இறுதி அத்தியாயம்-38 ஆதவன் தன் கதிர்களைப் உலகுக்குப் பரப்பி பூமியை ஆலிங்கனம் செய்ய ஆரம்பிக்கும் நேரம், மணமேடையில் மணப்பெண் கோலத்தில் முகத்தில் வெட்கப் புன்னகையுடன் அமர்ந்திருந்த வனிதாவுக்கு அருகில் மணமகன் கோலத்தில் கம்பீரமாக அமர்ந்து அய்யர் கூறும் மந்திரங்களை வாய்க்கு வந்தபடி முணுமுணுத்துக் கொண்டிருந்தான் வினோத். வினோத் உளறுவதைப் பார்த்து சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டிருந்த வனிதாவைப் பார்த்தவன், அய்யரிடம் “அய்யரே, அதென்ன மாப்பிள்ளை மட்டும் தான் நீங்க சொல்ற மந்திரங்களை சொல்லனுமா என்ன, […]
அத்தியாயம்-37 மறுநாள் காலை எழுந்தவன் நளன் இன்னும் உறங்கிக் கிடக்கவும், நேராக நளன் வீடான அவன் வளர்ப்பு வீட்டிற்குச் சென்றான் வினோத். வினோத்தைக் கண்டவுடன் வாசலுக்கு வந்த நந்தினி வினோத்தின் பின் புறம் பார்க்கவும் “அம்மா… நளன் வீட்ல இருக்கான்” என்றான் தயக்கமாக. தாயின் முகம் வாடியவுடன் “இல்லம்மா அவனுக்கு அதிக வேலை அதான் அப்புறமா வரேன்னு சொன்னான்” என்று சமாளித்தான். பின்னே கனடாவிலிருந்து வந்து இரண்டு நாட்கள் […]
அத்தியாயம்-36 கதவு தட்டப்படும் ஓசையில் நேத்ராவைப் பார்த்தவன் அவள் கைகளைப் பிடித்து அவனோடு சேர்த்துக் கொண்டு கதவின் தாழ்ப்பாளை அகற்றினான். வெளியே நின்றிருந்த வினோத், வனிதா மற்றும் நந்தனைக் கண்டவன் நேத்ராவின் கையை விட்டுவிட்டு வினோத்தின் கழுத்தைப் பிடித்து “ஏன் டா நாயே இதெல்லாம் உன் வேலை தானா? உன்னை…” என்றவன் அவனை அடிக்கக் கை ஓங்கவும், “டேய் டேய் ப்ளீஸ் டா உன்னோட நல்லதுக்கு தானே டா இப்படி செஞ்சேன், செஞ்சேன் இல்லை […]
அத்தியாயம்-35 மாலை வேளைகளில் சாலையின் நெரிசலைக் கூறவா வேண்டும்? எறும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்வது போல் வாகனங்கள் சாலைகளில் நகர்ந்து கொண்டிருக்க, நளனால் மட்டும் என்ன பறந்து செல்லவா முடியும்? வலக்கை ஸ்டியரிங் வீலையும் இடக்கை கியர் லீவரையும் அழுத்தமாகப் பற்றியிருக்க, ட்ராபிக்கில் சிக்கியவன் ஹரனை அழுத்திக் கொண்டும், ஷீட் என்று கைகளால் ஸ்டியரிங் வீலை அடித்துக் கொண்டும் போவோர் வருவோரைத் திட்டிக் கொண்டும் அமர்ந்திருந்தான். அடுத்த ஒரு மணி […]
அத்தியாயம்-34 ஏக்கர் கணக்கில் விரிந்திருந்த அந்த பிரம்மாண்டமான ஓட்டலின் புல்வெளி மைதானத்தில், விழா ஏற்பாடு செய்திருந்தனர். அருகே வண்ண விளக்குகளால் ஆன ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்க, ஆங்காங்கு வண்ண வண்ண நிறத்தில் பொடிகளும் தண்ணீரும் நிரப்பி வைக்கப் பட்டிருந்தன. நேத்ரா, வனிதா மட்டுமல்லாது அனைவரும் நளன், வினோத் உட்பட அனைவரும் வெள்ளை வண்ண உடையில் காட்சிதர, வினோத் மேடை ஏறினான். அவனிடம் மைக் கொடுக்கப்படவும் “ஹாய் கைஸ், நீங்க கேட்ட மாதிரியே இந்த […]
