Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ கண்மணி.. எனக்குத் தான்

நீ கண்மணி.. எனக்குத் தான் 18

பகுதி 18  கவிதை நேரம் ..     அன்று அவர்களுடன் படிக்கும் மாணவி திவிஷாவுக்கு திருமணம். பிரபு, ராஜ், கிருஷ் என்று மூவருக்கும் ஒரே மாதிரியான குர்த்தியை எடுத்து தந்து இருந்தாள் திவிஷா பரிசாக.      அவர்களின் நெருக்கமான தோழி என்பதால் மூவரும் கல்யாணத்தில் வரவேற்பில் ஆடலாம் என்றும் திட்டமிட்டு இருந்தனர். கிருஷின் காதலி என்று கவிதாவையும் திருமணத்துக்கு அழைத்து இருந்தாள்.   “கவி நீயும் மாலாவும் கண்டிப்பா திருமணத்துக்கு வரணும்.”.. என்று திவிஷா […]


நீ கண்மணி.. எனக்குத் தான் 17

பகுதி 17     தன் மனதில் ஓடிய சந்தேகத்தைச் சரியாக யூகித்து விட்டானே.. என்று எண்ணிய ஜானு..           “பயமா.. அது எல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துருச்சு. அதான் எங்க அம்மாவைப் பார்க்க கிளம்பிட்டேன். உங்களைப் பார்த்து எல்லாம் ஒன்னும் பயந்து ஓடலை. “ என்றாள் மிடுக்காக.     “சரி.. நம்பிட்டேன். “.. என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் காரை ஓட்டினான். […]


நீ கண்மணி.. எனக்குத் தான் 16

பகுதி 16       ஜானுவுக்கோ அப்படி ஒரு பூரிப்பு. “அப்பா!!.. ஒருவழியா அந்த அரை மென்ட்டல் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகியாச்சு. என்ன ஒரு வில்லத்தனம்!!. எங்க அப்பாவைப் பழிவாங்க எனக்கு சோறு போடாம கொல்லப் பார்த்துட்டானே!!.     நான் எல்லாம் சோறு தான் முக்கியம்னு வாழுகிற ஆளு. என் கிட்டேயே!!”.. என்று அவள் உல்லாசமாகச் செல்ல வண்டி திடீர் என்று வேகம் குறைந்து திணறத் துவங்கியது.     அதிர்ந்து போனாள் […]


நீ கண்மணி.. எனக்குத் தான் 15

பகுதி 15         “என்ன ஜானு.. உனக்கு மேல் மாடி என்ன காலியா?. நாம இருக்கிறது நடுக் காட்டுல. இங்க ஸ்விக்கி வருமான்னு ஸொமட்டோ வருமான்னு கேட்கிற?”.. என்றான் நக்கலாக.    “நடுக் காடா?.. அப்ப நாம என்ன கத்தினாலும் யாருமே உதவ வர மாட்டாங்களா!! கடவுளே என்னை எப்படியாவது கனடா கொண்டு போய் சேர்த்திரு”.. என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.       “ஏன் சார் இப்படி ஆள் இல்லாத […]


நீ கண்மணி.. எனக்குத் தான் 14

பகுதி 14 வெளியே வந்து நின்ற மாலாவுக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை. வேறு வழி இல்லாமல் அந்த காரிடோரில் சற்று தள்ளி நின்று கொண்டு இருந்தாள். “என்ன மாலா.. உன்னையும் வெளியே தள்ளிட்டாங்களா..? என்று அவள் அருகில் வந்து இருந்த ராஜ் கேட்க.. ராஜையும் பிரபுவையும் பார்த்து மென் புன்னகை பூத்தவள்.. “சிங்கம் சிங்கிளா வந்து இருக்கும்னு நான் நினைச்சேன். ரெண்டு பாடி கார்ட்ஸ் கூட தான் வந்து இருக்கா!!”.. என்று அவள் நக்கலாகக் கேட்க.. […]


நீ கண்மணி.. எனக்குத் தான் 13

பகுதி 13    மணி அப்போது தான் ஐந்தை தொடப் போக, கல்லூரி முழுக்க இன்னமும் இருளிலே தான் மூழ்கி இருந்தது. கிருஷ்ணா சொன்னது போலவே கவிதாவை அவர்கள் ஹாஸ்டல் வரை விட வந்து இருந்தான்.   அவர்கள் வார்டனும் பேராசிரியருமான வனிதா அவர்களைப் பார்த்தவுடன்.. “ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்ணா!!”. என்று சொன்னவர் அடுத்த நிமிடமே கவிதாவிடம்.. “உனக்கு எல்லாம் அறிவு என்பதே இல்லையா?.. இப்படியா ஊரு விட்டு ஊரு போய் இருக்க இடத்தில தனியா போய் […]நீ கண்மணி.. எனக்குத் தான் 11

பகுதி 11    மறுநாள் காலை ஜானுவின் காயத்தைப் பார்க்க வந்த மருத்துவர். அவள் கட்டைப் பிரித்துப் பார்த்து விட்டு.. புண் நல்லா ஆறிடுச்சு. ஷீ இஸ் ஒகே. என்று ஆங்கிலத்தில் தொடங்கி டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் என்று கன்னடத்தில் முடித்தார் நர்சிடம்.    ஜானுவோ முந்திக் கொண்டு.. “ நோ டாக்டர் ஐ ஆம் நாட் ஒகே. எனக்கு தலை சுத்துது. வாந்தி வருது!!. மயக்கம் வருது”.. என்று தன் பெர்ஃபார்மன்ஸைத்i தொடங்கி இருந்தாள் அவள்.   […]


நீ கண்மணி.. எனக்குத் தான் 10

பகுதி 10     அந்த பயணத்திற்கு யார் உற்சாகமாக தயாரானார்களோ இல்லையோ.. ராஜ் தான் கொண்டாட்டமாக தயாராகி இருந்தான். மூன்று நாள் பயணத்திற்கு ஏற்ற உடைகளை அடுக்கி முடித்து இருந்தான்.           “டேய் எருமை நாம ஒன்னும் ஹாலிடே டிரிப் போகல. இது நம்ம புராஜக்ட் விசிட். அதுக்குத் தேவையான நோட்டு புத்தகத்தை மட்டும் எடுத்து வை”.. என்று பிரபு சொல்ல.      “அட போடா.. இது உனக்கு […]


நீ கண்மணி.. எனக்குத் தான் 9

பகுதி 9      அந்த இரவு அவளை நடுநடுங்கச் செய்தது. ஃபோனில் வேறு சார்ஜ் இல்லை. கிருஷ்ணா வந்து விட்டான் என்று அத்தனை நிம்மதி கொண்டவளுக்கு இப்போது அவன் அவளை விட்டுச் சென்று விட்டான் என்ற உண்மையை ஜீரணிக்கவே முடியவில்லை.    அவள் கிருஷ்ணாவா அப்படிச் செய்தது என்று இன்னமும் உண்மையை ஒத்துக் கொள்ள அவள் மனம் தயாராக இல்லை. ஆனால் அவளை விரட்டி வந்தவர்கள் வேகமா வாடா என்று அவளை நெருங்க முயற்சிக்க..   […]