தூவல் காலம் 34(1) ஜெய் முறைக்க ஊர்மிளா உடனே “நீங்க எனக்காகத்தான் சொல்றீங்கனு புரியுது ஜெய்..” ஊர்மிளா அவனுக்குப் புரிய வைக்க தெரியாது அவனையே பார்க்க “உங்கப்பா கிட்ட சொல்லிட்டியா?” என்றான் ஜெய். “அப்பா கிட்ட கேட்டேன், அவர் உன்னிஷ்டம் சொல்லிட்டார். ப்ளீஸ் ஜெய்” “ஊர்மி! ப்ளீஸ் நீ கெஞ்சாத! நமக்குக் கல்யாணமாகி இரண்டு நாள்தான் ஆகியிருக்கு, இப்போ போய் ஏன் டென்ஷனு தான் சொன்னேன்” என்று ஜெய் சொல்வதும் ஊர்மிளாவுக்குப் புரிந்தது. ஊர்மிளா அப்படியே […]
தூவல் காலம் 33 காஞ்சியில் இருந்து தேவிகுளம் வந்து சேர அந்தியாகிவிட்டது. நான்கு நாளில் வரவேற்புக்கு செல்வதால் ஊர்மிளாவோடு யாரும் துணைக்குப் போகவில்லை, ஊர்மிளாவிற்கு தேவிகுளம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்வும் கொடுத்திருக்கிறது. இந்த முறை அந்த உணர்வு பெருக்கம் அதிகமாகவே இருந்தது, காஞ்சியைப் பிரிந்து வந்திருக்கிறாள். இனி தேவிகுளத்தில் அவளின் மொத்த வாழ்க்கையும் என்பதை திருமணம் உணர்த்தியிருக்க, பிடித்தவனோடு திருமணம் என்ற மகிழ்ச்சியைக் காட்டிலும் அடுத்த நாளே காஞ்சியை விட்டு வந்தது அவளை மனதளவில் […]
தூவல் காலம் 32(2) இரத்னவேல் ஜெய்ச்சந்திரனை வீட்டுக்கு வர சொல்லியிருந்தார். ஜெய் காஞ்சிபுரம் சென்று இறங்கியதுமே அவருக்கு அழைத்து “தாத்தா! நான் காஞ்சிபுரம் வந்திருக்கேன், உங்களை பார்க்கணும்” என்று அனுமதி கேட்டிருந்தான். அவன் வீடு சென்ற நேரம் யாருமில்லை. பெண்கள் எல்லாரும் கோவிலுக்கு சென்றிருக்க, அண்ணனும் தம்பியும் அலுவலகத்தில் இருந்தனர். இரத்னவேல் மட்டுமே வீட்டிலிருந்தார். இவன் வாசலில் நின்று குரல் கொடுக்க, “உள்ளே வாடா” என்ற ரத்னவேலின் கம்பீரக்குரல் கேட்டது. “நல்லாயிருக்கீங்களா தாத்தா?” என்றவனை முறைத்தபடியே […]
தூவல் காலம் 32(1) “அப்பா! நான் இன்னிக்குக் காஞ்சிபுரம் கிளம்புறேன்” என்று காலையில் காஃபி குடித்துக்கொண்டிருந்த பாலச்சந்திரனிடம் ஜெயன் சொல்ல, அவரோ அதிர்ச்சியோடு மகனை பார்த்தார். “ஏண்டா? இன்னிக்குப் போறேன்னு இப்ப வந்து சொல்ற? உனக்குப் போகணும்னா உடனே போய்டுவியா? நினைச்சதும் வந்து சொல்ற?” என்று பாலச்சந்திரன் கடுப்பாக மகனை திட்டினார். “அப்பா! நான் நேத்து நடுராத்திரியில நினைச்சேன், அப்பவே வந்து சொல்லியிருந்தா பயந்திருக்க மாட்டீங்க? அதான் காலையில பொறுமையா சொல்றேன்” என்ற ஜெயனும் தனக்கான கட்டஞ்சாயாவோடு […]
