Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – Final 3

தன்னவனின் பேச்சோ இல்லை பாவமான முகமோ, “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..?” என வாக்குவாதம் செய்யாமல் கேள்வியில் நிறுத்த அதே டூ மினிட்ஸ்ஸை சொன்னால் குதறி விடுவாள் என அறிந்து, “இதோ வந்துட்டேன் இரு..” என கூறி அறையில் இருந்து வெளியே சென்றான். ‘ஈகிள் விஷன்’  கண்காணிப்பு கேமராகளும் இதர கருவிகளும் இந்த இரண்டு ஆண்டினில் மார்கெட்டில் மெல்ல மெல்ல சூடு பிடித்து பெயரறிந்த பிராண்ட்டாக வரபெற்றது என்றால் அது  தினகரனின் உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆனது..!!! […]


நிழலை திருடும் இருள் – final 2

“ரொம்ப அதிகமா தான் அடிச்சுட்டேன்ல மாமா..” தினகரன் கூறியதில் முன் பாதியை மட்டும் பிடித்தவளாய் தயங்கி கேட்டாள். “பின்ன.. அவன் கதறுன கதறலில் ஸ்டேஷனே அதிர்ந்திடுச்சு.. உன்னை அழைச்சுட்டு போகவும் ‘ அய்யோ என் தங்கச்சி..’ ‘ அய்யோ என் தங்கச்சி..’னு புலம்பிட்டு இருந்த உன் அக்கா கூட அந்த சத்தத்தில் பயந்து கம்முன்னு ஆகிட்டானா பார்த்துக்கோயேன்..” “ஹலோ.. இந்த டிடெயில் அவ கேட்டாளா..?” “இல்லைனாலும் சொல்லுறது என் கடமை ஆச்சே…!! ஏன் நீ பயப்படல..?” “இல்லையே.. […]


நிழலை திருடும் இருள் – final 1

அத்தியாயம் – 19 “என்ன நடக்குது தீனா.. அனுவை எங்க கூட்டிட்டு போறாங்க..” பதறிய கமலினியின் கையை பற்றி அழுத்தம் கொடுத்தவன், “ஷ்ஷ்.. ரிலாக்ஸ் கமலி.. நீ ஏன் பதட்டம் ஆகுற.. சர் பேசினதை நீ கேட்கலையா..” என சொல்ல, “அதனால தான் பதட்டமா இருக்கு.. கரிகாலனை அவ பார்க்கவே கூடாதுன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்.. என்ன செய்ய போறாங்க தீனா..” என அலைப்புறுதலோடு பார்த்தாள். அந்த பொறுக்கியை  வாழ்க்கையில் இனி எப்போதும் அனன்யா சந்திக்கவே கூடாது […]


நிழலை திருடும் இருள் – 18(2)

 அதுக்கு ஏன் முகம் அப்படி போகுது மேடம்..” என்றபடி அவள் பக்கத்தில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான். பிரபு டெலிவரி கொடுக்க சென்றிருக்க ராகவியும் விடுப்பில் இருந்ததால் கடையில் அவள் மட்டுமே தான் இருந்தாள். “ப்ச்.. போங்க பா.. மனசே சரியில்ல.. இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நான் கனவுல கூட நினைச்சது இல்ல..” சுணக்கமாய் சொல்லி தலையை கவிழ்த்துக் கொண்டவளிடம், “நீ இன்னும் அதையே நினைச்சுட்டு இருந்தால் அடுத்து நடக்க வேண்டிய முக்கியமான விஷயத்தை யார் பேசுவா..” […]


நிழலை திருடும் இருள் – 18(1)

அத்தியாயம் – 18 சமூக வலைத்தளங்களில் பெண்களை பகடையாய் கொண்டு பணம் பறித்து அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார் சென்னையை சேர்ந்த கேகே என்கிற கரிகாலன் *** தொலைகாட்சி அலுவலகத்தில் முகமறியா நபர் ஒருவரால் சேர்பிக்கப்பட்ட கரிகாலனின் மடிக்கணினியில் பல திடுக்கிடும் தகவல்கள் கண்டறியப்பட்டது. இன்ஸ்டாகிராம் தளத்தில் தன்னை ஒரு மாடலாக சித்தரித்து பெண்களின் கவனத்தை கவரும் கரிகாலன் ஆசை வார்த்தைகளால் அவர்களை அடிமையாக்கி பாலியல் தொந்தரவு கொடுப்பதும் பணம் கேட்டு மிரட்டுவதும் இவரின் வழக்கமாக […]


