Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீங்காமல் தானே நிழல் போல நானே

நீங்காமல் தானே… நிழல் போல நானே..! – 20 (நிறைவுப் பகுதி)

நிழல் 20: “எப்படி இருக்க செல்வி..?” என்றார் லட்சுமி. “நல்லா இருக்கேன் அத்தை..! நீங்க எப்படி இருக்கீங்க..?” என்றாள். “பெத்த பையனும் இல்லை.. வீட்டுக்கு வந்த மருமகளும் இல்லை..! எப்படி இருப்பேன்னு நினைக்கிற..?” என்றார் லட்சுமி. “அத்தை..!” என்றாள் அதிர்ந்து. “உனக்கு எல்லார் மேலயும் கோபம் இருக்கும்ன்னு தெரியும். ஆனா, நான் என்ன பண்ணேன் செல்வி..?” என்று நெடுநாட்களாக மனதில் அறுத்துக் கொண்டிருந்த கேள்வியை கேட்டு விட்டார் அவர். “மன்னிச்சுடுங்க அத்தை..! எனக்கு அப்ப என்ன பண்றதுன்னு […]


நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 19

நிழல் 19: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.. அன்புச்செழியனுக்கும், தேனிசைச்செல்விக்கும் அன்று திருமணம். ஒரு வழியாக திருமணத்திற்கு சம்மதம் சொன்ன இசையின் வேண்டுகோள் ஒன்று மட்டுமே, அது மீனாட்சி அம்மன் கோவிலில் தான் திருமணம் நடக்க வேண்டும் என்பது. கதிரவனுடன் அவள் கடைசியாக சென்ற கோவில். ஏனோ அவனே அங்கிருந்து அவளை ஆசிர்வதிப்பதைப் போல் அவளுக்குள் ஒரு எண்ணம். அவர்களின் திருமணத்தில் அகரன் தான், முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தான். அந்த குட்டியான வேஷ்ட்டி சட்டையில் […]


நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 18

நிழல் 18: “நீங்க என்ன சொல்ல வரீங்க..?” என்றாள் இசை கொஞ்சம் கோபமாக. “என்ன சொல்ல வரோம்ன்னு உனக்குப் புரியுதா புரியலையா செல்வி..?” என்றார் மங்கை கோபமாக. “மங்கை.. நீ கொஞ்சம் அமைதியா இரு. நான் பேசிக்கிறேன்..” என்றார் ராஜாங்கம். “இங்க பாருமா செல்வி..! சம்பந்தி வீட்ல உன்னை அவங்க பையன் அன்புக்கு கேட்குறாங்க. நீ என்ன சொல்ற..?” என்றார் ராஜாங்கம் தெளிவாய். “என்ன உளறிகிட்டு இருக்கீங்க..? நான் எப்படி..? உங்களுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா..? […]


நீங்காமல் தானே..நிழல் போல நானே..! – 17

நிழல் 17: அவர்கள் அனைவரும் பீச்சிற்கு சென்ற பிறகு, யோசனையிலேயே இருந்த பல்லவன், “அப்பறம் சம்பந்தி..ஊர்ல விவசாயம் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு…” என்று பேச்சை ஆரம்பித்தார். “எங்க சம்பந்தி..?பெருசா லாபம் ஒண்ணுமில்லை. பாதி நிலத்தை குத்தகைக்கு விட்டாச்சு. லாபம் இல்லைன்னாலும் அதை விட முடியாது. அப்படியே போகுது..நமக்குப் பிரச்சனையில்லை. அதை மட்டுமே நம்பியிருக்கவங்களுக்கு ரொம்ப சிரமம் தான் ” என்றார் ராஜாங்கம். “அதுக்குத்தான் மாதவனை வேலையை விட்டுட்டு வர சொன்னோம். எங்க? அவன் கேட்குற மாதிரி […]


நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 16

நிழல் 16: செல்வி வாங்கிய பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருக்க, செல்வி இப்போதெல்லாம் யாரிடமும் பேசுவதில்லை. அவளுக்குள்ளேயே இறுகிப் போயிருந்தாள். கதிரவன் இறந்ததில் இருந்து, மாதவன் கொஞ்சம் அனுசரனையாக நடந்து கொண்டான்.என்னதான் பிடிக்காமல் இருந்தாலும், ஒரே தந்தையின் ரத்தம் என்பதை செல்வியின் நிலை கண்டு, தன்னுடைய மனம் துடித்த போது, உணர்ந்து கொண்டான் மாதவன். அமுதாவின் விஷயத்தில் கொஞ்சம் மாறியிருந்தவன், கதிரவனின் இறப்பில் முற்றிலும் மாறிப் போனான். ஆனால் அதை உடனடியா வெளிப் படுத்தத்தான் அவனுக்குத் தெரியவில்லை. நாளாக […]


நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 15

நிழல் 15: கதிரவன் மறைந்து  இருள் சூழ்ந்திருந்த வானம் போல், செல்வியின் கதிரவன் இன்றி அவளுடைய வாழ்வும் இருண்டு தான் போயிருந்தது. ஏனோ அந்த வானத்தின் இருள் அவளுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது போல. செல்வியின் கதிரவனாக அவன் வாழ்ந்தது வெறும் மூன்று மாதங்கள் தான் என்றாலும், முப்பது வருடங்களுக்குத் தேவையான நினைவுகளை கொடுத்து சென்றிருந்தான். எத்தனை ஆசையாக செல்வியை மனம் முடித்தானோ, எத்தனை ஆசையாக அவளுடன் வாழ்ந்தானோ, அதே வேகத்தில் அவளை விட்டும் சென்று விட்டான். […]


நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 14

நிழல் 14: மறுநாள் அகரனுக்கு காய்ச்சல் விட்டிருந்தது. இசைக்கும் கொஞ்சம் நன்றாக இருந்தது. அதோடு அவள் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருக்க, அவளே எதிர்பாராத வகையில் வீட்டிற்கு வந்தான் அன்புச்செழியன். அவனை திடீரென்று எதிர்பார்க்காத இசை, “வாங்க அன்பு சார்..!” என்றாள். “அகரனுக்கு இப்போ எப்படி இருக்கு..?” என்றான். “அவனுக்கு இப்போ நல்லா இருக்கு. இருந்தாலும் வீட்லயே இருக்கட்டும்ன்னு ஸ்கூல் அனுப்பலை..” என்றாள். “நீங்க மட்டும் ஆபீஸ் கிளம்புற மாதிரி தெரியுதே..?” என்றான். அவனுடைய பேச்சில் முன்பு இருந்த […]


நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 13

நிழல் 13: அன்பின் முகத்தில் இருந்த கோபத்தில், காதம்பரியே கொஞ்சம் பயந்து தான் போனார். “யாரை வீட்டை காலி பண்ண சொல்லணும்..?” என்றான் எதுவும் தெரியாதவன் போல். “எல்லாம் அந்த இசை…இல்லையில்லை தேனிசைச் செல்வியை தான்..” என்றாள் சங்கீதா. “அதனால உனக்கு என்ன கிடைக்கப் போகுது சங்கீதா..? கொஞ்சமாவது மனுஷங்களை அனுசரிச்சு வாழப் பழகு..” என்றான் அன்பு, இழுத்துப்பிடித்த பொறுமையுடன். “அதை நீ எனக்கு சொல்றது தாண்ணா வேடிக்கையா இருக்கு. நான் எப்படி இருக்கேன்னு எனக்குத் தெரிஞ்சா […]


நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 12

நிழல் 12: மாதவன் மீண்டும் பத்து நாட்கள் விடுமுறை எடுத்திருந்தான். அவனுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் சில இருந்தது. அவனுடைய இந்த மாற்றத்தை இன்னமும் சாந்தாவல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கு இப்பொதும் மங்கையின் குடும்பத்தை ஆவதில்லை. மாதவனின் மாற்றத்திற்கு பின்னால் ஒரு கதை இருந்தது. அந்த ஊரில் அன்றைய இரவு, அன்பிற்கு ஒரு புது வித அனுபவம் தான். சங்கீதா கல்யாணத்தின் போது கூட, அன்பு அங்கே தங்கவில்லை. திருமணம் மதுரையில் நடந்ததால், எல்லாம் மண்டபத்திலேயே […]


நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 11

நிழல் 11: நீண்ட நெடிய நான்கு வருடங்களுக்குப் பிறகு, சொந்த ஊரில்,சொந்த வீட்டின் முன் நிற்கிறாள் இசை. அவளின் உணர்வுகளை ரோகிணியால் உணர்ந்து கொள்ள முடிந்தது. பழைய நியாபகங்கள் இசையின் மனதில் அணி வகுக்க, மறக்கவே முடியாத அந்த நாளும் அவளுக்கு நினைவில் வந்து போனது. “வீடு ரொம்ப அழகாயிருக்கு இசை..” என்றாள் ரோகிணி. அதைக் கேட்ட இசையின் முகத்தில் ஒரு வெற்றுச் சிரிப்பு மட்டுமே. அவர்கள் அனைவரும் உள்ளே சென்ற பிறகும் கூட, இசைக்கு தயக்கமாக […]