Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிழலாய் மயங்கும் மையல்

நிழலாய் மயங்கும் மையல் 15 2

அவளின் தயக்கமும், இந்தவித முகபாவனையும், அலைப்புறுதலும் பரிதிக்கு லேசாய் விளங்குவதை போலிருந்தது.  “கிளம்பு….” கடுமையுடன் பரிதி சொல்ல,  “ப்ளீஸ், நான் சொல்லிடறேன். இல்லைன்னா என்னால சொல்லாம இருக்க முடியாது. இப்ப சொல்றது சரியான்னும் தெரியலை….”  “சொல்லவேவேண்டாம். கிளம்பும்மா…” என்றான் அவளிடம் வரவழைத்துக்கொண்ட தன்மையுடன்.  “அஞ்சலி பாவம், பெண் குழந்தை. கண்டிப்பா அவளுக்கு ஒரு பெண் துணை வேணும்…” என ஒருவழியை மனதில் இருந்ததை ஆரம்பித்துவிட்டாள். “நானும் என் அம்மாவும் இருக்கோம். எங்களுக்கு நாங்க மட்டும் போதும். புதுசா […]


நிழலாய் மயங்கும் மையல் 15 1

அத்தியாயம் – 15                    செல்வபாண்டி கைதாகியதும் அவருக்கென தனி விசாரணை அமைத்தது மதுரை நீதிமன்றம்.  முதலில் விசாரணையில் வாய் திறவாமல் மௌனத்தை கடைபிடித்தவருக்கு நாளடைவில் அதுவும் முடியாததாகி போனது.  மனைவியின் மருத்துவ சிகிச்சை முடிந்ததா இல்லையா என்று அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு அவரை கடுங்காவலில் வைத்திருந்தனர்.  வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்தது. நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் நேரம் சாட்சியாக மீராவும், பேச்சியுமே அவருக்கு எதிராக இருந்தனர்.  காணொளி ஆதாரமும் அவருக்கு எதிராக இருக்க மாட்டிக்கொண்டதில் வஞ்சம் குறையா […]


நிழலாய் மயங்கும் மையல் 14 2

“உங்களை நம்பி என் பொண்ணை வரவழைச்சு அவளுக்கு காரியத்தை பண்ண வச்சிட்டேன். அவ வராம இருந்திருந்தா எங்கையோ நல்லா இருந்திருப்பா. இப்ப அவளை காவு குடுத்த மாதிரி செஞ்சிட்டேனே? இந்த பாவம் என்னை இப்படியே கொண்டு போய்ட்டா கூட பரவாயில்லை….” என அரற்றினார் நாச்சியார்.  பேசிக்கொண்டே இருந்தவரின் கண்கள் மேலோங்க அப்படியே கீழே சாய்ந்தார் நாச்சியார்.  “அம்மா….” என்ற அலறலுடன் மீரா அவரை தூக்க முயல செல்வபாண்டி சுதாரித்து மனைவியை எழுப்பி அமர வைத்தவர் வெளியே ஓடினார்.  […]


நிழலாய் மயங்கும் மையல் 14 1

அத்தியாயம் – 14                  அன்று அஜிதா வழக்கில் தீர்ப்பு நாள். வழக்கை ஒத்திவைக்க எந்த அனுமதியும் பெறமுடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேல் நெடுஞ்செழியன் ரிமாண்டில் வைத்திருந்த குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் அனைவருமே உண்மையை ஒப்புக்கொண்டனர்.  செல்வபாண்டி, நாச்சியார், மீரா, பேச்சியம்மாள், நல்லதம்பியின் மனைவி, பிள்ளைகள் தவிர்த்து அத்தனைபேரும் குற்றவாளி கூண்டில் நின்றிருந்தனர்.  இந்த கால இடைவெளியில் உடல் நலிவடைந்திருந்தது அனைவருக்குமே. பயம் மனதெங்கும் பயம் மட்டுமே.  இப்படி மாட்டிக்கொண்டோமே என்ற பயம் அவர்களை உலுக்கி உருக்கி  இருந்தது.  தண்டனை […]


நிழலாய் மயங்கும் மையல் 13 2

பரிதி அவன் சொல்வதை கவனித்து கேட்க ஆரம்பித்தான். இதோ அன்றைக்கு அஜிதாவிற்கு என்ன நடந்தது என அறிய போகிறான்.  மனதை முயன்று திடப்படுத்திக்கொண்டான். இந்தக்கணம் இதனை கேட்க தாயும், தன் மகளும் அங்கு இல்லாததில் அவனுக்கு நிம்மதியே.  குமாரகுருவிற்கு தன் குடும்பத்தை சேர்ந்தவர்களை பார்க்க தோன்றவில்லை. இப்போதைக்கு அவனுக்கு தேவை இந்த வழக்கில் இருந்து வெளிவருவது ஒன்று தான்.  பரிதி கிளம்பி வெளிநாடு செல்லட்டும், எப்படியும் ஏதேனும் காரணத்துடன் வெளியாகிவிடலாம் என குருட்டுத்தனமாக எண்ணியிருந்தான்.  எல்லாவற்றிற்கும் மேல் […]


