Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதில் வீசும் மாருதமே

மஞ்சள் மின்னும் காரிகை 7 3

அந்த நாளும் வந்தது. மீனாவும் சந்தோஷமாக கிளம்பிச் சென்றாள். பஸ் ஸ்டாண்டுக்கு அவளை அழைக்க வெண்ணிலாவின் தந்தை சிதம்பரம் தான் வந்திருந்தார். அவரை கல்லூரியில் படிக்கும் போதே அவளுக்கு நன்கு தெரியும் என்பதால் அவரைக் கண்டதும் “அப்பா எப்படி இருக்கீங்க?”, என்று சந்தோஷமாக விசாரித்தாள் மீனா. “நல்லா இருக்கேன் கண்ணு, நீ எப்படி இருக்க? கார்ல ஏறு. பேசிட்டே போகலாம்”, என்றார் சிதம்பரம். அவர் அருகில் ஏறி அமர்ந்த படி “நல்லா இருக்கேன் பா. அப்புறம் ரொம்ப […]


Final 3 அத்தியாயம் 20 _ மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

அதன் பின் நாட்கள் அனைவருக்கும் சாதாரணமாக நகர காதலர்களுக்கு மட்டும் மின்னல் வேகத்தில் நகர்ந்தது. கௌதமுக்கும் சொந்த ஊரிலே டிரான்ஸ்பர் கிடைத்ததால் தேன்மொழியும் கௌதமும் சாரதாவுடனே இருந்தனர். பெருமாளும் வைதேகியும் பேசியது வேறு யாருக்கும் தெரியாது. வைதேகி வேறு யாரிடமும் சொல்ல வில்லை. இப்படியே நாட்கள் கடக்க ஒரு நாள் சாரு கற்பமடைந்தாள். அவளுக்கு நாள் தள்ளி போயிருக்கிறது என்று தெரிந்ததும் சித்தார்த் சாரு இருவரும் சந்தோஷப் பட்டார்கள். சந்தோசத்தில் அவளை இறுக்கி கட்டிக் கொண்டான் சித்தார்த். […]


Final 2 அத்தியாயம் 20 _ மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

“ஆமா டா, அவ தான் சொன்னா. உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னா” “ஓ அதுவா? அது நாங்க போட்ட பிளான். அதனால சொல்லிருப்பா” “அவ அந்த விஷயத்தை எப்ப எப்படி ஒரு சூழ்நிலைல சொன்னா தெரியுமா?” “தெரியாது”, என்றவனுக்கு குழப்பமாக இருந்தது. “அன்னைக்கு அவளுக்கு தாலி கட்டினியே? அப்ப நீ வீட்டுக்கு வரதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என் கிட்ட உன்னைத் தான் கட்டிக்குவேன்னு சொன்னா” “அதான் நாங்க பிளான் பண்ணிருந்தோம்னு சொன்னேன்ல? […]


Final 1 அத்தியாயம் 20 _ மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 20 எந்தன் காதல் சிறகுகள் கொண்டு நான் வரைந்த ஓவியம் தான் என்னவள்!!! நாட்கள் இப்படியே நகர சாருவுக்கு தாத்தா பாட்டியுடன் நன்கு நேரம் சென்றது. சித்தார்த்தோ ராகவனுடன் சேர்ந்து அவனது திருமணத்திற்கான வேலைகளை செய்தான். சித்தார்த் சாரு இடையே அதிகமாக எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. சில நேரம் அவள் பேச வந்தால் அவன் பேச மாட்டான். அவன் பேச வரும் போது அவள் பேச மாட்டாள். ஒரே வீட்டில் ஒரே அறையில் இருந்தாலும் […]


அத்தியாயம் 19 _ 3 மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

“ரெண்டு பேர் வீட்லயும் எவ்வளவோ பேசியும் அத்தான் ஒத்துக்கவே இல்லை. அது மட்டுமில்லாம என்னைத் தனியா கூப்பிட்டு உன்னை நான் என்னோட தங்கச்சியா தான் நினைச்சேன் தேனு? எனக்கு உன்னோட பிரண்ட் மீனாவை தான் பிடிச்சிருக்கு. பிளீஸ் என்னை இந்த இக்கட்டுல இருந்து காப்பாத்துன்னு சொன்னான். எனக்கு அதிர்ச்சில கண்ணீர் வந்துச்சு. என்ன செய்யன்னு தெரியாம யோசிச்சிட்டு இருந்தப்ப தான் என்னை இன்னொரு வீட்ல இருந்து பொண்ணு பாக்க வந்தாங்க. பொண்ணு பாக்க வந்தப்ப நான் மாப்பிள்ளையை […]


