“ஹ்ம்ம் தெரியும் ப்பா. அத்தான் சொல்லிட்டாங்க. அம்மா எதுவுமே பேசலை…” “எப்படி பேசுவா. அவளுக்கு வாய்ச்சவனான நானும் சரியில்லை. பிள்ளையும் சரியில்லை. என்ன பேசுவா? எதுவும் பேசமுடியாதபடிக்கு தான் நான் செஞ்சிட்டேனே?…” “நிஜமா சொல்லுங்கப்பா இனியாவது நீங்க அம்மாவை சந்தோஷமா பார்த்துப்பீங்களா?…” “என் மேல நம்பிக்கை இல்லையா ஓவியா?…” “தெரியலைப்பா. சென்னைல இருந்தவரைக்கும் அப்படி ஒரு ஊர் உண்டான்னு தலையில வச்சு கொண்டாடினீங்க. இப்ப ஒரு பிரச்சனைன்னு வரவும் அதையே தூக்கி எரிஞ்சு பேசறீங்க. இத்தனை வருஷம் […]
மோட்டார் பைக் சத்தம் கேட்டதும் திரும்பி பார்த்தவனுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் என்று தெரிந்தது. “வந்துட்டாங்க. போய் கூட்டிட்டு வரேன்…” என நகர, “அப்பா என்ன சொன்னாங்க? இவ்வளோ நாள் கழிச்சு பார்த்திருக்காங்க…” என அவனுடன் நடந்துகொண்டே கேட்டாள். “உங்கப்பாவுக்கு என்ன வேலை. அங்க இருந்தப்போ கிராமமா? எங்க சிட்டியை போல உண்டான்னு தூக்கி வீசினாரு. இப்ப இங்க மாதிரியா அங்கன்னு அதை குறைச்சு பேசறார்…” “ஹ்ம்ம், ஒண்ணை தூக்கி வச்சு பேசறதுக்கு இன்னொன்னை குறைக்கிறாங்க…” “அதுதானே மனுஷ […]
தூரிகை – 24 முழுதாய் பத்து நாட்கள் ஆகிவிட்டிருந்தது அவர்கள் தோப்பு வீட்டிற்கு வந்து. தினம் தினம் புதிதாய் ஒரு வாழ்க்கையை போல அங்கே இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தார்கள். வந்த ஒரு வாரத்திலேயே நாட்களிலேயே வேதாவின் உடல்நிலை தேறிவிட்டது. அனலரசுவின் கால்களில் காயம் இன்னும் ஆறாமல் இருந்தது. தினமும் டாக்டரை வரவழைத்து மருந்தை கட்டிவிட்டு அவருக்கு வைத்தியம் பார்க்க இப்போது ஓரளவு கட்டு போடாமல் காயம் ஆற ஆரம்பித்திருந்தது. உடலில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் பத்திய […]
“ஊருக்கு போக முடியுமான்னு பார்ப்போம். லாக்டவுன் போட்டுட்டா கண்டிப்பா போகமுடியாது. ட்ரைவர் யாராவது கிடைச்சா கிளம்பிருவோம்…” என சொல்ல, “ஏன் ட்ரைவர் எதுக்கு?…” என்று கேட்கவும் தான் அனலரசு விழித்தார். “என்னன்னு சொல்லுங்க. நீங்க ஓட்ட முடியாதா?…” என கேட்க, “இல்லை. எனக்கு முடியலை…” என அப்போது தான் தன் காலை காண்பித்தார். ஏற்கனவே சுகர் இருக்க காலில் காயம் ஏற்பட்டு இன்னும் ஆறாமல் இருந்தது அவருக்கு. “இதை ஏன் சொல்லவே இல்லை நீங்க?…” என பதறினார் […]
தூரிகை – 23 இப்போது அனலரசுவின் நடவடிக்கையில் பெரும் மாற்றம். வேதாவை எதற்கும் எதிர்பார்ப்பதில்லை. முடிந்தளவு தனது வேலையை தானே செய்து வேதாவின் மனதை மாற்ற முயன்றார். அவரின் காயங்களை குறைக்க தோன்றியது. முன்பை விட பேச்சுக்கள் கூட அத்தனை காட்டமாக இல்லாது தன்மையாய் மெதுவாய் பேசும்படி இருந்துகொண்டாலும் அவ்வப்போது இயல்பு தலைதூக்கத்தான் செய்கிறது. பெரிதாய் வேதாவும் அதனை சுட்டிக்காட்டுவதில்லை. அவரிடம் இந்த மாற்றமே அரிது என்பதை போல வேதா இருந்தார். ஒரு வீட்டில் தங்கி […]
