Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 21 2

எல்லாம் கீதா சொன்னதுதான். ஏற்கனவே கீதாவுக்குக் கயலை கண்டால் ஆகாது. இதில் நந்தாதான் அவள் கணவனை ஜெயிலில் போட்டான் என்ற ஆத்திரம் வேறு…. அதனால் அந்த வன்மத்தை, வாய்ப்புக் கிடைத்ததும் தீர்த்துக் கொண்டாள்.  தாரணிக்கு கேட்டதும் தலையே சுற்றியது. “இந்த மாதிரி ஒரு பெண்ணை அண்ணன் ஏன் கல்யாணம் செய்துக்கணும்?” அதை அவள் வாய்விட்டே கேட்டாள்.  “எல்லாம் பாவம் பார்த்துதான். அதுதான் சொன்னேனே, அவங்க வீட்லயே அவளைக் கொல்ல பார்த்தாங்கன்னு. அப்போதான் உன் அண்ணன் அவளைப் பார்த்திருக்கார். […]


புது வெள்ளை மழை 21 1

புது வெள்ளை மழை அத்தியாயம் – 21  கயல்விழிக்கு கல்லூரி வீடு என்று பொழுது நன்றாகவே சென்றது. வீடு பராமரிப்பும் அவள் பாடத்தின் ஒரு பகுதி என்பதால்… வீட்டை இன்னும் எப்படி அழகுபடுத்துவது என்பதும் அவளுக்குக் கற்றுக்கொடுக்கபட்டது.  அதிலும் ஏற்கனவே அவளுக்கு அதில் ஆர்வம் அதிகம். அதனால் இன்னும் ஈடுபாட்டோடு கற்றுக் கொண்டாள்.  கற்றுக்கொண்ட விஷயங்களை அவள் வீட்டில் காட்ட, வீடு இன்னும் அழகாக மாறியது.  வெள்ளைத் துணிகளில் ஓரங்களை அழகாக மடித்துத் தைத்து. வண்ண நிற […]


புது வெள்ளை மழை 20

அத்தியாயம் – 20  மாலை ஏழு மணிக்குத்தான் குழலி வீட்டிற்கு வந்தார். நன்றாக அலைந்துதிரிந்து வந்ததில், மிகவும் கலைத்து போய் இருந்தார். அவரே அசந்து போய் இருக்க, அவரைத் தாரணி இன்னும் படுத்தினாள்.  “அம்மா, எனக்குப் பசிக்குது? எதாவது செஞ்சு தாங்க.”  “மதியம் சமைச்சது எல்லாம் காலியா?” என அவர் பாத்திரத்தை திறந்து பார்க்க… மதியம் வடித்த சாதம் அப்படியே இருக்க.. மீன் குழம்பும் இருந்தது.  “இதோதான் சாப்பாடு இருக்கே. போட்டு சாப்பிட வேண்டியது தானே.”  “எனக்கு […]


புது வெள்ளை மழை 19

புது வெள்ளை மழை அத்தியாயம் – 19  தாரணி வாரத்தில் பாதி நாட்கள் அம்மா வீட்டிற்கு வந்து விடுவாள். அப்படி வருபவள், ஞாயிற்றுக்கிழமை இரவுதான் கிளம்பி செல்வாள். வருண் வந்துதான் அழைத்துச் செல்வான்.  அப்படி வரும்போது சில நேரம் ஷாப்பிங், பீச், கோவில் என்று செல்லும்போது, கண்டிப்பாக வருண் கயலையும் அழைப்பான். எல்லா நேரமும் கயல் அவர்களோடு செல்ல மாட்டாள். அவர்கள் இருவரும் தனியாகச் செல்லவும் விரும்புவார்கள் அல்லவா… அதனால் சில நேரங்கள் மட்டும் செல்வாள்.  முன்பு […]


புது வெள்ளை மழை 18 2

ஒருமுறை உமா வந்து கயல்விழியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். இருவரும் பீச்சில் காலாற சிறிது நேரம் நடந்துவிட்டு வந்தனர்.  “எப்படி இருக்கக் கயல்?”  “நல்லா இருக்கேன் உமா அக்கா.”  “இப்ப எதுவும் கனவு வர்றது இல்லையே?”  “இல்லை… நீங்கத்தான் மாத்திரை கொடுத்திருக்கீங்க இல்லையா…. அதைப் போட்டதும் நல்லா துங்கிடுறேன்.”  “ஓ அப்படியா? ஆனா உனக்கு ஒன்னு தெரியுமா? நான் கொடுத்தது தூக்க மாத்திரை இல்லை. விட்டமின் மாத்திரைதான்.”  “ஏன்?” கயல் உமாவை புரியாமல் பார்க்க…  “நீதான் […]