அத்தியாயம் 19 _ 2 மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

“என்னை நீ மன்னிக்கணும் தேன்மொழி” “அத்தை நீங்க எதுக்கு என் கிட்ட மன்னிப்பு எல்லாம் கேக்குறீங்க?  அதெல்லாம் வேண்டாம்” “இல்லை மா, உன்னை கல்யாணம் பண்ண போறேன்னு கௌதம் சொன்னப்ப நானும் மத்தவங்க மாதிரி தான் மா நினைச்சேன். இப்ப உன் குணம் தெரிஞ்ச அப்புறம் தான் இப்படி ஒரு மருமகள் எனக்கு கிடைச்சிருக்கான்னு பெருமையா இருக்கு. என்னை மன்னிச்சிரு மா” “அது எல்லாரும் நினைக்கிறது தான் அத்தை” “சரி சரி, உன் வாழ்க்கைல இருந்த கஷ்டம் […]


அத்தியாயம் 19 _ 1 மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 19  காலத்தை நிறுத்த உன்னைக் காதலிக்கும் கவிஞனான என்னால் மட்டுமே முடியும்!!! பத்திரிக்கை கொடுக்க வீட்டுக்கு வந்த கௌதமைக் கண்ட சாரு சந்தோஷமாக அவனை வரவேற்றாள். ஆனால் இந்த முறை அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்து சித்தார்த் முறைக்க வில்லை. ஆனால் அவன் முறைப்பானோ என்று எண்ணிய சாரு சித்தார்த் புறம் திரும்பவே இல்லை. அதன் பின் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மீண்டும் அனைவரையும் திருமணத்திற்கு வரச் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றான் […]


அத்தியாயம் 18 _ 2 மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

அவர்கள் சென்ற பின்னர் தன்னுடைய வீட்டுக்கு சென்ற ராகவன் இந்த நல்ல விஷயத்தை சித்தார்த்திடம் சொல்ல எண்ணி அவனை அழைத்தான்.  “ராகவா. அப்பாவுக்கு மருந்து வாங்க மெடிக்கல் போறேன் டா. அப்புறம் கால் பண்ணுறேன்”, என்று சித்தார்த் சொன்னதும் “சரி, அப்புறம் சொல்லிக்கலாம். பாவம் சித்தார்த்தை தொல்லை பண்ணக் கூடாது”, என்று எண்ணிய ராகவன்  சாருவிடம் நேரில் சென்று விஷயத்தை சொன்னான்.  விஷயம் அறிந்து சந்தோஷப் பட்ட சாரு தேன்மொழியைக் காண வீட்டுக்கே வந்து விட்டாள். பழைய […]


அத்தியாயம் 18 _ 1 மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 18  நீ என்னோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் மாமலைகளையும் தகர்த்தெரியும் வல்லமை கொண்டவனானேன்!!! “என்னை நினைவு இருக்கா தேன்மொழி?”, என்று கேட்டான் கௌதம்.  “ஆன் இருக்கு”, என்று தடுமாற்றமாக சொன்னாள் தேன்மொழி.  “தேங்க்ஸ், எங்க நான் உன் மனசுல பதிஞ்சிருக்க மாட்டேனோன்னு கவலைப் பட்டேன்” “இப்ப அது முக்கியம் இல்லை. எதுக்கு இந்த கல்யாண விஷயம் எல்லாம்?” “எனக்கு உன்னைப் பாத்த உடனே தோணுச்சு. அதனால தான் முடிவு எடுத்துட்டேன். ஒரு தடவை தான் உன்னைப் […]


அத்தியாயம் 17 _ 2 மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

“ஆமா டி காதல் தான். காதலே தான். உன் மேல போய் எனக்கு வந்த அந்த பாழாய்ப் போன காதல் தான் என்னை லூசா ஆக்கி வச்சிருக்கு போதுமா? அது தான் என்னை இப்படி கோபா பட வைக்குது. உன்னை என்னைக்கு பாத்தேனோ அன்னைல இருந்து உன் மேல பைத்தியமா இருக்கேன்னு உனக்கு தெரியுமா? படிக்கிற பிள்ளையை காதலைச் சொல்லிக் குழப்பக் கூடாது, அதே நேரம் நீயும் என்னை விட்டு வேற யாரையும் நினைச்சிறக் கூடாதுன்னு நீ […]