Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள்

நேயத்தின் நியதிகள் – 18 (2)

அன்றைய தினம் பொங்கல் கொண்டாட்டத்திற்காக கல்லூரி வளாகமே விழாக் கோலம் பூண்டிருந்தது.  மாணவ, மாணவிகள் பட்டுவேட்டி சட்டை, பட்டுச் சேலை என பாரம்பரிய உடையில் அழகாக வலம் வந்தார்கள்.  அதற்காகவே ஒதுக்கியிருந்த வெட்டவெளி மைதானத்தில், அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து, அவர்களுக்குள் பகிர்ந்து உண்டார்கள்.  “புகழ் சார், இந்தாங்க கரும்பு” “புகழ் சார், நீங்க பொங்கல் சாப்பிடலையா? இந்தாங்க சார்” என்று புகழேந்திக்கு கவனிப்பு பலமாக இருக்க, “ஏன் மச்சான், உன் பக்கத்தில தானே நானும் […]


நேயத்தின் நியதிகள் – 18 (1)

மார்கழி மாதப் பனியின் சில்லிப்பு அனுமதியின்றி அத்துமீறி அறைக்குள் நுழைந்தது. திரைச்சீலைகள் மூடியிருந்தாலும் திறந்திருந்த ஜன்னல் வழியே தென்றல் அறைக்குள் நுழைவது சுலபமாகவே இருந்தது.  படுக்கையில் போர்வைக்குள் புகுந்திருந்த அபிநயாவை குளிர் ஊடுருவ, உடலை சிலிர்த்துக் கொண்டாள். அவள் கரம் அனிச்சையாய் படுக்கையை துழாவியது. பக்கத்தில் மகனை காணவில்லை என்றதும் பெருமூச்சை வெளியிட்டு உறக்கத்தைத் தொடர்ந்தாள்.  கல்லூரி செல்ல குளித்து விட்டு இடையில் துவாலையுடன் வெளியில் வந்த புகழேந்தி கண்களில் அந்தக் காட்சி விழுந்தது. மனைவி குழந்தையை […]


நேயத்தின் நியதிகள் – 17 (2)

கார்த்திக்கின் வீடு இப்போதே கல்யாண கோலம் பூண்டிருந்தது. ஆனால், அந்த வார விடுமுறைக்கு சோகமாக வீடு வந்து சேர்ந்தான் அவன்.  புகழேந்தி போல விதிகளுக்கு உட்பட்டு வாழ்பவன் அல்ல அவன். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன். அதற்காக வரைமுறைகளை மீறியதும் கிடையாது.  அவன் பெண் பார்த்து விட்டு வந்த நாளில் இருந்து பெண்ணிடம் பேச முயல்கிறான். கண்மணி அவனை தவிர்க்கவும் இல்லை. அதே நேரம் நெருக்கமான உணர்வையும் அளிக்கவில்லை. அவன் தான் தவித்துப் போனான்.  அவனால் பூ […]


நேயத்தின் நியதிகள் – 17 (1)

அபிநயாவிற்கு அம்மாவை நிரம்ப பிடிக்கும். ம்ம், யாருக்குத்தான் அம்மாவை பிடிக்காது? குழந்தையாக, சிறுமியாக, குமரியாக என எல்லா பருவத்திலும் அம்மாவை அதிகம் தேடியிருக்கிறாள். ஆனால், கிடைத்தது என்னவோ அப்பத்தா தான். அம்மாவிற்கு எப்போதும் ஆண் பிள்ளை தான் பெரிது. மகன் பிறக்கும் வரைக்கும் மகள் மீது பாசமாக தான் இருந்தார். ஆனால், அந்த மகளுக்கு விவரம் புரியும் வயதில், அம்மா தம்பியை தான் அதிகம் கவனித்தார். அபிநயா அதை என்றுமே குறையாக, குற்றமாக நினைத்தது கிடையாது.  அவளுக்குத் […]


நேயத்தின் நியதிகள் – 16 (2)

நண்பனின் தங்கை என்பதால் பெரிதான மெனக்கெடல் இல்லாமல் அவர்களை அணுகி பேசுவது அவனுக்கு எளிதாகவே இருந்தது.  புகழேந்தி நண்பனின் பெற்றோருடன் பேசி, தங்களின் விருப்பத்தை தெரிவித்தான். அவர்களும் ஆர்வமாக இருக்க, அம்மாவிடம் பேச சொல்லி அலைபேசியை நீட்டினான். ஆனால், அதை வாங்கியது அவனது அப்பத்தா. அந்தக் கல்யாண பேச்சு வார்த்தையை புகழேந்தி தொடங்கி வைத்தான். அவ்வளவுதான். பத்தே நாட்களில் வடிவுக்கரசி கோட்டையை கட்டி விட்டார்.  இரண்டு குடும்பங்களும் பேசி, முதலில் அவர்களுக்கு பிடித்து, பின்னர் ஜாதகம் பரிமாறி, […]


