அதற்கு மறுக்கமுடியாமல் தலையசைத்தவள் விழிகள் கலங்க, ரிதுவும் ஆமோதித்தாள் அதனை. “மூச், இனி அழக்கூடாது. என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம். நீ போய் ரெஸ்ட் எடு. நானும் பார்க்கறேன்…” என்று ஆத்மா ஷோரூம் கிளம்பிவிட்டான். அடுத்த பத்துநாட்களில் வித்யாவிற்கு ஷோரூம் அருகில் உள்ள காது கேட்காதோர், வாய் பேசாதோர் பள்ளியில் தற்காலிக பணியிடம் கிடைத்தது. அது ஒரு தனியார் பள்ளி. அதை நிர்வகிப்பவர் ஆத்மாவிற்கு நன்றாக தெரிந்தவர் என்பதினாலும் வித்யா இப்போதிருக்கும் மனநிலைக்கு அவளிடம் முதலில் பழைய கலகலப்பை […]
“என்னாச்சுடா?…” என்று திகைப்பாய் பார்த்த ரிதுவின் முகம் கண்டவளுக்கு இதுவரை இப்படி என்றுமே நடந்திடாத தன்னை குறித்தே அத்தனை வேதனை. மென்மையை, புன்னகையை மட்டுமே காண்பித்திருந்தவளின் பரிதவிப்பை கண்டு ரிதுவும் கலக்கத்துடன் பார்த்தாள். “வித்யா…” என்ற ரிதுவின் முன் கைகூப்பிய வித்யா தன்னை அமைதிப்படுத்த முயன்று அதன்பின் தன் மொழியில் அவளுக்கு விளக்க முயன்றாள். சுற்றிலும் பார்த்துவிட்டு அங்கிருந்த நோட்பேடை, பேனாவை எடுத்துக்கொண்டு அவர்கள் முன் வந்தமர்ந்தாள். ‘நான் எழுதறேன். எனக்கு புரியவைக்க முடியுமான்னு தெரியலை’ என்று […]
ஆத்மாவின் விழிகள் அதனை பார்த்ததுமே கூர்மை பெற, வித்யா அவனை ஒரு சங்கடமான புன்னகையுடன் எதிர்கொண்டாள். “குட்மார்னிங் வித்யா. நல்லா தூங்கினியா?…” என்றான் ஆத்மா அவளை இலகுவாக்கும் பொருட்டு. “ஹ்ம்ம்…” என்று மட்டுமே சப்தம். “சரி வா சாப்பிடலாம்…” என்றவன் ரிதுவிடம் எதுவும் கேட்காதே என்பதை போல விழிகளால் கட்டி வைத்தான். ரிதுவின் மனதிற்குள் என்னவோ வரவிருக்கிறது என்று உள்ளுணர்வு எச்சரிக்க மனதை அடக்கிக்கொண்டு தன்னை இயல்பாக்க முயன்றாள். “வீட்டுக்கு பேசினியா வித்யா? அத்தை சாப்பிட்டாங்களா? என்ன […]
பூவிழி – 16 விடியும்வரை விழித்தே இருந்தாள் வித்திவ்யா. உறக்கம் என்பது கிஞ்சித்தும் அவளை அண்டவில்லை. முரளியின் அச்செயலின் விளைவால் உண்டான அதிர்வில், இரக்கமற்ற அந்த மனநிலை அவளை வலுவாய் வதைத்துக்கொண்டிருந்தது. ‘பார்த்திருக்கவே கூடாது. போயிருக்கவே கூடாது. பேசியிருக்கவே கூடாது.’ என்ற எண்ணம் லட்சங்களை கடந்து கோடியை தொடவிருந்தது. எத்தனை தைரியம்? எவ்வளவு துணிச்சல்? முரளியிடம் இதனை எதிர்பார்க்காத அதிர்வில் மட்டுமா அவள் சிலையாய் நின்றது என அடிமனத்தின் கேள்வி காதில் ஒலிக்க தவற அவனை தவறாகவும் […]
ஆனந்திக்கு முகமே விழுந்துவிட்டது மருமகளின் வரவேற்பில். அதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஆத்மா, “வாங்கம்மா, உள்ள வாங்க…” என்றான் அழுத்தமாக. “இருக்கட்டும் ப்பா…” என்று ஹாலில் அமர்ந்துகொள்ள, “உள்ள வாங்கன்னேன். பேசனும் உங்ககிட்ட…” என்றவன் அவரை அங்கிருந்த இன்னொரு அறைக்குள் அழைத்து செல்ல முரளி எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். “ப்ச், அங்க என்ன வேடிக்கை. இங்க பார்த்து சாப்பிடு…” என்று அதட்டினாள் ரிது. “பசியில்லை அண்ணி…” என்று உணவில் கையை வைக்காமல் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான். “மாத்தி மாத்தி […]
