Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நூதன கீர்த்தனங்கள்

நூதன கீர்த்தனங்கள் – 23 (3)

“இசை இவனை பிடி. இந்த ட்ரெஸ் மாத்திரு…” என பேசிக்கொண்டிருந்தான் கீர்த்தனன். ஹாலில் நடுவில் தொட்டில் கட்டப்பட்டு குழந்தை அதில் படுத்திருக்க ஈரம் செய்திருந்தது. “இப்பத்தான் புடவையை மாத்திட்டு வர போனேன்?…” என்று வந்தவள் கீர்த்தனனிடம் குழந்தையை வாங்கிக்கொண்டாள். அடுத்த நான்கு நாட்களும் அங்கே அக்கம்பக்கத்தினர், சொந்தங்கள் என்று குழந்தையையும் இசையையும் வந்து பார்த்துவிட்டு சென்றனர். முன்பு அவளிடம் முகம் காட்டாமல் தூற்றியவர்கள் கூட இப்போது வந்து வாயெல்லாம் பல்லாக உறவாடிவிட்டு செல்ல இசை அத்தனையும் அமைதியுடன் […]


நூதன கீர்த்தனங்கள் – 23 (2)

தனக்கும் மனதிருக்கிறது, அதிலும் ஆசைகள் அமிழ்ந்திருகிறது என்று அவளுக்கு அவன் உணர்த்த, அவனின் மெனக்கெடல்களுக்கு அவள் உயிர் கொடுத்தாள். இத்தகைய நூதனங்களை கொண்டிருக்கும் தாம்பத்திய வாழ்க்கையை உணர்ந்து, உருகி, உறைந்து கடத்திக்கொண்டிருந்தனர். அன்று அதிகாலை அறைகதவு தட்டப்பட கீர்த்தனன் தான் உறக்கம் களைந்து முதலில் எழுந்தான். இசை உறங்கிக்கொண்டிருக்க கதவை திறந்ததும் தனுக்குட்டி அவனிடம் அழுகையுடன் தாவியது. “என்னடாம்மா தனும்மா?…” என்றவன் தாயை பார்க்க அவரின் விழியும் கலங்கி இருந்தது. “என்னம்மா? என்னாச்சு? பாப்பாவுக்கு உடம்புக்கு எதுவும் […]


நூதன கீர்த்தனங்கள் – 23 (1)

இசை – 23            வந்ததிலிருந்து சுந்தரி அடுக்களையில் எதையோ உருட்டிக்கொண்டு இருக்க கீர்த்தனன் என்னெவன்று கேட்டான் இசையிடம். “எனக்கென்ன தெரியும்? நான் பார்த்துக்கறேன். நீ போய் இந்த பூண்டை உரிச்சு வைன்னு சொல்லிட்டாங்க அத்தை…” என்றாள் சம்மணமிட்டு பூண்டை ஒரு தட்டில் வைத்து உரித்தபடி. அவளுக்கருகே கீழே பாயில் அமர்ந்து விளையடிக்கொண்டிருந்தது தனுக்குட்டி. ஒருமணி நேரத்திற்கு முன்பு தான் ஊரிலிருந்து வந்திருந்தனர் சுந்தரியும், மாணிக்கமும். அவர்கள் வரவும் பதினைந்து நாட்கள் பிரிந்திருந்ததில் குழந்தை அவர்களை விட்டு […]


நூதன கீர்த்தனங்கள் – 22 (2)

பாத்திரம் காய்ச்சிய இரும்பை போல சினந்து தெரிய உள்ளே எல்லாம் பால் வற்றி கருகி இருந்தது. அதனை எடுக்கவும் முடியாது. அடுப்பை அணைத்து சிலிண்டரையும் மூடியவள் பதட்டம் இன்னும் குறையவில்லை. “என்னாச்சு இசை…” என்று வந்துவிட்டான் கீர்த்தனன். இருமிக்கொண்டிருந்தவளை அணைத்து பிடித்தவன் அறையையும், அடுப்பையும் பார்த்தான். “ஸ்டவ் ஆஃப் பண்ணலையா?…” என கேட்க, “மறந்துட்டேன் போல?…” என்று அவள் நடுக்கத்துடன் சொன்னாள். எத்தனை அஜாக்கிரதையாக இருந்துவிட்டோம் என்று. கீர்த்தனனுக்கு தன் மீது தன் வருத்தம். அடுப்பில் வேலையில் […]


நூதன கீர்த்தனங்கள் – 22 (1)

இசை – 22             பதினொன்றரை மணி போல வீடு வந்து சேர்ந்துவிட்டனர் கீர்த்தனனும், இசையும் குழந்தையுடன். “உள்ள லைட் போடவும் தூக்கிட்டு வா. கார்லயே இரு அதுவரைக்கும்…” என்று கீர்த்தனன் முதலில் கதவை திறந்து விளக்குகளை போடவும் இசை இறங்கி வந்தாள். “தனுவை குடு. நீ உள்ள போய் பெட் ஸ்ப்ரெட் மாத்திடு…” என்று குழந்தையை வாங்கி கொண்டான். அறையை லேசாய் கூட்டி சுத்தம் செய்துவிட்டு படுக்கை விரிப்புகளை மாற்றியவள் வெளியே வர கீர்த்தனன் சுந்தரியிடம் […]