நேயத்தின் நியதிகள் – 16 (1)

அவர்கள் சந்தித்து ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அப்படியிருக்கையில் மனைவி அந்த பெண்ணுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதை புகழேந்தி ரசிக்கவில்லை.  அனைவரின் பார்வையும் தங்கள் மேலிருப்பதை கூட மனைவி உணரவில்லை என்று உணர்ந்தவன், “அபி..” என்று அடர்த்தியான குரலில் அழைக்க, கண்களை மட்டும் கணவனை நோக்கி திருப்பினாள் அபிநயா. அவன் கண்களை பார்த்தே அவன் மனதை படித்தவள், அவளது அலைபேசியை அவன் கையில் திணித்தாள். திருமண வீட்டில் முதன் முறையாக சந்தித்த பெண்ணை அவளின் அனுமதியில்லாமல் எப்படி […]


நேயத்தின் நியதிகள் – 15 (2)

அன்று முழுவதும் அபிநயாவின் மனதை தம்பியே ஆக்கிரமித்து இருந்தான். இரண்டு வருடங்களுக்கு மேலாக சதா ரணமாக அவள் நாட்களை நெருக்கிய ஒன்றை அவளின் சொந்த தம்பியே சாதாரணமாக செய்து விட்டு வந்து நின்றதை அவளால் ஏற்க முடியவில்லை. புகழேந்தி வீடு வந்து அலுப்பு தீர குளித்து விட்டு மனைவியின் அருகில் வந்தான்.  “அபி..” மென்மையாக அணைத்து கொண்டான்.  “சித்து ஏன் இப்படி பண்ணான்?” அவள் கேட்க, “ப்ச், விடு அபி” என்றான் களைப்புடன்.  “இது என்ன மாதிரி […]


நேயத்தின் நியதிகள் – 15 (1)

சியாமளா, சித்தார்த் இருவரும் ஹாலிலேயே உறங்கி விட்டார்கள். மகேஷ்வரன் அதிகாலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பி விட்டார்.  “கொடைக்கானல் ட்ராப் போறேன் மா. பொழுது சாயுறதுக்கு முன்னாடி வந்துடுவேன்” என்று அவர், காளியம்மாளிடம் தகவல் தெரிவிக்க, “சரிப்பா. இந்தா காப்பியை குடி” என்று காஃபி கோப்பையை நீட்டினார் காளியம்மாள். காஃபி அருந்தியபடி அம்மாவிடம், சித்தார்த்தை பார்த்துக் கொள்ளும் படி கண் ஜாடைக் காட்டி விட்டு சென்றார் அவர்.  சித்தார்த் இரவெல்லாம் குற்ற உணர்ச்சி தந்த அழுத்தத்தில் விழித்திருந்து அதிகாலையில் […]


நேயத்தின் நியதிகள் – 14 (2)

அதனால் தான் மனைவியை அலுவலகத்தில் இருந்து அழைத்துச் செல்ல வரவில்லை என்பதையும் அவன் கூற, “சித்து ஏன் இப்படி பண்ணான்?” என்று அதிலேயே உழன்று கொண்டிருந்தாள் அபிநயா.  “அவனோட ப்ரெண்ட்டுகாக. வேறென்ன?”  “அப்போ அந்த பொண்ணு அவனோட ப்ரெண்ட் இல்லையா? அவ முக்கியம் இல்லையா இவனுக்கு? அந்த பையனோட பிரெண்ட்ஷிப்க்காக, பொண்ணோட பிரெண்ட்ஷிப்பை விட்டுக் கொடுத்திடுவானா? அந்த பொண்ணோட மனசு பத்தியெல்லாம் இவனுக்கு கவலையே இல்லையா? என் தம்பியா இது? ரெண்டு வருஷத்துக்கும் மேல என்னை ஒருத்தன் […]


நேயத்தின் நியதிகள் – 14 (1)

புகழேந்தி மனைவியை கைத் தாங்கலாக பிடித்தபடி இறுகி நின்றான். ராஜலக்ஷ்மி அவசரமாக சென்று மருமகளுக்கு தண்ணீர் எடுத்து வந்து குடிக்கக் கொடுத்தார்.  அத்தனையையும் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றிருந்தார் சியாமளா.  மகள் கர்ப்பம் என்று அறிந்ததும் மகிழ்ந்தார்தான். அவளுக்கு பிடித்தது, வயிற்று பிள்ளைக்கு நல்லது என அவ்வப்போது எதையாவது செய்து கொடுப்பார்தான். ஆனாலும், மகன் என்றால் தனிப் பாசம். அதை அவரால் வார்த்தைகளில் விளக்கிட முடியாது. அவர் செயல்களே உலகிற்கு அவரின் ஆண் பிள்ளை மேலான […]