பூ41 வீட்டில் நடந்த சம்பவத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான மனநிலையில் இருந்தனர். விசாகன் வீட்டில் இருந்து வரும் போது மாலையாகி இருக்க இப்போதோ இருள் சூழத்தொடங்கி இருந்தது. காற்றிலிருந்த ஈரப்பதம் மனதை சென்றடையவில்லை ஒருவிதமான வெம்மை குடிக்கொள்ள கண்களை மூடி மாந்தோப்பில் மாமரங்களுக்கு இடையில் கயிற்று கட்டிலில் படுத்து இருந்தவனுக்கு நண்பனை நினைத்து பெருமையாகவும், அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது. மதியம் போன் செய்து பார்க்க வேண்டுமென கூறியவனின் சொல்லிற்கிணங்க அவனை சென்று பார்த்தவனுக்கு அமுதாவை விரும்புவதாக […]
பூ40 தில்லையும் அமுதாவும் முத்துவுடன் காரில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். தில்லைக்குத் தான் மனதே ஆறவில்லை ஓடியாடி வளைய வந்தவள், மருத்துவமனையில் படுத்து கிடந்ததை பார்த்து பரிதவித்து விட்டார். அவர் வரும் நேரம், தேவா தூங்கிக் கொண்டு இருந்ததில் மருத்துவரிடம் என்னென்ன ஆகாரம் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டு, பேத்தியை காண சென்றார். கதவை திறந்து வரும் தில்லையை கண்டதும் தேவா முறைப்பதை போல் முகத்தை திருப்பிக் கொண்டாள். “அடியாத்தே!!!! என்னத்தா இது? நீ செய்த வேலைக்கு […]
பூ 39 சூரியன் தன் வெப்பத்தை தணித்துக் கொள்ள ஆரம்பித்திருந்த மாலை வேளை, அனலாய் வீசிய காற்றும் மெல்ல தென்றலாய் மாற தொடங்கி இருந்த நேரம். கண்கள் சோர்ந்து முகம் வாடியிருந்த தேவசேனாவை பத்திரமாக வீடு சேர்த்த பின்னரே தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள் மேகலா, பேருந்தில் அமர்ந்திருந்தவளுக்கு தேவாவை நினைத்து தான் பாவமாக இருந்தது, மதியம் அவளுக்கு கேன்டீனில் வாங்கி கொடுத்தது கூட சேரவில்லை… பாவம் வீட்டிற்கு போய் எப்படி இருக்கிறாளோ” அவளை நினைத்து வருந்தினாள். […]
பூ 39 சூரியன் தன் வெப்பத்தை தணித்துக் கொள்ள ஆரம்பித்திருந்த மாலை வேளை, அனலாய் வீசிய காற்றும் மெல்ல தென்றலாய் மாற தொடங்கி இருந்தது. கண்கள் சோர்ந்து முகம் வாடியிருந்த தேவசேனாவை பத்திரமாக வீடு சேர்த்த பின்னரே தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள் மேகலா, பேருந்தில் அமர்ந்திருந்தவளுக்கு தேவாவை நினைத்து தான் பாவமாக இருந்தது, மதியம் அவளுக்கு கேன்டீனில் வாங்கி கொடுத்தது கூட சேரவில்லை பாவம் வீட்டிற்கு போய் எப்படி இருக்கிறாளோ என்று அவளை நினைத்து வருந்தினாள். […]
பூ 37 சில நாட்களாகவே தேவாவிற்கும் விசாகனிற்கும் வாழ்க்கை அழகாய் நகர்ந்துக் கொண்டிருந்தது போல இருந்தது. அன்று விசாகனிடம் சண்டையிட்டு எதிர்பாராமல் கிடைத்த முத்தத்திற்கு பிறகு, வந்த நாட்களில் இருவருக்கும் இடையே ஏற்படும் எதிர்பாராத சந்திப்புகளில் கூட கோவத்தை இழுத்து பிடித்து கொள்ள முடியாமல் அந்த நினைவில் புன்னகையுடன் வலம் வந்தாள் தேவா. அவளுடைய மலர்ந்த முகத்தை கண்டவனுக்கும் இந்த மாற்றம் பிடித்து இருக்க, இம்சை கொண்ட இதயமோ அவள் மேல் மேலும் அன்பை பொழிந்தது. இதுவரை […]
