Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மடைதிறவாயோ மௌனக் குயிலே

அத்தியாயம் 🌹19

“டேய் அண்ணா… அங்க வராம, இங்க என்ன பண்ணிட்டிருக்க? அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனை நிதானமாக திரும்பி பார்த்த கமல், “நேத்து வரைக்கும் தான் ரோகிணிக்கு என் துணை தேவ பட்டுச்சு. இப்போ தான் அவங்க அம்மா வந்துட்டாங்களே…” விரக்தி போல் கூறியவன், தொடர்ந்து, “நீ பாத்த தான… உள்ள வந்து என்னை பாத்தாங்களே ஒரு பார்வை… நான் இப்படியா என் பொண்ண விட்டுட்டு போனேன்னு கேட்ட மாதிரி இருந்துச்சு! அதோட ரோகிணி இப்டி இருக்க நான் தான் […]


அத்தியாயம் 🌹18

கஸ்தூரி, ரோகிணி என இருவரும் மருத்துவமனையில் இருக்க, கமலும் சந்தீப்பும் வேறு சிந்தனையற்று இருந்தனர். கமலிடம் கூறிக்கொண்டு கஸ்தூரியின் அறைக்கு வந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்த இந்தர், “ஹோப் யூ ஆர் மெச்சூர்டு இனாப் டு ஹாண்டில் திஸ்” மனோகர் ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கும் இந்த கடினமான சூழலை கஸ்தூரி கடந்து விடுவார் என்பதில் நம்பிக்கை இருப்பதாக அவன் கூற, “மெச்சுர்டானு தெரில ஹித்து. அதுக்காக நான் வருத்த பட்டுட்டும் இல்லை. அது மட்டும் நிச்சயம். இன்னும் சொல்லணுமா, […]


அத்தியாயம் 🌹17

கண்கள் பாரமாக இருக்க இமை விரிப்பதும், ரோகிணிக்கு கப்பலை கட்டி இழுப்பது போல் தான் இருந்தது. அவ்வாறு கனத்துப் போயிருந்த இமைகளை திறக்கவே பெரிதும் சிரமப்பட்டவள், முயன்று விழித்து விட்டாள். அதுவரை அவளையே கண் கொட்டாமல் பார்த்திருந்த கமல், தன் கண்ணிலிருந்து வேகமாக உருண்டு விழுந்த துளி நீரை அவளுக்கு காட்டாதவாறு முகத்தை திருப்பிக்கொண்டான். “ரோகிணி… ஆர் யூ ஓகே?” மருத்துவர் நீலேஷ் கேட்க, “ம்ம்” என்ற ரோகிணியின் பார்வை அந்த அறைக்குள் சுழன்று யாரையோ தேடியது. […]


அத்தியாயம் 🌹16

மனோகர், ரோகிணியின் தந்தை. அவருக்கு வயது எப்படியும் ஐம்பதுகளில் தான் இருக்கும். அவரை தனது அக்கா திருமணம் செய்து கொண்டுவிட்டாள் என்பதை இந்தர் மூலமாக அறிந்திருந்த சந்தீப்பிற்கு, அச்செய்தியை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. ‘பைத்தியக்காரி’ தன்னிலை தறிகெட்டு தவிக்க, இருக்கும் இடமறந்து கத்தியவன், வெகுவாக ஓய்ந்திருந்தான். கமல் காரிலிருந்து இறங்க மாட்டேன் என்று செய்த தகராறும், அதை தொடர்ந்து ஷைலஜாவே அவனை அழைத்து சென்றதும், முன்தினம் தான் ஷைலஜா தங்கியிருக்கும் பிளாட்டின் உரிமையாளர் வாயிலாக […]


அத்தியாயம் 🌹15(2)

மனோகர் சென்றது தான் தாமதம். ரோகிணிக்கு அவர் மீதிருந்த மொத்த கோபமும் ஷைலஜாவிடம் திரும்பியது. “நீயெல்லாம் என்ன ஜென்மம்னே தெரில. உன் டார்கெட் என் ஹஸ்பண்ட்னு நெனச்சா… இல்லை உன் அப்பா தான்னு நடத்தி காட்டியிருக்க… ஆனா ஏன்?” என்று கோபமாக கேட்டவள், சந்தேகத்துடன் சற்றே அமைதியானாள். அந்த அமைதியை தானே கலைத்தவள், ” ஏன் இப்டி பண்ண? அவர எப்டி கன்வின்ஸ் பண்ண?” கேட்டுக்கொண்டே ஷைலஜாவை நோக்கி முன்னேறி சென்றவளை தடுக்கும் அவசியத்தை, அதுவரை பார்வையாளராக […]


அத்தியாயம் 🌹15(1)

