புது விஜயம் 3(1) அடுத்த நாள் காலையில் நான்கு மணிக்கு வினயனை எழுப்பிவிட்டார் நசீர். “எந்தாடா வினயா?” என்று சலித்தார். அவன் வீட்டில் கன்னுக்குட்டி என்று அறியாதவர் சிரமப்பட்டு அவனை எழுப்பிவிட “நானும் நாலு மணிக்கு எந்திரிக்கணும் நினைச்சேன் சேட்டா, பஷ்ஷே உறங்கிபோயி” என்று இருகைகளையும் உயர்த்தி நெட்டி முறித்தான் வினயச்சந்திரன். “ஒரு பதினஞ்சு திவசம் தொடர்ச்சயாயி அங்கனே நாலு மணிக்கு எழுந்திட்டால் அதினு ஷேஷம் உரங்கன் விசாரிச்சாலும் உறக்கம் வரில்லா வினயா” என்றார் நசீர். (ஒரு […]
புது விஜயம் 3(2) அந்த பக்கமாய் ஒரு குளம் உண்டு, நீண்ட அகன்ற பாறாங்கற்கள் இருக்க அதுவே அந்த குளித்திற்குப் படிகள் போல… அதில் வெறுங்காலோடு அடியெடுத்த வைத்த பிரதாபன் கால்களை குளிர்ந்த நீரில் நனைத்தான். சிறிது நேரம் பாறைகளின் ஈரத்தை உணர்ந்து, கால்களை நீரில் விட்டு ஓய்வாக உட்கார்ந்தான். வினயனும் அருகே அமர, அந்த அதிகாலை நேரத்தில் பறவைகளின் சத்தத்தோடு குளத்தின் ஈரம் பரவியிருந்த காற்று தொட்டு போக வினயனை விட்டால் அங்கே இன்னொரு […]
புது விஜயம் 2 நசீர் வந்து அழைக்கவும் வினயன் சிந்தனையிலிருந்து விடுபட்டான். “சொல்லுங்க சேட்டா” “மோனே! சாயா” என்று நசீர் அவனிடம் நீட்டிட வாங்கி கொண்டவனுக்கு வீட்டு ஞாபகம். எப்போதும் அப்பாவுடன் இல்லை அண்ணனுடன் ஒட்டிக்கொண்டே திரிவான், வீட்டில் இப்போது இரண்டு குழந்தைகள். அவன் அண்ணன் ஜெய்ச்சந்திரனின் மக்கள் சுஜாதா, ரத்னாகரன். சுஜிம்மா அவனுடனே சுற்றுவாள். இடுக்கியின் தேவிகுளம் அவன் பிறப்பிடம், அந்த மலைவாசஸ்தலத்தின் குளுமையில் வாழ்ந்தவனுக்கு ஆலப்புழாவின் தாமரக்குளம் கொஞ்சம் வெப்பமாக தெரிந்தது. இதில் ஒருவாரமாக […]
புது விஜயம் 1 “பிரதாபா! உறங்கு” என்ற நசீரின் குரலில் வாசலில் நின்ற பிரதாபன் மெல்ல திரும்பினான். “எந்தா நசீரேட்டா?” என்று பிரதாபன் கேட்க, நசீர் அவனை உறங்கச் சொல்ல “அச்சச்சன் எவிட?” என்றான். “அவர் உறங்கி” என்று நசீர் சொல்லி நிற்க, பிரதாபன் அவரை போக சொன்னான். பிரதாபன் விழிகள் போன திசையில் பார்த்தார் நசீர். ‘தலவாடி’ தரவாட்டில் மாலை ஏதோ விஷேஷ பூஜை நடந்திருக்க, இன்னும் அங்கே அவர்கள் வீட்டினர் கூடி நின்றனர். பிரதாபனை […]