புது வெள்ளை மழை 18 1

புது வெள்ளை மழை அத்தியாயம் – 18  கல்லூரியில் சேர்ந்து நான்கு மாதங்கள் சென்று இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால்… கயல்விழி தலைக்குக் குளித்து, கூந்தலை தளர்வாகப் பின்னி பூ வைத்து இருந்தாள். வெள்ளிக்கிழமை மட்டும் எப்போதும் புடவையில் தான் கல்லூரிக்கு வருவாள்.  “உன்னைப் பார்த்தா கல்யாணம் ஆன பொண்ணுன்னு நம்பவே முடியலை கயல். முதல்தடவை நீ புடவையில வந்தபோதுதான், வகுட்டில் குங்குமம் வச்சிருந்த. அப்போதான் நீ கல்யாணம் ஆன பொண்ணுன்னு தெரியும்.”  “கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் […]


புது வெள்ளை மழை 17 2

அதையே நினைத்தபடி கயல்விழி பஸ்சில் உட்கார்ந்து இருக்க… நடுவில் சிக்னலில் வண்டி நின்றது. ஸ்டாப்பிங்தான் வந்துவிட்டது என நினைத்து அவசரப்பட்டு இறங்கிவிட்டாள்.  இரண்டு நிறுத்தங்கள்தான் என்றாலும், தூரம் அதிகம்தான். முதலில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்கே இருக்கிறோம் என்று தெரியவில்லை.  அழுகை வந்துவிடும் போல் இருந்தது. வருணுக்கு போன் செய்வோமா எனக் கூட நினைத்து விட்டாள். பிறகே நிதானமாகச் சுற்றி பார்க்க… நந்தா காட்டிய கட்டிடம் ஒன்றை பார்த்ததும், தான் முன்பே இறங்கிவிட்டோம் எனப் புரிந்தது.  இப்போது […]


புது வெள்ளை மழை 17 1

புது வெள்ளை மழை அத்தியாயம் – 17  அவனது அலுவலகத்தில் நந்தாவுக்குத் தலைக்கு மேல் வேலை இருந்தது. அந்த வேலைகளுக்கு நடுவிலும், அவன் சொன்னது போல், பாண்டியின் பெற்றோருக்கு வேறு ஊரில் பண்ணையைப் பார்த்துக்கொள்ளும் வேலையை வாங்கிக் கொடுத்தான்.  அவர்கள் அதே ஊரில் இருந்தால், அதைச் சாக்கிட்டு இரு பக்கமும் அடித்துக் கொள்வார்கள் என்றே வேறு ஊருக்கு அவர்களை இடம் மாற்றினான்.  அவர்கள் தங்க அந்தப் பண்ணையிலேயே வீடும் இருந்தது. அதோடு சம்பளமும் உண்டு. அவர்களுக்கும் இடம் […]


புது வெள்ளை மழை அத்தியாயம் – 16

புது வெள்ளை மழை அத்தியாயம் – 16  காலை ஐந்து மணிக்கு அலாரம் சத்தம் கேட்டு கயல்விழிக்குத் தூக்கம் கலைந்தாலும், எழுந்துகொள்ள முடியவில்லை. முன்தினம் நள்ளிரவுக்கு மேல்தான் உறங்கி இருந்தாள்.  குழலி எழுந்து குளியல் அறைக்குள் செல்ல, மேலும் தாமதிக்காமல் கயல்விழியும் எழுந்து கொண்டாள். கண்ணைக் கசக்கி தூக்கத்தை விரட்ட முயன்றபடி, மேலே இருந்த அவர்கள் அறைக்குள் நுழைந்தவளுக்கு,  நந்தாவின் நினைவுகள் அலைமோதியது.  முகம் கழுவிவிட்டு மறுபக்க கதவை திறந்து கொண்டு வெளிப்பக்கம் சென்றவள், பூச்செடிகளுக்குத் தண்ணீர் […]


புது வெள்ளை மழை 15 2

“நாம மத்தவங்களுக்காக வாழ முடியாது மா. அப்படி யாராவது, எதாவது பேசினா, என்கிட்டே பேச சொல்லுங்க. நான் அவங்களுக்குப் பதில் சொல்லிக்கிறேன்.” என்றதும், குழலி அமைதியாகி விட…  “ஒரு தடவை எதோ தெரியாம தப்பு செய்திட்டா, அவங்க காலம் எல்லாம் அதுக்குத் தண்டனை அனுபவிக்கனுமா என்ன?”  “இதே நம்ம வீட்டு பொண்ணுக்கு இப்படி நடந்தா, பார்த்திட்டு சும்மாவா இருப்போம். அவங்க வாழ்க்கையைச் சீர் பண்ணத்தானே பார்ப்போம். அதே மத்தவங்களுக்குன்னா வேறையா?”  யார் என்ன சொன்னாலும், நந்தா தன் […]