர அங்கே கிருஷ் மட்டுமே இருந்தான்.  “ஷேஷாவை பார்க்கனும்…”  “பாஸ் வீட்டுக்கு போயாச்சு. இங்க இல்லை…”  “ஷக்தி…” “மேம் கூட…” என சொல்லி கிருஷ் அவனை […]


தீற்றா(த)யோ வர்ணங்கள் 23 3

“உங்கம்மா செத்து ரொம்ப நேரமாச்சு குட்டி. நீ அழுது, அடம்பிடிச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்கப்பன் இருந்ததனால இத்தனை நாள் நீ தப்பிச்ச. இல்லன்னா என்னைக்கோ உன்னை என்கிட்டே கொண்டு வந்திருப்பேனே?…” என்றவனின் அசிங்கமான பேச்சில் குறுகி போய் இருந்தாள் ஷக்தி. தாயும் விட்டு சென்றுவிட்டாரா? தனக்கு யாருமில்லையா இங்கே? யாருமே இல்லையா? விக்கித்து போனாள். வீட்டு பெரியவரின் முன்னால் நடந்த திருமணத்தையே கொச்சைப்படுத்தி பேசியவர்கள். தன்னிடமே உன் தாய் தாலி கட்டாமல் வாழ்கிறாள் என அறியாத […]


தீற்றா(த)யோ வர்ணங்கள் 23 2

எமர்ஜென்சி வார்ட். அங்கே அகத்தியனின் தற்காலிக விசுவாசிகள் ஷக்தியை வார்த்தைகளால் கூறுபோட்டனர். “அட்லீஸ்ட் பர்ஸ்ட் எய்ட் குடுங்க. இது ஷேஷாவுக்கு தெரிஞ்சா உங்களுக்கு நல்லதில்லை…” என்று மிரட்டவும் செய்தாள். “அதுக்காக தான் நாங்களும் யோசிக்கிறோம் ரூல்ஸ் ரூல்ஸ் தான். யாரா இருந்தாலும். இல்லைன்னா எங்க பாஸ் எங்களை உண்டில்லைன்னு பண்ணிடுவார்…” “நீங்கலாம் மனுஷங்களா?…” என கொதித்தாள். “ஹலோ, பார்க்க வந்திருக்கறது ஓசி ட்ரீட்மென்ட். இதுல பேச்சு வேற?…” என இகழ்ச்சியாக பேச, “மைன்ட் யூர் வேர்ட்ஸ். யார் […]