சொக்கநாதபாண்டியன் பேச்சுக்கள் எதுவும் மதுராவின் காதில் விழவில்லை. அவள் மகனையும், தாய் தந்தையையும் தேடி வந்திருந்தாள். “வா மறுக்கா மண்டபத்துக்கு போயி பாப்போம்….” என பாண்டியன் மனைவியுடன் செல்ல இப்போது சத்தம் குறைந்திருந்தது. “அங்க இல்லை. நான் இப்ப அங்க இருந்து தான் வரேன்….” என்றாள் மதுரா அவனிடம். “நீயி அங்க என்ன பண்ணிட்டிருந்த? புள்ளைக எங்க?….” “உங்க மகன் அம்மாப்பாவோட போயிருக்கான். அப்பா அவனுக்கு எதாச்சும் வாங்கி குடுத்தே தீருவேன்னு கூட்டிட்டு போயிருக்கார். எங்க வரமாட்டானோன்னு […]
இத்தனை வருடங்கள் மாமியார் மருமகள் என்று இருந்தாலும் தன்னை பிள்ளையாய் தாங்கிய தாயின் அரவணைப்பிற்கு பரிதவித்து போயிருந்தார் வடிவு. எங்கே அவருக்கும் முடியாமல் போய்விடுமோ என வைதேகி உடனே அவருக்கு ஒரு மாத்திரையை தந்து உறங்க வைத்தாள். காந்திமதியின் நடமாட்டம் இல்லாத அந்த வீடே உயிர்ப்பிழந்து போயிருந்தது. எழில்மணி வந்து பார்த்துவிட்டு சென்றவர் தினமும் அழைத்து பேசிவிடுவார். ஒருவாரம் இப்படியே கடக்க நள்ளிரவில் காந்திமதியிடம் அசைவு. ஒருவர் மாற்றி ஒருவர் யாரேனும் அவருடன் இரவு விழித்திருப்பார்கள். அன்று […]
ஜகாவின் அறைக்குள் நுழைந்த வைதேகி கட்டிலில் அமர்ந்திருந்தவனிடம் கையில் வைத்திருந்த பாலை நீட்ட, “கொஞ்சம் வெக்கப்பட்டுட்டே தந்தா என்னவாம் ராங்கி? விருட்டுன்னு வந்து ஊசி போட எந்தின்னு சொல்லுதமாரி நிக்கித?…” “ராங்கின்னா வேற எப்படி இருப்பாங்களாம்? பேருக்கு ஏத்த மாதிரி தான் நானும்….” என்று சொன்னவளை புன்னகையுடன் பார்த்தவன், “அப்ப என்ன பேரு சொன்னாலும் அந்த பேருக்கு இருப்பேன்னு சொல்லுத? அதான?…” என அவளை நெருங்கியபடி ஜகா கேட்க வைதேகி நகரவில்லை. சளைக்காமல் அவனை எதிர்கொண்டவள் பார்வையில் […]
“ரவைக்கு நல்லநேரம் எப்பன்னு எங்கிட்ட கேட்டாக மாமா. அதேம்…” என ஜகா இலகுவாக சொல்லவும் பாண்டியன் நமுட்டு சிரிப்புடன் மாமனாரை பார்த்தபடி நகர்ந்துவிட்டான் அவ்விடத்தை விட்டு. மற்ற பெண்களும் உள்ளே சென்றுவிட வடிவும், மதுராவும் வைதேகியுடன் அடக்கப்பட்ட சிரிப்புடன் செல்ல, மகேஷ்வரி முறைப்புடன் தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தார். “அவேங்கிட்ட கேக்குத கேள்வியா இது? என்னமோ மெட்ராசுல இதேம் பேசி கிழிச்ச போல. நல்லநேரந்தான. இன்னும் அரமணிநேரமிருக்கு…” என காந்திமதி முந்தானையை உதறி மீண்டும் இடுப்பில் சொருகிவிட்டு போனார். […]
தேன்மொட்டு – 35 வீடு மொத்தமும் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று காலை தான் ஜகா, வைதேகி இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடந்தேறி இருந்தது. இரவு உணவை மண்டபத்தில் முடித்துக்கொண்டு ஜகா வைதேகியுடன் இல்லம் வந்திருக்க காந்திமதி உறவுகளுடன் பேசிக்கொண்டிருந்தார். ஆனாலும் அவரின் பார்வை எல்லாம் சோமுவிடமே. சோமு யாரிடமும் பேசவில்லை. கேட்பதற்கு மட்டுமே பதில் கூறிக்கொண்டு இருந்தார். அனாவசியமான பேச்சுக்கள் எதுவுமில்லை. அழகர் சொல்லியே அழைத்து வந்திருந்தார். வாழ்க்கை மீதான பயம், ஏற்கனவே மருத்துவமனையில் இருந்துவிட்டு […]