தூவல் காலம் 31(3) “நீதானடி வாயைக் கழுவ சொன்ன?” என்றதும் முதலில் முறைத்த ஜமுனா பின் சிரித்துவிட்டார். மனைவியின் புன்னகையை ரசித்தபடி, “சாப்பிட ஆர்டர் பண்ணு” என்றார். “பொறந்த நாள் அன்னிக்கு ஊர்மியை விட்டு நம்ம தனியா சாப்பிடுறோம்” என்று ஜமுனா வருந்தி சொல்ல “ராஜீவன் கண்டிப்பா அவளை சாப்பிட வச்சிருப்பான்., ஊர்மியைப் பார்க்கவும் அவனுக்கு ஒரே ஷாக், என்ன இருந்தாலும் ப்ளஸிக்கு ஊர்மி மரியாதை செய்யணும் இல்ல..மனசுக்கு நிறைவா இருக்கு ஜமுனா! என்று பிரபாகரன் கூற […]
தூவல் காலம் 31(2) “ஆஹ்ன்! இதெல்லாம் செல்லாது, உண்மையை சொல்லுங்க” என்று ஊர்மிளா கேட்க “அவ என் க்ளாஸ்மேட் ஊர்மி, எனக்கு அவ பேசுறது லீடர்ஷீப் எடுத்து ஒவ்வொரு விஷயமும் செய்றது எல்லாம் பிடிச்சது. அவ கூட ப்ரண்டாகிட்டேன், அப்புறம் அந்த வருஷம் வாலெண்டைன்ஸ் டே’ல ப்ரோபோஸ் பண்ணிட்டேன். என் வாழ்க்கை முழுக்க இவளோட இருக்கணும்னு ஆசைப்பட வச்ச பொண்ணு ப்ளஸி!” என்றார் காதலில் திளைத்த குரலில். “அப்போ அந்த காலத்திலிருந்து ப்ரண்ட் ஆகிட்டு லவ் […]
தூவல் காலம் 31(1) தங்கள் மகனின் கல்லறை மீதிருந்த வெள்ளை ரோஜாக்களை கண்டு ஜமுனா அசையாது நின்றார். இருபத்து நான்கு வருடங்களாயிற்று, ஊர்மிளா வந்தபின் அவருக்கு இழந்த குழந்தை பற்றிய நினைவுகள் பெரிதாக இல்லை என்றாலும் அந்த வெற்றிடமிருந்தது. அவர் ஈன்ற முதலும் கடைசியுமான பிள்ளை! ஜமுனா கண்கள் கலங்க நிற்க ஊர்மிளாவிற்கு அதுவரை புரியாமல் இருந்தது புரிந்தது. “ராஜீவன் வச்சிருப்பான்” பிரபாகரன் சொல்ல, ஊர்மிளாவுக்கு நெஞ்சடைத்தவுணர்வு. அன்று ஊர்மிளாவின் பிறந்த நாள். பிரபாகரன் முதல் நாள் […]
தேவிகுளம் வந்த ஜெயனுக்கு வேலைகள் இருந்தன. ஊர்மிளாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி அவள் நலம் விசாரித்தவன் அதை தாண்டி எதுவும் பேசவில்லை. ரத்னவேலிடம் பேசியதையும் சொல்லவில்லை, நிச்சயம் அவள் திட்டுவாள். ரத்னவேலிடம் தன் மனதை மறைக்காது பேசிவிட்டான் ஜெயன், அவர் அவனை பேச்சை கேட்டதே போதுமானதாக இருந்தது. இவன் பேசியது கேட்டு ரத்னவேல் அமைதியாக இருக்க, தேசிகன் இவனிடம் “இங்க பாருப்பா பொண்ணு விஷயமெல்லாம் நாங்க சட்டுனு முடிவெடுக்க முடியாது, இப்போ நீ ஊருக்குக் கிளம்பு. கொஞ்ச நாள் […]
தாத்தாவிடம் பேசிய பின் இரவு உணவு வீட்டில் அமைதியாக நடந்தது. எப்போதும் எதாவது பேசுவார்கள், இன்று ஆளுக்கொரு யோசனை. ஊர்மிளா உணவை முடித்து அறைக்கு சென்று மாத்திரை போட்டாள், ஆனாலும் மனம் உறங்காதிருக்க உடலும் உறங்கவில்லை. சிறிது நேரம் அப்படியே புரண்டவள் எழுந்து மொட்டை மாடி சென்றாள். காதில் ஹியர்போன் மாட்டி, அங்கு நிழலுக்கென்று போடப்பட்டிருக்கும் கூரையில் கீழ் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். இந்த இரவின் காற்று கொஞ்சம் ரகசியமானது, ரசனையானதும் கூட! இரவு காற்று எல்லாருக்கும் […]