அவள் திரும்பவில்லை என்றதும், “ஓய் மிமி! நீ தூங்கலைனு தெரியும்.. இந்த பக்கம் திரும்பு” என்றான். அவன் விடமாட்டான் என்றதில் திரும்பி படுத்தபடி, “என்ன மொன்ஸ்டர்?” என்றாள். “நீ அடிக்கடி இப்படி சைட் அடிக்கிறதைப் பார்த்தா, மேடம் காதலில் விழுந்திடுவீங்க போல! இல்ல அல்ரெடி விழுந்துட்டீங்களோ!” என்றபடி கண் சிமிட்டினான். அந்த நொடியில் தான் தனது மனம் செல்லும் பாதையை ஆராயத் தொடங்கினாள். சில நிமிடங்கள் அவளை யோசிக்க விட்டவன், “என்ன மேடம்! சத்தத்தை காணும்!” என்றான். […]
விநாயகம் அழைப்பை எடுத்து, “குட் மார்னிங் சார்” என்று விறைப்பாக கூறியதும், “குட் மார்னிங்.. உங்க பையன் கிட்ட விசாரிச்சு சொல்லச் சொன்னேனே! என்னாச்சு?” என்று கேட்டான். “சாரி சார்.. ரெண்டு நாளா எனக்கு நைட் டுட்டி.. பையனை பார்க்க முடியலை” “ப்ச்.. என்ன அண்ணா இப்படி பதில் சொல்றீங்க! போனில் கேட்டு இருக்கலாமே!” “இல்ல சார்.. இது பொண்ணு விஷயம்.. அதான் கொஞ்சம் சூதமா இருக்க நேரில் பேசலாம்னு நினைச்சேன்.. ஒருவேளை அந்த பையன் என் […]
நினைவு 14 திருமணம் முடிந்து மூன்று நாட்கள் மட்டுமே முடிந்து இருக்க, அம்ரிதா இன்னும் விடுமுறையில் இருக்க, அவ்யுதகண்ணன் இன்று வேலையில் சேர்கிறான். ஆதினியும் இன்று பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக் கொண்டு இருக்கிறாள். வேலை சம்பந்தமான ஒரு முக்கியமான கைபேசி அழைப்பை எடுத்து பேசுவதற்காக அவ்யுதகண்ணன் வீட்டு தாழ்வாரத்திற்கு சென்று இருக்க, இங்கே அவனது அறையில்…. அம்ரிதா, “டாலி வா.. குளிக்கலாம்” என்று மகளை அழைக்க, மகளோ கிளுக்கி சிரித்தபடி, “அம்மா நான் பிக் கேர்ள் ஆகிட்டே வரேன்.. […]
மனையாளின் வருகையில் அவள் பக்கம் திரும்பியவன், அவள் கதவை மூடியதும், “வெல்கம் மிமி” என்று கூற, “தேங்க்ஸ் ஃபார் தி வார்ம் வெல்கம் மொன்ஸ்டர்” என்றாள். இருவரும் புன்னகைத்துக் கொண்டனர். அம்ரிதா, “என்னாச்சு! தூக்கத்தில் முழிச்சு கால் வலிக்குதுனு சொன்னாளா?” என்று வினவியபடி மகளின் தலை பக்கம் அமர்ந்தாள். “இல்லல்ல.. இன்னைக்கு கொஞ்சம் அதிகமா ஆட்டம் போட்டுட்டா.. நடுராத்திரி தூக்கத்திலேயே கால் வலிக்குதுனு அனத்த வாய்ப்பு இருக்குது.. அதான் இப்பவே கொஞ்சம் பிடித்து விடுறேன்” என்றான். பின், […]
அம்ரிதா தேவகியிடம், “ஆனா உங்க கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை அத்தை” என்றாள். “எதை?” “ஆர்த்தி எடுக்கிறதை பத்தி சொல்றேன்” மென்னகையுடன், “அறிவுக்கு அது மூட நம்பிக்கைனு புரிந்தாலும் மனசுக்குள் ஏதோ ஒரு சின்ன தயக்கம்.. ரெண்டு பேருமே கஷ்டங்களை கடந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்க போறீங்க.. அதான், சின்ன சஞ்சலத்துடன் ஆரத்தி எடுக்க வேணாமேனு நினைத்தேன்.. பட் இப்ப ஓகே தான்.. எந்த தயக்கமும் இல்லாம மன நிறைவுடன் தான் ஆரத்தி எடுத்தேன்” என்றவர் கிண்டலான […]