சந்தீப்பிடம் ஷைலஜாவின் செயல் குறித்து விமர்சித்து கூறிய இந்தர், மீண்டும் கஸ்தூரியின் அறைக்கு வருகையில் ‘இந்த மனுஷனெல்லாம் என்ன ஆளோ?’ என்று மனோகர் மீதும் வெறுப்பு தோன்ற, அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான். அதன் பிறகே கவனித்தான், கஸ்தூரி எழுந்து அந்த அறையில் இருந்த ஜன்னலின் ஓரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை! ‘எப்டி இப்டி கூலா இருக்காங்க?’ வியப்புடன் எண்ணிக்கொண்டவனுக்கு, முதல் நாள் வரை படுத்த படுக்கையாக இருந்த தனது அன்பிற்குரியவர், இன்று முழுதாக எழுந்து […]


அத்தியாயம் 🌹14(2)

“இங்க பாருங்க டார்லிங், ஈ எஸ்பி(புலன் கடந்த உணர்வு)ங்கிற இந்த லாஜிக் சாத்தியமே இல்லைனு சொல்ல மாட்டேன். ஸ்டில் அது ரொம்ப ரேர். சேம் டைம், அந்த மாதிரி ஆதாரம் இல்லாத உணர்வில் தோன்றி தெரிறதெல்லாம், அப்டியே நடக்கும்னு நூறு சதவிகிதம் சொல்ல முடியாது. இட்ஸ் அபவ்ட் டுவெண்ட்டி பெர்ஸன்ட் தான். இப்போ நாம காணுற கனவெல்லாம் பலிக்கிறதில்லல அப்டி. அதுவும் அஸ் பெர் த ரிசர்ச்… சில சூழல், காட்சிகள் நம்ம ஆசைப்படறது இல்லை நாம […]


அத்தியாயம் 🌹14(1)

ரோகிணியிடம் கூறியபடி, இந்தர், தான் மட்டும் சற்றே தாமதமாக கிளம்பி கஸ்தூரியை காண மருத்துவமனைக்கு வந்திருந்தான். கஸ்தூரியின் அறைக்கு வந்த போது அவர் எழுந்து அமர்ந்திருந்தார். அதில் இனிமையாக அதிர்ந்தவன், “வாவ்… டார்லிங்…” என்றழைத்துக் கொண்டே அவரருகே சென்றான். ஹித்து வந்திருப்பது அவருக்கு தெரியாது என்பதால் அவனை கண்டதும் அவரது கண்களிலும் மின்னில். எனினும் அமைதியாக அமர்ந்திருந்தார். அவரது அமைதி அவனுக்கு சாதகம் என்பது போல், “நான் உங்கமேல கோபமா இருக்கேன். இல்ல கோபம் கூட சின்ன […]


அத்தியாயம் 🌹13

“ஹலோ ரோகிணி… நான் ஷைலு பேசுறேன்” ” தெரியும்,சொல்லுங்க” “கமலுக்கு டிவோர்ஸ் குடுக்கறியா? நாங்க கல்யாணம் செய்துக்கலாம் நினைக்கிறோம்” எடுத்த எடுப்பில், சுற்றி வளைக்காமல், சிறிதும் தயக்கமோ கூச்சமோ இன்றி, அசட்டு தைரியமும் ஆணவமுமாய் ஷைலஜா கேட்டதில் முதலில் ரோகிணிக்கும் அதிர்ச்சி தான். எனினும் அவளுக்கு ஷைலஜாவை பற்றியும் தெரியும், கணவனை பற்றியும் தெரியுமாதலால் குரலை உயர்த்தி, “எவ்ளோ தைரியமா உனக்கு?” என அதட்டியிருந்தாள். உன் அதட்டல் என்னை என்ன செய்யும் என்ற ஷைலஜாவும் சற்றும் சளைக்காதவளாய், […]


அத்தியாயம் 🌹12

“ரோகி!” என்றழைத்தபடி சோபாவில் தனக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தவளின் அருகே வந்து நின்ற கமல், அவளது தோளில் கரம் பதிக்க, அதுவரை செவியில் சேராத அவனது அழைப்பு, அவனது ஸ்பரிசம் வழியே மூளையை சேர, அழுதழுது ஓய்ந்த விழிகளுடன் அவனை ஏறிட்டாள். “ஹே ரோகி… எதுக்கு அழுதிருக்க?” பதறியபடி அவள் முன்பு தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன், “என்னாச்சு டா” கனிவுடன் வினவ, அந்த கனிவே அவளுக்கு மூச்சு முட்டியது. “எங்க போய்ட்டு வர கமல்?” மனைவிக்கான உரிமை […]