Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 19 3

“ஏட்டி என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு? உடம்புக்கு முடியலையா?” “ஆமா மா, என்னமோ மாதிரி இருக்கு. எது சாப்பிட்டாலும் மேல மேல வருது” “பூவு நாள் தள்ளிப் போயிருக்கா கண்ணு?” “ஆமா மா, எட்டு நாள்”, என்று கண்கள் மின்னச் சொன்னாள். அவள் கைகள் அவளுடைய அடி வயிறை தடவிப் பார்த்தது. மணிமாறனைப் போன்று ஒரு சின்ன உருவம் அவளுடைய கற்பனையில் வந்தது. தன்னவனின் உயிரை தனக்குள் சுமக்கப் போகிறோம் என்று பூரித்துப் போனாள். இதை […]


நான் மீட்டிடும் வீணையே 19 2

சிறிது நேரத்தில் மீண்டுமாய் அவனது தேவையும் தேடலும் அவளிடம் தொடர அவள் சந்தோஷமாக அவனுக்கு இசைந்தாள். மீண்டும் மீண்டும் அவளை நாடினான். இருவரும் தங்களை மறந்து உறங்க ஆரம்பிக்கும் போது விடிந்திருந்தது. காலை உணவையே மறந்து தூங்கினார்கள். பன்னிரெண்டு மணி போல எழுந்து குளித்து முடித்து உணவு உண்ணச் சென்றார்கள். அதன் பிறகு தான் அவளை வெளியே அழைத்துச் சென்றான். அடுத்து வந்த நாட்களில் வாழ்க்கை வண்ணமயமானதாக இருந்தது இருவருக்கும். ஊட்டியை சந்தோஷமாக வலம் வந்தார்கள். இரவில் […]


நான் மீட்டிடும் வீணையே 19 1

அத்தியாயம் 19  காதல் என்றுமே கண் கட்டு வித்தை தான் நம்மை சுத்தலில் விடுவதால்!!! “முதல்ல கிளம்பு. மத்தது எல்லாம் அப்புறம் பேசலாம். நீ டிரஸ் மாத்து”, என்றான் மணிமாறன். “சரி வெளிய போங்க. நான் டிரஸ் மாத்தணும்”, என்று அவள் சொல்ல “உன்னைக் கொன்னுருவேன் டி. படுத்தாதே. நான் இங்க தான் இருப்பேன். நீ என் முன்னாடி மாத்தி தான் ஆகணும்”, என்றான். “பிளீஸ்” “இனிமே நீ என்ன பிளீஸ் சொன்னாலும் வேலைக்காகாது மேடம். ஆனா […]


நான் மீட்டிடும் வீணையே 18 3

உணவு முடிந்ததும் அனைவரும் கிளம்பப் போக “சுதா மாப்பிள்ளைக் கிட்டயும் எல்லார்க் கிட்டயும் சொல்லிட்டு கிளம்பு”, என்றார் மகேஸ்வரன். “எங்க பா?” “நம்ம வீட்டுக்கு தான் டா” “நான் அங்க வரலை”, என்று அவள் சொல்ல அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள். “சுதா, ஏன் மா?”, என்று கலக்கமாக கேட்டார் மகேஸ்வரன். “நான் நம்ம வீட்டுக்கு வந்தா நீங்க உங்க மகனையும் மருமகளையும் வீட்டை விட்டு அனுப்பிருவீங்களாப்பா?”, என்று அவள் கேட்க என்ன பதில் சொல்ல என்று […]


நான் மீட்டிடும் வீணையே 18 2

மற்ற அனைவர் முகமுமே மலர்ந்தது. தங்கள் வீட்டுப் பெண்ணை கௌரவ படுத்தும் சுதாவை யாருக்கு தான் பிடிக்காது. அதற்கு மேல் போகாமல் இருப்பது சரியில்லை என்பதால் எழுந்து சென்ற பூங்கொடி சந்தனம் வைத்து அவளுக்கு வளையல் அணிவித்தாள். அணிவிக்கும் போது “அண்ணி, நம்ம வீட்டு ஆளுங்களை வளையல் போடச் சொல்லுங்க. பிளீஸ். நீங்க சொன்னா எல்லாரும் கேப்பாங்க”, என்றாள் சுதா. “அவ்வளவு தானே? சொல்லிட்டாப் போச்சு”, என்று சொன்ன பூங்கொடி அன்னை மற்றும் மற்ற அண்ணிகளிடம் சுதாவுக்கு […]