நிழலை திருடும் இருள் – 17(2)

“என்ன அமைதியாகிட்ட…  உன் நண்பன் குட்டு வெளியாகிடுச்சுன்னு அதிர்ச்சியா இருக்கா..” “ஜெய்ந்த்.. இதெல்லாம் சத்தியமா எங்களுக்கு தெரியாது டா..  என்னால இப்பவும் நம்ப முடியல.. பொண்ணுங்க விஷயத்தில் அவன் கொஞ்சம் வீக் தான்.. ஆனால் இப்படி எல்லாம் செய்யிறவன்னு நினைச்சுக் கூட பார்க்கல…” “ஒரே வீட்டில் தான இருக்கீங்க.. அதெப்படி தெரியாம இருக்கும்.. என்ன அவன் மாட்டினதும் கழண்டுக்க  பார்க்கறீயா…?” “எனக்கும் தங்கச்சி இருக்கா டா.. இவனை மாதிரி ஒருத்தனை கூட வைச்சுட்டே சுத்தி இருக்கோமே..!! அவளையும் […]


நிழலை திருடும் இருள் – 17(1)

அத்தியாயம் – 17 கமலினி புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் காவல் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வர அதற்காக தான் காத்து இருந்தாலும் அனைவருக்கும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. கமலினி அனன்யாவை பேச சொல்ல அவள் பயப்படவும், “உனக்கு நடந்ததை நீ தான் சொல்லணும் அனு.. இதுக்கே பயந்தால் எப்படி.. இன்னும் நிறைய ஃபேஸ் பண்ண வேண்டி இருக்கே..!!” என்று சொல்ல, “நாங்க எல்லாரும் இருக்கோம்ல டா.. தைரியமா பேசு..” என சிவசுப்ரமணியமும் அவள் […]


நிழலை திருடும் இருள் – 16(2)

“சுந்தரம் இப்ப தான் நாம தைரியமா இருக்கணும்.. மனசை விட்டுடாத..” என கூறினார் சிவசுப்ரமணியம். ‘இவங்க யாரும் அடுத்து என்ன செய்யிறதுன்னு யோசிக்கிறா மாதிரி தெரியலையே.. இது சரி வராது.. லேட் ஆக ஆக பிரச்சனை தான்..’ என நினைத்தவன் தானே வந்து பேசும் முடிவுடன் மாடி ஏற, தந்தையே இப்படி உடைந்து அழுகவும் பயம் இன்னும் அதிகமாக இனி தன்னை காப்பாற்ற வழியே இல்லை என்பதாய் பேயறைந்தாற் போல் நின்றிருந்த அனன்யாவை கண்டு கமலினியும் சுதாரித்து […]


நிழலை திருடும் இருள் – 16

அத்தியாயம் – 16 கமலினி மடியினில் கவிழ்ந்து அழுதுக் கொண்டிருந்த அனன்யாவிற்கு யார் முகத்தையும் பார்க்க கூட திறனில்லை. அவள் சொன்ன விஷயங்களை கேட்டு மொத்த வீடும் அலண்டு தான் போயிருந்தது. சுந்தரமூர்த்தி அப்படியே இடிந்து அமர்ந்துவிட அழுகையும் ஆவேசமுமாய் அனன்யாவை அடிப்பின்னி எடுத்துவிட்டார் அம்பிகா. ‘ ஏண்டி.. உன் புத்தி இப்படி போச்சு.. உன்னை நான் நல்லா தானே வளர்த்தேன்.. இப்படி வாழ்க்கையையே கெடுத்துட்டு வந்து நிற்கறீயே பாவி..  பெத்த வயிறு எரியுது டி.. ஐயோ..’ […]


நிழலை திருடும் இருள் – 15(2)

“யாராவது கொடுத்தால் நான் ஏன் டி உன்னை பிடிச்சு தொங்க போறேன்..!! எப்பவும் பசையுள்ள பார்ட்டி தான் சிக்கும்..!! என் கிரகம் உன்னை மாதிரி ஒரு ** போய் விழுந்துட்டேன்..” என சொல்லி கெட்ட வார்த்தையில் முடிக்க இது போன்ற பேச்சுகள் எல்லாம் அறிந்தே இராத சிறு பெண்ணிற்கு உடல் நடுங்கியது. அந்த நொடி அத்தனை அசிங்கமாக உணர்ந்தாள். அத்தோடு பேச்சின் குழறல் அவன் அதீத போதையில் இருக்கிறான் என்பதை பறைச்சாற்ற முற்றிலும் அருவெறுத்து போனவளுக்கு தன் […]