இரண்டு வருடம் முடிந்திருக்க.. ஆதிரை ஆண் மகவை ஈன்றிருந்தாள். குழந்தை பிறந்த பத்தாவது நாள் பார்த்து சென்றவன்.. மீண்டும் மூன்று மாதம் கழித்து மனைவி குழந்தையை பார்க்க வந்து ஆதிரையின் வீட்டில் இரண்டு நாள் தங்கியிருந்து சென்றிருந்தான். வாரம் நான்கைந்து முறையாவது வீடியோ காலில் பேசிடுவான்.. இப்படியாக மீண்டும் மூன்று மாதம் முடிந்த பின்னே கர்ணனோடு வந்தான் அதிரூபன். ‘அப்பா..” என ஓடி வந்த மொழியாளை அள்ளிக்கொண்டவன்.. ‘பெரியப்பா டா.” என கர்ணனை அறிமுகம் செய்தான். […]
அதிரூபன் காருக்கு செல்ல.. பின்னுக்கு வந்த ஆதிரையிடம் ‘ஆதிம்மா நீ முன்னாடி உக்காரு..” என காஞ்சனா சொல்ல.. ‘ம்மா.. உன்கூட நிறைய பேசனும்..” என பின்சீட்டில் அமர்ந்தாள். இன்னைக்கு அத்தை அவ்வளோதான் என மனதில் சிரித்தவன் புன்னகை முகமாக காரை கிளம்பினான். ‘அம்மா.. மொழியாள் ரொம்ப சமத்து.. “ என ஆரம்பித்தவள் வீடு வரும்வரை குழந்தை புராணம் மாமனார் மாமியார் தன்னை கவனிப்பதை சொல்லி முடித்து.. அடுத்து மாரியப்பன் பேச்சை எடுக்கவும் வீடு வந்திருந்தது. […]
அடுத்த நாள் காலையிலும் ஆதிரை எட்டு மணியாகியும் எழாமல் இருக்கவே.. கனகாவிற்கு அத்தனை சந்தோசம். ‘ஆதி உன்னை புரிஞ்சிக்கிட்டாளா ரூபா.?” என மகனென்றும் பாராமல் கேட்டேவிட்டார். ‘புரிஞ்சிக்கிட்டாம்மா.. ஆனா என்னை விட உங்களைதான் ரொம்ப நல்லா புரிஞ்சிருக்கா..” என குடும்பத்தினரைப் பற்றி ஆதிரை சொன்ன அனைத்தும் சொல்லி.. ‘நைட் இரண்டு மணி வரைக்கும் பேசிப் பேசியே டையர்டாகி இப்போ தூங்கிட்டிருக்கா..” என்றான் மகிழ்வாக. ‘தூங்கட்டும்.. தூங்கட்டும்.. நீ வரும்போதுதான பேசமுடியும்..?” என மருமகளிற்கு ஆதரவளித்தார். […]
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 22 அதிரூபன் முறைப்பிற்கு ஆதிரை முகம் வாடிட.. ‘நீ பட்டுவ நல்லா பார்த்துப்பனு அத்தைக்கு நல்லா தெரியும்.. மத்தவங்களுக்கு புரிய வைக்கத்தான் அப்படி பேசியிருப்பாங்க..” என்றான் தன்மையாக. ‘அதுக்காக மட்டும் இல்ல.. பட்டு என்னோட ரொம்ப ராசியாகிட்டா.. விட்டுட்டு போனா ஏமாந்துடுவா. கூட்டிட்டு போலாம் சொன்னா மாமா வேணாம்ங்கிறாங்க.. அவ இல்லாம போக பிடிக்கல.. நாம போகும்போது கூட்டிட்டு போலாம்..” என்றாள் சன்னக்குரலில். அதிரூபன் இதற்கு […]
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம் .. 21 ‘பட்டம்மா.. பட்டம்மா..” என மொழியாள் குரலில் தூக்கம் தெளிந்தான் அதிரூபன். குழந்தை அன்னையை சமாளிப்பது புரிய நேரம் பார்க்க மணி எட்டரை என்றது. ஆதிரையைப் பார்க்க அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். இவன் குளித்து வெளியே வர நினைக்க.. பட்டுவின் சத்தம் எங்கிருந்து வருகிறதென அறிய கதவருகே நின்றான். ‘பட்டம்மா பட்டம்மா..” என பட்டுவின் சத்தம் குறையத் தொடங்கி.. ஐந்து நிமிடத்தில் சத்தம் இல்லாமல் […]
