Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 7

ஸ்ரீராம் எதுக்காக உனக்கு வாழ்த்தும் பரிசும் அனுப்பனும்?” கத்தரிக்காயை நறுக்கிக் கொண்டிருந்த ராதா அம்மாவின் கேள்வியில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். “இதென்னம்மா கேள்வி? பிறந்தநாள் வாழ்த்து எதுக்கு அனுப்புவாங்க? ஸ்ரீராம் …ஸ் ஆ ” பேசிக் கொண்டே காய் நறுக்கி கவனகுறைவில் கத்தி கைவிரலை பதம் பார்த்து விட,  ஒரு சொட்டு ரத்தம் கசிந்தது. பதட்டத்துடன் மகளின் அருகில் வந்து ரத்தம் கசிந்த விரலை ஈரத்துணி கொண்டு சுற்றிய காயத்ரி கவலையுடன் சொன்னாள். “பண்ற காரியத்தில் கவனத்துடன் […]


பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 6

அத்தியாயம்  6 மாலை இளங்காற்று இதமாக மேனியை  வருடிவிட, அந்த சுகானுபவத்தில் மெய்மறந்து தோட்டத்துப்புல்வெளியில் படுத்திருந்த  ராதா சில்வண்டுகளின் ரீங்காரம் எழுப்பிய சங்கீதத்தில் சிலிர்ப்புடன் கண்விழிக்கிறாள். எங்கு பார்த்தாலும் பூக்கள். சிவப்பிலும் ஊதாவிலும் அடர் மஞ்சளிலும், கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் வண்ண வண்ண பூக்கள். கையை நீட்டி  அருகில் பூத்திருந்த இளஞ்சிவப்பு ரோஜாவை பறிக்கிறாள் ராதா. அதன் மயக்கும் நறுமணத்திலும்,அழகிலும் ஆழ்ந்திருக்கும் வேளை,யாரோ அவள் கையிலிருந்து  அதைப்பறித்து  கசக்குகிறார்கள். ராதா திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்கையில் இருவிழிகள்  கொடூர […]


பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 5

அத்தியாயம்  5 காயத்ரி சுந்தரம் தம்பதியரின் இரண்டாவது புத்திரியாக ராதா ஜனித்த வேளை மகா பொல்லாத வேளையாக தான் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நாள் வரை திடகாத்திரமாக இருந்த அவளுடைய  தாத்தா நாராயணன் பேத்தி பிறந்த அதே நாழிகையில் பரலோகம் போவாரா? ஒரு வியாதி, மூச்சுத்திணறல்  ஒன்றுமில்லாமல் சுலபமாய் சீக்கிரமாய் நாணா என்றழைக்கப்பட்ட நாராயணன் செத்துப்போக, பழியனைத்தும் அப்பொழுது தான் பிறந்த பச்சைமண் ராதாவின் மீது தான். ‘நன்னா திடகாத்திரமாயிருந்த நாணா இப்படி ஒரு வியாதியுமில்லாமல் […]


பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 4

அத்தியாயம்    4 :ஆன்ட்டி ! அந்த சின்ட்ரெல்லா ரொம்ப அழகா? விழிகளை அகல விரித்துக் கேட்டாள் சுமி “ஆமா சுமிம்மா. அவ ரொம்ப அழகுதான் உன்னைப் போலவே.” ராதா செல்லமாய் அவள் கன்னம் தட்ட,சுமி  வேகமாய் தலையை ஆட்டி மறுத்தாள். “நோ ஆன்ட்டி…நீங்க பொய் சொல்றிங்க. நான் உங்களை மாதிரி சிகப்பில்லை.அழகுமில்லை.நீங்க தான் சின்ட்ரெல்லா மாதிரி அழகாயிருக்கிங்க.” சுமி சட்டென்று ராதாவின் கழுத்தில் தன் கைகளை போட்டு மாலையாக கட்டிக் கொண்டாள். “ஆன்ட்டி ! எனக்கு […]


பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 3

அத்தியாயம்     3 “சின்ட்ரெல்லாவுக்கு அந்த தேவதை ட்ரஸ் பல்லக்கு எல்லாம் கொடுத்துச்சா? அவளும் அழகா ட்ரஸ் பண்ணிண்டு விருந்துக்கு போனாளாம்.   ம்…ஆ….காட்டு சுமிம்மா…” ராதா சாமர்த்தியமாக கதை சொல்லியே தன் வழிக்கு கொண்டு வந்து மகளை சாப்பிட வைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மீனு இப்பொழுது சிரித்தாள். “அதென்னவோ ராதா உங்க கையால ஊட்டினால் தான் சுமிகுட்டி சாப்பிடறா. இவளுக்கு  ஒரு வாய் சாதம் ஊட்டறதுக்கு நான் படற பாடிருக்கே அம்மாடியோ! ” […]


பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 2

அத்தியாயம்    2 “ப்ரியா…ப்ரியா….” மூன்றாவது முறையாக உரக்க அழைத்தான் தாமு.ப்ரியாவிடமிருந்து பதிலே வராததில் குழப்பத்துடன் குட்டி போட்ட பூனையைப் போல் வீட்டைச் சுற்றி சுற்றி வந்தான். எங்க போச்சு இந்த பொண்ணு?  ஐயாவும் அம்மாவும் ஹாஸ்பிட்டல்லருந்து திரும்பற நேரமாயிடுச்சே.ப்ரியா ரெடியாகலேன்னா ஜானகிம்மா கத்துவாங்களே. இந்த குட்டியை எங்கேனு தேடறது? ஒருவேளை தோட்டத்தில் இருக்குமோ? வரவேற்பறையை கடந்து வெளியே போர்டிக்கோவிற்கு வந்த தாமு சுற்றுமுற்றும் பார்த்தான்.மெதுவாக நடந்து க்ரோட்டன் செடிகளை கடந்து பச்சை குடை போல் கவிழ்ந்திருந்த பவளமல்லி […]


பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 1

அத்தியாயம் 1 தோட்டத்து பறவைகளின் இனிமையான சத்தத்துடன் வெளியே சன்னமான சிறு தூறலாக பெய்து கொண்டிருந்த மழை அந்த காலைப் பொழுதை அழகாக்கியிருந்தது.பால்கனி ஓரமாக வைக்கப்பட்டிருந்த பூந்தோட்டிகளில் இருந்த ரோஜாவும் செம்பருத்தியும் மெலிதாக வீசிய மழைச்சாரலில் நனைந்து சிலிர்த்தன. இலைகளிலிருந்து சிறு சிறு துளியாகச் சொட்டிய நீர்திவலைகள் தரையில் வட்டமாக குளம் அமைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நந்தகுமாரன் போர்டிக்கோவில் கார் வந்து நிற்கும் ஓசையிவ் கலைந்து நிமிர்ந்தான். யாராகயிருக்கும் என்ற யோசனையுடன் புருவங்கள் சுருங்க மாடியிறங்கிய […]