அதில் இன்னும் கலங்கி போய் தன் வாழ்வு முடிந்தது என்னும் நிலைக்கே வந்துவிட்டார் அனலரசு. “அத்தை தள்ளு, கதவை நல்லா திற…” என்றவன் அவரை கையில் தூக்கிக்கொண்டான். அருகில் உள்ள மருத்துவமனையில் ஐந்து நிமிடத்தில் சேர்ப்பித்துவிட அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர் வெளியே வந்தார். “பயப்பட எதுவும் இல்லை. சரியாகிடும். மன அழுத்தம் அதிகமா இருந்திருக்கு. அதனால பிபி ரைஸ் ஆகிருக்கு. இப்ப ஓகே. இந்த ட்ரிப்ஸ் முடியவும் நீங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்…” “தேங்க் […]
தூரிகை – 22 சஞ்சய்க்கு திருமணமாகி வந்த பின்னர் தான் அவனின் இயல்பான குணம் தலைதூக்கியது. சாதாரணமாக ஸ்ரேயா ஏதேனும் கேட்டால் கூட அவளிடத்தில் அத்தனை பணிந்து பதில் சொல்லி, விரிவுரை அளித்து என்று அனலரசுவிற்கு மேலாய் அவளிடம் அடிபணிந்தான். முதலில் அது பெரிதாய் தோன்றவில்லை. ஸ்ரேயாவும் எதற்கு இது என சொல்லிவிட்டு அப்படியே விட்டுவிட சஞ்சய்யின் போக்குதான் மாறியது. ஸ்ரேயாவை தனது கட்டுப்பாட்டுக்குள்ளும் வைக்க முடியாமல், அவள் வழியில் போகவும் முடியாமல் தள்ளாடினான். ஆரம்பத்தில் […]
“இந்த சிரிச்சு மயக்கற வேலை என்கிட்டே வேண்டாம். போ போ போய் வந்தவங்களை பாரு. என்னை ஏன் சுத்தி வர?…” என்று பேசவும் பக்கென்று சிரித்துவிட்டான். “நீங்க என் மாமனாராச்சே?…” “பெரிய நாருதான். அதான் ஆளாளுக்கு இழுக்கறீங்க…” விடைத்துக்கொண்டு பேசவும் வேதா தூரத்தில் இருந்து இவர்களை பார்த்தார். “உனக்கு, உன் அத்தைகெல்லாம் கொஞ்சம் கூட மரியாதைன்னா என்னன்னே தெரியாது. பாரு அவ அங்க இருந்து பார்க்கிற பார்வையை. முறைக்கிறா…” “இப்ப என்ன அத்தை உங்களை வந்து வாங்கன்னு […]
தூரிகை – 21 ரிசப்ஷன் போல் இல்லாது ஒரு பார்ட்டி என்பதை போல ஏற்படு செய்ய சொல்லிவிட்டான் முகிலன். இளங்கோவை சேர்ந்தவர்களுக்கு அவரே அழைப்பு விடுத்துவிட்டார். முகிலன் அவனுடைய நண்பர்களுக்கு அழைக்க ஓவியாவும் தன்னுடைய தோழிகளுக்கு என வளையம் பெரிதாகிக்கொண்டே இருந்தது. இதில் கோவத்துடன் யாரையும் அழைக்க முடியாதென மறுத்தது அனலரசு மட்டுமே. கோபத்துடன் இருந்தார். இதையும் இவர்களே முடிவு செய்வார்களா என்று. அனலரசு, இளங்கோ இருவருக்கும் பொதுவான நண்பர்களை இளங்கோவே அழைத்துவிட அங்கேயும் அனலரசு […]
தூரிகை – 20 ஊருக்கு சென்ற பின்னும் வேதா அனலரசு வாழ்க்கை என்னவோ எந்த மாற்றமும் இன்றி அதே போலத்தான் சென்றது. என்ன ஒன்று அனலரசு கேட்பதற்கு பதில் ஒற்றை வார்த்தையில் தான் வரும் வேதாவிடமிருந்து. “ஏன் தெளிவா பதில் சொன்னா குறைஞ்சா போய்டுவ?…” என அனலரசு கேட்டுவிட்டால் போதும். அடுத்த இரு நாட்களுக்கு மீண்டும் பதிலிருக்காது. எதிலாவது எழுதிக்கொண்டு வந்து வைத்துவிடுவார். சமைக்க, அறைக்குள் முடங்கிக்கொள்ள இப்படியே தான் வேதாவின் வாழ்க்கை சென்றது. மறுவீடு […]