நான் மீட்டிடும் வீணையே 18 1

அத்தியாயம் 18 யார் இருந்தாலும் உன்னையே ரசிக்கிறது எந்தன் கண்கள்!!! “புரியுது பா. நீங்களே என்னை வந்து பாருங்க. நான் அங்க வர மாட்டேன். என்னால அவரை அழைச்சிட்டு அங்க வர முடியாது”, என்றாள் சுதா. “புரியுது மா. மாப்பிள்ளையை நீ நல்ல பாத்துக்கோ. அது எங்களுக்கு போதும்”, என்று சொல்லி போனை வைத்தார். அன்று இரவு அறைக்குள் வந்ததும் ஒரு ஓரமாக படுத்தாள் சுதா. கேசவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த வரதன் அப்போது தான் உள்ளே […]


நான் மீட்டிடும் வீணையே 17 2

“எங்களை மன்னிச்சிருங்க மாப்பிள்ளை. நான் ஒத்துக்குறேன். என் மூத்த பொண்ணையும் என் மகனையும் நான் சரியா வளர்க்கலை தான். ஆனா என் சின்னப் பொண்ணு அவங்களை மாதிரி இல்லை. அவ தங்கம். நான் பெத்த தகரம் ரெண்டும் இப்படி எல்லாம் நடந்திருக்கும்னு எனக்கு தெரியாது”, என்றார் மகேஸ்வரன். “செய்யுறதையும் செஞ்சிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா?”, என்று குதித்தான் மணிவாசகம். “அவங்க இறங்கி தானே பேசுறாங்க. பொறுமையா இரு டா”, என்றார் மணியம்மை. “என்னத்த மா பொறுமையா இருக்குறது? […]


நான் மீட்டிடும் வீணையே 17 1

அத்தியாயம் 17 தனிமை என்னை அழுத்திக் கொண்டிருக்கும் போது உந்தன் நினைவுகள் மட்டுமே சங்கீதமாய்!!! மகேஸ்வரன் உடனே கேசவனை அழைத்தார். அதை கேசவன் எடுத்ததும் “என்னை மன்னிச்சிருங்க பெரிய மாப்பிள்ளை. இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை”, என்று மகேஸ்வரன் கதற அந்த பெரிய மனிதர் அழுவது சங்கடமாக இருந்தது கேசவனுக்கு. “பிரச்சனையை உடனே மறக்குற அளவுக்கு சின்னது இல்லைங்க மாமா. கொஞ்ச நாள் ஆறப் போடுங்க. எதையும் பேசி முடிக்கிற நிலைமையில நாங்க இல்லை”, […]


நான் மீட்டிடும் வீணையே 16 2

அப்போது தான் பூங்கொடியின் அண்ணன்கள் காலிங் பெல்லை அழுத்தினார்கள். கதிரவன் தான் இந்நேரம் யாராக இருக்கும் என்ற குழப்பத்துடன் கதவைத் திறந்தார். அவர்களைப் பார்த்து அவருக்கு திகைப்பு தான். “உள்ள வாங்க”, என்று சொல்லி அனைவரையும் அமர வைத்தார். தேவகியும் எழுந்து வந்தார்.  “தங்கச்சியும் மாப்பிள்ளையும்,….”, என்று தயக்கமாக கேசவன் கேட்க “மேல தான் இருக்காங்க. அவங்க வரும் போது அவங்க முகமே சரி இல்லை. நீங்களும் அன்டைம்ல கிளம்பி வந்துருக்கீங்க? அங்க ஏதாவது பிரச்சனையா?”, என்று […]


நான் மீட்டிடும் வீணையே 16 1

அத்தியாயம் 16 என் தனிமையை விரட்டி வெற்றி வாகை சூடுகிறது உந்தன் நினைவுகள்!!! “நிதானமாவா? இவனைக் கொன்னா தாண்ணே என் ஆத்திரம் தீரும்”, என்று அவன் இளங்கோ சட்டையைப் பிடிக்க “டேய் என்ன நடந்ததுன்னு சொல்லு டா”, என்றான் மணிவாசகம். “இப்ப நீ அமைதியாகலைன்னா உன்னை அடிச்சே கொன்னுருவேன் வரதா”, என்று சொன்னார் மணியம்மை.  “அடி மா. என்னை அடிச்சே கொன்னுரு. உனக்கு நான் பிள்ளையாவே பிறந்துருக்க வேண்டாம் மா”, என்று கலங்கிய குரலில் சொல்ல அனைவருமே […]