நினைவு 13 மண்டபத்தில் இருந்து வீடு திரும்பிய மணமக்களுக்கு மீண்டும் ஆரத்தி எடுக்க மீனலோஷினியும் உறவுக்கார பெண்மணி ஒருவரும் வர, “ஒரு நிமிஷம்” என்று அவர்களை தடுத்த அவ்யுதகண்ணன், “அம்மா” என்று அழைத்தான். தோளில் உறங்கிக் கொண்டு இருந்த மகளின் உறக்கம் கலைந்து விடக் கூடாதே என்று அவன் மெதுவாக அழைத்து இருக்க, வீட்டினுள்ளே இருந்த தேவகிக்கு அவனது குரல் கேட்டிருந்த போதும், கேட்காதது போல் தான் இருந்தார். மீனலோஷினி, “என்ன அவ்யுத்?” என்று வினவ, “அம்மாவை […]
“ஓ! சூப்பர்” என்ற மலர்விழி, “ஆதினி குட்டிக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?” என்று கேட்டாள். “ரெண்டும்” “அண்ணி கேட்டீங்களா!” என்று மலர்விழி அம்ரிதாவின் தோளில் இடித்தபடி கூற, அவளோ வெகு சிரமத்துடன் சிரிப்பது போல் பாவனை செய்தாள். இந்த அன்யோன்ய பேச்சும், குழந்தை பற்றிய பேச்சும் அவளை வெகுவாக அலைகழித்தது. அவளால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. முன் அளவு இல்லை என்றாலும் கடந்த கால சம்பவத்தின் தாக்கம் இருக்க தான் செய்கிறது. அதை […]
நினைவு 12 திருமணம் முடிந்ததும் இருவரும் மூன்று முறை மாலை மாற்றி அக்னியை வலம் வந்து, அம்மி மிதித்து மெட்டி அணிவித்து, மேலே அண்ணாந்து பார்த்தபடி தெரியாத அருந்ததி நட்சத்திரத்தை தெரிவதாக கூறினர். அதன் பின் மணமக்கள் வந்தவர்களிடம் ஆசிர்வாதமும் பரிசுகளும் வாங்கிவிட்டு, பதினொரு மணி அளவில் ஆதினியை அழைத்துக் கொண்டு தேவகி, குருநாதன் மற்றும் மிக நெருகிய உறவினர்கள் சிலருடன் அவ்யுதகண்ணனின் வீட்டிற்கு சென்றனர். நல்ல நேரத்தில் அம்ரிதாவை நிறை குடத்துடன் வீட்டிற்குள் வர வைத்து, […]
அம்பிகா கோபத்துடன், “பார்த்து பேசு அவ்யுத்! அவர் உன்னோட பெரியப்பா” என்றார். அவனோ உதட்டோர நக்கல் சிரிப்புடன், “பெரிரி..யப்பாபா! ரொம்ப தான் பாசம்! அதான் அப்பா இறந்த வீட்டில், துண்டை காணும் துணியை காணும்னு சுடுகாட்டில் இருந்து சொல்லாம கொள்ளாம ஓடினார்” என்றான். “அவ்யுத்!” “சும்மா சவுண்ட் விடாதீங்க” என்றவன் அந்த விஷகிருமையைப் பார்த்து, “இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் யாரை கல்யாணம் செய்தா உங்களுக்கு என்ன? கல்யாணத்துக்கு அப்புறம் குத்துது குடையுதுனு உங்க கிட்ட […]
இன்று.. திருமணத்தை உறுதி செய்த மறுநாள் தேவகி, ஆதினி, அம்ரிதா மற்றும் குருநாதன் கடைகளுக்கு சென்று முகூர்த்த புடவை, தாலி மற்றும் பரிச நகையை வாங்கினர். விடுமுறை இல்லாததால் அவ்யுதகண்ணன் வரவில்லை. அதற்கு அடுத்த நாளே குருநாதனிற்கு இதய சிகிச்சை நடைபெற்று மூன்றாம் நாள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். முதல் நாள் மட்டும் அவ்யுதகண்ணன் விடுப்பு எடுத்து, அவரை வீட்டில் இருந்து அழைத்து சென்றதில் இருந்து முழு நேரமும் மருத்துவமனையில் அம்ரிதா கூடவே இருந்தான். அது மட்டுமில்லாமல் […]