நிழலாய் மயங்கும் மையல் 13 1

அத்தியாயம் – 13                    மருத்துவமனையில் இருந்து அஞ்சலியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர் பரிதியும், சுந்தரவல்லியும்.  அவர்களுடன் வந்த சாருலதாவிற்கு நன்றி தெரிவித்துவிட்டு அவரை அவரின் இல்லத்தில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தனர்.  அதன் பின்னரே சுந்தரவல்லிக்கு நீதிமன்றத்தில் நடந்ததை கேட்க நேரம் அமைந்தது.  நீதிமன்றத்தில் இருந்து நேராக மருத்துவமனை வந்தவன் பெண்ணை பற்றி, அவளின் உடல்நிலையை கேட்டு அறிந்துகொண்டான்.  “அஞ்சலி சின்னப்பொண்ணு தானே மிஸ்டர்.இளம்பரிதி. இதை எல்லாம் தாங்கும் சக்தி இனி தான் உங்க பொண்ணுக்கு வரும். உடல்நிலை […]


நிழலாய் மயங்கும் மையல் 12 3

“என்ன பேச போறா இவ? அப்பா என்னப்பா?….” என தேவகி சுடலைமுத்துவை பார்க்க அவருமே பதறிப்போய் தான் இருந்தார். நெடுஞ்செழியன் முகத்தில் அடக்கப்பட்ட வெற்றிப்புன்னகை. இதை தானே அவன் எதிர்பார்த்தான். இந்தமுறை மீரா உண்மைகளை அப்படியே பேசுவாள் என்பதில் நம்பிக்கையுடன் தான் இருந்தான். இப்போது நிச்சயம் அவள் உண்மையை தவிர வேறு பேச போவதில்லை என தெள்ளத்தெளிவாகியது. “இங்க பாருங்க மீரா…” என்று கேள்வி கேட்க வந்த கார்த்திகேயனிடம், “ஸார் நீங்க என்ன கேட்க போறீங்கன்னு எனக்கு […]


நிழலாய் மயங்கும் மையல் 12 2

விஷயத்தை கேட்ட சுந்தரவல்லியின் பார்வை பரிதியை வேதனையுடன் தீண்டியது. “என் பிள்ளை இதை இத்தனை நாள் எப்படி சுமந்திட்டு இருந்தான்? எனக்கு சொல்லியிருக்கலாமே கார்த்திகேயன்? அவனுக்கு ஆறுதலா இருந்திருப்பேனே?….” வார்த்தைகள் கோர்க்க இயலாவண்ணம் அந்த பெண்மணியின் குரல் உடைந்து வந்தது. “உங்களுக்கு தெரிஞ்சா தாங்க முடியாதோன்னு தான்…” “என் பிள்ளை இதை தனியா சுமந்திருக்கானே? இந்த நாலுநாள் இடைவெளி எங்களுக்கு துக்கமில்லாமலா நகர்ந்து போச்சு? என்ன பேசறீங்க நீங்க?…” என்றவர் தொண்டையிலிருந்து சீறிவந்த கேவலை இரும்பாய் விழுங்கிக்கொண்டார். […]


நிழலாய் மயங்கும் மையல் 12 1

அத்தியாயம் – 12                  எரியும் அந்த தீக்குச்சியின் ஜூவாலை அஜிதாவின் நிழற்படத்தின் முன்னிருந்த தீபத்திற்கு வெளிச்சமூட்டியது. “அம்மாவை கும்பிட்டுக்கோ அஞ்சலி….” என மகளை தன்னருகில் நிறுத்திக்கொண்டான் இளம்பரிதி. “அஜிதா இன்னைக்கு முக்கியமான நாள். நீ எப்பவும் எங்களோடவே தான் இருக்க. இன்னைக்கும் அப்படித்தான் இருக்கனும். இருப்பன்னு தெரியும். என்னோட நம்பிக்கை பொய்யா போகாது அஜி…” என கை கூப்பி நின்றவன் வேண்டுதலில் அஞ்சலி பரிதியை நிமிர்ந்து பார்த்தாள். “டாடி அம்மா மனசுக்குள்ள வேண்டினா போதும்ன்னு தான சொல்லுவாங்க? […]


நிழலாய் மயங்கும் மையல் 11 2

அஜிதா சம்பந்தபட்டதன்றி மகன் இப்படி செய்வதறியாமல் தவிக்கும் காரணம் வேறு எதுவும் இல்லையே.  தன்னுடன் வந்த தாயிடம் தானாக பேச வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் அவரின் பார்வையில் கரைந்துகொண்டிருந்தான்.  “நான் எதுவும் கேட்கலை பரிதி. உன்னை நீ கஷ்டப்படுத்திக்காத. உனக்கு சொல்லவேண்டாமேன்னு இருந்தா தானா தெரியும் போது தெரியட்டும்…” என்றார் சுந்தரவல்லி.  காரை நிறுத்தியவன் ஸ்டியரிங்கில் முகத்தை புதைத்துவிட்டான். அவன் உடலின் அசைவில் சுந்தரவல்லியின் உள்ளம் துடித்து போனது.  “இந்த கேஸ் எதுவும் வேண்டாம் பரிதி. […]