Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் மின்னும் காரிகை

மஞ்சள் மின்னும் காரிகை 15 3

அவள் சொன்ன காதலும் அவள் கொடுத்த முத்தமும் அவனை மயக்க அவள் உதடுகளில் தன்னுடைய முத்தத்தை பதித்தான். அவனுடைய இதழ் முத்தத்தில் அவள் கண் மூடி கிறங்கினாள். அவளது இதழை விட்டு விலகியவன் அவள் நெற்றி. கண்ணின் இமை, காது மடல் என முன்னேறி மீண்டும் அவள் இதழ்களில் இளைப்பாறினான். தன்னுடைய கைகளில் தோய்ந்து சரிந்தவளை தன்னுடைய கைகளில் அள்ளினான். விருப்பத்துடன் அவன் கழுத்தில் அவள் தன்னுடைய கைகளைக் கோர்க்க அவளைத் தூக்கி கொண்டு கட்டிலை அடைந்தவன் […]


மஞ்சள் மின்னும் காரிகை 15 2

ஆனால் அடுத்த நாள் காலையில் தன்னுடைய தோழியைப் பார்க்க வர்ஷா போக வேண்டும் என்று சொல்ல “ஒரு மணி நேரத்தில் வர்ஷாவை கூட்டிட்டு போயிட்டு வந்துருவேன், நீ கிளம்பியிரு”, என்று மீனாவிடம் சொல்லி விட்டு பிரகாஷும் அவளை அழைத்துச் சென்றான். அவன் சென்றதும் கோபத்துடன் அமர்ந்திருந்தாள் மீனா. ஒரு மணி நேரத்தில் வந்து விடுவேன் என்று சொன்ன பிரகாஷ் மதியம் இரண்டு மணிக்கு தான் வந்தான். ஷாப்பிங் என்ற பெயரில் அவனுடைய நேரத்தைக் கடத்தியிருந்தாள் வர்ஷா. கை […]


மஞ்சள் மின்னும் காரிகை 15 1

அத்தியாயம் 15  காதலின் புனிதச் சின்னம் தான் முத்தம்!!! அன்று பகல் முழுவதும் கீதா தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பிரகாஷும் மீனாவும் சந்தோஷமாக வாழவில்லையோ என்ற கேள்வி எழுந்தது. பல முறை பிரகாஷின் பார்வை ஏக்கமாக அவள் மீது படிவதை அவள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். அதை மீனா கண்டு கொள்ளாதது போல செல்வதையும் அவள் பார்த்தாள். இருவரும் அருகருகே அமரும் போது இடைவெளி விட்டு தான் அமர்ந்தார்கள். அவர்கள் சாதாரணமாக கையைப் […]


மஞ்சள் மின்னும் காரிகை 14 3

சபாபதியும் கீதாவும் அவனிடம் அவளை ஹனிமூன் அழைத்துச் செல்லச் சொல்ல அவனோ மறுத்துக் கொண்டிருந்தான். “கல்யாணத்துக்கு முன்னாடி அங்க சுத்தணும் இங்க சுத்தணும்னு சொல்லுவ. இப்ப நாங்க போகச் சொல்றோம் போக மாட்டிக்க”, என்று சபாபதி அவனை கேள்வியாக கேட்டு திணறடிக்க அன்றைய இரவில் மீனா அறைக்குள் வந்ததும் “மீனா”, தயக்கமாக அழைத்தான். “ஆன்”, என்ற படி அவனைப் பார்த்தாள். “நாம எங்கயாவது வெளிய போகலாமா?”, என்று அவன் கேட்டதும் “எங்க போறோம்? எப்ப போறோம்?”, என்று […]


மஞ்சள் மின்னும் காரிகை 14 2

அதன் பின் அனைவரும் கடைக்கு சென்று உடை எல்லாம் எடுத்து விட்டு வீட்டுக்கு வரும் போது மாலை ஆகியிருந்தது. அன்பழகன் குடும்பமும் அங்கே வந்தார்கள். அன்று இரவு இரண்டு குடும்பமும் பேசிக் கொண்டிருக்க பிரகாஷ் எழிலை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்று அனைவருக்கும் உணவு வாங்கி வந்தான். முதல் திருமணம் போல் இல்லாமல் இந்த திருமணத்தை அனைவரும் ஆவலாக எதிர் பார்த்தார்கள். அனைவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டு முடித்ததும் பிரகாஷ், சபாபதி, கீதா மூவரும் அவர்களின் வீட்டுக்கு […]


