Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ப்ரியங்கள் பேசுகையில்

ப்ரியங்கள் பேசுகையில் – 15(2)

வீட்டிற்குச் சென்ற சூர்யாவின் முகம் அவ்வளவு ப்ரகாசித்தது. ‘யமுனா தீரானா ராதா மதிலோனா க்ருஷ்ணு நீ ப்ரேம கதா..!’ என்று சந்தோஷமாய்ப் பாடினான். “அடேய்! என்னடா யமுனா உன்னைப் பார்க்க வந்துடுச்சா? பாட்டுலயே பதில் சொல்றியா எங்களுக்கு” என்று ராமு சிரிக்க ‘யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே..’ “அந்த பாட்டுதானே டா இது? ஏன் டா யமுனா பெயர் வரப்பாட்டா யோசிச்சுட்டு வந்தியோ? ஆனா இதைப் பாடினா […]


ப்ரியங்கள் பேசுகையில் – 15(1)

ப்ரியம் 15 முதல்  ஸ்பரிசம்! முத்தங்களும் இல்லை, மோகங்களும் இல்லை!! ஆனாலும் சிலிர்த்துப் போனான் சூர்யா. கரம்  பற்றுதல் அவ்வளவே! ஆனால் பற்றியிருந்த பாவை காதலியல்லவா? அதுவே சூர்யாவின் காதலுக்கு  ஒரு பற்றினை  தந்தது. எவ்வளவு உரிமையாய் ‘வேண்டாம் சூர்யா’ என்று அவன் கையைப் பிடித்துவிட்டாள் அவனின் ப்ரியத்தம்மா. அவளின் உரிமையான செய்கை இன்னும் உவகையை அள்ளித் தந்தது. அப்படியொரு நிறைவான நொடி! காதல் கிட்டிய ஆனந்தபெருவெள்ளம் அவனுள்ளத்தில்! ரசித்தான்!!  அந்த  கடலை, அதன் அலையை, அந்த […]


ப்ரியங்கள் பேசுகையில் – 14(2)

“யமுனா, உனக்கு என்னைப் பிடிக்கும்னு உனக்குத் தெரியுதோ இல்லையோ நாக்கு தெலுசுரா..” என்று வேகத்தில் சொன்னவன் “ஐ  கேன் ஃபீல் இட், பட் ஏன் அதை சொல்ல இவ்வளவு பயப்படுற நீ?” என்று கேட்க யமுனாவிடம் பதில் இல்லை. “என்னைப் பாரு, யமுனா!” என்று கொஞ்சம் சத்தமாய் அழைக்கவும் முகம் பார்த்தாள் மங்கை. அவள் முகத்தைப் பார்த்தவன் “போன வருஷம், உன்னைப் பார்த்தேன் யமுனா, ஜஸ்ட் பார்த்தேன் அவ்வளவுதான்! தென் நம்ம அடிக்கடி என்சிசி கேம்ப்ல பார்த்துருக்கோம், […]


ப்ரியங்கள் பேசுகையில் – 14(1)

ப்ரியம் 14 “யமுனா? என்னடி நடக்குது இங்க?” என்று கனிமொழி கேட்க யமுனா அமைதியாக முன்னே போனாள். “உன்னைத்தான் கேட்கிறேன், பதில் சொல்லு. அவரை நீ லவ் பண்றியா? யார் அவர்?” என்று கனி விடாது கேட்க “அவர்தான் என்னை லவ் பண்றார். அவர் நம்ம கோகியோட லவ்வர் ஸ்டாலின் அண்ணா ப்ரண்ட்” என்று சொல்ல “அப்போ நீ லவ் பண்ணல?..” என்று கனி சந்தேகமாய்க் கேட்க “இல்லடி” என்றாள் உடனே. “அப்போ ஏன் அழுதுக்கிட்டே அவரைப் […]


ப்ரியங்கள் பேசுகையில் – 13

ப்ரியம் 13 யமுனா அங்கே சூர்யாவை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. நம்பமுடியாத ஒரு ஆனந்தம்! மீண்டும்   நம்ப முடியாமல்  “சூர்யா” என அழைக்க “நேனே  மா ” என்று சூர்யா புன்னகை செய்ய, யமுனாவிற்கு சந்தோஷத்தில் கண்ணில் நீர் நின்றது. “என்னைத் தேடுனியா?” என்று சூர்யா யமுனாவை நெருங்கி வர  ஒரு அடி பின்னால் நகர்ந்து கோகிலாவை பார்த்தாள். அவளோ “என்ன ஏன் டி பார்க்கிற? நீதான இவரை  பார்க்கணும் சொன்ன, உனக்காக  அண்ணா இங்க வந்துட்டாங்க பாரு” […]