பத்து நாள் முடிந்திருக்க.. ராதாவும் பாலனும் வந்திருக்க.. கணேசன்.. ‘வா ராதா..” என்றார் சுரத்தில்லாமல். நாளை ப்ரியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் ஆதலால் அனைவர் முகமும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. ‘அண்ணா.. ப்ரியாக்கு கும்பிட நாளைக்கு பட்டுவ அழைச்சிட்டு வாங்க..” என்றார் கெஞ்சலாக. ‘அழைச்சிட்டு வரேன் ராதா.. ஆனா பட்டு கையால எந்த சம்பிரதாயமும் செய்ய கூடாதுனு ரூபன் சொல்லியிருக்கான்..” என்றார். கணேசன் சொல்லும் விதமே அவருக்கும் அது கூடாது என்பதை உறுதிபடுத்தியது. […]
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 20 அதிரூபன் அருகிலில்லாதது ஏமாற்றம் என்றாலும் உலகில் அனைத்தும் தன்வசமான நினைவில் பூரித்திருந்தாள் ஆதிரை. ‘பட்டு எப்போ எழுந்துப்பாங்கத்தை.?” என்றாள் கனகாவிடம். திருமணம் முடிந்து மூன்று நாட்களாய் யாரிடமும் சரிவர பேசியிராத ஆதிரை.. தற்போது இயல்பாய் பேசியதில் சந்தோசமடைந்த கனகா.. ‘எப்பவும் ஒரு மணிபோல எழுந்துப்பா.. இன்னைக்கு காலைல சீக்கிரம் எழுந்ததால இரண்டு மணிபோல ஆகிடும் ஆதி..” என்றார். பட்டு விசயத்தில் ரூபனின் பெருந்தன்மை […]
‘நாங்கள்லாம் சாப்பிட்டோம்..” என்றார் சந்தோசமாக. மருமக சட்னி போட்டதுக்கே பெருமையை பார்டா.. என மனதில் நினைத்தவன்.. ‘நீயும் உக்காரு..” என இன்னொரு ப்ளேட்டை வைத்து அதில் இட்லியை வைக்கவும் கணேசன் சிரித்தார். ‘எதுக்குப்பா சிரிக்கிறிங்க.? நீங்க உங்க பொண்டாட்டிக்கு ஊட்டிவிடும்போது என் பொண்டாட்டிக்கு நான் பரிமாறக் கூட கூடாதா.?” என்றான். ‘அடேய்..” எனப் பதறியவர்.. ‘உங்கம்மாக்கு உக்கார்ந்துக்கவே முடியாதப்ப ஒரு ரெண்டு நாள் ஊட்டிவிட்டேன்.. அதை சொல்லுவியா.?” என்றார் சின்ன முறைப்போடு. […]
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 19 தன் கணவனிற்கு முன்னால்காதல் என ஒன்றும் இல்லை என்ற சந்தோசத்தோடு.. உயிர்த்தோழி ப்ரியாவின் நினைவில்தான் கண்ணீர் விட்டிருக்கிறான் என்பது மேலும் நெகிழ்வை கொடுக்க.. அதிரூபன் அணைப்பிலிருந்து விலகாமல் லயித்திருந்தாள் ஆதிரை. பத்து நிமிடங்களுக்கு மேலாகியிருக்க.. தன்னோடு இன்னும் இறுக்கியவன்.. ‘பட்டு…” என்றான் கிசுகிசுப்பாக. ரூபனின் குரலில் உணர்வை மீட்டவள் விலக முயல.. அணைப்பை தளர்த்தாமல் மீண்டும்.. ‘பட்டு..” என்றான் குழைவாக. ‘பட்டு உங்களை […]
ஆதிரை.. ‘என்.. என்ன ஆச்சு..?” என்றாள் பதறியவளாய். ஆழ மூச்செடுத்தவன்.. ‘நான் வேலைக்கு போக ஆரம்பிச்சதுக்கப்புறம் தனியா ரூமெடுத்து தங்கியிருந்தேன். அவ காலேஜ் ஹாஸ்டல்ல தங்கியிருந்தா.. ஆனாலும் தினமும் ஈவ்னிங் அவளை போய் பார்ப்பேன்.. இல்லனா நான் திரும்ப பார்க்க வரும்வரை சாப்பிட மாட்டேன்னு சொல்லுவா. என் விசயத்துல கண்டிப்பா செய்வான்னு நானும் தினமும் மீட் பண்ணுவேன். அவ மூனாவது வருசம் படிச்சிட்டிருக்கும்போது இங்க டைரக்டர் ஒருத்தர் ஹார்ட் ப்ராப்ளம்னால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் […]