மஞ்சள் மின்னும் காரிகை 14 1

அத்தியாயம் 14  நான் வெறுக்கும் ஒரே நிகழ்வு உந்தன் மௌனம் மட்டுமே!!! அவள் பல முறை அவனிடம் மன்னிப்பு கேட்க முயன்றும் அவன் அவளை பேசவே விட வில்லை. இப்போது இரவெல்லாம் அவனுடைய சுவட்டர் தான் அவளுக்கு துணையாக இருந்தது. அதை அணைத்த படியே படுத்தவளுக்கு அவனுடைய அருகாமையும் கதகதப்பும் வேண்டும் போலவே இருந்தது. வீட்டில் இருந்து வேறு என்ன முடிவு பண்ணியிருக்க என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் சமாளிக்க முடியாமல் அவனையும் சமாதானம் படுத்த முடியாமல் […]


மஞ்சள் மின்னும் காரிகை 13 4

அனைத்தையும் கேட்டவளுக்கு அவன் வருத்தப் படுவது கஸ்டமாக இருந்தது. அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்ல என்று தெரியாமல் அவன் முகத்தை பாவமாக பார்த்த படி நின்றாள். அவள் மனது அவனை முழுமையாக ஏற்றுக் கொள்கிறது தான். ஆனால் அவளை அறியாமலே கீதா பற்றிய பயம் வரும் போது அவள் என்ன செய்ய? “பிரகாஷ் ஒரு நிமிஷம்”, என்று அவள் ஆரம்பிக்க “இனி நாம எதுவும் பேசிக்க வேண்டாம். நீ தூங்கு”, என்று சொன்னவன் கட்டிலில் படுத்து விட்டான். […]


மஞ்சள் மின்னும் காரிகை 13 3

அவனுடைய உணர்வுகள் அனைத்தும் வடிந்தது. இவ்வளவு பெரிய வார்த்தையை அவள் சொல்வாள் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை. சுடு தண்ணீர் முகத்தில் பட்டது போல துடித்துப் போனவன் அவளை அடி பட்ட பார்வை பார்த்தான். அந்த பார்வையைக் கண்ட மீனாவுக்கு அப்போது தான் அதிகமாக பேசி விட்டது புரிந்தது. “என்னைப் பாத்தா உனக்கு பொறுக்கி மாதிரியா டி தெரியுது?”, என்று கோபமாக கேட்டான். அவன் கோபம் அவளை பாதித்தாலும் அதை வெளியே காட்டாமல் “ஆமா இப்ப […]


மஞ்சள் மின்னும் காரிகை 13 2

அவனும் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டு அறைக்குள் வந்தான். அறைக்குள் வந்ததும் அவனிடம் இருந்து தன்னுடைய கையை எப்படி விலக்க என்று எண்ணி அவனைப் பார்த்தாள் மீனா. அவனுக்கோ அவளது கையை விடும் எண்ணம் வரவே இல்லை. அவளுடைய அருகாமை அவனுக்கு வேண்டும் போல இருந்தது. “பேபி”, என்று அவன் ஆசையாக அழைக்க அந்த குரலில் எப்போதும் போல உருகி அவன் முகம் பார்த்தாள். “பிளீஸ் ஒரே ஒரு தடவை…..”, என்று அவன் தயக்கத்துடன் கேட்க அவன் […]


மஞ்சள் மின்னும் காரிகை 13 1

அத்தியாயம் 13  மழைத்துளி நீ என்றால் அது கலக்கும் நதி நான் ஆவேன்!!! அறைக்குள் வந்ததும் அவளுடைய படபடப்பை பிரகாஷும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். நடுக்கத்துடன் அமர்ந்திருந்தவள் நகத்தைக் கடித்து துப்பிக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அலை பாய்ந்தது. அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் “எப்ப டி என்னை நம்ப போற? என் கூட ஒரே ரூம்ல இருக்க நீ இப்படி பயப்படுறன்னா நீ என்னை ஹஸ்பண்டா நினைக்கவே இல்லைல்ல? அப்ப […]