அத்தியாயம்-33 கட்டிடத்தின் வேலைப்பாடுகளை ஆராய்ந்தவர்கள் இன்னும் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு கிளம்பும் போது, நளன் “ஓகே கைஸ், நான் ஒரு முக்கியமான கிளையின்ட மீட் பண்ணப் போறேன். சோ என் கூட யாராவது வாங்க” என்று விட்டு நேத்ராவை ஒரக் கண்களால் நோட்டமிட்டான். நேத்ராவோ நளனைக் கண்டு கொண்டவள் “ஏன் வாயைத் துறந்து நீ வா ஹனின்னு கூப்பிட மாட்டாரோ, நான் போக மாட்டேன்” என்று முறுக்கிக் கொண்டு நின்றாள் […]
அத்தியாயம்-32 பத்து நாட்கள் கடந்திருந்த வேளையில் ஒரு நாள் மாலை நேரம் கடந்து ஆபீசில் இருந்தாள் நேத்ரா, ப்ராஜெக்ட் சம்மந்தமான சிறு வேலையை முடித்துவிட்டுப் போக எண்ணி அருணுடன் அமர்ந்திருந்தவள், வெளியில் இருட்டியதை உணரவில்லை. திடீரென்று நிமிர்ந்து பார்த்தவள், அங்கே ஒரு சிலர் மட்டும் அமர்ந்திருக்க கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தாள். பார்த்தவள் மணி எட்டு என்று காட்டவும் “ஓ ஷிட், இவ்வளவு நேரம் ஆயிடுச்சா? ஐ ஹவ் டு கோ” என்றவள் வேகமாக கணினியை […]
அத்தியாயம்-31 வனிதாவுடன் முதல் நாள் அலுவலகத்திற்கு வந்த நேத்ரா மனதினுள் பலவிதமான எதிர் பார்ப்புகளை நிரப்பி வந்தாள். அலுவலகத்தினுள் நுழைந்த உடன் வனிதாவோ “நேத்ரா நீ அங்க எச்.ஆர போயி மொதல்ல பாரு, அவங்க பார்மாலிட்டீஸ் எல்லாம் சொல்லுவாங்க, நான் என்னோட கேபினுக்கு போறேன் சரியா, என்ன ப்ரோப்ளம்னாலும் எனக்கு கால் பண்ணு” என்ற வனிதா அவள் வேலையைப் பார்க்கச் சென்றாள். எச்.ஆர் ரேகாவைச் சென்று பார்த்தவள் அவர் “வாங்க நேத்ரா, இப்போ […]
அத்தியாயம்-30 வனிதா சென்றவுடன் மலர்ந்த முகத்துடன், அவள் கொடுத்த பைலைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் செல்பேசி ஒலியெழுப்பவும், அதில் ஒளிர்ந்த கார்த்திகேயனின் பெயரைக் கண்டவன், அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுத்தவன், “அங்கிள், சொல்லுங்க அங்கிள்” என்றான். “என்னப்பா வினோத் ஆபீஸ்ல வேலையா இருக்கியா?” என்றவரிடம், “ம்ம் ஆமா அங்கிள், நீங்க சொல்லுங்க” என்றான். “அது… என்றவர் பின் நளன்… நளனை எங்கப்பா?” என்றார். “என்ன அங்கிள் அவன் வீட்டுக்கு வரலையா? […]
அத்தியாயம்-27 அந்திமாலைச் சூரியன் மேற்கில் தன் அஸ்தமனத்தைத் தொடங்கியிருந்த வேளை, “அம்மு விடுங்க நான் போயி குளிக்கணும், வார வாரம் இப்படியே பண்றீங்க எத்தனை தடவை கோவிலுக்கு போவோன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன், இன்னைக்காவது கோவிலுக்கு போகலாம்” என்று, நளனின் கைவளைவுக்குள் சிக்குண்டவாறு அவனது மார்பின் முரட்டு ரோமங்களை கைகளாளும் முகத்தாலும் தடவிக்கொண்டு அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் நேத்ரா. அவள் ஒருத்தி இங்கு பேசிக் கொண்டிருக்க, அமைதியாக அவன் உறக்கத்தைத் தொடந்து […]