“பெரியவேன்தேம் பொண்ண பாத்திருக்கியாம். நீயி வேற என்னமோ சொல்லுதியே? எவளையாச்சும் பாத்திருக்கியா?….” என காந்திமதி கேட்க, “கெழவிக்கு எப்படிதான் சிங்காகுதோ மதினி?….” கடைசியாக மதுராவிடமே ஜகா வர, “பாட்டி உங்க பெரிய பேரன் தான் சொல்றாரே. யாருன்னு கேட்போம்….” என மதுரா திசை திருப்ப ‘ஹப்பா’ என நெஞ்சில் கை வைத்தான் ஜகா. இதை காந்திமதி வேறு சந்தேகத்துடன் பார்த்து தலையசைக்க சுதாரிப்புடன் திரும்பிக்கொண்டான். “பொண்ணு தெரிஞ்ச புள்ளதேம். இன்னும் அவக வீட்டுக்கே பேசல. மனசுல பட்டுச்சு […]
“மது, என்ன இது?…” எழில்மணிக்கு தாளமுடியவில்லை. “இப்பவே கண்டிக்க வேண்டமா? இவ்வளோ பிடிவாதமா அழுது திரும்ப விளையாட விட்டு, விபரீதமா இல்லையா?…” என்றார். பேரனுக்கு புரிந்ததோ என்னவோ தாத்தாவை பார்க்கவே இல்லை. ஒரே ஆட்டம் மருதுவின் மேல் அமர்ந்து. “அப்பா அவன் சாப்பிடட்டும் முதல்ல….” என மதுரா சொல்ல, “ஊர்ல இருந்து வந்ததும் நேரா இங்க தான் பார்க்க வரேன். வந்ததும் எவ்வளோ பதறிட்டேன் தெரியுமா?….” “இங்காருப்பா, மருதுவும் எங்க புள்ளதேம். ஒன்னோட பயத்த தூக்கி ஒடப்புல […]
தேன்மொட்டு – 34 “ப்ளீஸ், பாடறதை நிப்பாட்டுங்க முதல்ல. அந்த டாக்குமெண்ட்ஸ்ல என்ன எழுதியிருக்கோ அதை படிங்க…” வைதேகி கறாராக சொல்ல, “படிச்சாச்சு, படிச்சாச்சு….” என்றவன் பேச்சில், “இங்க வந்திருக்கவே கூடாது. நீங்க அதை குடுங்க. நான் வேற யாரையாவது பார்த்துக்கறேன்….” என பிடுங்கிக்கொண்டாள் அந்த பத்திரத்தை. “வேற எங்க போனாலும் கிடைக்காது. பாத்தியதை எழுதிக்குடுத்து கையெழுத்து போட்ட அந்த பத்திரமே இதுல இல்லை. இத்த மட்டும் வச்சுக்கிட்டு வேற எங்க போனாலும் முதல்ல அதை […]
“நான் ஸ்டேஷனுக்கு போய்ட்டு வரேன்…” என கிளம்ப, “நாங்களும் வாரோம் மாமா….” என்றான் ஜகா. “சரி வாங்க….” என்றவர் பாண்டியனும் எதற்கு வருகிறான் என தெரியாமல் சென்றார். அங்கே நாராயணனும் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் ஏமாற்றுக்காரனுடன் நிற்க அப்போது தான் புரிந்தது அனைத்திற்கும் சூத்திரதாரி நாராயணன் என்று. “தம்பி வாங்க. நீங்க சொன்னமாதிரியே கொண்டுவந்து ஒப்படைச்சிட்டேன். இதுல என் சம்பந்தியும் இருப்பார்ன்னு நான் நினைக்கவே இல்லை தம்பி….” என்று அகிலனின் மாமனார் சொல்லவும் தான் பாண்டியனின் முயற்சி […]
“பிச்சிடுவேன். இப்பத்தான் மூணுமாசம் ஆகிருக்கு. பாட்டி உங்களை கிட்டவே விட கூடாதுன்னு சொல்லிருக்காங்க. டூ ஸ்டெப் பேக்ல போங்க…” என மிரட்ட, “நீயி என்னப்பா செய்யுத?….” என்றான் பொங்கிய சிரிப்புடன். அவனை விலக சொல்லியவள் ஒரு கையால் கழுத்தை சுற்றி தன் முகம் நோக்கி இழுத்து இன்னொரு கையால் அவன் மீசையை முறுக்கி விட்டாள். “எனக்கு எந்த ரிஸ்ட்ரிக்ஷனுமில்லை. இப்ப சும்மா ஆறு வித்தியாசம் பார்க்கறேன்….” என விலகாமல் பதில் தர, “யாருக்காம்?….” “வேற யாருக்கு? உங்களுக்கும் […]