நூதன கீர்த்தனங்கள் – 21 (2)

அவனின் மாற்றங்கள் அவள் அறிந்துகொண்டே தான் இருந்தாள். ஆனால் அவனே சொல்லட்டும் என்று இருக்க இப்போது இந்த கேள்வியில் தடுமாற்றமாய் அவனை எதிர்கொள்ள, “வாயாடி கேட்கறேனில்ல? பதில் சொல்லு…” என்றான் சற்று அதட்டலுடன். “என்ன ஓகே வா? அதான் சொல்றாங்களே? ஆடி மாசம்ன்னு…” என்றதும் பின்னால் சாய்ந்தவன் தலையை கோதியபடி அவளை பார்த்தான். வெளியே கதவும் திறந்திருக்க எந்த நேரமும் சுந்தரி வரலாம் என்றிருக்க அவனால் நெருங்கியும் அமர முடியவில்லை. “என்னடி கேட்கறேன், கல்லு மாதிரி உட்கார்ந்திருக்க?…” […]


நூதன கீர்த்தனங்கள் – 21 (1)

இசை – 21           காலை எழுந்ததுமே வழக்கம் போல இசை கீழே சென்றுவிட கீர்த்தனனின் மனது தான் அலைபாய்ந்தது. அன்று நிச்சயம் கிளம்பவேண்டும். இங்கே கூட இரண்டு நாள் இருக்கலாம் என்றால் எதுவும் முடியாது. நேரமாக ஆக தவிப்புகள் கூடியது. இப்படி ஒரு உணர்வு அத்தனை புதிதாய் இருக்க இசையை இங்கே விட்டுவிட்டு எப்படி செல்வது என்று குழப்பத்துடன் கீழே வந்தான். “சாப்பாடு எடுத்து வைக்கவா கீர்த்தி?…” என சுந்தரி கேட்க, “இசை எங்க?…” என்றான் […]


நூதன கீர்த்தனங்கள் – 20 (2)

“நாம சீக்கிரமே வளர்ந்துட்டோம். பெரியவங்க இடத்துல நாம இருக்கும் போது நம்மை பார்த்து நம்ம பிள்ளைங்க வளருவாங்க. அப்போ அவங்களை சரியான பாதையில வழி நடத்தினா போதும். புதுசா கத்துக்குடுக்கறதை விட அவங்களா தெரிஞ்சுட்டு கேட்கிறதுக்கான கரெக்ட் பதில் சொன்னா போதும்…” இசை கீர்த்தனனிடம் பேசிக்கொண்டே மாடியிலிருந்து இறங்கி கீழே கூடத்திற்குள் வர வீட்டில் இருந்தவர்கள் யாரையும் முதலில் கவனிக்கவில்லை. கீர்த்தனன் தோளில் சாய்ந்திருந்த குழந்தை அவளை நோக்கி கை நீட்டி சிரித்தபடி இருக்க அதனை கொஞ்சிக்கொண்டே […]


நூதன கீர்த்தனங்கள் – 20 (1)

இசை – 20          அவளாக பேசுவாள் கேட்பாள் என்று பார்க்க இசையிடம் கொஞ்சமும் அசைவில்லை. “இசை, என்ன சைலன்டாகிட்ட?…” என்று கீர்த்தனனே கேட்க, “அவங்க பாவம்ல. நான் கூட ரொம்ப தப்பா நினைச்சிருக்கேன். யாரையும் மதிக்காம அவ்வளவு மண்டக்கனமா அப்படின்னு. ஆனா அவங்க என்ன பண்ணுவாங்க?…” என்றாள். “நிச்சயமா ரொம்ப கஷ்டபட்டிருப்பாங்க அவங்க. ஏன் எனக்கும் தான் எங்க வீட்டுல கட்டுப்பாடு வச்சாங்க. பேச கூடாது அப்படின்னு. ஆனா என்னால பேசாம இருக்க முடிஞ்சதா? அதுவே […]


நூதன கீர்த்தனங்கள் – 19 (2)

“ம்மா என்ன இது அடிக்கடி அங்க போறா. வளைகாப்பு முடிஞ்சு போகனும் தானே?…” என தாயிடமும் கேட்பவன் பைரவியிடம் அந்த உரிமையை கூட காட்டவில்லை. “மாசமாருக்கற பொண்ணு. உடம்புல சர்க்கரை சத்துவேற அதிகமா இருக்குன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அவங்கம்மா வச்சு பார்க்கனும்னு நினைக்காங்க. விடுப்பா. குழந்தை பிறக்கவும் இங்க நம்மளோடவே தான் இருக்க போறா. புள்ளத்தாச்சி பொண்ணு. அவ ஆசையை கெடுப்பானேன்?…” மகனை தேற்ற அவன் அதற்கு மேல் பேசவில்லை. அவ்வப்போது அவனாகவே அழைத்து விசாரித்துக்கொள்வான். அவளை […]