பூவிழி – 15 அண்ணாமலையிடம் பேசிக்கொண்டிருந்த ஆத்மாவுக்கு அப்படி ஒரு சிரிப்பு முகத்தில். ரிதுபர்ணாவை பார்த்தவனுக்கு ‘விஷயம் கேள்விப்பட்டால் இவள் வேறு என்ன செய்வாளோ?’ என்றும் ஒருபுறம் தோன்றியது. இன்னும் தெளியாத முகத்துடன் அமர்ந்திருந்தவளை உண்ண வைக்கவே அத்தனை நேரம் பிடித்திருக்க இப்போது அண்ணாமலை சொல்லிய இந்த தகவல் வேறு. பெருவிரலால் நெற்றியை கீறிக்கொண்டவன் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை ரிதுவிற்கு. “வேற என்ன சொன்னா?…” என்றான் ஆத்மா அண்ணாமலையிடம். “அவங்கம்மாவும், அப்பாவும் பேசினதுக்கு மன்னிப்பு […]
“வித்திவ்யா தெரியுமா?…” என்றான் அவளிடம். “யார்?…” என்று அவள் யோசிக்க, “வித்யா. ரிது அண்ணி தங்கச்சி…” என்றதுமே ஞாபகம் வந்துவிட்டது. “அந்த வாய் பேசாத பொண்ணு…” என்று அவள் அதனை குறிப்பாய் சொல்ல, “ஷட்அப்…” என்று இரைந்தவன், “அவளுக்கு தான் பேர் இருக்கே. அதென்ன வாய் பேசாத பொண்ணு? வாய் பேசற உன் வீட்டு மனுஷங்க மட்டும் ஒழுங்கோ?…” என்றான் விழிகள் சிவக்க. “இல்ல அது வந்து…” என்றவள் பயந்துபோய், பின் சென்று தன் தாயின் கையை […]
பூவிழி – 14 காரில் ஏறியதில் இருந்து ஆனந்தியிடம் ஒற்றை வார்த்தை பேசவில்லை முரளி. ஆனால் அவனின் பார்வை அவ்வப்போது அவரை அழுத்தமாய் பார்ப்பதும், துளைப்பதுமாக இருக்க என்னவோ சஞ்சலமாய் உணர்ந்தார். அவராக இருமுறை முரளியை அழைத்த பொழுதும் கூட அவரிடம் வாய் திறந்தான் இல்லை. உடன் வித்யாவும் இருக்க ஆனந்தி அதற்குமேல் அழைக்க முயலாமல் மௌனமாய் இருந்துகொண்டார். அவரின் அருகில் தான் வித்யா அமர்ந்திருந்தாள். ஆனால் அவளும் அவரின் முகம் காணவில்லை. பொம்மை போல் […]
மறுப்பாய் தலையசைத்தவள் பொங்கும் கண்ணீரை துடைக்கவும் தோன்றாமல் அவனை வெறித்து பார்த்தாள். “ஸாரி…” என்று முரளி மன்னிப்பு கேட்க, ‘இது எதற்கு?’ என்று புரியாமல் லேசாய் தலை சாய்த்தாள் அவள். “உன் பர்மிஷன் இல்லாம உன்னை கிஸ் பண்ணேன்ல. அதுக்கு தான்….” என்று மற்றவர்களுக்கு கேட்காவண்ணம் அவள் மட்டுமே கேட்க கூற வித்யாவின் முகம் குப்பென்று சிவந்து ஜிவுஜிவுத்தது. “கால்ல உன் கொலுசுக்கும், பாதத்துக்கும் முத்தம் குடுத்தேனே. அதுக்கு ஸாரி கேட்கலை. இது…” என்றவன் பேச்சில் அமரமுடியாமல் […]
“வா முரளி…” என்று அவர்கள் இருவரின் தனிப்பட்ட உலகத்தை கலைப்பதை போல விசாலாட்சி அழைக்க அவர் பக்கம் திரும்பியவன் தலையசைத்தான். இப்போது தான் மற்றவர்களையும் பார்க்க அனைவருமே அவர்கள் இருவரை மட்டுமே பார்த்தனர். “ம்மா…” என்று நேராய் செண்பகத்திடம் சென்றவன் அவர் எதுவும் பேசாமல் நிற்பதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. சென்றவேகத்தில் தாயை தேடும் சேயாய் அவரை அணைத்துக்கொள்ள செண்பகத்தின் கண்களிலும் நீர். “ஒன்னுமில்லடா. ஒன்னுமில்ல…” என்றார் மகனின் உடல்மொழியில் அவனின் நடுக்கத்தை உணர்ந்து ஆறுதலாய். “அதான் நீங்க […]