ப்ரியங்கள் பேசுகையில் – 12

ப்ரியம் 12 யமுனாவிற்கு தன் மனம் எப்படி உணர்ந்தது என்றே புரியவில்லை. என்னவோ தாங்கவே முடியாத ஒரு மன பாரம் மங்கையிடம்.   சூர்யாவைப் பார்க்க முடியாது என்பது அவ்வளவு வேதனையைத்  தர, அவனின் நினைவை விரட்டி அடிக்க முடியவே முடியாதா என்ற மன அழுத்தம். நிச்சயம் சூர்யா காதல் என்று அவள் மனதில் கல் எறியாமல் இருந்து இருந்தால் இந்த சலனம் யமுனாவிடம் எக்காலமும் தோன்றியிருக்காது. சூர்யா மட்டும் அவன் நண்பர்களுடன் இல்லாது இருக்க, இனி […]


ப்ரியங்கள் பேசுகையில் – 11

ப்ரியம் 11 யமுனாவால் சூர்யாவின் நினைவுகளை விரட்டி தள்ள முடியவில்லை.   அவன் நண்பனாகவே நட்பாகவே பேசிக்கொண்டு இருக்கக் கூடாதா என்று ஏங்கியது பெண்ணின் மனம். அவன் சொன்ன காதல் பெண்ணிடம் பெரும் கலக்கத்தை உண்டு செய்தது. பாட புத்தகத்தை எடுத்தால் கூட பாவைக்கு அவனின் எண்ணம்தான். தன்னை தனது எண்ணங்களிலிருந்து விடுவித்துக் கொள்ளவே பெரும் போராட்டம் யமுனாவுக்கு. வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!! இந்த எண்ணங்கள் வேண்டாம்!!! அவனைப்பற்றி சிந்திக்காதே என்று சிந்தைக்கு கட்டளையிட்டு, சிந்தனைகளை சிறை […]


இடைவெளிகள் இசைக்கின்றன! – 1

இடைவெளி 1 “பரசு! என்ன உன் போன்ல ஏதோ ஹிந்தியில குரல் கேக்குது, எங்க இருக்க நீ?” “வெளியூர்ல இருக்கேன்மா” “சொல்லாம கொள்ளாம எங்கடா போயிட்ட நீ” என்ற  இந்திராவின்  குரலில் தவிப்பும் கோபமும் அதிகம். “அம்மா! எதுக்கு போன் பண்ணீங்க அதை மட்டும் சொல்லுங்க” என்றான் பேச விருப்பம் இல்லாதவனாக.  “தம்பி, எப்படி இருக்க? எந்த  ஊர்ல இருக்க இப்போ ?”  “இருக்கேன் மா, பத்திரமா இருக்கேன் வேற ஒன்னும் கேட்காதீங்க” “இப்படி சொன்னா எப்படிப்பா?” […]


ஸ்ருங்கார சந்தங்கள் – 1

சந்தம் 1 “ப்பா, உங்க கிட்ட ஆபிஸ்வொர்க்னு பொய் சொல்லிட்டு கூட என்னால போயிருக்க முடியும். பொய் சொல்லியிருக்கலாமேன்னு நினைக்க வைக்காதீங்க என்னை” என்றாள் பொற்சுவை. “பொன்னிமா! பக்கத்துல மகாபலிபுரம் பாண்டிச்சேரின்னா கூட பரவாயில்லை. மஹாராஷ்ட்ரான்னா கஷ்டம்டா. பெரியப்பா ஒத்துக்கமாட்டாங்க” என்று மகளை சமாதானம் செய்தார் துரையரசன். “பெரியப்பா கிட்ட எல்லாம் உண்மையை சொல்லப்போறதில்லப்பா, ஆபிஸ் வொர்க்னு சொல்லிடுவேன். நீங்க முதல்ல ஒத்துக்கோங்கப்பா, மகாபலிபுரத்துல என்ன ட்ரெக்கிங் செய்ய முடியும் சொல்லுங்கப்பா? மகாராஷ்ட்ரா ட்ரெக் சூப்பரா இருக்கும்பா, […]


ப்ரியங்கள் பேசுகையில் – 10

ப்ரியம் 10 “தோசையா சாதமா?” என்றபடி வந்து உட்கார்ந்த சூர்யாவைக் கண்டு நண்பர்கள் இருவருக்கும் அதிர்ச்சியே. “ஏன்ட்ரா ராமு? காது கேட்குதா இல்லையா? நான் குளிச்சிட்டு வரேன்” என்று சொல்லி துண்டுடன் பாத்ரூம் சென்றவனை இன்னமும் அதிர்ச்சி குறையாமல் பார்த்தார்கள் ராமுவும் ஸ்டாலினும். “சாதாரணமா பேசுறதைப் பார்த்தா தங்கச்சி ஓகே சொல்லிடுச்சு போல” என்று ஸ்டாலின் முகம் ப்ரகாசமாக ராமுவும் “எனக்கென்னமோ அப்படி நினைக்க முடியல. அவன் முகத்துல சந்தோஷமே இல்லையே, யமுனான்னு சொன்னாலே அப்படி ப்ரைட்டா […]