பூ36 மூளைக்கும் மனதிற்கும் நடக்கும் போராட்டத்தில் அதிகம் தோற்பது மனம் மட்டும் தான்… இப்போதும் மனது தோற்றுப் போய் ஒரு மூலையில் அடங்கிவிட்டது… தேவாவிற்கு, அந்த சம்பவத்திற்கு பிறகு வந்த நாட்களும் எந்த ஒரு மாற்றமுமின்றி அவனுடன் காதல், மோதல் என்று நகர்ந்துக்கொண்டு தான் இருந்தது. விசாகனுக்கும் அரிசி ஆலை, தொழிற்சாலை, தோப்பு, வயல்வெளி என வேலைகள் வரிசை கட்டி நின்றாலும், மனைவியை கவனித்துக் கொள்வதே முதல் வேலையாக வைத்துக்கொண்டு இருந்தான். அவ்வப்போது அவளை சீண்டி […]
பூ 36 வானில் தோன்றும் முழு மதி நாளுக்கு நாள் வளர்ந்து தேய்வது போல நாட்களும் தொய்வின்றி கரைந்துக்கொண்டே தான் இருந்தது. காலையில் பரப்பரப்புடன் கல்லூரிக்கு கிளம்பி அவனுடன் பைக்கில் பயணத்தை மேற்கொள்பவள் அந்த ஒரு மணிநேரத்தில் அவனுடன் மனதிற்குள்ளயே பேசிக்கொள்வாள் இப்போது பேச்சிகள் உண்டு தேவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ பேசுகிறாள். காலை கல்லூரி செல்பவள் மாலை அவனுடனே வந்து இறங்குவாள் தில்லையுடன் சிறிது நேர பேச்சி அதன் பின் தன்னுடைய வேலையை முடிப்பவள் மீண்டும் […]
 பூ 34 சகல ஜீவராசிகளும் நித்திரை கொள்ளும் இரவின் மடியில், இருளின் ஒலியாய் வெண்பூக்கள் போன்று சிதறிய நட்சத்திரங்களின் வானவீதியில், ராஜ பவனி வந்துக்கொண்டு இருந்தாள் நிலவு மங்கை, நெஞ்சம் எங்கும் வியாபித்து இருக்கும் காதலின் சுகத்தில் கண்களை மூடி படுத்திருந்தான் விசாகன். கதவை மூடிய தேவா கைவளையும் காலில் அணிந்திருந்த மெட்டியும் சப்தமிக்க நடந்து வந்தவள் கணவன் முன் நின்று “தெங்க்ஸ்” என்றாள் குரல் கமர மெல்ல கண்களை திறந்தவன் அவள் நின்றிருந்த தோரணையும் […]
 பூ 33 தன்னையும் மறந்து விசாகனது முகத்திலேயே நிலைத்திருந்தது அவளது விழிகள்… அவள் இருக்கும் நிலையை மூளை எடுத்துரைக்க விசாகன் எழுந்துக் கொள்வானோ என்ற அச்சத்துடனே அவனை தழுவிக் கொண்டு இருந்த கரங்களை சட்டென பிரித்து எடுத்தவள் அவன் அறியும் முன்பே கட்டிலை விட்டு இறங்கி படப்படத்து கொண்டு இருக்கும் தன் மனதை சமன்படுத்திக் கொண்டாள். ‘சே என்ன முட்டாள் தனமான வேலையை செய்து வைச்சிருக்க தேவா” தன் தலையில் தட்டிக் கொண்டவள், அவனது அழகை, […]
பொன்நிற சூரிய பந்து கடல் நீரில் மூழ்கி தென்றலின் இதத்தையும் குளுமையையும் பரப்பிவிடும் அந்திசாயும் வேளையில் மெல்ல உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள் தேவா. மணியை பார்க்க கடிகார முள் 5.30 நெருங்கி இருந்தது. ‘அய்யோ இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா!’ என நினைத்தவள், தான் அமர்ந்து இருந்த இடத்தை சுற்றி பார்த்தாள்., அது விசாகனின் மெத்தையாக இருக்க, காதல் கொண்ட இதயம் அவனையே கைகளால் வருடுவதை போல மெல்ல மெத்தையை வருடிக் கொண்டிருந்தவளுக்கு இளநகை ஒன்று இதழில் […]